திரு விருத்தம் -29-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை-

 பொரு நீர் திரு அரங்கா வருவாய் என்ற இடத்தில் ,அருளுகிறேன் என்னுதல் -அருளேன் என்னுதல் சொல்லாதே பேசாதே இருந்த படியால் -வார்த்தை சொல்லும் இடத்தில் சில அன்னங்களைத் தூது விடுகிறாள் –
இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச சீர்மையில் அன்னங்களே –29-
பாசுரம் -29-இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு -தலைமகள் அன்னப் பறைவையை வெறுத்து உரைத்தல் -பொன்னுலகு ஆளீரோ -6-8-
வியாக்யானம்-
இன்னன்ன தூது-இப்படி பட்ட தூது ,தரித்து இருந்து விடுகிறது அன்று –போகத்துக்கு விடுகிறது அன்று ..சத்தா தாரகமாக விடுகின்ற தூது -கதேஹி  ஹரிசார்தூல புனராகமநாயது பிராணா நாமபி-சந்தேஹோ மாமாச்யாநாத்ரா சம்சய  -சுந்தர காண்டம் 39-22—என்று பிராட்டி திரு அடிக்கு தன் தசையை அருளி செய்தது போலே எம்மை-நான் இருக்கிற படியே அமைந்து கிடீர் இருக்கிறது ,,தூது போவார்க்கு ..ஒரு ஐந்தர வியாகரண பண்டிதனை-தூது போக விடும் இடத்தை உங்களை போக விடும்படியான தசை கிடீர்
ஆள் அற்ற பட்டு-ஆள் உறுதி பட்டு ..உபய விபூதி நாதனும் கூட ஆள் விட இருக்கும் அவள் இறே-
மிதிலா மண்டலும்  ஸ்ரீ கோசல வள நாடும் குறை வறுத்தாலும் பின்னையும் குறை கிடந்ததற்கு ஒரு மூலையிலே-
பத்து கோடி பேர் பிணை உண்ணும் படிக்கு ஈடாக பரிகரம் உடையவள் இறே  ..இப்போது ஆள் உறுதி பட்டேன் என்கிறாள்
இரந்தாள்-அவன் தான் செய்ய கடவத்தை இவள் செய்த படி ..அத்தலை இட்டு விட கடவது  இது இறே இவள் தான் விடுகிறது
இவள்-அப்ரேமேயம் ஹிதத் தேஜ -ஆரண்ய காண்டம் -37-18-என்னும் இவள் கிடீர் –

அன்னன்ன சொல்லா -அப்படி பட்டவை சொல்லாநான் சொல்ல விட்ட வற்றை சொல்லி ,தானும் வேண்டும் வார்த்தை இட்டு கொண்டு சொல்லுகிறதும் இல்லை-ஓலை பாதி தூது பாதி என்று சொல்லும் அது -பொய்யாய் இருந்தபடி ..நிரபேஷராய் இருப்பவர் சாபேஷர் கார்யம் செய்து-தாங்கள் நிரபேஷராய் இருக்க வேண்டாவோ

பெடையோடும் போய் வரும் -போம் போது அனுபாவ்ய குணங்களை அனுசந்தித்து கொடு போம் ..வரும் போது-அனுபூத குணங்களை அனுசந்தித்து கொடு போம் –அடிமை செய்வார் மிதுனமாய் இருந்து இறே அடிமை செய்வது
ஸ்ரீ சேனாதி பதி ஆழ்வார் ஸ்ரீ சூத்ரவதி யாரோடே /பெரிய திரு அடி ஸ்ரீ கீர்த்தியோடே .. அத்ரி பகவான் அனுசூயையோடே-பாதேயம் புண்டரீகாஷம் நாம சங்கீர்த்தன அமிர்தம்
நீலம் உண்ட இத்யாதி –அங்கு உள்ளார்க்கு சர்வ ஸ்வகாகம் பண்ணும் வடிவு -நீலதோ யத் மத்யஸ்தா வித்யுல்லே கேவ பாஸ்கரா  –பிரிந்த போது மின் இலங்கு திரு உருவு –
திருநெடும் தாண்டகம் -25-என்னும் படியாய்-கலந்த போது கரு முகில் ஒப்பார் –
திருநெடும் தாண்டகம் -24-என்னும்படியாய்  இறே இருப்பது
பெண் தூது செல்லா -அங்கு ஆண் தூதோ செல்லுவது –அபலைகள் தூது செல்லாதோ ?–அபலைகள் தூது அங்கு செல்லாது என்று இருந்தீர்களோ ?–
அபலையாய் இருந்து வைத்து தூது விடுவாள் என்று இருந்தீர்களோ ?–உங்கள் பாடும் அவன் பாடும் குற்றம் என் ? என் குற்றத்தாலே இறே
அன்னன்ன நீர்மை கொலோ -அப்படி பட்ட ஸ்வபாவங்களோ ?
குடி சீர்மை இல் அன்னங்களே –உங்கள் பாடு குற்றம் உண்டோ ? அவன் ஒரு குடியில் பிறவாதவன் ஆகையாலே கேட்டிலன்-நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் -பிறர்க்காக உடம்பு படைத்தவன் அன்றோ –நீங்கள் குடி பிறவாதவர் ஆகையாலே
சொல்லிற்று இலி  கோள் என்றும்-
ச்வாபதேசம்-
 பகவத் விச்லேஷத்தில் இவர் உடைய ஆற்றாமை இருந்தபடி
பிராப்திக்கு சக காரிகளாய் இருந்தவர்களையும் கூட இன்னாதாக வேண்டும் படியான
தசையை சொல்லுகிறது –
—————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: