ஸ்ரீ திரு விருத்தம் -31-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

(தூது போகா விட்டாலும்
கடகர் இல்லை என்றாலும் ப்ராப்யர் தானே
திருவடியாவது தலை மேல் வைக்கக் கூடாதோ
வேங்கடத்துப் பதியாக வாழும் மேகங்களே
திருமலைக்குப் போக ஒருப்பட்டு -போவான் போகின்ற போல் -இருந்தும்
எனது கார்யம் செய்யாமல் இருப்பதே -என்று வெறுத்து அருளிச் செய்கிறார்

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-)

அவதாரிகை-

நீலம் உண்ட மின் அன்ன மேனி பெருமான் உலகு—திரு விருத்தம்-29–என்று
பரம பதத்தே தூது விட்டாள்-

அது பர பக்தி பர  ஞானம் பரம பக்தி யுக்தர் ஆனார்க்கு  அல்லது
புக ஒண்ணாத தேசம் ஆகையாலே-
அவதாரங்களிலே தூது விடப் பார்த்தாள்–
கண்ணன் வைகுந்தன் திரு விருத்தம்-30—

அதுவும் சம காலத்தில் உள்ளார்க்காய் பின்னை இல்லை ஆகையாலே-
பிற்பாடர்க்கும் அனுபவிக்கலாம் படி
ஸூலபமான திரு மலையிலே
திரு வேம்கடம் உடையான் திரு அடிகளிலே மேகத்தை தூது விடுகிறாள்-

(தீர்த்தம் பிரசாதியாதே
பின்னானார் வணங்கும் சோதி அன்றோ அர்ச்சாவதாரம் -அதிலே தேங்கின மடுக்கள் போல் –
திருமூழிக் களம் -தூது -எம் கானல் அகம் கழிவாய் -9-7–பறவைகளைத் தூது அங்கு
ஆகாசம் -பறவைகள் இரண்டு சிறகுகள்
ஞானம் அனுஷ்டானம் -பக்ஷிகளுக்கு
இங்கு மேகம் -உதார ஸ்வபாவம் என்று இங்கு தூது -)

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-

பாசுரம் -31-இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் –
தூது செல்லாத மேகங்களைக் குறித்துத் தலைவி இரங்குதல் –
எம் கானல் அகம் கழிவாய் -9-7-

பதவுரை

அம்பொன்–அழகிய பொன்னும்
மா மணிகள்–சிறந்த ரத்னங்களும்
திசை–திக்குகள் தோறும்
மின் மிளிரும்–மின்னல்போல ஒளி வீசப்பெற்று
திருவேங்கடத்து–திருவேங்கட மலையினது
மேகங்கள்–மேகங்களானவை
தூது இசைமின்கள் என்று இசைத்தால்–(நீங்கள் எமக்காகத்) தூதுக்கு இசைந்து சென்று சொல்லுங்கள்’ என்று சொல்லி வேண்டினால்
இசையிலம்–(அதற்கு உடனே) உடன் பட்டுச் செல்லக் காண்கிறோமில்லை;
வல்தாள் சிமயம் மிசை–வலிய அடிவாரத்தை யுடைய சிகரத்தின் மேலே (சிகரத்தை நோக்கி).
மின் மிளிரிய போவான்–மின்னல்கள் விளங்கச் செல்லும் பொருட்டு
வழி கொண்ட–பிரயாணப்பட்ட
என் தலைமேல் அசைமின்கள் என்றால்-நீங்கள் என் தலையின் மேல் பொருந்துங்கள் என்று வேண்டினால்
அசையும் கொல் ஆம்–(அவை அங்குச்) செல்லக் கூடுமோ?

வியாக்யானம்-

இசைமின்கள்  தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்–
திரு மலை நோக்கிப் போகும் மேகங்காள் !-
என் உடைய தூது வாக்யங்களை கொண்டு போகுங்கள் என்றால்-
சொல்லுகிறிலிகோள்–

திரு மலைக்கு போகிற பராக்கிலே  பேசாதே
போகிற்றவற்றை கண்டு
சொல்ல மாட்டிகோள் ஆகில்
உங்கள் திரு அடிகளை என் தலையில்  வையுங்கோள் என்றால் வைப்புதிகளோ ?
திரு மலைக்கு போவோர் திரு அடிகள் தலையில் வைக்கக் கிடைக்குமோ ?

(ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் உண்டே
எனது கார்யம் செய்யா விட்டாலும் தாஸ்யம் மாறாதே
புணர்த்த கையினாராய் எனக்கும் வணங்குமின்
மேகங்களை-அப்ரோக்ஷித்து – முன்னிலையாகவும் -சம்போதமாகவும் கொள்ளலாம்
படர்க்கையாகவும் கொள்ளலாம்
இசையிலம்
இசைவலம் -இசைவு அலம்-பூர்த்தி
இரண்டு பாட பேதங்கள் )

திரு அடியை பிராட்டி -இங்கே ஒரு இரா தங்கி போக வேணும் –
ஸுந்தர காண்டம் -விஸ்ராந்த -68-3-என்று அருளிச் செய்ய
ஒண்ணாது ஒண்ணாது என்று அவன் மறுத்து போனால் போல
போகா நின்றன

அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம் மிசை
அழகிய பொன்னாலும்
பெரு விலையாலும் மாணிக்கங்களால்
(பொன்னில் அழுத்தப்பட்ட மா மணிகள் என்றுமாம் )
திக்குகள் உண்டான இருளை சுரமேற்று நிற்பதும் செய்து-
(சுரமேற்று நிற்பதும் செய்து-குகைக்குள் போகச் சொல்லி விரட்டி விடுவது )
வலிதான தாளை உடைத்தாய் இருக்கும் திரு மலையிலே —
சிமயம்-சிகரங்கள் என்றுமாம் —

(மலைச்சிகரங்கள் என்றும்
சிகரங்களின் நடுவில் என்றுமாம்
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் அன்றோ )

மின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே –
ராஜாக்களுக்கு எடுத்து விளக்கு பிடிக்குமா போலே-

போவான் வழிக் கொண்ட
போக்கிலே உத்யோகித்த வழி கொண்ட மேகங்காள்  இசைமின்கள் தூது என்றால் இசையுமோ?
என் தலை மேல்-அசைமின்கள் என்றால் அசையுமோ ?–
(அந்த மேகங்கள் -படர்க்கை பரோக்ஷம் )
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின்கள் காண்மின் என் தலை மேலாரே –
என்னுமா போலே –பெரிய திருமொழி -7-4-1-
இவர்க்கும் பகவத் விஷயத்தில் யாரேனுமாக ஓர் அடி முற்பாடாய் இருப்பவர்
திரு அடிகள் உத்தேசம் என்கிறார்-

தாத்பர்யம்

கீழ் அனுப்பின்ன அன்னங்களும் குருகுகளும்
தனக்காக தூது செல்லாமல் உலாவி இருக்க
மேகங்களைக் கண்டு தூது விட்டு பிரார்திக்கிறாள்
ஓ மேகங்களே
நா நா விதமான பொன்னாலும் மாணிக்கங்களாலும் பரவும் ஒளியை
சர்வ திக்குகளிலும் தீப்தி யுடைய திருமலைக்கு யாத்திரை செல்வதற்காகவே போகும் மேகங்களே
அக்ரூர யாத்திரை -திருவேங்கட யாத்திரை -அர்ச்சிராதி கதி
மூன்றுமே நித்தியமாக அபி நிவேசம் கொள்ள வேண்டுமே
மின்னி முழங்கிப் புறப்படும் உங்களைத் தொழுதேன்
ஆண்டாளும் அசேதனம் காலில் விழுந்தால் போல் இவளும் விழுகிறாள்
கீழே சொன்னவை செய்யாமல் போனாலும்
இனி உங்கள் திருவடிகளை எனது சிரசில் அமர்த்தி அடியேனை
கிருதார்த்தராக ஆக்க வேண்டும்
ஆறு கால்கள் -கமன சாதனம் சிறகுகள் தானே
ஆச்சார்யர் -பத்னி -புத்திரர் மூவர் -திருவடிகள் ஸ்பர்சமும்
பூர்ணமாக கிடைக்க வேண்டுமே
இதற்க்காகப் பிரார்த்திக்கிறாள்
இத்தையாவது பிரயோஜனம் ஆக்க வேண்டும் – என்கிறாள் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: