திருவாய்மொழி-1-2-வீடு முன் முற்றவும் – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

வீடு முன் முற்றவும்
வீடு செய்து உம் உயிர்
வீடு உடையான் இடை
வீடு செய்ம்மினே 1-2-1
அனைத்தையும் விட்டே -வீடுமின் முற்றவும்-தியாகத்திலே சுகம்–விட விட ஆனந்தம்

விபீஷணன் விட்டு விட்டு வந்து ஆனந்தம் அடைந்தானே -என் உடைய அன்பில் வந்த காதலன்-
சங்கல்பம் இவனை கொண்டு வந்தான்-திரு அடி ஒன்றையே நம்பி–செல்வமும் மண் அரசும் நான் வேண்டேன்–மீனாய் பிறக்கும் விதி ஒன்றே வேண்டும்–குலசேகரர் –கூரேசர் கூராதி ராஜன் -குறு நிலத்து அரசன்–அனைத்தையும் விட்டு ஸ்வாமி திரு அடியில் சேர்ந்து பெருமை பெற்றாரே
பெரும் தேவி உம்மை போல் தர்ம பிரபு  பட்டம் பெரியது இல்லை-ராமானுஜ தாசர் பட்டமே பெரியது -ஸ்ரீ ரெங்கம் விரைந்து ஸ்வாமி திரு அடி சேர்ந்தார்-முற்றவும் விட்டு ஆச்சார்யர் திரு அடியே கதி–சொர்ண மரக் காலையும் வீசி ஏறிய -உஞ்ச விருத்தி பண்ணி கொண்டு–வீடு செய்மினே -அனந்யா சிந்தை உடன் கவலை விட்டு இரு—திரு அரங்க பிரசாதம் கொடுத்து -அர்ச்சக முகேன–லோக ஷேமம் மமாம் அஹம் —
மின்னின் நிலையில
மன உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை
உன்னுமின் நீரே 1-2-2
மின்னலை போல் தோன்றி மறையும்-நிலை இல்லாதது -இதில் எதற்கு என்னது என்று மம காரம்

இறை சாஸ்வதம் அவனையே தியானம் செய்ய வேண்டும்

இதை உணர்ந்து எம்பெருமானையே தியானம் செய்ய வேண்டும்

நீர் குமிழ் போல் ஆக்கை
பர உபதேசம்
நீர் நுமது என்று இவை
வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர் க்கு அதன்
நேர் நிறை யில்லே 1-2-3
தன்னையும் தன உடைமையும் மறந்து கோபிமார் போல் இருக்க வேண்டும்

வஸ்து விட முதலில் சொல் இதில் -மனசில் விட உபதேசிக்கிறார்
-மடி யாக இருப்பது மனசில் படாமல் இருந்தால் போதும் –
மமதை போக வேண்டும்-எல்லாம் அவன் உடையது கிருஷ்ணா அர்பணம் செய்து விட வேண்டும்
வேர் முதல் மாய்த்து -வைராக்கியம் போல் பேசினால் போதாது வாசனை உடன் ஹிருதயத்தில் ஆசை விட வேண்டும்
அப்படி இருந்தால் அதனின் விட பூர்ணம் இல்லை நிம்மதி கிட்டும்
இல்லதும் உள்ளதும்
அல்லது அவன் உரு
எல்லையில் அந்நலம்
புல்கு பற்று அற்றே 1-2-4
சூஷ்மம் ஸ்தூலம் எல்லாம் அவன்

அனந்தமான ஆனந்தம் அவன் ரூபம்
சதச்த பரம் அவன்
அற்றது பற்று எனில்
உற்றது வீடு உயிர்
செற்றது மன் னுறில்
அற்று இறை பற்றே 1-2-5
சம்சாரம் சரியாக இல்லை என்பதால் விட்டு போக ஆசை

கோவிந்த ஸ்வாமி-ஐதீகம்-ஆசை இல்லை-உன் திரு அடியே வேண்டும்–
தீர்கமான ஆயுள் மனைவி-கொடுத்தோம்-ஸ்தோத்ரம் சொல்லி- நெஞ்சை பார்த்து -பாவ கிராகி ஜனார்த்தனன்-மற்றை நம் காமங்கள் மாற்று-இல்லை எனபது இல்லை இருந்தால் மாற்று என்கிறாள் உனக்கு ஆள் படுத்தி கொள் ..–ஆசை பூர்த்தி பண்ண அனுபவித்து தீர்க்க முடியாது-பற்றுதல் இன்றியே மோஷம்-தீட்டு போல் இது ..-அது செற்று மன் உறில்-அன்வயம்-சங்கை விட்டு-இறை பற்ற வேண்டும்-
பற்று இலன்  ஈசனும்
முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன்
முற்றில் அடங்கே 1-2-6
பார பஷம் இல்லாதவன் பற்று இலன்-ராக த்வேஷம் இன்றி -அனைவரும் சமம் -பற்றுதல்-அன்பு இல்லை பிரேமை வேற –

பற்றுதல் த்வேஷம் போல் ராகமும் கூடாது –சுய நலம் அடிப்படை ராகம் -நாமும் பற்று இன்றி சம புத்தி உடன் சுய நலம் இன்றி அவன் முற்றவும்-பூர்ணம்-பூரணமாக அவனை அடைவதே பூர்ணம்-அகண்ட பிரேமம் கிட்டும் சம தர்சன பண்டித
அடங்கு எழில் சம்பத்து
அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அக்தென்று
அடங்குக வுள்ளே 1-2-7
விபூதி யோகம் -கீதை-எழில் மிக்கதாகிய சம்பத் -அதில் எந்த மூலை இது என்று பார்

அவன் ஐ ச்வர்யத்தில் ஏதோ மூலையில் எல்லாம் அடங்கும் -வியாவாரி-பிள்ளை கதை-ஈடு சொல்லும்
சரக்கு ஏற்றி-ஏக குடும்பம்–அகண்ட வைபவத்தில் அடங்கி -இருக்க வேண்டும்
உள்ளம் உறை செயல்
உள்ள விம் மூன்றையும்
உள்ளி கெடுத்து இறை
யுள்ளில் ஒடுங்கே 1-2-8
மனசு வாக்கு காயம் மூன்றையும் கண்ணன் -தியானம் -கைங்கர்யம் –

விஷயம் தேடி போகாமல் கெடுத்து
இறை உள்ளில் ஒடுங்க வேண்டும்
ஒடுங்க வவன் கண்
ஓடுன் கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை
விடும் பொழுது எண்ணே 1-2-9
அப்படி ஒடுங்கினால் அவனையே பேசி நினைத்து -ரசம் எல்லாம் அவன் இடம்

ஆக்கை விடும் பொழுது -தியானம் வேண்டாம் அப் பொழுதைக்கு இப் பொழுதே -அவன் தொண்டன்-எண்ண வேண்டாம்
எண்ணிக்கை-என்று போக போகிறேனோ என்று கூவி கொள்ளும் நாள் உண்டு நினைத்து கொண்டு இருந்தால் போதும்
நீங்கள் அவனை கிட்டவே அவை நீங்கி விடும்-இடையூறு தானே விலகும்
அந்திம ஸ்மரதி வர்ஜனம் நானே கொடுத்து விடுவேன்-அஹம் ஸ்மார்மி மத பக்தம் -பராம் கதி கூட்டி போவான் –
எண் பெருக்க அந நலத்து
ஒண் பொருள் ஈறில
வன் புகழ் நாரணன்
திண் கழல் சேரே 1-2-10
எண்ணிக்கை இல்லாத -முடிவு அற்ற பேர் ஆனந்தம் உடையவன்

பரிசேதம் இன்றி திண்மையான கழல்
கீர்த்தி இனி முடிக்க முடியாது
சேர்தடம் தென் குரு
கூர் சடகோபன் சொல்
சீர் தொடை ஆயிரத்து
ஒரத்த இப் பத்தே 1-2-11
தேர் தடம்-பெரிய திரு குள- நீர் வளம் மிக்க -குருகூர்
மாலை சூடி கொண்டே இருக்க வேண்டும்
வீடு செய்து மற்று எவையும் மிக்க புகழ் நாரணன் தாள் 
நாடு நலத்தால் அடைய நன்கு உரைக்கும்— நீடு புகழ்
வன் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழ 
பண்புடனே பாடி அருள் பத்து  -திருவாய் மொழி நூற்று அந்தாதி -2
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: