திரு விருத்தம் -35-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை-
கீழ் வந்த வியசன தசைகள் எல்லாம் பிரகிருதி என்னும் படிக்கு ஈடாக மேல் வருகின்ற தசை-இருக்கிற படியை கண்டு -இது என்னவாய் தலை கட்ட கடவது–என்று திரு தாயார் பயப் படுகிறாள்
இவளுக்கு முன்பு சம்ச்லேஷ தசையில் ,அனுபவித்ததை எல்லாம் பாதகமாய் தான் ஈடு பட்ட பின்பு-தன் இழவை பாராதே -இத் தலைக்கு நலிவாயிரா நின்றது -என்று அவற்றையும் கொண்டு நோவு படுகிறாள்
வாயும் திரை யுகளில் பிராட்டியை போலே வழிப் பகையாய் இருக்கிறது
தன் மகள் துன்பத்தில் ஈடு பட்டு மேற்கு திசை பெண் தன் கணவன் பகல் போனதை கண்டு வருந்துவதை கண்டு வருந்துகிறாள் -இத் தலை-மேற்கு திசை பெண்  –வழிப் பகை -காணும் இடம் எங்கும் பகை யாக இருகிறதே  –
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய் க்கு மனம் உடையார்க்கு  நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே  –35
பாசுரம் -35-பால் வாய் பிறைப் பிள்ளை -மாலைக்கு ஆற்றாமையின் மேல் தலைவி வாடைக்கு இரங்குதல் –வாயும் திரையுகளும் -2-1-

பதவுரை

பால் வாய் பிறை பிள்ளை–அமிருத கிரணத்தை வெளியுமிழகிற தன்மையையுடைய இளம் விறைச் சந்திரனாகிய பால்மாறத வாயையுடைய (தனது) இளங் குழந்தையை
ஒக்கலைகொண்டு-தனது இடைப்புறத்திலே (ஒரு பக்கத்திலே) வைத்துக்கொண்டு
பகல் இழந்த மேல் பால் திசை பெண்–ஸூர்யனாகிய கணவனையிழந்த மேற்கு பக்கத்துக் திக்காகிய பெண்
புலம்பு உறும்–வருந்தி அழப்பெற்ற மாலைப் பொழுதானது
உலகு அளந்த மால் பால்–உலகங்களை அளவிட்ட திருமாலினிடத்து உள்ள
துழாய்க்கு–திருத்துழாய்க்கு
மனம் உடையார்க்கு–ஆசைப்பட்ட நெஞ்சையுடையவர்களுக்கு
நல்கிற்றை எல்லாம்–அருள் செய்த உதவியை முழுவதும்
சோல்வான்–கவர்ந்து கொள்ளும் பொருட்டு
புகுந்து–வந்து
இது ஓர் பணிவாடை–இந்தக் குளிர்ந்ததொரு காற்று.
துழாகின்றது–(என்மேல்) தடவுகின்றது; அந்தோ!

 வியாக்யானம்-
பால் வாய் பிறை பிள்ளை இத்யாதி--பால சந்த்ரனை ஓர் அருகே கொண்டு ,பகலை
இழந்த மேலை திக்காகிற பெண்ணானவள் சந்த்யா— சமயத்திலே ,பிரபலியா நின்றாள் .
புதிசாக பர்தாவை இழந்தாள் ஒரு ஸ்திரி தன்னுடைய ஸ்ததந்தய பிரஜையும் எடுத்து கொண்டு-கூப்பிடுமா போல கூப்பிடா நின்றாள்-
பால் வாய்-வாயில் முலையை வாங்கில் வாடும்
பகல் இழந்த –இழந்த பர்தாவின் கனத்தை சொல்கிறது
ஒரு மனுமாந்தாத்ரு ப்ரப்ருதிகளை இழந்தால் போலே தான் இழவுக்கும் போலியாகி
தானும் உத்தேச்யம் பெற்றேன் என்னும் போது ,பகல் கண்டேன் -என்று இறே சொல்வது
-பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -சூரியனாக நாராயணனை கண்டேன் இரண்டாம் திரு அந்தாதி -81
மேல் பால் திசை பெண் –நாயகி உடைய கனம் சொல்கிறது -திக்குகளை விவேகிக்கும் பொழுது-மேல் திக்கை உத்க்ருஷ்டம் என்று சொல்லும்படியாலே –மேலை கடல் கோஷிகிறவற்றை-புலம்புகிறது என்கிறது-
உலகு அளந்த இத்யாதி -சர்வேஸ்வரன் பக்கல் உண்டான திரு துழாய் மாலையிலே
பிரவணமான மனசை உடைய இவளுக்கு-
மாலை நல்கிற்று எல்லாம்-மாலை நல்குகை-சத்த்தையை வைக்கை –சந்தான சாபம் வைத்த படி
மாலை சோல்வான் இத்யாதி–சிலரை ஹிம்சிக்க புக்கவர்களை ஹிம்சிக்க புகுவாரை போலே-
சத்தையைத்  துளாவிக் கொண்டு வரா நின்றது
பனி வாடை-நஞ்சூட்டின வாடை -பிராண அவஸ்தமாய் இருக்கையாலே -பிராணன் நின்ற நிலை எல்லாம் அறிந்து
துழாவா நின்றது –நாங்கள் பிரக்ருதியை அழித்தோமோ ?
எங்கள் உடன் சஜாதீயமானத்தை கொண்டு போகிறோம் இத்தனை அன்றோ ?-என்று அழியா நின்றது-
ஸ்வா பதேசம்
 பகவத் விச்லேஷத்திலும் ,அனுகூல பதார்த்தங்களும் , பாதகம் ஆகிற படியை கண்ட
ஸ்ரீ வைஷ்ணவர்கள்-இவருடைய சத்தை எங்கனே தரிக்க கடவதோ -என்று அஞ்சுகிற படி-
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: