திரு விருத்தம் -26-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை
புணர்ந்து உடன் போக்கு துறை-
 புணர்ந்து உடன் போகிறான் ஒரு தலை மகனை -பாலை நிலத்தை கடந்து  குளிர்ந்த நிலத்தே புகுந்தோம் காண்-என்று ஆஸ்வசிப்பிகிறான்
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை  அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே  —-26
பாசுரம் -26-நானிலம் வாய்க் கொண்டு நல் நீர் -நகர் காட்டல் -மாலை நண்ணி -9-10-

 வெக்காவுதம்–பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே–திரு வெஃகா திவ்ய தேசம் அருகில் திருத் தண்கா -ஸ்ரீ தேசிகன் திருவவதாரம் ஸூ சிதம்-இத்தால் என்பர்

நால் நிலம் வாய் கொண்டு –ஆதித்யனாவன் நாலு வகை பட்ட நிலத்தையும்   வாயிலே கொண்டு-தமிழர் ஐந்து என்பர்-ஆழ்வாருக்கும் அதுவே மதம்
நல் நீர் இத்யாதி--இதனுடைய சத்தியான நீர் அரும் படி  மென்று கோதாக்கி அக் கோதை வாயிலே கொண்ட-ஆதித்யன் ஆனவன் தன் உஷ்ண க்ரணத்தாலே சுவைத்து ஆச்ரயம் பொறாமையால் உமிழ்ந்து பாலை ஆயிற்று
கடந்த -சம்சாரத்தை கடந்த என்ற படி
பொன்னே-சம்போதனம் –உன்னோடு போகிற எனக்கு பாலை நிலம் என்று அறிய வேண்டுமோ–என்கிறான்
அஞ்சாது இருக்கைக்ககும் அச்த்தானே பய சங்கை பண்ணுகைக்கும் பொன்னே என்கிறது-உண்டு என்ன உயிர் நிற்கும் படியும்  அபஹரணத்தை
 குறித்து அஞ்சி இருக்கையும்
கால் நிலம் இத்யாதி–தேவர்கள் ஹவிசுக்காக கொள்ளும் இடத்தில் சம்சார வெக்காயம் தட்டாமே-ஒரு யோஜனைக்கு அவ் அருகே நின்று பின்னையும் இது பொறுக்க மாட்டாமை அவ் அருகே போய் சர்த்தி பண்ணுவார்கள்
இப் படியே அங்குற்று அங்கு பரம பதம் அம்கண் இருக்கிற நித்ய சூரிகள் ஆனவர்கள் பூமியில்-இழிந்து ,திரு வெக்காவிலே தங்கள் உடைய அபிமத விஷயம் கிடைக்கை யாலே பிரதஷிண -நமஸ்காராதிகளை பண்ணா நிற்ப்பார்கள்
கண்ணன்-சர்வேஸ்வரன் –சிநேகம் உள்ள இடத்தில் குற்றம் தோற்றாது இறே
வெக்கா வுது -இப் படிப் பட்ட திரு வெக்கா இது என்று காட்டா நின்றான்- வுது-அதூர விப்ரக்ருஷ்டம்-ஏஷா சாத்ருச்யதே இத்யாதி-அவ் அருகு தோற்றுகிறது என்  எனபது என்ன அப் பூம் தேன் அலம் சோலை அப்பாலது-அழகிய பூவையும் தேனையும்
உடைய அழகிய சோலை ..அது சந்நிவேசம்
எப் பாலைக்கும் சேமத்ததே –எல்லா அவஸ்தைக்கும் சேமம் உடைத்து-
ச்வாபதேசம்-
இத்தால் சம்சாரம் த்யாஜம் என்னும் இடத்தையும் பகவத் விஷயம் பிராப்யம் என்னும்
இடத்தை யும் அறிந்த ,இவர்க்கு பிராப்தி தசை தாழ்ந்த படியாலே ,வந்த ஆற்றாமையை கண்ட-ஸ்ரீ வைஷ்ணவர்கள் -சம்சாரம் சென்று அற்றதாகில் உகந்து அருளின தேசங்கள் இங்கே ஆகில்-பிராப்த்திக்கு உள்ளே அன்றோ நீர் நிற்கிறது -என்று ஆற்ற வேண்டும் படி இருக்கிறது-
சரணா கதி விளக்க வந்த பாசுரம் சம்சார வெக்கை தாங்காமல் சோலைகள்
சூழ்ந்த திரு வெக்கா சேர்ந்து சரண் அடைய அருளுகிறார்-
————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: