திருவாய்மொழி-1-3-பத்துடை அடியவர்க்கு எளியவன் – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு
எத்திறம் ! உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே 1-3-1
பரத்வம் அருளி- புரிய வில்லை- விட்டே பற்ற -வரவில்லை-அடுத்து
எளியவன்-அன்புக்கு சுலபம்-கேட்டு போகலாம் உட்கார்ந்தார்கள்
ஏவம் விதா -தேர் ஒட்டியும்-பக்த்யா து அனன்யா சக்தி–சௌலப்யம்-அருள ஆரம்பிக்கிறார் இதில்–
பத்து பக்தி பரம பிரேமை ரூபம் -ப்ரீதி பூர்வம் –தன்னையே கொடுப்பான்
பிறர் -மற்ற சதநான்தரம் பற்றுபவர் –ஞானிகளுக்கும் கிட்டாதவன் –
கைவல்ய நிஷ்டர்-கல்யாண குணம் ரூபம் இவற்றில் ஈடு படாமல்-
இடைச்சிகள் பெற்று உய்ந்தார்-
புருஷகாரம்-தாயார் -மலர் மகள்
அடிகள்-பிரபு

உரவிடை–உரலுக்கும் சைதன்யம் வந்ததா –பக்தருக்கு தான் கட்டு படுபவன்-தானை இணைந்து இருந்து ஏங்கி -எளிவு-
அவள் நெற்றியில் வியர்க்க கட்டினாலே அம்மாவுக்கு
எவ்வளவு தொந்தரவு என்று ஏங்கி-பக்தர் சிறு முயற்சி செய்தாலும் சகிக்காமல்
பிறர் வஸ்து எடுத்தால் தான் கள்வன்
இவன் சுத்தன்-கள்வன் என்று கட்டினால்-கேவி அழுகிறான்-அழ தொடங்கிகிறான்
வாய் வாய் என்றால் அழாமல் அடக்கி நிற்கும்-ஏங்கிய எளிவு கட்டுண்டது எத்திறம் ஏங்கியது எத்திறம் எளிவு எத்திறம்
பரதன் மூர்ச்சை ஆனான் பெருமாள் மர உரி கொண்டு இங்கு போனான் கேட்டதும்-சத்ருக்னன் என் செய்வேன்-பிரேமையால் வந்த மூர்ச்சை
செய்வது அறியாமல் விட்டு இருந்தது போல் மதுர கவியும் எத்திறம் என்று இருந்தாராம்தொட்டால் என்ன ஆகுமோ என்று நின்றான்-செய்வது அறியாமல் கிடந்தது போல் –மதுர கவி ஆழ்வாரும் எத்திறம் என்று இருந்தாராம் –ஆச்சார்யர் ஆச்ரயித்தி பசி தாகம் அற்று இருந்தார் ஆறு மாசம் இவரும்

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில் பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளி தரு நிலைமை யது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினொடு அகத்தனன்  புரதனன் அமைந்தே 1-3-2
திரு அடி ஆசை கொண்டாலே போலும் -அஜாயமான பகுதாஜாயதே -பல அவதாரம் கொண்டு நம்மை கொள்ள
உற்பத்தி நாசம் இல்லா மோஷம்-பூர்ண ஆனந்தம் கொடுப்பவன்
உள்ளும் வெளியிலும் அந்தர் பகித்சைய -வியாபிதவன் —
அமைவுடை அற நெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமை வுடை  முதல் கெடல் ஓடி வுடை அற நிலம் அதுவாம்
அமை வுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம்
அமை வுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே 1-3-3
அமைப்பு உடையவை ஆக இருக்கும் தர்மம் -சனாதன தர்மம் -வர்ண ஆஸ்ரம தர்ம வகைகள்-ஷத்ரியன் தர்மம் கீதாசார்யன் அருளி-பெருமாள் துஷ்டர்களை ஒழித்து தன தர்மம் காத்தார்-இல்லறத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் சந்நியாசி கூடாது –அமைப்பு உடைய அற நெறி –பலன் கருதி செய்யாமல் அவன் ஆகஜை பிரீதி என்று செய்ய வேண்டும்-விகாரம் அற்றது -இடை

சர்வம் விஷ்ணு மயம்–அவன் வைபவம் நினைந்தது பெருமை உணர்ந்து இருக்க வேண்டும்
 யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான்
யாரும் ஓர் நிலைமைய என அறிவு எளிய எம்பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேரும் ஓர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே 1-3-4
யாராலும் அறிய -நிர்ணயம் -பண்ண முடியாதவன் -பக்தி இல்லாதவர்க்கு–ஆனால் பக்தி உள்ளவர்களுக்கு அவன் அருளால்

எளியவன் என்று நிலைமை–சம்சாரிகளில் இல்லை ஆழ்வார் ..நித்யர்களிலும் இல்லை கிருஷ்ணா விரகம்-இவர் எம்பெருமானோ-ஆச்சர்யம் அவனுக்கே ஆழ்வாரை பற்றி-சர்வக்ஜன் குணம் இது தான்-தன விபூதியை தனக்கு தெரிந்தவரை சொல்கிறேன் என்று அவனே அருள ஆழ்வார் பரக்க பேசி-தனி விபூதி தான் ஆழ்வார் -பேரும் ஆயிரம் உடைய -சகஸ்ர நாம வைபவம்–பிணக்கு-முரண்-
உருவம் உண்டு இல்லை-விருத்த தர்மம்-உருவம் இல்லை என்றால் இல்லை ஆகாசம் தண்ணீர் போல் –அகண்ட சொரூபம் நினைத்தால் உருவம் இல்லை பக்தர்களுக்கு திவ்ய மங்கள விக்ரகம் கொண்டவன்
பிணக்கற அறுவகை சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி அம் பகவன்
வணக்குடை தவ நெறி வழி நின்று புற நெறி களை கட்டு
உணக்கு மின் பசை அற அவன் உடை உணர்வு கொண்டு உணர்ந்தே  1-3-5
விருத்தமான வாதம்-அணு/பிரகிருதி/சூன்யம் கார்யம்-ஜடம் தானே இவை எல்லாம்
இயற்க்கை பிருகிருதி ஒழுங்கு படுத்தியதும் இவன் தானே
17 பூர்வ பஷ வாதம்- பார்த்தோம்-சர்வ காரண கார்யங்களையும் இவனே
நோக்கம் -அகண்ட பராத் பரன்–அவனுக்கு ஏற்ற நீதி வேண்டும் -அனைத்தும்
ஆச்சர்யமோ மதமோ வேற இருக்கலாம் –அரு குழந்தைகள் சண்டை போடா தாய் வேடிக்கை பார்த்து இருப்பது போல் ஆனந்த சொரூபம் ஆதி அம் பகவன் இவனே
தவ நெறி-மத அனுஷ்டானம்
வணக்குடை பக்தி கொண்டு  -ராவணன் போல்வாருக்கு கிட்டாமல் -கர்ணன் தர்மத்துக்கு கிட்டாமல்
பகவத் ஆகஜை கைங்கர்ய ரூபம் அவன் சமர்ப்பயாமி என்று செய்ய வேண்டும்
வழி தவறாமல் -ஆணை படி -வழி நின்று சுருதி  ஸ்மிர்த்தி மம வாகயா -அவன் பிரசன்ன திரு முகமே சொர்க்கம் அவன் முகம் கோணி அதுவே நரகம்
ராவாணாதி தபஸ் போல் பண்ணாமல் -சத்யம் வத தர்மம் செய்து-களை இன்றி-கணவனுக்கு பிடித்த அலங்காரம் போல் பாகவத வேஷம் நெறி உள்ளி உரைத்த

புத்த அவதாரம் –சாரம் அறிந்து -புற நெறி விட்டு -களை கட்டி-
உணர்ந்து விட வேண்டும்
வாசனை இன்றி விட வேண்டும் -பசி இன்றி –
அவன் உணர்வு ஒன்றே -கிருஷ்ண சைதன்யம் ஒன்றே —
அனைத்தும் கண்ணா என்ற உணர்வே அமைய வேண்டும் –
சாதுசாமகம் இதற்க்கு தானே -சர்வ ஸ்வாமின் அஸ்மின் ஸ்வாமி
அபிமானம் வேண்டும் நம் கணவன் குழந்தை என்று
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியியந்த வின் நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு அரிது உயிர் காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து இறைஞ்சுமின் மனப் பட்டது ஒன்றே 1-3-6
படித்தும் அனுபவத்தாலும் /சிந்தித்து அறிந்து
அகன்று அல்ப சாரம் சாரம் அறிந்து -அந்த சாரம் -சார தரம் அனைத்தையும் விட்டு -சார தமம் பிடிக்க வேண்டும்
திரு மழிசை ஆழ்வார் -சங்கரனார் -ஆகம நூல் கற்றோம் -சாக்கியம் கற்றோம் –சமணம் கற்றோம் அகன்றாரே
நமக்கு காட்டஇருந்து அகன்றார் -சாரம் இல்லை என்று –உணர்ந்து உணர்ந்து -இருந்தாலும் தெளிவான ஞானம் -கிடைப்பது கஷ்டம்

தெரிந்து மூவரை கொண்டு-முனியே நான் முகனே முக் கண் அப்பா -சத்வ ரஜோ தமோ குணம் அறிந்து–உரைத்து-ஒன்றே ஒன்றில் இருக்க வேண்டும்
ஒன்றுஎன பல என அறிவரும் வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை நம் முடை நாளே 1-3-7
பரமாத்மா ஒருவனே முப்பத்து மூவர் முப்பத்து முக் கோடி கணங்கள்
அந்தர்யாமி அனைவருக்கும்
மூவருக்கும் ஒன்ற -அந்தர்யாமி
இரு பசை-பாப புண்ய வாசனை-அர்த்தம் வியாக்யானம் இல்லை
-பிரம்மா ருத்ரன் இரு பசை அறுத்து -ஈஸ்வரா சங்கை நசை தவிர்த்து வாசனை பலத்தால் வந்த பசை அறுத்து நாளும் நின்று அடும் நம் பழைமை அங்கோடு வினை யுடனே

மாளும் ஓர் குறை வில்லை மனன் அகம் மலம் அறக் கழுவி
நாளும் நம் திரு வுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே 1-3-8
எப் பொழுதும் துன்ப படுத்தும் பாப புண்ய கர்ம வினைகள்
அவன் உடைய பக்தி பண்ணியே -அவனை வணங்கி-மாளும் -இறுதி நாளில் –
அந்திம தசையில்  ஆவது ஓர் அஞ்சலி மாத்ரத்திலும் ஆதல் -ஓர் உக்தி மாதரம் ஆதல்
பக்தி மார்க்கம் -விட -அஜாமலன் சரித்ரம்–அந்த காலத்தில் கூட வந்தால் போதும்
வல தனன் திரி புரம் எரித்தவன் இடம் பெறத் துந்தித்
தலத்து எழு திசை முகன் படைத்த நல லுலகமும் தானும்
புலப்பட பின்னும் த்ன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப் புகில் இவை பின்னும் வயிற்று உள இவை அவன் துயக்கே 1-3-9
இருவரையும் தன திரு மேனியில் கொண்டவன்
சங்கர நாராயணன் -வலப் புறம் இடம் கொடுத்து
ஒக்க இருக்கும் பெருமை
தானே அனைத்தையும் கொண்டு இருந்தும்
ஆச்சர்யமான மாயை
துயக்கறு மதியில் நன் ஞானத்துள் அமரரை துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியவன் அல்லன்
புயற் கரு நிறத்தணன் பெரு நிலம் கடந்த நல அடி போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே1-3-10
 ஞானிகளையும் மயக்குகிறான் -ஜெயா விஜயர் சபித்தார்களே சனகாதிகளும்
அவனுடைய லீலை
நித்யர்களும் மயங்கும் படி -கருடன்
மம மாயா துரத்தரா
அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குரு கூர் சடகோபன் குற்றேவல்கள்
அமர் சுவை ஆயிரத்து அவற்றின் உள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு அயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம சிறையே 1-3-11
குற்றேவல் வாசிககைங்கர்யம் -அருள பாடு இட்டு செய்விக்க வேண்டும்
சிறை அறுத்து அமரர்கள் உடன் இருக்க பெறுவோம்
பத்துடை யோர்க்கு என்றும் பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மா நிலத்தீர் ! மூண்டவன் பால் –பத்தி செய்யும்
என்று உரைத்த மாறன் தன் இன் சொல்லால் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் சிறை -திருவாய் மொழி நூற்று அந்தாதி
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: