திரு விருத்தம் -34-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை-அவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலேகூடல் இழைக்க தொடங்கினாள்–அது தப்பின படியை கண்டு ,நாயகன் தன்னை கண்டால் கோபிக்குமோ பாதி  கூடலோடே கோபிகிறாள்-

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34-

 

 பாசுரம் 34-சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி -கூடல் இழைத்து  வருந்தும் தலைவி நிலையை தோழி தலைவனுக்கு உரைத்தல் –மின்னிடை மடவார்கள் -6-2-
 வியாக்யானம்-
சிதைகின்ற தாழி என்று ஆழியை சீறி –முன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே-அது சிதறி வருகிற படியை கண்டு-அத்தோடு சீறி அருளா நின்றாள் என்பார்கள்
பட்டர்–இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே ,-சீறி உதையா நின்றாள் -என்று ..கூடல் இழைக்க புக்கவாறே
கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்க புக்க வாறே
 -அத்தோடு சீறா நின்றாள்-

நாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே–சாபமானாய /ராமோ ரக்தாந்த லோசன -என்ன-கண் சிகப்பாய் வில்லை கொடு வா என்னும் இத்தனை இறே-

சீர் அடி இத்யாதி-ஆர் செவி சீ பாய்ந்து ,கிடக்கும் அது ஆருக்கு பலிகிறது தான்
பிறரை  இழப்பிக்கும் அளவு அன்றியிலே தம் தாம் பேற்றையும் இழப்பர்களோ ?
பெறுதற்கு அரிதான திரு அடிகளாலே ,கிடீர் அசேதனமான கூடலை உதைகின்ற்றது
இங்கனே என்னும் இடம் அறிந்தான் ஆகில்-தூணிலே ஒதிங்கினோ பாதி  இம் மண்ணிலே ஒதுங்கி கிடக்கும் கிடீர்
கடல் ஆன போது இவை சில கிடைக்கும் என்று அன்றோ நீர் தோறும் பரந்து நிற்கிறது
அப்போதைக்கு தானே பெற்றான் ஆகிறான்
துவத் பாத பங்கஜ பரிக்ரக தனய ஜன்மா பூயாசம்-என்று
அவன் சர்வேஸ்வரன் ஆவது  இவள் காலுக்கு இலக்கான வாறே
லஷ்மி பதி லாசஷைக லஷணம்–ஈஸ்வரன் ஆவான்
தலையில் அல்லது திரு அடிகள் தான் ஏறாது இறே
தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம்-தரம் பாராதே உதைக்கின்ற படி
  மதித்தும் மதியாது இருக்கிற  வேண்டப் பாடு உடையநாயகம்
மாலே-இவளை இப்படி பிச்சேற்றி இவள் பிச்சை கண்டு பிச்சேறி இருகிறவன்-
உனது தண்டார் இத்யாதி--உன் பக்கல் உண்டாய்
-குளிர்தியை உடையதாய் ,
தாரையும் உடைத்தாய்
கொம்பிலே நின்ற போதை காட்டில் ,
திரு மேனியில் ஸ்பர்சத்தால் தழையா நின்றுள்ள திரு துழாய்
மாலையை தனக்கு ஆபரணமாக விடுகையாலே  ,
மனசு பிரவணமாய் பதையா நின்ற இவள் இடை ஆட்டத்து
பட்ட போது எழு போது அறியாள் வரை மட்டலர் தண் துழாய் என்னும் –திரு வாய் மொழி -2-4-9-
-திரு துழாய் என்றே பதையா நின்றாள்
பரதஸ் யவதே தோஷம் நாஹம் பச்யாமி  –வத்யதாம்-என்ற இளைய பெருமாளை போலே
அறியேன் செயல் பால் அதுவே -க்ரம பிராப்தியும் இவள் உடைய த்வரையும் சாதனம் இல்லை-அப்ரயோகம்  -பலம் அவன் தன்னாலே இருந்த படி-
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: