திரு விருத்தம் -27-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை-
நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் உடைய கிருபையே இவ் ஆத்மாவுக்கு ரஷை  ,
இவன் கடாஷித்தாலிவ் அருகில் உண்டான பிரதி பந்தங்களும் தானே அனுகூலிக்கும்
ராஜா குமாரன் தட்டியில் இருந்த பொழுது ,பிரதி கூலித்தவர்கள் அபிஷிக்தன் ஆனவாறே-தாங்களே வந்து ,அனுசரிக்குமா போலேயும் பிராட்டியை தர்ஜனபர்த்சனங்கள்    பண்ணின-ராஷசிகள் அனுகூலித்தால்   போலேயும் –
சேமம் செம்கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம்பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்களோடு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து  தண் என்றதே –27-
பாசுரம் -27-சேமம் செங்கோன் அருளே -தலைவி மாலை பெற்று மகிழ்தல் –எல்லியும் காலையும்–8-6-

பதவுரை

செம் கோன் அருளே–(எல்லாப் பொருள்களுக்கும்) நேரில் தலைவனான எம்பெருமானது திருவருளே
சேமம்–நம்மைப் பாதுகாப்பது (என்று கொள்ள)
பண்டு எல்லாம் அறை கூய் யாமங்கள் தோறு எரி வீசும்–முன்பெல்லாம் (பிரிந்திருந்த காலத்துப்) பகைத்து எதிர்வந்து சண்டைக்கு அழைத்து இரவுகள் தோறும் அந்நிஜ்வாலையை (எம்மேல்) வீசுந்தன்மையுள்ள
செறுவாரும் நட்பு ஆகுவர் என்று–பிரதிகூலரும் அநுகூலராவர் என்று
ஏமம் பெற–உறுதி பொருந்த
வையம் சொல்லும்–உலகத்தோர் கூறுகிற
மெய்யே–உண்மைமொழியின் படியே,
அ வாடை–அந்தக் காற்றானது
நம் கண்ணன் அம்தண்ணம் துழாய் தாமம் புனைய–நமது தலைவனான எம்பெருமானது அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையை (யாம்பெற்று)த் தரித்ததனால்
ஈதோ வந்து தண்ணென்றது–இதோவந்து (இப்பொழுது) குளிர்ச்சியாயிருக்கின்றது.

 வியாக்யானம்-
சேமம் செம்கோன் அருளே –இவ் ஆத்மாவுக்கு வகுத்த சேஷியான சர்வச்வரன் உடைய கிருபையே-இதுக்கு ரஷை..அவனே இதுக்கு ரஷையாமோபாதி–இவன் தானும் தனக்கு  அநர்த்த அவஹானாய் இருக்கும்-
எங்கனே என்னில் –ஜகத்தை உண்டாக்குகையும் ,சேதனருக்கு கரண களேபராதிகளை கொடுத்து ,-பக்த்யாதி உபாயங்களை உண்டாக்கி திரு மலை தொடக்கமாக உகந்து அருளின தேசங்களிலே-சந்நிஹிதனாய் நிற்க செய்தேயும் இத்தை கால் கடை கொண்டு ,தேக ஆத்மா அபிமானம்-பண்ணும் படி இறே தன் படி இருப்பது ..மாமேகம் -என்று தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்

அத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே  இருப்பது அவன் படி

இவன் சைதன்யம் உளன் கண்டாய் நல நெஞ்சே –முதல் திரு அந்தாதி -69-என்னும் படி இவ் அளவில் இவனை எடுத்து-கொள்ளுகைகாய் இருக்கும்-
தான் தனக்கு தஞ்சம் அல்லாதவோபாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று
செம்கோன்-செவ்விய நிர்வாககன் –பதிம் விச்வச்ய –யச்யாச்மி–என்று சொல்லலாம் படி இருக்கும்-
அருளே-அவன் கிருபை அல்லது இல்லை –அவ் அருள் அல்லன அருளும் அல்ல –இடையீடான பக்தியாதிகளும் வேண்டா
செருவாரும் நட்பாகுவார் என்று –சத்ருக்களும் பந்துக்கள் ஆவார் என்று சத்ருக்களும் மேவுற்று செய்வார்கள் என்றுமாம்-த்யாஜ்யமும் ,பகவத் கடாஷத்தாலே உபாய சக காரியாய் ச்வயந்த்யாஜமாய் இருக்கும்
ஏமம் பெற -பழமை பெற ரஷை பெற என்றும் ஆம்

வையம் சொல்லும் மெய்யே –லௌகிகமான  பல்ம் சொல்லும் சத்தியமாய் இருந்தது-சாவாதிருந்தால் காண்பன சில உள என்னுமா போலே –கல்யாணீ இத்யாதி–பிராட்டி அசோகா வனத்திலே இருந்து-இனி முடிய அமையும் என்று நிச்சயிப்பது பெருமானை காணலாம் ஆகில் இருந்தால் ஆகாதோ-என்பதாமே-அவ் அளவிலே திரு அடி சென்று ராம குணங்களை சொல்லி ,முகம் காட்டின அளவிலே ,இங்கனேயும் ஓன்று சம்பவிப்பதே-என்று ஹிருஷ்ட்டையாய் -ஒரு காலத்தில் சோகித்தார் முடியாது இருந்தால் ஒரு காலத்தில் ஆனந்திக்கலாம் என்று சொல்லுவது-இன்று வாடை குளிர்ந்த படியால் மெய்யாக கண்டோம்

பண்டு எல்லாம்-சிறை கூடத்தில் பிறந்து வளர்ந்தாரை போலே என்றும் பிரிவேயாய் வாடையின் கையில் நோவு பட்ட படி
அறை கூய்–மகாராஜர் பெருமாளை அண்டை கொண்டு ,வாலியை அறை கூவினால் போலே இங்கு வாடை தனி வீரனான படி
யாமங்களோடு எரி வீசும் –பாதகத்தில் உறைப்பாலே கோமுக வியாக்ரம் என்கிற படியாலே வேறு பட்டு வருகிற படி-
வீசும்-தன் மேல் விரக அக்நி கதுவாமே கடக்க நின்று வீசும் படி-லௌகிக அக்நி போல அன்று இறே நரக அக்நி   –அத்தை நீர் என்னலாம் படி இறே விரக அக்நி
நம் கண்ணன் தன் அம் துழாய் இத்யாதி –துயில் அமர்ந்த வேந்தின் பாடே நின்றும் பிரசாதம் வந்தது போலே காணும்-அழகியதாய் ஸ்ரமஹரமான திரு துழாய் மாலையை ஸ்பர்சிக்க –சர்வாங்க சம்பந்தமாக கலக்க வேண்டா-ஸ்பர்சிக்கவே அமையும்
அவ் வாடை -முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள் –முன்பு அப்படி தடிந்து போன வாடை
ஈதோ வந்து தண் என்றதே –இப்படி வந்து குளிரா நின்றது-.ஈதோ வந்து தண் என்றது வையம் சொல்லும் மெய்யே-
——————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s