இது வரை ஸ்ரீ திருவாய் மொழி வைபவம் -மேலே 19 சூர்ணிகைகளால் ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம் மேலே –
சூரணை-75-
இப்படி பிரமாண பிரமேய வைபவத்தை பிரதிபாதித்த அநந்தரம் பிரமாத்ரு வைபவத்தை
விஸ்தரேண பிரதி பாதிக்கிறார் மேல் —
அதில் பிரதமத்தில் பிரமாண பிரமேயங்கள் இப்படி விலஷணமாய் இருந்ததே ஆகிலும் ,
இப் பிரமாண வக்தா ஆனவர் சதுர்த்த வர்ணர் அன்றோ என்ன
பாகவத உத்தமரான இவருடைய ஜன்ம நிரூபண தோஷத்தை
பிரமாண பிரமேயங்களில் த்ரவ்ய பாஷா நிரூபண தோஷம்
கீழ் உக்தம் அன்றிக்கே இருக்கச் செய்தே அத்தை சித்தவத்கரித்து
திருஷ்டாந்தமாக கொண்டு அருளிச் செய்கிறார்-
வீட்டு இன்ப
இன்ப பாக்களில்
த்ரவ்ய பாஷா
நிரூபண சமம்
இன்ப மாரியில்
ஆராய்ச்சி ..
அதாவது
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே –திருவாய் -2-3-5-என்கிற படி பகவத் விஷயம் என்றால்
உளம் கனிந்து இருக்கும் அவர்கள் உடைய க்ருஹங்களிலே அவர்கள் உகந்த
ஒரு த்ரவ்யத்தை திரு மேனியாக கொண்டு இருந்து இன்பத்தை விளைக்கிற த்ரவ்ய
அர்ச்சாவதாரத்தில் , நிரூபணத்தோடும்
அம் தமிழ் இன்பப் பாவினை அவ்வட மொழியை -பெருமாள் -1-4- -என்கிற படியே திராவிட ரூபமாய்
பகவத் குண கண பிரதிபாதகதயா விசேஷஜ்ஞர்க்கு ஆனந்தவஹமாய் இருக்கிற திரு வாய் மொழியில்
பாஷா நிரூபணத்தோடும் , துல்ய தோஷம்-
அடியார்க்கு இன்ப மாரியில் -திருவாய் -4-5 -10-–என்கிற படி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு திரு வாய் மொழி
முகத்தாலே ஆனந்தத்தை வர்ஷிக்கும் மேகமான ஆழ்வார் பக்கல்
உத்பத்தி நிரூபணம் என்கை-
விஷ்ணோ அர்ச்சாவதாரேஷு லோஹபாவம் கரோதிய
யோ குரவ் மானுஷம் பாவ முபவ் நரக பாதினவ்– ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம் –
(எவன் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரங்களில் தாம்பரம் போன்ற உலோகபுத்தியைச் செய்கிறானோ –
எவன் குருவிடத்தில் மனிதன் எண்ணத்தைச் செய்கிறானோ -அவ்விருவரும் நரகத்தில் விழுமவர்கள் )
யோ விஷ்ணவ் பிரதிமாகரே லோஹபாவம் கரோதி வை
குரவ்ச மானுஷம் பாவமுபவ் நரகபாதினவ்–(மானிடவன் என்றும் குருவை மலர்மகள் கோன் தானுகந்த
கோலம் உலோகம் என்றும் ஈனமாதா எண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு –ஞானசார -32-)
அர்ச்சாவதார உபாதான வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம்
மாத்ரு யோனி பரீஷாயாஸ் துல்யமாகூர் மநீஷணா-
ஹரிகீர்த்திம் வினைவ அந்யத் ப்ராஹ்மணேன நரோத்தம
பாஷாகானம் ந காதவ்யம் தச்மாத்பாபம் த்வயா க்ருதம்–ஸ்ரீ மத்ஸ்ய புராணம் –
கிமப்யத்ராபி ஜாயந்தே யோகிநஸ் சர்வ யோநிஷூ
பிரத்யஷி தாத்ம நாதானாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம்–ஸ்ரீ பவிஷ்யோத்தரம் –
சூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ச்வபசம் தா
வீஷதே ஜாதி சாமான்யாத் சா யாதி நரகம் நர –
ஏவமாதி சாஸ்திர வசனங்களை ஹரூதிகரித்தி இறே இவர் இப்படி அருளிச் செய்தது ..
அவஜானந்தி மாம் மூடா -ஸ்ரீ கீதை -9-11–என்கிற படி வாசி அறியாமல் ,அவஜ்ஜை பண்ணும் மூடர்க்கும்
பஸ்யந்தி கேஸிதநிசம் த்வத் அநந்ய பாவா -ஸ்தோத்ர ரத்னம் -16-(ஒப்பார் மிக்கார் இலையாய தேவரீர் தன்மையை
தேவரீரைத் தவிர வேறு பொருளில் எண்ணத்தைச் செலுத்தாத ஒரு சிலர் எப்பொழுதும் பார்க்கிறார்கள் ) -என்கிற படியே
வாசி அறிந்து ஆதரிக்கும் அநந்ய பாவர்க்கும் மூன்று இடமும் ஒக்கும் இறே-
—————————————————–
சூரணை -76-
இங்கன் இன்றிக்கே பேச்சிலும் ,இது சொன்னவர் பிறவியிலும் ,
தாழ்வு பார்த்து ,இப் பிரபந்தத்தை இகழும் அவர்களுக்கு ,
அநிஷ்ட பிரசஞ்சனம் பண்ணுகிறார் -பேசித்யாதி வாக்ய த்வயத்தாலே-
பேச்சு பார்க்கில்
கள்ளப் பொய் நூல்களும்
க்ராஹ்யங்கள்
பிறவி பார்க்கில்
அஞ்சாம் ஒத்தும்
அறு மூன்றும்
கழிப்பனாம்-
அதாவது –
சமஸ்க்ருதமாகவும் ,த்ராவிடமாகவும் ,பகவத் பரமானது உபாதேயம் .
அந்ய பரமானது த்யாஜ்யம் என்று கொள்ளாதே ,பாஷா மாத்ர அவதியாக ,
விதி நிஷேதங்களை அங்கீகரித்து திராவிட பாஷையாகையாலே இது
த்யாஜ்யம் என்னப் பார்க்கில்-
வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற கள்ள நூல் -பெரிய திருமொழி -9-7-9-என்றும்
பொய்நூலை மெய்நூல் என்று என்றும் ஓதி–பெரிய திருமொழி -2-5-2- -என்றும் சொல்லுகிற
பாஹ்ய சாஸ்த்ராதிகளும் ,சமஸ்க்ருத பாஷையான ஆகாரத்தாலே ,
உபாதேயம் ஆக வேணும் ..
பிறவி பார்க்கில்
அதாவது
சதுர்த்த வர்ண உத்பவர் என்று வக்தாவன இவர் பிறவியைப் பார்த்து ,
இத்தை இகழம் அளவில் ,
அஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழிப்பனாம்-
அதாவது
மத்ஸ்ய கந்தா சுதனான வியாசன் சொன்ன
பஞ்சம வேதமான மகா பாரதமும்
கோப ஜன்மாவன கிருஷ்ணன் சொன்ன ஷட்க த்ரயாத்மகமான
கீதோ உபநிஷத்தும் த்யாஜ்யமாக வேணும் என்கை ..
இத்தால் பாஷா மாத்ரத்தையும் ,வக்த்ரு ஜென்மத்தையும் பார்த்து
இகழும் அளவில் வரும் விரோதம் காட்டப் பட்டது-
அதவா –
பாஷா வக்த்ரு ஜன்ம மாந்த்யங்கள் நிரூபிக்கலாகாது என்று ,கீழ் சொன்ன படி அன்றிக்கே ,
சம்ஸ்க்ருத பாஷையாய் உள்ளதும் ,ஜன்ம கெளரவம் உடையார் ,சொல்லும் அதுவே
உபாதேயம் என்று கொள்ளுபவர்களுக்கு அநிஷ்ட பிரசன்ஜனம் பண்ணுகிறார் -வாக்ய த்வ்யத்தாலே ..
அதாவது –
பகவத் பரத்வ அந்நிய பரத்வங்களை பரிக்ராக்ய பரித்யாஜ்வத்வங்களுக்கு ஹேது வாக்காதே –
சமஸ்ருத பாஷை யானது உபாதேயம் என்று ,பேச்சின் உடைய கௌரவ மாத்ரத்தை பார்க்கில்-
கள்ள நூல் -பொய் நூல்- என்று கழிக்கப் பட்ட பாஹ்ய சாஸ்த்ராதிகளும் பரி கிராஹ்யங்கள் ஆம்
யதாஜ்ஞானர் சொன்னது உபாதேயம் அயதாஜ்ஞானர் சொன்னது த்யாஜ்யம் என்று கொள்ளாதே
ஜன்ம கெளரவம் உடையார் சொன்னதே உபாதேயம்-
அல்லாதார் சொன்னது த்யாஜ்யம் என்று பிறவி மாத்ரத்தையே பார்க்கில் ,
மச்த்ய கந்தா சூதனான வியாசர் சொன்ன பஞ்சம வேதமும் ,
கோபோ ஜன்மாவன கிருஷ்ணன் சொன்ன கீதோ உபநிஷத்தும் த்யாஜ்யமாக வேணும் என்கை —
இத்தாலே பேச்சில் கௌரவமும்,சொல்லுபவர்கள் பிறவியில் கௌரவமும் ,
பிரபந்த உபாதேயத்வ ஹேதுவாக சொல்லும் அளவில் வரும் அநிஷ்டம் காட்டப் பட்டது ..
————————————————-
சூரணை -77-
இவ் ஆழ்வாருடைய உத்பத்தியை வியாச கிருஷ்ண உத்பத்தி சமமாக அருளிச் செய்தார் கீழ்–
அவற்றில் இதுக்கு உண்டான வியாவிருத்தியை அருளிச் செய்கிறார் மேல்..
கிருஷ்ண
கிருஷ்ண த்வைபாயன
உத்பத்திகள் போல் அன்றே
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ
ஜன்மம்-
அதாவது
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனான – ஸ்ரீ கிருஷ்ணன் உடையவும்
கன்யா சூதனனான வியாசனுடையவும்- உத்பத்தி போலே அன்றே
கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்றவராய்-திரு விருத்தம் -37-
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ மிவோதிதம்-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –பூர்வ -6-என்கிற படியே
கிருஷ்ண விஷய திருஷ்ணை தானே ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற ஆழ்வாருடைய அவதாரம் என்கை ..
————————————————–
சூரணை-78-
அது எங்கனம் என்னும் அபேஷையில் பல ஹேதுகளாலும்
இவர் ஜன்ம வ்யாவிருத்தியை பிரகாசிப்பிகிறார் மேல் —
அதில் பிரதமத்தில் அவர்களைப் பெற்றவர்கள், இவரைப் பெற்றவர்களுக்கு
சத்ருசரல்லாமையை இசைவிக்கிறார்-
பெற்றும் பேர் இழந்தும்
கன்னிகை யானவளும்
எல்லாம் பெற்றாளாயும்
தத்துக் கொண்டாள் என்பர்
நின்றார் என்னுமவளும்
நெடும் காலமும்
நங்கைமீர் என்னும் இவளுக்கு
நேர் அன்றே ..
(பெற்றும் பேர் இழந்தவளும் -பாட பேதம் –
நங்கைமீர் என்னும் அவளுக்கு-உடைய நங்கையாருக்கு -நம்மாழ்வாருடைய திருத் தாயாருக்கு –
பெற்றும் பேர் இழந்தவளும் -தேவகி பிராட்டியார் -நேர் அன்று –
பெற்றும் கன்னிகையானவளும்-மத்ஸ கந்தி நேர் அன்று –
என்னுமவளும் யசோதை பிராட்டியும் -நேர் அன்று )
அதாவது-
பெற்றும் –
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற -பெரியாழ்வார் -1-2-17-என்கிற படியே
ஸ்ரீ கிருஷ்ணனைப் பிள்ளையாய் பெற்று இருக்கச் செய்தேயும் ,
அவனுடைய பால்ய ரசம் ஒன்றும் அனுபவிக்க பெறாமையால் ,
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன்-பெருமாள் திருமொழி -7-5–என்று பேறு இழந்தவளான தேவகியும் ,
பெற்றும் –
த்வீபே பதரிகாமிஸ்ரே பாதராயணம் அச்சுதம்
பராசராத் சத்யவதீ புத்ரம் லேபே பரந்தபம்–பாரதம் —( இலந்தைக்காடு கலந்த காட்டில் சத்யவதி என்பவள் பராசரரிடம் இருந்து
பகவனைத் தபிக்கச் செய்யும் விஷ்ணுவின் அம்சமான வியாச முனிவரைப் பிள்ளையாக அடைந்தாள் ) என்கிற படியே
வியாசனைப் பிள்ளையாகப் பெற்று இருக்கச் செய்தேயும் ,அவனால் உள்ள ரசம் ஒன்றும் அனுபவிக்கப் பெறாதபடி –
புன கன்யா பவிஷ்யதி —
(பரிதி தந்த மா நதி மருங்கு ஒரு பகல் பராசரன் மகப்பேறு
கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய்க் கமழ் புலவையும் மாற்றிச்
சுருதி வாய்மையின் யோசனை பரப்பு எழு சுகந்தமும் எனக்கு ஈந்து
வருதி நீ எனப் பனியினால் மறைத்து ஒரு வண் துறைக்குறை சேர்ந்தான்
முரண் நிறைந்த மெய்க் கேள்வியோன் அருளினால் முஞ்சியும் புரி நூலும்
இரணியம் செழும் கொழுந்து விட்டனவென இலங்கு வேணியும்
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போதானும்
தரணியின் புறத்து அனல் என என் வயின வதரித்தனன் அம்மா
சென்னியால் என்னை வணங்கி யாதொரு பகல் சிந்தி நீ சிந்திக்கு
முன்னையான் அரு குறுவல் என்று உரை செய முனிமகன்
முனி மீளக் கன்னியாக என வித்துடன் கரந்தனன் –வில்லிபாரதம் -சம்பவச் சருக்கம் 6-7-8 –)-என்று
பராசர வசனத்தாலே ,மீளவும் கன்னியான மச்த்ய கந்தையும் —
எல்லாம் பெற்றாளாயும் –
அதாவது –
எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே–பெருமாள் திருமொழி -7-5 -என்னும் படி
கிருஷ்ணனுடைய பால சேஷ்டாதிகளை எல்லாம் அனுபவிக்கப் பெற்று இருக்கச் செய்தேயும் ,-
தத்து கொண்டாள் கொலோ ,தானே பெற்றாள் கொலோ–பெரியாழ்வார் -2 -1-7—என்றும் ,
இம்மாயம் வல்ல பிள்ளை நம்பி உன்னை என் மகனே என்பர் நின்றார்–பெரியாழ்வார் -3 –1 –3- -என்றும்
அவனுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்கள் அடியாக தானும் பிறரும் சங்கிக்கும் படியான
மாத்ருவத்தை உடைய யசோதையும் ,
நெடும் காலமும் நங்கைமீர் என்னுமிவளுக்கு நேர் அன்றே –
அதாவது
நெடும் காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற –திருவிருத்தம் –37-என்று
சக்ருதாஸ்ர்யணம் அமைந்து இருக்க ,ஆதர அதிசயத்தாலே சிரகாலம்
ஆஸ்ரித சுலபனான கிருஷ்ணன் திரு அடிகளை ஆஸ்ரயித்து இவளைப் பெற்றவளாகவும் ,
நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்-திருவாய் -4-2–9 -என்று தொடங்கி பூரணைகளான
நீங்களும் ஒரு பெண் பிள்ளை பெற்று வளர்திகோள் இறே
பகவலாஞ்ச நாதிகளை திவாராத்ர விபாகம் அற வாய் புலற்றா நின்று உள்ள
சபலையான என் பெண் பிள்ளை படியை எங்கனே சொல்லுவேன் என்று
வாசா மகோசரமான இவருடைய முக்த வசநாதிகளை அனுபவித் தாளாகவும்
சொன்ன இவரைப் பெற்றவளுக்கு சத்ருசர் அன்றே என்கை .
—————————————————————
சூரணை -79-
இனி மூவருடைய உத்பத்தி ஸ்தல கந்த விசேஷங்களை பார்த்தால்,
மற்றை இரண்டிலும் ,
இவருடைய உத்பத்தி ஸ்தலத்துக்கு உண்டான வைபவம்
விலஷணம் என்னும் இடத்தை மூதலிக்கிறார்-
மீன
நவநீதங்கள்
கந்திக்கும் இடமும்
வெறி கொள் துழாய்
கமழும் இடமும்
தன்னில் ஒக்குமோ
( மீன கந்திக்கும் இடம் -வியாசர் அவதார ஸ்தலம் /
நவநீதம் கந்திக்கும் இடம் -ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதார ஸ்தலம் /
வெறி கொள் துழாய் கமழும் இடம் -நம்மாழ்வார் திரு அவதார ஸ்தலம் )
அதாவது
மீன் வெறி நாறுகிற வியாச உத்பத்தி ஸ்தலமும் ,
வெண்ணெய் முடை நாறுகிற கிருஷ்ண உத்பத்தி ஸ்தலமும் ,
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினயுடையாட்டியேன் பெற்ற–திருவாய் -4 -4-3- -என்றும்
இவள் அம் தண் துழாய் கமழ்தல்–திருவாய் -8-9-10-என்றும்
பகவத் சம்பந்த பிரகாசமான திருத்துழாய் மணம் நாறுகிற ஆழ்வார்
அவதரித்த ஸ்தலத்துக்கு சத்ருசமோ என்றபடி ..
பிராக்ருத விஷய சம்சர்கஜமான ஹேய கந்தங்கள் இறே அவை .
அப்ராக்ருத விஷய சம்சர்கஜமான உபாதேய கந்தம் இறே இது ..
இத்தால் தாத்ருச ஸ்தலங்களில் உண்டான அவர்கள் உத்பத்தியில் ,
ஈத்ருச ஸ்தலத்தில் உண்டான இவருடைய உத்பத்தியின் ஏற்றம் காட்டப் பட்டது .
———————————————–
சூரணை -80-
இன்னமும் அவர்களுடைய உத்பத்தி ஸ்தலங்களுக்கும் ,
இவர் உத்பத்தி ஸ்தலத்துக்கும் உள்ள வைஷம்ய அதிசயத்தை காட்டுகிறார் ..
ஆற்றில்
துறையில்
ஊரில் உள்ள
வைலஷம்யம்
வாசா மகோசரம்-
அதாவது –
வ்யாச உத்பத்தி ஸ்தலம் -ஆறு தானே அசிஷ்ட பரிக்ரகம் ( சிவ சம்பந்தம் ) உடைய கங்கையாய் ,
அத் துறை ஓடத் துறையாய் ,
ஊர் வலைச் சேரியாய் இருக்கும்
கிருஷ்ண உத்பத்தி ஸ்தலம் -ஆறானது கிருஷ்ண ஜல பிரவாஹதயா
தமோ மயியான, யமுனையாய் , துறையும் அதில் காளிய விஷ தூஷிதமான துறையாய் ,
ஊர் தானே -அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலம்–திருப்பாவை -28–என்கிற படி
இடக்கை வலக்கை அறியாதார் வர்த்திக்கிற இடைச் சேரியாய் இருக்கும் .
இவ் ஆழ்வாருடைய உத்பத்தி ஸ்தலம் -ஆறு-
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்–திருவாய் -9-2–5-என்கிற படி
விலக்ஷண பதார்த்தங்களுக்கு ஆகரமுமாய் , வாஸ ஸ்தலமுமாய் கொண்டு அதி ஸ்லாக்யமுமாய் இருக்கும் தாம்ரபரணி யாய் ,
துறை சுத்த ஸ்வாபமாய் ,அவகாதாமாய் இருக்கிற சங்கங்கள்
வந்து சேருகிற திரு சங்கணி துறையாய்–திருவாய் -10–3-11-
ஊர்-நல்லார் நவில் குருகூர்–திருவிருத்தம் –100 -என்கிற படி சகல சஞ்சன ஸ்லாகநீயமாய்
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர் -திருவாய் -3-1-11-என்றும்
நல்லார் பலர் வாழ் குருகூர்–திருவாய் -10-8-11-என்கிற படியே
சம்சாரத்தை ஜெயித்த புகழை உடையராய் ,
பகவத் அனுபவம் பண்ணி வாழ்கிற ,ஞாநாதிகரான விலக்ஷணர் பலரும்
நிரந்தர வாசம் பண்ணுகிற திரு குருகூராய் இருக்கும்-
ஆகையால்
அந்த ஆறுகளையும் துறைகளையும் ஊர்களையும் பற்ற
இந்த ஆற்றுக்கும் துறைக்கும் ஊருக்கும் உண்டான வைஷம்யம்
பேச்சுக்கு அவிஷயமாய் இருக்கும் என்கை —
ஆக
கிருஷ்ண
கிருஷ்ண த்வைபாயனர் உத்பத்தியில் காட்டில்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமான இவர் உத்பத்திக்கு ஏற்றத்துக்கு உடலாக
கீழ் விவஷிதமானவற்றை வெளி இட்டார் ஆய்த்து.
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply