அவதாரிகை-
கீழ் உண்டான மானச அனுசந்தானம் விஷய வைலஷண்யத்தாலே அவ் வருகே ருசியை பிறப்பித்து ருசியின் உடைய அதிசயத்தாலே
பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்து ,நினைத்த படி பரிமாற பொறாமையாலே விச்லேஷமாக தலை கட்டிற்று.
.சம்ச்லேஷ தசையில் அனுகூலித்த-பதார்த்தங்களும் இப் பொழுது பிரதி கூலிக்க தொடங்கிற்று .
.தத் யாவக உபாயதே பிரசாதாய ஜாதயே — என்று யாதோர் அளவிலே நிர்வாகன்
ஆனவன் கோபித்தால் ,அவன் பரிகரமும் அப்படியே நிற்கும் .
.திரு வெக்காவின் நின்றும் பிரசாதம் வந்தது என்ற போது வாடை காற்று குளிர்ந்து ..
அது தான் இப் பொழுது சுட தொடங்கிற்று ..சோறும் கறியும் சமைத்த பின்பு இட பற்றாதால் போலே திரு வெக்காவின் நின்றும் பிரசாதம் வந்தது என்ற அந்தரத்திலே உள்ளே புக்கு அணைக்க பெறாமையால் வந்த ஆற்றாமை-
தண்அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –வாள்வாய அலகால்
-புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்ன –28
பாசுரம் -28-தண் அம் துழாய் வளை கொள்வது -தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்துதல் –கங்குலும் பகலும் -7-2-
வியாக்யானம்-
தண்அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் –இதில் சேதம் இல்லை இது செய்யலாம் ..திரு துழாய் க்கும் தனக்கும் பாத்ய பாதக-சம்பந்தம் உண்டாகையாலே ,திரு துழாய் அங்கு உற்ற அசாதாரண பரிகரம் ஆகையாலும்-தனக்கு திருவடி களிலே சம்பந்தம் உண்டு ஆகையாலும் பாத்ய பாதக பாவ சம்பந்தம் தனக்கு-
பாதகமே ஆகிலும் திரு துழாயோ டு ஒரு சம்பந்தம் உண்டாக அமையும் போலே காணும் .
ராஜாக்கள் முனிந்தால் அவன் பரிகரமும் எதிரி யாம் போலே சர்வேஸ்வரன் நெகிழ்ந்த படியாலே-அவன் உடைய அசாதாரண திரு துழாயும் நலிகிறது ..
நடுவே-பாத்ய பாதக பாவ சம்பந்தம் இன்றி யிலே இருக்க நலிகிறது என்
விபூதி சாமான்யத்தாலே நலிகிறது அத்தனை நாங்கள் குடி மக்கள் அல்லோம்
நடுவே-ஸ்வரூப பிரயுக்தம் அன்று –ஔபாதிகம் என்றுமாம்
வாடையை சொல்லுகையாலே பூதங்களில் பிரதானத்தை எடுத்து ,பிரக்ருதிக்கு உபலஷணமாக சொல்லிற்று
பிரகிருதி பிரவாகத்தாலே நித்தியமாய் இருக்க ,இத்தை உபாதி என்னும் படி எங்கனே என்னில் அந்த வத்தாகையாலே-ஆதி மத்தென்று கொள்ளுகிறோம் முகத்தில் அழுக்கை கழுவினால் அவ் வழுக்கு போனதை கண்டு வந்தேறி என்று கொள்ளலாகா நின்றது ..
அழுக்கு இன் நாள் தொடங்கி பற்றிற்று என்று அறிய வேண்டுவதில்லை என்று
வண்ணம் துழாவி -வருகிற போதே கண்ணால் கண்டாரை விழ விட்டு கொண்டு வாரா நின்றது- கலந்துபெற்ற-நிறத்தை அழித்து கொண்டு வாரா நின்றது
ஓர் வாடை-அத்வதீயன் -தனி வீரன் என்றுமாம்
உலாவும் -தனக்கு எதிரி இல்லாமையால் மத முதிதமான கஜம் பாகனை விழ விட்டு உலாவுமா போலே-வாரா நிற்கும்..நிராஸ்ரய்மாய் நில்லாது என்று இந்நிறம் நிற்கும் ஆச்ரயத்தை கணிசித்து உலாவா நின்றது-அசம்பாதமாக உலாவா நின்றது
இவள் உடைய அவசய அதிசயத்தை கண்ட திரு தாயார் பெரிய பெருமாள் திரு அடிகளில் பொகட்டு-நீ இங்கே கிடக்கிற கிடைக்கைக்கும் இவள் சோகத்துக்கும் சேர்த்தி கண்டிலோம் –
வாள்வாய் இத்யாதி –ஒரு ஸ்திரீ குற்றம் செய்தாள் என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்து இவளை ஹிம்சிக்க வேணும் என்ன-புறம்புள்ள எல்லா வற்றையும் விட்டு , இவ் ஊரிலே உத்தேசய்மாய் இருக்கிற இவளை எத்தை சொல்லி நாம் நசிவது என்று அருளி செய்தார்
வீர சுந்தரனோடே எம்பார் விரோதித்து இருக்க ,அவ் ஊரில் உள்ளான் ஒருவன் அவனுடைய எதிரியாய் அவனுக்கு அஞ்சி ,எம்பார் திரு அடிகளில் சரணம் புக ,ஸ்ரீ பாதத்திலே வர்திக்கிறவர்கள் அவனுடன் பண்டே விரோதம் உண்டாய் இருக்க செய்தே இவனையும் கை கொள்ள கடவதோ என்ன
நம்மை -சரணம்-என்று புகுந்தவனை நாம் கை கொண்டால் சரணா கதி தர்மமே எல்லா வற்றையும் ரஷிக்க வல்லது காண் என்று அருளி செய்தார்-
வளைத்த வாய் அலகை உடைத்தான புள்ளானது , சங்கை ஹிம்சியாத படி தன்னுடைய நீர் திரை ஆகிய கையாலே எதிரியோடு பொருது சங்கை ரஷிக்கும் படியான ஊரிலே இருக்கிறவனே
பொருநீர்-புள்ளானது ஆமிஷித்தை கணிசித்து நீர் கரையிலே இருக்க சங்கானது நம்மை ஹிம்சிக்க போகிறது என்று அறியாது என்னை நீர் நோக்க வேணும் என்று சொல்லாது இருக்க தன் பக்கலிலே வர்த்திக்கும் இவற்றுக்காக அவற்றின் எதிரியான புள்ளின் முகத்திலே தன் திரை ஆகிய கையாலே யுத்தம் பண்ணி ,உள்ளே போராய் என்று கையை பிடித்து கொண்டு போகா நின்றது –
-இத்தால் செய்கிறது –
அசேதனமான நீரானது தன் பக்கலிலே வர்திக்கிரவற்றை இப்படியே நோக்கா நின்றால் பரம சேதனரான தேவரீருக்கு இவள் திறத்து என் செய்ய வேண்டா என்கிறது ..
சுத்த சத்வ மயமான ஆத்மாவை ஜடமான சம்சாரம் நலியாமே நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கு வந்து கிடக்கிறது
திரு அரங்கா அருளாய் –-அருளாய் என்ற பொழுது அருள கண்டிலர்..இப் படி அருளாது ஒழிவது என் என்னில் ,-ஈஸ்வரன் கரண களேபராதிகள் நமக்கு
தந்தோம் ஆகில் /பக்த்யாதி உபாயங்களை காட்டினோமாகில்../இதுக்கு அடியான பிரமாணங்களை காட்டினோம் ஆகில் /
/அவற்றை அனுஷ்டித்து நம்மை வந்து கிட்டுகிறீர் என்று ஆறி இருக்க –சர்வஞ்ஞனாய் சர்வ சக்தியான நீ இவற்றை எல்லாம் இங்கனே பண்ணினாய் அதனை அல்லது வேறு பட பண்ணிற்று இல்லையே நான் உண்டாய் இருக்க கிட்டும் படி என் என்கிறார்
.பகவத் விஷயத்தில் இதனை அவகாஹரான இவர் இத்தனை அஞ்சுவான் என் என்னில் பகவத் பிரசாதம் அடியாக வந்த ஞானம் ஆகையாலே த்யாஜ்ய பூர்வமாக பிராப்யத்தை காட்டிகொடு நின்றது ..பிராப்யத்தில் ருசியும் மிகா நின்றது ருசி அனுகுணமாக பிராப்தி அளவும் செல்லாமையாலே அதுக்கு அடியான விரோதி தர்சனத்தை பண்ணி அஞ்சுகிறார்– சம்சாரத்தை பார்த்தால் பயப்பட வேணும்..சர்வேஸ்வரனை பார்த்தால் பயம் கெட வேணும் ..அவனை பார்த்து பயம்கெட்டிலன் ஆகில் பகவத் பிரபாவம் அறிந்திலனாம்–சம்சாரம் பார்த்து பயப்படிலன் ஆகில் சம்ஸார ஸ்வாபம் அறிந்திலனாம் –ஞான கார்யம் ஆவது ஆகார த்ரயம் உண்டாகை–சம்சாரம்-மிதியை காண் என்னுதல்–ஔபாதிகம் காண் என்னுதல் ஜீவன் முக்தி காண் என்று சொல்லும் சூத்ரவாதிகளுக்கு அன்றோ இத்தை-நினைத்தால் அஞ்சாது இருக்கல் ஆவது ..பகவத் பிரபாவமும் அறிந்து ,சம்ஸார ச்வாபத்தையும் அறிந்து ,சம்ஸார பய பீதனாய் இருப்பான்-ஒருவனை பெற்றால் அன்றோ சர்வேச்வரனுக்கு மாசுசா என்னல் ஆவது –இப்படி மாசுச என்றால் அன்றோ இவனுக்கு ஸ்திதொச்மி என்னாலாவது
திரு அரங்கா -நீ இங்கு வந்து கிடக்கிறது உன்னுடைய கர்ம பல அனுபவம் பண்ணவோ –போக பூமி தேடியோ –ஒரு குறைவாளர் இல்லையாமையோ –ருசி உடையார் இல்லாமையோ –நீ அருளாது ஒழிகிறது என்
அருளாய்-மதி நலம் அருளினன் என்றால் அதன் பயனான துயர் அறு சுடர் அடி தொழுது எழ பண்ண வேண்டாவோ-அறிவு கலங்கினார்க்கு இப்படி அருளாது ஒழிகை அனாதியோ –இப்போது உண்டானது அத்தனையோ —
உளவோ பண்டும் இன்னன்ன -ஆர்த்தருக்கு பண்டு உதவினான் –என்னும் இடம் பிரசித்தம் அன்றோ –திரௌபதிக்கு – கஜேந்த்ரனுக்கு-பிரகலாதனுக்கு ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு-காகத்துக்கு –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Like this:
Like Loading...
Related
This entry was posted on September 28, 2011 at 5:54 pm and is filed under Acharyarkall, திரு விருத்தம், பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம் ஆழ்வார், Namm Aazlvaar, Prabandha Amudhu, Stotrams/Slokams, Tamizl. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply