திருவாசிரியம்-3- திவ்யார்த்த தீபிகை /-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

 

தான் நினைத்த படி நடத்த வல்லவனே —வணங்கு தோன்று புகழ் உடையவன்–இவன் ஆணை பொய் ஆகாதபடி-தெய்வம் மூவர்-பிரம்மா ருத்ரன் இந்த்ரன்
-இனி தேவர்க்கு உதவி பாற் கடல் கடைந்த விருத்தாந்தம் அருளுகிறார்

தலை பக்கம் பிடிக்க தேவர் இடம் சொல்லி கொடுக்க அசுரர் அதை கேட்டு பெற்றார்கள்-ஆயாச பட வைத்தான்-

மோகினி அவதாரம் கொடுத்து-பலம் குறைந்த தேவர்களுக்கு முதலில் கொடுக்க -அழகில் மயங்கி-இருக்க -ராகு கேது-தலை அறுபட்டு-கிரகணம்
தன் கார்யம்-அமுதில் வரும் பெண் அமுதம் கொண்டு உகந்த –பெம்மான்–
நீள் நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ கடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மான்-கொடுத்து உகந்தான் இல்லை–
ஆயிரம் தோளால் அலை கடல்/மந்தரம் வாசுகி அந்தர் ஆத்மா /கூர்ம/ கை கொண்டு மேல் அழுத்தி –
இவனே கடை ந்தான்/அகலம்-திரு மார்பு-சுடர் விளங்கு-கடையும் காலத்தில் திரு மார்பு ஆபரணம் அசைய அதற்க்கு பாடுகிறார்-
———————————————

குறிப்பில் கொண்டு நெறிப் பட உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகி சுடர் விளங்க கலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர
உரு முர வொலி மலி நளிர் கடல் பட வர
வர கடல் தடவரை சுழற்றிய தனி மா
தெய்வத்து அடியவர்க்கு இனிதாமாள் ஆகவே
இசையும் கொல் ஊழி தோறு ஊழி ஓவாதே –3–

———————————————————————
வரை புரைதிரை -கடல் அலைகள்-மலை போல் உயர்ந்து-
பொரு-ஒன்றுக்கு ஓன்று சண்டை போட
வெருவுதல்-நடுங்குதல் கடலுக்குள் உள் இருக்கும் மலை
உருமு உரல்-இடி போல் ஓசை  –ஒலி மலி
நளிர் கடல்-குளிர்ந்து இருக்கும் கடல்
படவர அரசு-வாசுகி-அவன் ஸ்பர்சத்தால் பெருத்து –படத்தை விகசித்து இருக்கும் அரசன் வாசுகி-
 தட வரை-பெரிய இடத்தை கொண்ட மந்தர மலை சுழற்றிய
தனி-அத்வதீயம் மா -மேம் பட்டவன் இல்லை
————————————————————————–
அடியவர்க்கு இனி நாம் அடியவர் ஆக இசைய வேண்டும்–துர் லபம் கொல் –
எப் பொழுதும் கல்ப காலம் -வடி அழகை முதலில் அனுபவித்து-
பக்தியே அவனை பெற்று அனுபவிப்பதை விட ஏற்றம் என்றார் அடுத்து –

-இப் பாட்டில் பக்தி பண்ணும் விஷய எல்லை –யார் வரைக்கும்-  அவனில் தொடக்கி ததீய சேஷத்வம் வரை செல்வதை-அடியார் அடியார்–அடியோங்களே –சப்த பர்வ ஏழு தடவை அருளினாரே–மதுர கவி  ஆழ்வார் நிலைமை பெற பெறுவோம்

சேஷத்வ காஷ்ட்டை –திரி தந்தாகிலும் தேவ பிரான் உடை கரிய திருமேனி காண்பான்
-தேவு மற்று அறியேன்–நழுவினாலும் கண்ணன் மடியில் விழுவார்-சூஷ்மம்—முதல்வன்-அடை மொழி-
நெறி பட குறிப்பில் கொண்டு-பகுச்யாம் என்று சங்கல்பித்து  உலகம் எல்லாம் அரும்பும் படி-
-ஸ்வ வ்யதிரிக்த  -தன்னை தவிர -நல்வழியில் நடக்கும் படி– நல் வழியில் சிருஷ்டித்து நல் வழியில் நடாத்த –
சிலர் நெறி பட நடந்து பலர் நெறி பட நடக்காமல்–சிலர் அன்றிக்கே இருக்கை அன்றிக்கே -எல்லாம் குறிப்பு படியே–
லோக வஸ்து லீலா கைவல்யம்-மூன்று லோகம் உள்ளவரும் தன்னை ஆஸ்ரியிக்கும் படி–
சிலர் ஆஸ்ரயிக்கும் படியாகவும் இருக்கிறார்களே வேறுபாடு –தன் அளவில் வந்தால் அனைவரும் ஒக்க ஆஸ்ரயிகிரார்கள்–
வரம் கேட்க வரம் கேட்டான் ருத்ரன்–ருக்மிணி உடன் கைலாச யாத்ரை போய் வரம் கேட்க –
கள்வா– எம்மையும் ..எழ உலகையும் -நின் உள்ளே தோற்றிய இறைவா –
-விஸ்வரூபம் காட்டும் பொழுது காட்டினாயே-வெள்ளேறன் நான் முகன் புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவர் –
-எடுத்து ஏத்தி ஈர் இரண்டு -எட்டு கண்கள் உடன் ஸ்தோத்ரம் –சேர்ந்து வந்து வணங்குகிறார்கள்–
காந்தச்ய -தத் தாச தாசி கணானாம் பிரம்மா ஈசன் –மனைவி மார்கள் உடனும் தாச தாசிகள் உடன் வணங்குவார்கள்–
செய்தி கிடந்த இடம் மூலையில் இருக்காமல் சுருதி பிரசித்தம் ச பிரம்மா ச சிவா சேந்திர .பரம ஸ்ராட் –
-அனைவரும் அவன் சரீரம்-தொன்று புகழ்
-ஊற்றம் உடையாய் வேதத்தால் சொல்ல படுபவன் பெரியாய் சொல்லி முடிக்க முடியாது – உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்

அதை லோகம் கண் காணும் படி வந்து தோன்றியவன் பண்ணலார் பரவும் பரனே பவித்ரனே

மெய் பட -பத்தும் பத்தாக -விளக்கி -நன்றாக நடாயா-பிரித்வி அப்பு –சிருஷ்டித்து ரட்ஷித்து –
அவதரித்து அசுரர் ஒழித்து -பத்தும் பத்தாக-

தெய்வம் மூவரில் முதல்வன் அடுத்த அர்த்தம்-

தெய்வம் மூவருக்கு விசேஷணம்–அவர்கள் குறிப்பால் சிருஷ்டித்து காத்து அழித்து
உலகம் மூன்றும் வணங்கி இப்படி மூவர்–அவர்களில் முதல்வனாகி –அவர்கள் பக்கல் ஈஸ்வர சங்கை வரும் படி நடாத்தி-
தன்னோடு சமமாய் பேசும் படி–அனுமதித்து-புடம் போட்ட தங்கம்-குந்துமணி தங்கம் என்னுமா போலே–பேச நின்ற -இலங்கதிதிட்ட பாசுரம் போல்–
கொடுத்து வைக்கிறான் தரம்–
முதல்வன்-தன்னை ஒழிந்த இருவர் அளவில் சரீரம் ஆத்மா இரண்டுக்கும் நியாமகனாய்–தன் அளவில் தானே ஆக அசாதாரண விக்ரகமாய் நின்று -விஷ்ணு சரீரம் எடுத்து கொண்டு--ஜகதாதிஜன் விஷ்ணுஇருவர் அவர் முதலும் தானாம் -இணைவனாம் –முதலாம் திரு உருவம் மூன்று என்பர் —உந்தி தாமரை-நான் முகனை நாராயணன் படைத்தான்–நாராயணா பிரம்மா ஜாயதே —
அன்றிக்கே-பிரம்மா ருத்ரன் இந்த்ரன்-கூட்டி மூவர் –-ச பிரம்மா ச சிவா சேந்திர ..பரம ஸ்ராட் —ஹனுமான் ராவணனுக்கு உபதேசம்-ராமன் கொல்ல வந்தால் யார் வந்தாலும்  முடியாது –பிரம்மா ஸ்வயம்பூ ச்லோஹம் –வேதமே ஸ்ரீ ராமாயணம் சுடர் விளங்கு அகலத்து –

ஆபரணம் விகசிக்கும் திரு மார்பு உடையவனாய் —பாற் கடல் கடையும் பொழுது இவை அசைய

-அன்றிக்கே -வரை மலை -பொரும் படி –
-அலை உசரும் அளவை குறிக்க சுடர் சந்தரன் சூர்யன் விளங்கும் ஆகாசம் வரை உயர்ந்த வரை அலை அங்கு வரை உயர —
ஆகாசம் இடை வெளி இல்லாத படி உயர்ந்து நிரம்பிற்றாம்
அடியார்களுக்கு செய்யும் செயல் கொண்டு இவனே ஆஸ்ரயினியன்
அலை அலை பொருகிற பொழுது  -குல பர்வதம்  நடுங்கும் படி இடிபோன்ற ஒலி உடன் -பொருவது போல்
நளிர் கடல்-குளிர்ந்த -அவன் கடாஷம் இருந்ததால் பொருதாலும் குளிர்ந்து இருக்கும்–ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி —
அரவு  வூரு   சுலாய் மலை தேய்க்கும் ஒலி —கடல் மாறி சுழன்று அழைக்கின்ற ஒலி —அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே —
தாமோதரா மெய் அறிவன் நானே-கீழை அகத்து தயிர் கடைய புக ஒல்லை நானும் கடைவன்-
-கள்ள விழியை விளித்து புக்கு– வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலவ வாள் முகம் வியர்ப்ப  நுதல் செவ்வாய் துடிப்ப  –

-நானும் கடைவன் இங்கு அங்கு நானே கடைவன்-மெய் அறிவன் குலசேகரர் -புலவர் நெருக்கு உகந்த பெருமான் போல் —

வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை ஆரா அமுதம் கொண்டு ஆரும் அமுதம் கடைய சொன்னாரே –
-குளிர்ந்த கடல்-பொறி எழ கடைந்தாலும்  சுடாமல்-கடாஷத்தால் குளிர்ந்து -நளிர் நடுங்க -அர்த்தம்–
பட அரவு-படத்தை விரிக்கும் பாம்பு அரசு--சர்ப்பம் வாசுகி ஆகவும் -ஒரு தலை பாம்பு சர்ப்பம்-/
நாகம் சேஷன் -பல தலை-சாதாரணமாக ஒரு தலை தான்

கண்ணன் ஸ்பர்சத்தால் வாசுகி படம் விரித்து கொண்டு–

நலிவு வராத படி –வாசுகி உடலை சுற்றி- தட வரை  -அடைத்து இருக்கும் மிக பெரிய மலை மந்தர்வ மலை-சுழற்றிய –
கீழ் மண் மேல் மண் ஆகும் படி சுழற்றி-தொட்டார்கள் எல்லாம் தாமே கடையும் படி எண்ணும் படி–
தேர் ஓட்டம் சங்கில் தொட்டார் எல்லாம் நான் இழுத்தேன் சொல்லும் படி போல்-தானே சுழன்ற -அநாசாயமாக
தனி அத்வதீய மான-மேம்பட்டவன் இல்லை ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
அவன் அடியார் ஏற்றம் கொண்டாட இவனை கொண்டாடி–
அடியார்-ஸ்ரீ வைஷ்ணவர்-பிரயோஜன பரர் -தங்கள் கார்யம்- முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று–
ஒரு நாள் காண வாராய் மண்ணும் விண்ணும் களிக்கவே
–நாக்கு நனைக்க அமையும் ஒரு நாள் வீதி வழியே கருட வாகனம் வர சொல்லு-
அருளாத நீர் -அருளாழி புள் கடாவி--ஆழ்வாருக்கு சேவை இன்றி பிரயோஜனந்த பரர் கார்யம் செய்தான் –
-அடிமை சாசனம் எழுதி கொடுக்கிறார் இவன் கார்யம் பார்த்து ஸ்ரீ வைஷ்ணவர்–
தன் உடம்பு நோவ -தாளும் தோளும் சமன் இலாத பல பரப்பி–நீர்மையில் தோற்று எழுதி கொடுத்து இருக்கும்-
இனி நாம்-இனிமேலாவாது நாம்-ஆத்மா அறிந்த உடனே அடிமை ஆக பிராப்தமாக இருக்க கர்மத்தால் நான் என்னது யானேன் தனதே என்று இருந்தேன் –
சேஷத்வம் அறிந்ததும் அவன் பிரசாதத்தால் கண்ட நாம் ததீய

-ஒப்பூண் உண்ணாமல் –ஆளாகவே இசையும் கொல்-சேஷமாய் அடிமைகளாய் -ஆளாகவே -ஏ வ  காரம்—

இசையும் கொல்—பெருமான் இசையானும்/நாம் இசையானும் இரண்டும் இல்லை-
அவன் முதல் நாள் முதல் ஆள் பார்த்து உழி தருவான் அவன் இசைய தான் பாட்டு பாடுகிறார் இவர்
எப்பொழுதோ அடியார் குழாம் களை உடன் கூடுவது என் கொலோ -பின் எதற்கு -பாகவத சேஷத்வம் துர் லபம் என்பதால் –
எது வரை–ஊழி தோறும் கல்பம் தோறும் ஆக வேண்டும்—அது தன்னிலும் –ஓவாதே-
முதல் நாள் மட்டும் இன்றி-முழுக்க -இடை விடாதே ஆக வேண்டும்–
பெருமானுக்கு அடியவர் ஆகாமல் வீணாக போன சிசு பாலன் போல் அன்றிக்கே
-அவாப்த சமஸ்த காமன்-பேற்றின் ஏற்றம்-ஸ்ரிய பதி அயர்வறும் அமரர்கள் அதிபதி
-சம்சார ரட்ஷனம்-தன்னை பேணாமல்-அவதரித்து -மனிசர்க்காய் படாதன பட்டு
-மெல்லணை/கல்லணை உன்னையும் உன் அருமையும் மெய்யாக கொள்ளாமல்-
தசரதன் புலம்பல்-அது பொறுக்க மாட்டாதே சிசுபாலனாதிகள் துஷ் பிரக்ருதிகள்-
-அவஜானந்தி மாம் மூட –யார் இடை பிள்ளை என்று புரியாமல்–
இப் பொழுது பாகவதர் பெருமை அறியாமல் நம் போல் அன்ன பான தரிக்கிறார்கள்நம் போல் வாசி -உயர்வு தோன்றாமல் –
-சஜாதிய புத்தியால்–சம்சாரிகள் அனர்த்தம் படும் படி–அவதரித்த அவனே நம் உடன் சமமாக இருந்தது போல்-
பகவத் பக்தியைப் பற்றி  .பேசினார் கீழில்
இதில் அவன் அடியார்கள் அளவும் சென்று
ததீய நிஷ்டையில்
தமக்கு உள்ள ஆசையை வெளியீட்டு அருளுகிறார் –குறிப்பில் கொண்டு -என்று தொடங்கி
தனி மா தெய்வம் -என்னும் அளவும்
எம்பெருமான் உடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களை அருளுகிறார் –
உலகம் மூன்று
நெறிபட குறிப்பில் கொண்டு உடன் வணங்கு தோன்று புகழ்
தன்னால் படைக்கப் பட்ட மூன்று உலகங்களும்
கீழ் வழி செல்லாமல்
நல வழி படிந்து
தன்னை லபிக்க
அதனால் எங்கும் பரந்த புகழை உடையவன் -என்கிறது -ஆணை மெய் பெற நடாய
ஆணை ஆஞ்ஞை சாஸ்திரம்
ஸ்ருதி ச்ம்ருதிர் மமைவாஞ்ஞா யஸ்தா முல்லங்கய வர்த்ததே
ஆஞஞாஸ் சேதி மமத்ரோஹீ மத்பக்தோபி ந வைஷ்ணவ -என்று
தானே அருளிச் செய்தபடி
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும்
மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து -என்றபடி
சாஸ்த்ரங்களை நன்று பிரசாரம் செய்து அருளி –
ஆணை மேற் பெற நடாய தெய்வம் மூவரில் -ப்ரஹ்ம இந்த்ரன் ருத்ரன் மூவர்க்கும் நியாமகன் -என்றபடி
தெய்வம் மூவரில் முதல்வனாகி -அரி அயன் அரன் -மூவரில் தான் முதல்வன்

சுடர் விளங்கு அகலத்து
தேஜஸ் மிக்கு திரு ஆபரணங்கள் பூண்ட திரு மார்பை யுடையனாய்
அமுதம் கடைகிற அக்காலத்தில் கடலானது
ஒவ்வொரு அலையும் மலை பெயர்ந்தால் போலே
வரை புரை திரை பொரு-மலை போன்ற பெருத்த அலைகள் மோதப் பெற்ற
இது கடலுக்கு விசேஷணம்
உருமுரலொலிமலி-என்பதும் கடலுக்கு விசேஷணம்
உரும் என்றது உருமும் இடிக்கு பெயர் -உரும் முரல் -இடி போலே கோஷிக்கின்ற
அது மலிந்து நிறைந்து -என்றபடி
த்வனி இடி இடித்தால் போலே-
குல பர்வந்தங்களும் நடுங்கும்படி பெரு வரை வெரு வர –

நளிர்கடல்
ஸ்வா பாவிக்க குளிர்ச்சியை சொன்னது அன்று
எம்பெருமான் உடைய கடாஷத்தால் குளிர்ந்து
அடியவர்க்கு ஆளாகவே
பிரயோஜனாந்த பரகளுக்காக உடம்பு வோவ
தங்கள் அமிர்தம் இப்படி
உப்புச் சாற்றை கடைந்து அருளுவதே
என்று ஈடு பட்டு இருக்குமடியவர்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
ஆளப்பட்டு இருக்க

ஓவாது -ஒரு ஷணமும் விடாமல்
ஊழி தோறு ஊழி -சகல காலமும்
என்றபடி –

————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: