திரு விருத்தம் -33-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை-
நாலு மூலையும் மேகங்கள் வந்து பரந்து மேக தர்சனத்தாலே பெண் பிள்ளை
மோகித்து கிடக்க ,இவள் மோகத்தை கண்ட திரு தாயார் -மேகோ தயாஸ் சாகர
சந்நிவ்ருத்தி -என்றும் -,–பீஷாஸ் மாத்வாத பவதி பீஷோதேதி சூர்யா -என்றும்
என்னும் படியாக பதார்த்தங்கள் தன் கார்யத்துக்கு அவ் அருகு போகாத படி நிர்வகிக்கிறது-தன் ஆஞ்ஜையால் அன்றோ –இவ் அளவில் இவளை பரிகரிக்கை அரிதோ என்று கூப்பிடுகிறாள்-
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33
பாசுரம் -33-அருள ஆர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் -தலைவி ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்தல்-ஏறாளும் இறையோனும் -4-8-
 வியாக்யானம்-
அருளார் திரு சக்கரத்தாலே -கிருபையால் பரி பூரணமாய் இருக்கிற படி
சர்வேஸ்வரன் அருள் மறுத்த போதும் அருள் கூடு பூரித்து இறே இருக்கிறது
பிராட்டி அருள் மறுத்தாலும் ,மாறாதே இறே இருப்பது ஆழ்வான் அருள்-
மடு அருகில் ஊற்று போலே-
அம்பரீஷ சக்கரவர்த்திக்கு துர்வாசர் வந்த போது ஜெயித்து கொடுத்ததை நினைத்து இருப்பது
ஆழ்வானை ஆச்ரயித்தவர் எதிரிகள் இல்லாது இருந்த படியையும் ,
ஆழ்வானை எதிரியாய் பகைத்த போது அவர்களை   எம்பெருமானே
நேர் இட்டு கொண்டு நோக்கும்படியையும் -மற்றை புகல் இல்லாது இருந்த படியையும் சொல்லிற்று -சுமுகன் கருடன் விருத்தாந்தமும் அறிவோமே-
அருளார்– அருள் ஆச்ரயித்துக்கு நிரூபகம் –பிரதி பஷத்தை துணிக்கும்  என்று சொல்லா நிற்க செய்தேயும்
நிரூபகம் நிற்கும் படி எங்கனே எண்ணில் -அதுவும் ஹித ரூபம் என்கையாலே
திரு சக்கரத்தால்-கையில் திரு ஆழி யுமாய் இருக்கும் இருப்பே சர்வேஸ்வரனை சர்வேஸ்வரன் ஆக்கும்
ஈஸ்வரனுக்கு லஷ்மி சம்பந்தம் போலே இறே திரு ஆழியும்
அகல் விசும்பு இத்யாதி--உபய விபூதில் உண்டான அஞ்ஞான அவஹாமான பாபம் போகும் படி
திரு ஆழியின் உடைய தேஜஸ் ஆகிய செம் கோலால் நிர்வகியா நின்றார்
அகல் விசும்பு-த்ரிபா தஸ்யா மிருதந்திவி-என்று முக்கூறாக இருக்கை
அங்குத்தை அஞ்ஞானம்   போக்குகை யாவது என்னில்-கையும் திரு ஆழியும் ஆகிய இருப்பை
விச்லேஷிக்கையில் செய்வது என் என்று விசேஷ வைலஷண்யத்தாலே அதி சங்கை பண்ணினால்
அந்த அதி சங்கையை நிவர்த்தி பண்ணி சங்கை கெடுத்து கொடுக்கை
சங்கை ஆகிலும் உள்ளது -பரிஹாரம் வேணுமே
இங்கு உள்ளது பரத்வம் ஸ்வாபம்–அங்கு உள்ளது ப்ராக்பாவம்
அங்கு அழகை காட்டி ரஷிகிறான் -ரஷமாம் சரணாகதம் சங்கு சக்கர கதா பாணி போல் அருளார் சக்கரத்தாய்-
ஈங்கோர்   பெண் பால் இத்யாதி–அபலை அநந்ய கதி அன்றோ ?
அன்றிக்கே உபய விபூதிக்கும் புறம்பு என்றா ?
உமக்கு சக்தி இல்லை என்றா ?
உமக்கு ஞான சக்திகளை ஏறிட்டுக் கொள்ள பார்க்கீறீரா
விபூதிக்கு புறம்பு என்றீர் ஆகில்   அஞ்ஜர் ஆவீர்
உமக்கு ரஷிக்க போகாது என்றீர் ஆகில் அசக்தர் ஆவீர்
சாஹம் கேச க்ரஹம் பிராப்தா த்வயி ஜீவத்ய பிரபோ-மகா பாரதம் -உத்தயோக பர்வம் -70-43
நீர் பிரபு ஆவைகையும் உம்மை பற்றினவள் பரிபவதுக்கும் ஒரு சேர்த்தி கண்டிலோமீ
தெரிளோம்-அறிகிறிலோம்-அரவணையீர்-உகப்பார்க்கு உடம்பு கொடோம் என்று பிரதிக்ஜை கண்டிலோம் இறே
இவள் தரை கிடை கிடக்க உமக்கு படுக்கை பொருத்துவதே
படுக்கைக்கு மேல் விரி வேண்டாவோ
படுக்கையில் கிடப்பார்க்கு தனி கிடை அமையுமோ-
இவள் மாமை-பெறுதற்கு அரிய மாமை -நாம் சர்வ ஸ்ரஷ்டாவாய் இருந்தோம்
இன்னம் பண்ணி கொள்கிறோம் என்று கிடக்கிறீரோ-
அவன் தான் கை தொட்டு அழிக்கிறான் என்று தோற்றி இருந்த படி
சுஹ்ருதம் சர்வ பூதானாம்-என்னும் அதுவும் தப்பு அற்று இறே
இவன் தானே கை தொட்டு அழிக்கிறான் என்னும் படி
 இவனோட்டை சம்பந்தம் -பிராப்தியை திரு தாயார் அறிந்து-உணர்ந்து இருந்த படி
பிரஜை கினற்றினில் விழுந்தால் வாங்காத தாய் தள்ளினாள் என்னுமோ பாதி

ரஷகன் ஆனவன் ரஷியாது ஒழிந்தால் அவ்வளவும் சொல்லலாம் இறே ,

இவள் படியையும் பார்த்து அவன் படியையும் பார்த்தால் ,
பேற்றுக்கு கண் அழிவு இல்லையாய் இருந்தது
இவ்வளவாக கண் அழிவு அற்ற பின்பும் வரத் தாழ்ந்த படியாலே
இது என்னதாய் முடிய கடவதோ -என்று திரு தாயார் சோகிக்கிறாள்
———————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: