திருவாய்மொழி-1-1-உயர்வற உயர்நலம் – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

ஞானி மெய்ஞானி தபஸ்வி-ரிஷிகள்

அவனால் அருள பட்ட மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார் –
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் –சர்வ பராத் பரன்–ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
நலம்-ஆனந்த வல்லி-வேதம் திரும்பி யதோ வாசா நிவர்த்தந்தே –  பூமா -அகண்ட –பேர் இன்பமே வடிவு கொண்ட
சத்யம்ஞானம்  அனந்தம் பிரம்மா –மயர்வற மதி நலம் அருளினான் எவன் அவன்-சங்கு ஆழ்வார் கொண்டு துருவனுக்கு நாரதர் –
மதி நலம்-சத் புத்தி -துர் புத்தி நீக்கி இல்லை-மதி இன் நலம் புத்தி உடைய நலம் இல்லை பக்தி ஞானம் இரண்டையும் -மதியும் நலமும்
மால்யமானும் ஸ்ரீ ராமனை விஷ்ணு அறிந்து சொல்லிய வார்த்தை –சாஷாத் நாராயணன் –ஞானத்தின் பலன் கைங்கர்யம் ஸ்வாமி தீர்த்த கைங்கர்யம்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -நித்யர் நாயகன்  -தேவர்கள் அயர்வு அற்றவர்களும் இல்லை அயர்வரை அறுக்கவும் அறியாதவர் -நித்ய சூரிகள்
துயர் அரு சுடர் அடி தொழுது எழு என்மனனே –1-1-1

பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் இன்றி இவை கடல் ஓசை ஆக இவை இருக்கும்
மனன் அகம் மலம் அற -அழுக்கு நீங்கி சித்த சுத்தி வர -மலர் மிசை எழு தரும் -ஹிருதய கமலத்தில் எழுந்து அருளும்
தேவர்கள் அசுரர்களால் துன்ப பட்டவை புராண பிரசித்தம்

மனன் அக மலம் அற மலர் மிசை எழு தரும்
மனன் உணர்வு அளவிலன் பொறி வுணர் அவை இலன்
இனன் உணர் முழு நிலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரை இலனே1-1-2
அழுக்கு நீக்கி -பிரதிஷ விஷயம் ஆகாதவன்-பொறி உணர் அவை இலன்
அனுமானம் விஷயம் ஆகாதவன் -மனன் உணர்வு அளவிலன்–
அபிராக்ருத  –எனன் உயிர் ஆத்மாவுக்கு உயிர் –த்ரி காலத்திலும் விகாரம் அற்றவன் -சத்யன் -இனன் இலன் –
உண்டாகி இருந்து மாறி  வளர்ந்து முத்தி பழுத்து உலர்ந்து விழுந்து -ஷட் பாவ விகாரம் –ஹானி விருத்தி இல்லாதவன்
இலனது வுடையனிது என நினைவு அரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந
நலனுடை ஒருவனை நணுகினம்  நாமே 1-1-3
ஆச்சர்யமான விஸ்வ ரூபத்தில் காட்டி-இருந்தும் இல்லாதவன்-தோஷம் தட்டாதவன்
ஆகாசம்  வாயு போல் அருவாகவும் தீ நீர் நிலம் போல் உருவாகவும்
புலன் இந்த்ரியன்களால் வரும் ஞானம் அற்ற -அகண்ட ஞானம் -சிறை இன்றி பரி சேதம் இன்றி -தீபம் ஐந்து
பொத்தல் உள்ள மரக் காலால் மூடி–இருப்பது போல் அன்றி–புலன்கள் ஆன சிறை இன்றி-கண் யாரால் பார்கிரதி அவனே -ஆதாரம்
நடாத்துகிறான்–திவ்ய மங்கள விக்ரக விசிஷ்டன்-அவன் திரு கண் -பக்தர் அனுக்ரகதுக்கு தானே -சங்கல்பத்த சக்தன் -தன உபயோகத்துக்கு அவன் இந்த்ரியங்கள் இல்லை-கோபிகள் பாடினதும் தோன்றுகிறான்-திரௌபதிக்கு வஸ்த்ரம் கையால் கொடுக்க வில்லை-குசேலர் ஐஸ்வர்யம் -சங்கல்பத்தாலே அருளினான் -அக்ரூரர் வர சங்கல்பித்தான்-ஆதிமூலமே சப்தம் -கோவிந்தா சப்தம் காதால் கேட்க்க வில்லையே -பச்யதே —
எங்கும் இருந்து -ஒழிவிலன்-எங்கும் உளன் என்ற மகனை காய்ந்து –அவனை ஆஸ்ரயிக்க -ஆச்சர்யம்-நணுகினம் நாமே -உகப்பு நிம்மதி உடன் பேசுகிறார்

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
நாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீமவை இவை வுவை அவை நலம் தீங்கவை
ஆமவை யாயவை ஆய் நின்றவர் அவரே 1-1-4
உவன் உவள் உது –தூரச்தனும் இல்லை கிட்டே உள்ளவனும் இல்லை-
நலமும் தீங்கும் அவன்-அந்தர்யாமி அவன்-ஆம் அவை ஆய அவை எதிர் கால நிகழ்கால  இறந்த கால நிகழ்வு
எல்லாம் அவன் தானே -கார்யம்-காரணம் -பிரம வஸ்து மாறாமல் எல்லா காலங்களிலும் இருப்பார்
அனைத்தையும் தன உள் ஒடிக்கு கொண்டு வெளியில் விட்டு விளையாடுகிறான்-செப்பிலே கிடந்த ஆபரணத்தை பூண்டு
பின்பு செப்பிலே வைப்பது போல் –தான் மாதரம் யோக நித்ரையில் இருந்து –

அவரவர் தமதமது அறிவறி வகை வகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றனரே 1-1-5
பல தெய்வம் உபாசிக்க -இறையவர்-கணவனே தெய்வம் என்பாரே-ஸ்ருஷ்ட்டி பண்ணுவாரா தளிகையே பண்ண அறியாரே
பர தெய்வம் அவர் புத்தியால் நினைக்கலாம் சிலரை-வேதம் எதை சொல்வதை ஒத்து கொள்ள வேண்டும்–கடவுள் சொல்லும் பலருக்கு சொல்வது போல் இறையவர்–ஆழ்வார் உதார குணம்-இவரையும் இறைவர் என்ற சொல்லால்–வியாக்யானம் -திரு குருகை பிரான் பிள்ளை ஆராயிர படி –சுவாமி தானே காலேஷேபம் நடத்தி இருக்கிறார் க்ரந்தத்தால் அளவுபடுத்த வில்லை சம்ப்ரதாயம் -ரசிகர் அனுபவம் நிறைய —
சாஸ்திரம் என்பதால் ஸ்ரீ பாஷ்யம் நிர்ணயம் செய்து அருளினார்
 விஷ்ணு புராணம் போல் ஆராயிர படி-சத்வ குணம்-ரஜோ தமோ-குணம் படி பல இறையவர்-இருந்தும் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி லயம் அனைத்தும் இவன் அதீனம்–ஜகத் ரஷணமும் இவன் அதீனம்-ஏவம் மாம் ஏக -கீதை-தம் தம் நியமனம் படி ஏற்படுத்தியே இவன் தான்–

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்திலர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்
என்றும் ஓர் இயல்வோடு நின்ற வெம் திடரே 1-1-6
பூஜ்ய பகு வசனம் -சர்வம் விஷ்ணு மகம் ஜகத் –
இப்படி அப்படி என்று சொல்ல முடியாத சொரூபம்
அகண்ட வஸ்து-திரிய முடியாதே -எங்கும் இருப்பதால்-
புறப்பாடு-ஸ்ரீ பாதம் தாங்கியும் அவர் தானே –
நின்ற இருந்த கிடந்த திரிந்த திரு கோலம் உண்டே-பிருந்தாவனம் தண்டகாரண்யம் திரிந்தானே கண்ணனும் ராமனும் -லீலைகள் இவை-
ஒரேஇயல்பில் பேச முடியாது –அவன் இயல்பு சொல்கிறார்-ஒரு இயல்பு என்று நினைக்க அரியவன் என்று

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதுமாய் அவை அவை தொறும்
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்து உளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே
அனைத்திலும் வியாபித்து-நியமித்து -ஜீவேனா ஆத்மானா பிரவேச்ய –
ஞான பிரகாசம் -தொட்ட இடம் எல்லாம் உபநிஷத் வாக்கியம்-
பரம் ஜோதி இவன்-சூர்யன் சந்தரன் நஷத்ரம் மின் சாரம்-வித்யுத்-ஒளி–நேத்ரா ஜோதி-இவற்றை விட உயர்ந்து –ஆத்ம ஜோதி
பரம் ஜோதி–சுயம் பிரகாசமான வஸ்து

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலா யவை முழுதுண்ட பர பரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்தும் அமைத்தும் உளனே 1-1-7
தேவர்களும் அறிய முடியாதவன்–ஆகாசம் முழுவதும் வியாபித்து -பர பரன்-தத் விஷ்ணோ பர பரம் —
பிரம ருத்ரர்களுக்கும் ஈஸ்வரன் –இவர்கள் தம் இச்சையால் பண்ணாமல் அவன் ஆதீனத்தால் செய்கிறார்கள்

உளன் அலன் எனில் அவன் உருவம் இவ் வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே 1-1-8
அனைத்து நாம ரூபமும் அவன் விச்வம் விஷ்ணு
அரூபமும் அவனே தான்-சூன்யம் சொல்ல வில்லை–
இல்லை என்றால் வீட்டில் இல்லை இப் பொழுது இல்லை -மறைந்து இருக்கிறான் எதிர் இருக்கிறான்
உளன் -புலப் படுகிறார் மறைகிறார் -உடல் உயிர் -துன்பம் அச்சம் பயம் போல்வன காண வில்லை இருந்தும் இருகிறதே அனுபவம் உண்டே அரூபம் -மானச அனுபவம்-ஸ்தூல சூஷ்ம இரண்டும்-அவியக்தமான பொருள் தான் வியக்தமாக ஆகிறது -தச்சன் நினைத்த பொருள் பணுகிறான்-பூஷணம் பண்ணுவதோ -உள்ளத்து நினைப்பை உருவாக்குவது போல்-பகுச்யாம் -அவன் சங்கல்பிகிறான் –சகஸ்ரசீர்ஷா புருஷா –சூன்யம் நினைக்க முடியாதே ஸ்ருஷ்ட்டி பண்ண முடியாதே –அந்தர்யாமி அரூபம் /சர்வமும் சரீரம் இரண்டு தன்மை உடன் இருக்கிறான்

பரந்த தன் பரவையுள்  நீர் தொறும் பரந்து உளன்
பரந்த அண்டம் இது என நில விசும்பு ஒழிவற
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்து உளன் இவை உண்ட கரனே 1-1-10
பரந்த -காரனஜலத்தில் பள்ளி கொண்டு இருக்கிறான்-தாய் உடன் இன்றி-கராவிந்தம்-ஆல் இலை மேல்
அண்டம்-மகத்தில் இருந்து -சில்-அணு இடம் தொறும்-அணுவிலும் அணுவாய் –மகத்திலும் மகத்தாய்-

கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல்
நிரன் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே 1-1-11
கர-நுட்பமான -தன்மாத்ரை  சப்த ஸ்பர்ச போல்வன –
பரத்வத்தில் ஈடு பட்டு அருளிய திருவாய்மொழி-
நிரன்-கலந்து
இந்த திரு வாய் மொழி பேசுவதே மோஷம்-படிப்பதே -போதும் என்கிறார்
 உயர்வே பரன் படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு -திருவாய் மொழி நூற்று அந்தாதி 1
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: