சூரணை -71-
ஆனால் அபௌருஷேயமான வேதம் இப்படி அவஸ்தாந்தரத்தை
பஜித்ததாகில் கலுஷமாய் அர்த்த பிரகாசத்வம் குன்றாதோ -என்ன –
வக்த்ரு விசேஷத்தாலே அது மற்றை படியாய்த்து-( தெளிந்து பிரகாசம் மிக்கு ) என்னும் அத்தை
சத்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் ..
மண்ணாடின சக்ய ஜலம்
தோதவத்தி சங்கணி துறையிலே
துகில் வண்ணத் தெண்ணீராய்
அந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே
அல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி
நன் ஞானத் துறை சேர்ந்து
தெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது ..
அதாவது
உச்ச ஸ்தலத்தில் நின்றும் ,வேகத்தோடு வந்து பூமியில் விழுகையாலே,
ம்ருன் மிஸ்ரமாய் கலங்கி சஹ்யத்தில் நின்று வரும் ஜலமானது ,
தோதவத்தி தூய் மறையோர் துறை -பெரியாழ்வார் -4-8-1-என்றும்
பொருநல் சங்கணி துறை –திருவாய் -10-3-11-என்றும்
சொல்லுகிற துறைகளிலே வந்தவாறே துறை வாசியாலே ,
துகில் வண்ண தூ நீர்–திருவாய் -7-2-11- -என்றும்
தெண்ணீர் பொன்னி–பெருமாள் திரு -1-1- -என்றும் சொல்லுகிற படியே
தெளிந்த நீராய் ,தனக்குள்ளே கிடக்கிற பதார்த்தங்களை பிரகாசிக்குமா போலே
பிபேத் யல்ப ச்ருதான் வேதோ மாமயம் பிரதரிஷ்யதி –என்கிற படி –
வேதம் தான் நடுங்கும் படி ,தத் அபிப்ராயம் அறியாமல் ,பிரதி பந்தங்களை சொல்லும் அல்ப ஸ்ருதர்
ஒரு வாக்யத்து அர்த்தம் சொல்ல புக்கால் ,அது தன்னில் நின்று விபிரதிபத்தி பண்ணி
த்வைதம் என்பார்
அத்வைதம் என்பார்
த்வைதாத்வைதம் என்பராய்
இப்படி கலக்க கலங்கிய சுருதியானது
நல் ஞானத் துறை -என்று இவர் தாம் அருளிச் செய்த படி
யதா ஞானத்து துறையான இவ் ஆழ்வார் பக்கலிலே வந்து சேர்ந்து ,
தெளி உற்ற ஆயிரம் -என்கிற படியே முன்புத்தை கலக்கம் தீர்ந்து ,தெளிவை அடைந்து ,
அறிவித்தேன் ஆழ் பொருளை -என்கிற படியே
அகாதமாய் ,பரம ரகஸ்யமான அர்த்த விசேஷங்களை எல்லாம் தோன்றுவித்தது என்கை –
————————————————————
சூரணை -72-
ஆனால் வேதத்துக்கு அத்யயன கால நியதியும் ,அதிகாரி நியதியும்
உண்டாய் இரா நின்றதே -அந்த வேத அவதாரமான இதுக்கு அவை
இன்றிக்கே ஒழிவான் என் என்ன அருளி செய்கிறார் ..
மேகம் பருகின
சமுத்ராம்பு போலே
நூற் கடல் சொல்
இவர் வாயான வாய்த்
திருந்தின வாறே
சர்வதா சர்வோப ஜீவ்யம் ஆமே ..
அதாவது –
விரசமாய் ,தத் அந்தர்கத சத்வங்களுக்கு ஒழிய புறம்புள்ளார்க்கு
உப ஜீவ்யம் அன்றிக்கே -பர்வங்களில் ஒழிய ஸ்பர்சிக்கலாகாது என்கையாலே ,
ஸ்பர்ச கால நியதியை உடைத்தாய் ,இருக்கிற சமுத்திர ஜலமானது ,
மேகம் பருகி வர்ஷிக்க ,
அந்த மேக ஸ்பர்சத்தாலே, தன் விரதசை போய் , சர்வதா சர்வ ஜன போக்யமாம் போலே ,
ஸ்ராவண்யாம் ப்ரவ்ஷ்ட பாத்யம் வா உபாத்க்ருத்ய யதா விதி யுக்தச் சந்தாம் ஸ்யதீ யீத
ஈன மாசான் விப்ரோர்த்த பஞ்சமான் ,அத ஊர்த்த்வம் து சந்தாம்சி சுக்லேது நியத படேத்
வேதான்காநி ரஹஸ்யம் ச கிருஷ்ண பஷேது சம்படேத்–மனு ஸ்ம்ருதி -4-95-
(பிராமணன் ஆவணி மாதத்திலாவது புரட்டாசி மாதத்திலாவது சாஸ்திரத்தில் சொல்லியபடி உபாகர்மாக்களை செய்து
நியமத்துடன் கூடினவனாய் நாலரை மாதங்களில் வேதங்களை அத்யயனம் செய்யக் கடவன் –
இதற்குப் பிறகு நியமத்துடன் கூடினவனாய் சுக்லபக்ஷத்தில் வேதங்களை ஓதக் கடவன் –
வேதங்களையும் உபநிஷத்துக்களையும் கிருஷ்ண பக்ஷத்தில் நன்றாக அத்யயனம் செய்யக் கடவன் ) என்கிற படியே
அத்யயன கால நியதியையும் த்ரைவர்ணிகாதி காரதயா அதிகார நியதியையும் உடைத்தாய் உள்ள –
நூல் கடல்—மூன்றாம் திருவந்தாதி -32-என்கிற வேத வித்யா சமுத்ரத்தில் வசனம்
-இவள் வாயனகள் திருந்த–திருவாய் -6-5–7- -என்கிற படியே ,இவருடைய வாக்கதமாய் ,
கால நியம ,அதிகாரி நியம நிரபேஷமான ஆகாரத்தை அடைந்து ,கட்டளைப் பட்டவாறே –
அத்யே தவ்யம் த்விஜச் ரேஷ்டை : வேத ரூபமிதம் க்ருதம் ச்த்ரீபிஸ் சூத்ராதிபிச் சைவ
தேஷாம் முக்திஸ் கரே ஸ்திதா–பாஞ்சராத்ரம் -(வேதரூபமாகச் செய்யப்பட இத்திருவாய் மொழி
ப்ராஹ்மண உத்தமர்களாலும் பெண்களாலும் நான்காம் வருணத்தவர்களாலும் அத்யயனம் செய்யத்தக்கது –
இதனை அத்யயனம் செய்யுமவர்களுக்கு மோக்ஷம் கையில் இருக்கிறது -) -என்கிற படியே
ஒரு கால நியமம் இன்றிக்கே ,சர்வ காலமும் சர்வருக்கும் உப ஜீவ்யமாம் இறே என்கை-
———————————————————-
சூரணை -73-
இன்னமும் வேத கார்யமாய் இருக்க செய்தே காரணமனவது போல் அதிகிருதாதிகாரம்
இன்றியே ,இது சர்வாதிகாரமாய் இருக்கக் குறை இல்லை என்னும் இடத்துக்கு ஒரு திருஷ்டாந்த
விசேஷம் தர்சிப்பிகிறார்-
ம்ருத் கடம்
போல்
அன்றே
பொற்குடம்-
அதாவது –
ம்ருத் கடம் தொடும் அவர்களே தொடும் இத்தனை போக்கி ,எல்லாரும் தொட ஒண்ணாதே இருக்க ,
பார்திவமாய் இரா நிற்க செய்தே ,பொற் குடம் எல்லோருக்கும் ஸ்பர்சிக்க இரா நின்றது இறே என்கை .
இத்தால் காரணமான வேதம், அதிக்ருதிதாதிகாரமாய் இருந்தாலும் , தத் கார்யமான இது
சம்ஸ்கார விசேஷத்தாலே ,சர்வாதிகாரமாய் இருக்கக் குறை இல்லை என்றதாயிற்று —
த்ருஷ்டாந்தத்திலே தோற்றுகிற காரணதய கார்ய ஸ்லாக்யாதிகள் ,தார்ஷ்டாந்திகத்திலும் விவஷிதம் .-
————————————————————–
சூரணை -74-
இனி மேல் இப்படி இருந்துள்ள திருவாய் மொழியும் ,ஏதத் பிரதிபாத்யமான
அர்ச்சாவதாரம் ஆகிய பிரமாண பிரமேய சரமங்கள் இவற்றின் உடைய பூர்வ அவஸ்தைகளில் ,
அவஹாகன ஷமர் அல்லாதவருக்கு சுலபமாக கல்பிதங்கள் ஆனவை என்று –
வேத வேதே -சூரணை -70- இத்யாதி வாக்யத்தில் சொன்ன
பிரமாண பிரமேய சரமங்களை நிகமிக்கிறார் –
பெரும் புறக் கடலும்
சுருதி சாகரமும்
அலைந்து
ஆழ்ந்து
ஓடும் இடங்களில்
அயோக்யருக்கு சமைத்த மடுவும்
சாய் கரகமும்
மாண மேய சரமம்-
அதாவது
பெரும் புறக்கடலை –பெரிய திருமொழி -7-10 -1-எல்லாக் கடலுக்கும் புறம்பாய் ,தான் பெருத்து இருக்கிற கடல் போலே
அபரிசேத்யமாய் இருக்கிற ,பரவஸ்துவான பிரமேயம் – சமுத்ரம்
தரங்கிதமாய் அலைந்து நிற்கும் இடம் போலே ,ஜ்ஞானாதி ஷட் குண பரிபூரணமான தானே
அவற்றில் இவ் இரண்டு குணங்களை பிரகடிப்பித்து கொண்டு ,-பிரகாசிப்பித்துக் கொண்டு –
சங்கர்ஷ்ணாதி ரூபேண ,வியூஹித்து இருக்கும் இடத்திலும் ,
சமுத்ரத்தில் நிலை காண ஒண்ணாத படி , ஆழ்ந்து இருக்கும் இடம் போலே ,
-யாமாத்மா ந வேத -ப்ருஹதாரண்யம் -5-7-22(எந்தப் பரம்பொருளை ஆன்மா அறியவில்லையா )-என்றும்
கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் –திருவாய் -7-2-3 –என்றும் சொல்லுகிறபடி
அத்ருச்யத்வேன அந்தர்யாமியாய் நிற்கும் இடத்திலும்
சமுத்ரமானது ,கழிகளாய் கொண்டு ஓடும் இடம் போலே
மானுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு சநாதன-அயோத்யா காண்டம் -1-7-
( மனித லோகத்தில் நித்யரான விஷ்ணுவானவர் பிறந்தார் )என்றும் –
யஸ்யாம் ஜாதோ ஜகன்னாதச் சாஷாத் விஷ்ணுஸ் ஸநாதன-
( உலக நாதனான நித்யனான விஷ்ணு எவ்விடத்தில் அவதரித்தாரோ )-என்றும் –
நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாதோ மதுராம் புரீம்–ஸ்ரீ ஹரி வம்சம் -113-62-
( திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையைத் தனக்கு முன்னே அவதரிக்கும்படி போகவிட்டு
வடமதுரை என்னும் நகரத்துக்கு எழுந்து அருளினாரோ ) என்றும்
விஷ்ணுர் மானுஷ ரூபேண சசார வஸூ தாதலே –
( விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு பூ லோகத்தில் சஞ்சரித்தார் )-என்கிற படியே
கண் காண வந்து தோன்றி ஞாலத்தூடே நடந்து திரிந்த அவதாரமான இடத்திலும் ,
தேச கரண கால விப்ரக்ருஷ்டைதகளால் கிட்டி அனுபவிக்க யோக்யதை அல்லாதவருக்கு ,
அதிலே தேங்கின மடுக்கள் போலே -( பூதக ஜலம் போலே அந்தர்யாமித்வம் -ஆவரண ஜலம் போலே பரத்வம் –
பாற்கடல் போலே வ்யூஹம் -பெருக்காறு போலே விபவங்கள்-அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —
ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை -39-) -என்கிறபடியே
தேசாதி விப்ரகர்ஷ கந்தம் இல்லாதபடி ,கல்பிக்க பட்ட அத்யந்த சுலப விஷயம்
பிரமேய ஆவிர்பாவ பரம்பரையின் உடைய சரம அவஸ்தையான அர்ச்சாவதாரம் .
மதி மந்தாந மாவித்ய யேனாஸௌ சுருதி சாகராத் –( எந்த வியாச பகவானால் வேதமாகிய கடலில் நின்றும்
ஞானமாகிய மத்தை த்தை கடைந்து )-என்கிறபடியே அபரிசேத்யமாய் பரத்வ பரமான வேதம் –
சமுத்திர தரங்கித பிரதேசம் போலே தத் வியூஹ பிரதி பாதகதயா அவச்த்தாந்தராபன்னமாய் பஞ்ச ராத்ரமான விடத்திலும் ,
சமுத்ரத்தில் அகாத ஸ்தலம் போலே தத் அந்தர்யாமித்வ பிரதிபாதகதயா அவஹாகித்து அர்த்த தர்சனம்
பண்ண அரிதாம் படி மன்வாதி ஸ்ம்ருதி ரூபமான இடத்திலும்
சமுத்ரம் கழிகளாய் ஓடுமா போலே தத் அவதார பிரதிபாதகதயா இதிகாச ரூபேண விஸ்த்ருதமாய் நடக்கிற இடத்திலும் ,
ஞானசக்தியாதி சங்கோசத்தால் அவஹாகித்து விடாய் தீர மாட்டாருக்கு
–
விடாய்த்தவன் வாயை அங்காந்து இருக்க தானே
தண்ணீர் வந்து குதிக்கும் படி ,கல்பிதமான சாய் கரகம் போலே ,
அனாசாயேன உஜ்ஜீவிக்கலாம் படி ,அத்யந்த சுலபமான சாஸ்திரம்
பிரமாண பூதமான வேதத்தின் உடைய ஆவிர்பாவ பரம்பர சரம அவஸ்தையான திருவாய் மொழி என்கை ..
இத்தால் மடுவும் சாய் கரகமும் என்கையாலே பிரமாண பிரமேயங்களின் உடைய
ஒளியும் எளிமையும் இனிமையும் தொடக்கமான
சத்குண சாஹித்யம் சொல்லப் பட்டது-
(உப்புக் கடல் -எம்பெருமானாகிய பெரும் புறக்கடல் -வேதக்கடல் –
மூன்றுக்கும் முடிந்தநிலை -தடாகம் -அர்ச்சாவதார -திருவாய்மொழி-என்றவாறு )
————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply