திரு விருத்தம் -25-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

பகவத் சமாச்ரண்யம் பண்ணினாரில் இப் பாடு பட்டார் உண்டோ என்கிறாள்

ஆரே துயர் அழுந்தார் துன்புற்றார் இத்யாதி–மூன்றாம் திரு அந்தாதி  -27

 

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-
பாசுரம் -25-எம் கோல் வளை முதலா -தலைவன் மாலைக்குத் தலைவி ஆசைப்படுதல் –மாயக் கூத்தா வாமனா -8-5-

பதவுரை

திறல் சேர்–வலிமை பொருந்திய
அமரர் தம்–தேவர்களெல்லார்க்கும்
கோனுடைய–தலைவனான பிரம தேவனுக்கும்
தம்கோள்–தலைவனா யிருப்பவனும்
உம்பர் எல்லா யவர்க்கும் தம்கோன்–பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளெல்லோர்க்கும் தலைவனாயிருப்பவனும்
நம் கோள்–(இவ்வுலகத்திலுள்ள) நமக்கும் தலைவனுமாகிய நம் பெருமான்
உகக்கும்–விரும்பித் தரித்துள்ள
துழாய்–திருத்தழாயானது
எம் கோல்வளை முதல் ஆ–எமது (கையிலுள்ள) அழகியவளை நிமித்தமாக
கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செங்கோல் வளைவு விளைவிக்கும்–அப்பெருமானது உபய விபூதியையும் பாதுகாக்கிற தட்டில்லாத கட்டளையின் நேர்மைக்கும் ஒருகோடுதலை உண்டாக்கா நின்றது;
இனி–இங்ஙனமான பின்பு,
நானிலத்து–இவ்வுலகத்தில்
என் செய்யாது–(அந்தத் திருத்துழாய்) வேறு எத் தீங்கைத் தான் செய்ய மாட்டாது.

அவதாரிகை-
எம்கோல் வளை முதலா -என்னுடையவளை நிமித்தமாக-
கண்ணன் இத்யாதி–சர்வேஸ்வரன் உடைய மண்ணையும் விண்ணையும்
ரஷியா நின்ற வாஞ்சையை பக்னம் ஆக்கா நின்றது
நம் கோன் உகக்கும் துழாய் –சம்சாரத்தின் அபலையான இவளை பெற்றால்
என் செய்யாது–சர்வேஸ்வரன் தானே உபய விபூதியையும் ரஷிக்க கடவ ஆக்ஜையை

பக்னம் ஆக்கா நின்றான்-என் உடையவளை நிமித்தமாக இவனை அழிக்க தொடங்கினால் வேறு ரஷிப்பார் யார் என்றுமாம்

திறல் சேர் இத்யாதி--மிடுக்கை உடைய இந்த்ராதி தேவதை களுக்கு நாதனான பிரம்மாவுக்கும் நாதன் ஆனவன்
உம்பர் இத்யாதி–மேலா தேவர்களான அயர்வறும் அமரர்கள் அதிபதி
இத்தால் உபய விபூதி நாதன் என்ற படி
நம் கோன் -உபய விபூதிக்கு நாதன் ஆனால் போல அன்று கிடீர் எனக்கு நாதன் ஆயிற்று-
உகக்கும் துழாய்–தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும்–திருவாய்மொழி -1-9-7- இத்யாதி —
ச்வாபதேசம்-
 
ஆழ்வார் உடைய தசையை கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் சர்வேஸ்வரன் உடைய ரஷகத்வையும் ,-அதி சங்கை பண்ண வேண்டி இருக்கிற படி சொல்லிற்று-
———————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: