திரு விருத்தம் -30–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை-
சிலரை தூது போக விட்டால் ,அவர்கள் வரும் அளவு செல்ல ,ஆறி இருந்து ,சூது சதுரங்கம் பொருது போது-போக்கும் விஷயம் அல்லாமை யாலே கண்ணால் கண்டவர் எல்லாரையும் தூது போக விடுகிறாள்
யாம் கபிநாம் சகஸ்ராணி ஸுப ஹூன்ய யுதானிச திஷு சர்வாசூ மார்கந்தே சேய மாயாதி தாமயா–சுந்தர காண்டம் -30-3-
என்று முதலிகள் எல்லாரும் கூட புஜித்தாலும் புஜி த்து முடிய ஒண்ணாத ப்ரீதியாலே தனியே அகப் பட்டேன் என்று-முதலிகள் எல்லோரும் கூட மது வனத்தில் புகுந்த பொழுது ததி முக பிரப்ருதிகள்  நலிய -அஹம் ஆவார் யிஷ்யாமி யுஷ்மா கம்பரி பந்தின -சுந்தர காண்டம்  62-2—என்று உங்களுக்கு விரோதி ஆனவர்களை நான் போக்குகிறேன் நீங்கள் அமுது செய்யுங்கோள்  என்ன –இப்படி மது வனம் அழிந்த படி யை மகா ராஜர் கேட்டு–இது வெறுமனே ஆக மாட்டாது –பிராட்டியை கண்டார்கள் -த்ருஷ்டா தேவி -சுந்தர காண்டம் 63-17–என்று நிச்சயித்து ,அப்போது அவ் அருகுக்கு உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே வாலானது வளர்ந்து  ருஷ்ய முக பர்வதத்திலே சென்று அமைந்தது –அம் மது வனம் இன்றாகில் ராஜ புத்ரர்கள் முதுகோடே போம் -என்று பட்டர் அருளி செய்வார்-

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-

பாசுரம் -30-அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் -பிரிந்த தலைவி அன்னங்களையும் குருகுகளையும் தூது விடுதல் -அஞ்சிறைய மட நாராய் -1-4-
 வியாக்யானம்-
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் –அன்னமாய் செல்வீரும் வண்டானமாய்   செல்வீரும் -தொழுது இரந்தேன்–ஜந் த்ரவ்யா   கரண பண்டித -சிறிய திரு வடி -ஸ்வத சர்வஞ்ஞன் –ஸ்ரீ கிருஷ்ண பகவான்-தூது  போக கடவத்தை
உங்களை இரவா நின்றேன்- என் தசை–உத்தியோகமும் மிகை என்று இருக்கும் அளவுக்கு அவ் அருகும் சொன்ன படி–கிடாம்பி ஆச்சானோடு நம்பி

திரு வழுதி நாடு தாசரும் மற்றும் நம் முதலிகளும் இருந்து அந்யத் பூர்ணாத் ஸ்லோஹம்–அந்யத் பூர்ணதபாம் கும்பாத் தந்யத் பாதாவநேஜனாத்  அந்யத் குசல சம்ப்ரசனா அந் நசேச்சதி ஜனார்த்தன–  -கேளா நிற்க அந்யத் என்கிறது ஒரு கால் அமையும் என்கிறதோ என்ன அரை கால் அமையும்-என்று கிடாம்பி ஆச்சான் நியமித்தான்

கிருதா பராதச்ய ஹிதே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் அந்தரேனா அஞ்சலிம் பத்வா லஷ்மணஸ்  யப்ரசா தானாத் –கிஷ்கிந்தா காண்டம் -32-17-
தீர கழிய அவபராதம் பண்ணின வுமக்கு இளைய பெருமாள் பிரசாதிக்கும் போது ஓர் அஞ்சலி   நேராமல் போகாது என்று
திருவடி மகாராஜற்கு சொன்னால் போல —அஞ்சலிக்கு அவ் அருகு இல்லை-என்று இருக்க இரப்பவும் செய்தேன்

தொழுகையும்       இரக்கையும் தன்னதே ஆய இருந்த படி -உவாசச -யுத்த காண்டம் -17-11-விபீஷணன் சரண் அடைந்து இரக்கம் படும் படி பல சொல் சொன்னது போல் மறவேல்மினோ-மறவாமல் கொள்ளுங்கோள்என்கிறாள்-அங்கே புக்கவாறே அஹம் அன்னம் -என்று-மறவாதே கொள்ளுங்கோள் –அவன் வருகையால் உண்டான த்வரையாலே மறவாதே என்றால் ,மறவாது-ஒழிவார்களோ என்னில்–தொழுது இரந்தேன் -என்று உருக்கி விடுகிறாள்–பிரியேன் பிரியில் தரியேன்-என்றவர் போய் மறந்தார்-

பேதை–பெரிய திரு மொழி –9-3-3–பிரிவிலும் கலவியிலும் ,ஒரு வகையோ என்று இருக்கும் பருவம்
நின்னை-உன்னை பிரிகைக்கு சேதனன் அன்றோ நான்
பிரியேன் என்ற போதே -பிரிந்தான் ஆய இருக்கிறது காணும் இவளுக்கு

என்றேய வென்னில் பிரிவை பிரசங்கித போதே பிரிந்தானாம் அத்தனை இறே

அவனை தொடர்ந்து போன நெஞ்சம் மறந்தது ..முன்னம்  போவோர்க்கு எல்லாம்
மறப்பேயோ உள்ளது  என்று இருக்கிறாள் –அவர் அங்குத்தைக்கு பரிவராய் அலைந்த
பரிவட்டமும் தானுமாய் திரிகிறார் இறே –நிசா மதிஷ்டத் பரிதோச்ய கேவலாம்  –என்று பெருமாள்
ஸ்ரீ குக பெருமாள் பரிசரத்தே கண் வளர்ந்து அருளுகிற இடத்தில் ஜங்கமான மதிள் போல் கையும் வில்லுமாய்
இளைய பெருமாள் திரிகிற படியை கண்டு ஸ்ரீ குக பெருமாள் –இயந்தா தஸூ காசச்ய தவதர்தம் உகல்பிதா –
என்று உமக்கு தகுதி ஆகும் படி பெருமாள் திரு அடிகளிலே தளிராலே  படுக்கை படுத்து ஏன் கண் வளரீர் என்ன —
கதந்தா சரதவ் பூமவ் சயானே–என்று அறுபதினாயிரம் சம்வச்த்ரம் மலடு நின்று பெற்ற பிள்ளை சுகுமாரமான
வடிவை கொண்டு ,தரைக் கிடை கிடக்க கண் உறங்குமோ ?
சயானே சஹா சீதாயா – இவர் வசிஷ்டர் சிஷ்யர் ஆகையாலே இக் கிடை கிடக்கவும்

பொறுக்கும்-படி நடந்து புறப்பட்டு அறியாத செல்வ பெண் பிள்ளை தரை கிடப்பதே சக்யா நித்ரா மயா லப்தும்  –என் கண் தன்னில்-நித்தரை குடி புகுதரு தில்லை காணும் -யத்ர லஷ்மணா -என்ற ஒரு தம்பி அன்றோ தொடர்ந்து போந்தானும்-இளைய பெருமாளையும் கூட அசிர்ந்து இவர் இட்ட அடியிலே இட்டு ஸ்ரீ குக பெருமாள் திரியா நிற்க-அதந்திரிபிர் ஞாதி பிரார்த கார்முகை -என்று இவர் தம்மையும் கூட அசிர்ந்து கொண்டு இங்கு உள்ளார் அடைய காத்த படி

நெஞ்சு கண்ணன் மாயையை அனுசந்தித்த அளவிலே பரம பதம் ஏற போயிற்று ..
என் நெஞ்சினார்-பண்டு போல் அன்றியிலே அவனாலே கொண்டாட பட்ட அளவிலே சொல்கிறாள்
அவர் தான் இத் தலையை அழிக்க நினைத்தார் ஆகையாலே பிரதான பரிக்ரமான நெஞ்சை படை அறுத்து-கொள்கைக்கு கொண்டாடா நிற்கும் இறே
கண்டால்--காண்கை தான் அரிதாய் இருக்கும்  அவரை காணலாம்–சதா பச்யந்தி -அவனை காண இயலும் — இவரை காண அரிது இதே கண்டால்
நாவிலும் பல்லிலும் நீர் அன்றியே இருந்தது –என் செய்கிறாள் என்று தாமாக வினவும் அவர் இன்றிறே
என்னை சொல்லி-இன்னானை அறிகை இல்லையோ என்று சொல்லி –அப்ரமேயம் ஹிததேஜ—-ஆரண்ய காண்டம் –37-18-ஆற்றல் மிக்க யார் உடைய தர்ம பத்நியோ-என்னும் படி உள்ள சீதை பிராட்டி இப்படி உரைக்கிறாள் -என்னும் அவள்
கிடீர் இப்படி சொல்கிறார்
அவர் இடை -அன்று பாடு ஓடி கிடந்த கிடை அறிந்தீரே

நீர் -இப் போது கொண்டு வருகிறேன் என்று கண்ணும் கண்ண நீருமாக    போகும் படி அறிவீரோ

இன்னும் செல்லீரோ -தூது போந்த உமக்கு தூது வந்த பின்பும் போகீரோ –ந காலஸ் தத்ரவை பிரபு-என்று இருந்தீரோ
அவ் இடம் கால கருத பரிணாமம்  உள்ள தேசம் என்று அறிந்து இலீரோ –பகலும் இரவுமாய் இருக்கும் காணும் அங்கு
அது தன்னிலும் ஒரு பகல் ஆயிரம் ஊழி யாய் அன்றோ செல்லுகிறது
இது தகவோ-பிரணயித்வம் இல்லை ஆகிலும் ஆன்ருசம்சயம் வேணுமே–
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம  சுத்வத்த ஏவம் ஆஸ்ரித –சுந்தர காண்டம் –38-41-
மற்றவர் துன்பம் அலட்ஷியம் செய்யாமல் இருப்பதே தர்மம்-
இசைமின்களே –மனிச் சடித்து சொல்லாதே போராதே சொல்லியவன் சொரூபத்தை
அழித்தே போரும் காண் என்கிறாள்
அழிக்கை ஆவது ஓராண் பிள்ளையாய் சொல்லுகிறது இல்லை —
ஓர் பெண்டாட்டியை சொல்லுகிறது அல்ல
உன்னை எத்தை சொல்லுவது என்கை இறே
மனசுக்கு ஆன போது –அவனுக்கு ஆன போது சொல்லுகை தான் மிகை-
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: