திருவாய்மொழி-2-3-ஊனில் வாழ் உயிரே – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

இறை இன்பம் நுகர்ந்து உசாத் துணையான வான் அடியார்கள் உடன் எப்பொழுது கூடப் போகிறோம் என்கிற

ஆர்த்தி உடன் அருளும் திரு வாய் மொழி
ஊனில் வாழ் உயிரே ! நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே -2-3-1
ஒத்தார் மிக்காரை இலையாய மா மாயா !
ஒத்தே எப் பொருள்க்குமுயிராய் என்னைப் பெற்ற
அத் தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த
அத்தா ! நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2
அறியா காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மா வலி ! மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் என தாவி யுள் கலந்தே –2-3-3
அறியா காலம்-பிள்ளை பருவம்
சத் சங்கம் -ஹரி சங்கீர்த்தனம்- கிருபை கொண்டு குழந்தை இடம் பலகை -பாக்கியம்
முப்பது வருஷம் வீண்-புரந்தர தாசர் –வாசு தேவனுக்கு தாசன் ஆகாமல்-பாண்டு ரெங்கன் அருள் பின்பே கிட்டியது
சக்குபாய்-பண்டரி நாதன் -ஆண்டாள் போல் சிறு குழந்தை- சிறு வீடு கட்டி விளையாட –விட்டல் பஜனை–ஆனந்த நடனம் ஆடி
சிறு வீடு களைத்த தாத்தா -சாக்கு பாய் பின் சென்று கையில் உள்ள தம்புரா தாளம் கேட்டாள்-பஜனை உபதேசம் கேட்டு -அழுது உடன் போக
கட்டி அனைத்து உச்சி முகந்து -காதில் விட்டல -உபதேசம்-பாண்டு ரெங்கன் தர்சனம்-ஆள் கொள்ள பட்டாள் —
ஆழ்வாரும் முலைப் பால் சாப்பிடாமல்-அறியா காலத்தில் அடிமை கண் அன்பு செய்து
உனது சேஷ பூதன் என்று அறியா காலத்தில்- உண்மையான ஆத்மா ஞானம் வேண்டும் -சோஹம் நிலை ஆத்மா தேக விவாகம் அறிந்து மேலும்  தாசோஹம்-தாசன் என்று உணரும் நிலை

அறிவு இல்லாத தசையிலே -அறியா மா மாயம்-ஞானம் கொடுத்த பின்பு-வாழ்வில் வைத்தது என்ன காரணம்
திரு மாலை ஆண்டான்-வருத்ததுடன்-அன்பு செய்வித்தும் –பின்பு வைப்பாயா -ராமா நுஜர்-பிரித்து -அறியா மா மாயத்து அறியா காலத்துள்ளே -சேர்த்து அறிய முடியாமல் இருக்கும் மா மாயம்-அடிமை கண் -அன்பு செய்வித்து -கருணை உகப்புடன் அருளுகிறார் என்று –முதல் தாபத்துடன் வருத்தம் -இவற் நன்று -சம்பந்த ஞானம் பிறப்பித்து -தேக சம்பந்தம் இழவு –முன் பாட்டு பின் பாட்டு பிரிதி உடன் அருள -நடுவில் இது மட்டும் அப்ரீதி பாட்டு ஆக இருக்க முடியாது–உபகாரமாக அருளி செய்தார் இத்தையும்
எனது ஆவியுள் கலந்த பெரு நல லுதவிக் கைம்மாறு

எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது எனபது உண்டே ?
எனதாவி யாவியும் நீ பொழில் ஏழும் உண்ட வெந்தாய் !
எனதாவி யார் ? யான் ஆர் ? தந்த நீ கொண்டாக்கினையே –2-3-4
ஆத்மா வுடன் கலந்தாய்–நாடி வந்து -என்னை-கொண்ட பின் -ஆவி கொடுக்கலாமா என்றால்-
அவன் தன்னையே கொடுத்த பின் என்னை கொடுக்கவா -தன்னை கொடுத்த பின் என்னது ஒன்றும் இல்லையே
யான் யார் எனது ஆவி யார் -தந்த நீ கொண்டு ஆக்கினையே -நீ தந்தாய் எடுத்து கொண்டாய்
மகா பலி பத்னி கூட இதை சொன்னாள்-எல்லாம் உன் உடமை –இந்த்யாவளி -பெரிய ஞானத்துடன்-
ஆகையால் உனக்கு சேஷம் –கர்த்ருத்வம் ஒன்றும் இல்லை-அவர் சொத்து-அகந்தை மமதை இன்றி
இனி யார் ஞானங்களால் எடுக்கல் ; எழாத எந்தாய்!
கனிவார் வீட்டு இன்பமே ! என் கடல் படா வமுதே !
தனியேன் வாழ் முதலே !பொழில் எழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் ! உன பாதம் சேர்ந்தேனே –2-3-5
ஞானவான் கூட எடுக்க அறிய முடியாத வைபவம் –
பக்தன் -அழுதால் பெறலாமே-கனிந்த உள்ளமே வேண்டுமே -வீட்டு இன்பம்
உண்மையான ஆரா அமுதம்-கடல் படாத அமுதம்-உப்பு சாறு இல்லை
என் அமுதம்-பிரத்யேக அமுதம்
வாழ் முதல்- ஹிருதயத்தில் வைத்து இருக்கிறேன்
தனியேன்- நித்ய சம்சாரியோ நித்ய கோஷ்டியும் இல்லை
ஆஸ்ரிதர் -ஞானம் அகோசரன்– பரம சுலபன்-பக்தனுக்கு -கோவிந்தா கூப்பிட்டதும் வருகிறான்
சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியை
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாத அரு உயிரை
சோர்ந்தே போகல கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே –2-3-6
முதலிலே அடைந்தேன்
தீ வினைகளுக்கு நஞ்சு நீ தானே
பிரியாத உயிர் போன்றவன்
தன்னை விட்டு போக விடாமல் காத்து
சூர்பணகை மூக்கு அரிந்து போக விட்டான் -பிராட்டி கடாஷம் இல்லை என்பதால்-பொறாமை அசூயை கொண்டதால்
பிராட்டி மூலம் உன்னை அடைந்தேன்
முன் நல யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே !
பன்னலார் பயிலும் பரனே ! பவித்திரனே !
கன்னலே ! அமுதே ! கார்முகிலே ! என் கண்ணா !
நின் அலால் இலேன் காண் என்னை நீ குறிக் கொள்ளே –2-3-7
சுரம் தான் நாத பிரமம்-இசைந்து பாடும் பொழுது பிரம ஞானம் வெறுமே –யாழ் வீணை நரம்பு தான் அவன்
பல நல்லார் தியானம் பண்ணும் பரன்/பவித்ரன்
அமுதன் -கார் முகில்- தாபம் தீர்க்கும்-என் கண்ணா -சொல்லி தான் ஆசை தீருகிறார் ஆழ்வார்
இதை சொன்ன பின்பு வேறு எதுவும் சொல்ல வேண்டாமே
வேறு எதுவும் வேண்டாம்-
உன்னை தவிர வண்டாம் என்று -என்னை நீ குறிக் கொள் –
குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக் கொண்டிப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவி துயர் கடிந்தே –2-3-8
பரம் பொருளே லஷ்யம் -ஞானவான் -சாதனம்-கிறிகள்–
நாராயணா இதம் சமர்ப்பயாமி- அஹம் புத்தி இன்றி-நெறி கொண்ட -பக்தி வழி-
மற்றவை பக்திக்கு சாதனம்-
பல ஜன்மம் பின்பு இந்த நிலை அடைகிறான்-
பரமாம் கதிம் அவனே தருகிறான் இந்த ஜன்மாவில்- பிர பன்னனுக்கு
சத்திர பந்து அஜாமலன் சரித்ரம்
இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்-
வெண்ணெய் எடுப்பது போல் என்னை எடுத்து கொண்டான்
யானை தாமரை பறிப்பது போல் நம்மை சம்சாரத்தில் இருந்து பறித்து போகிறான்-புராணம்
பிறவி துயர் கடிந்தேன்
கடிவார் தன் அம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவான இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9
பரிமளம் வீசும் திரு துழாய்-சூடி
அவன் சீர்-கீர்த்தி-
பஜனை கேட்க போனாலே அனைத்து வியாதி போகும் -நோய் சாத்தி கொண்டு-மாலை சாத்தி கொள்வது போல் –
வாயால் பாடி உடம்பால் ஆடி-நோய்கள் கெட -ஓடி போகும்
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதி யமாய் உடன் கூடுவது என்று கொலோ ?
துளிக் கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாம் களையே –2-3-10
ராக துவேஷம் இன்றி -விருப்பு வெறுப்பு இன்று -உண்மையான பக்தி-அன்பு பெற்று -மனோ விகாரம்
சரீர விகாரமும் அற்று
பிராக்ருத சரீரம் பெற்று -சோதி உடம்பு பெற்று-சங்கு சக்கர தாரி மாய பிரான்-உபய விபூதியை காக்கும் -அடியார் குழாம் உடன் கூடுவது என் கொலோ
நித்ய சூரிகள் உடன் சேர -அந்தமில் பேர் இன்பத்து அடியார் உட கூட ஆசை –
குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை
குழாம் கொள் தென் குருகூர் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாம் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாம் களாய் அடியீர் உடன் கூடி நின்று ஆடுமினே –2-3-11
அரக்கர் கூட்டம்
திரளான ஸ்ரீ வைஷ்ணவர் கூட்டம் ஆழ்வார் குழாம்
பிர பந்த கூட்டம்
அடியார் கூட்டமாக உடன் கூடி
நின்று ஆடி-கீர்த்தனம் பாடி-
ஆடி ஆடி பாடி-
பாகவத விச்லேஷம் பகவத் விச்லேஷம் விட பெரியது
கோதாவரி தீர்த்தம் பெருமாள்- உனொடும் பரதன் உடனும் சத்ருகன இடன் கூடுவது என்றோ -லஷ்மணன் அருகில் இருந்தும் அறிய வில்லை -குகன் பார்த்ததும் லஷ்மணன் சீதை இருந்தது அறிந்தான்  —
ஊனம் அறவே  வந்து உள் கலந்த மால் இனிமை
யானது அனுபவித்தற்கு ஆம் துணையா –வானில்
அடியார் குழாம் கூட ஆசை உற்ற மாறன்
அடியார் உடன் நெஞ்சே! ஆடு –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –13
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: