திரு விருத்தம் -24-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை-
இவள் உடைய அதிமாத்ர பிராவண்யத்தை கண்ட திரு தாயார் இது என்னை முடிகிறதோ என்கிறாள்
இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்திகள் ளூரும் துழாய்
கொயல்வார் மலர் மேல் மனத்தொடு என் னான்கொல் எம் கோல வளைக்கே  –24–
பாசுரம் -24-இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு -உலாவும் -பிரிவாற்றாத தலைவிக்காகச் செவிலித் தாய் இரங்குதல் –கரு மாணிக்க மலை -8-9-
 வியாக்யானம்
இயல்வாயின –ஸ்வபாவமாய் உள்ளன
அறியா காலத்து உள்ளே அடிமை கண் அன்பு செய்வித்து–திருவாய்மொழி -2-6-6
பால்யாத் பிரப்ருதி  சுச்நிக்த -பால காண்டம்-18-2-7- ஸ்ரீ ராமன் உடன் ஸ்ரீ லஷ்மணன் சிறிய வயது முதல் அன்புடன் இருந்தார் -என்னுமா போலே
வஞ்ச நோய்–சர்வேச்வரனாலே வஞ்சிதமான நோய்
ஊரும் நாடும் உலகும் தன்னை போலே -திருவாய்மொழி-6-7-2
–மரங்களும் இரங்கும் வகை–திருவாய்மொழி-8-5-6
என்று சொல்லுகிற படி ,தன்னை கண்டார் தன்னை போலே யாம் படி

வஞ்சித்து கொண்டு என்றும்

நோய் கொண்டுலாவும்--நோய் நடத்த நடந்த படி–
வ்ருதா பிரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் –ஆரண்ய காண்டம் -16-29–ப்ரக்ருதி வர்கத்தாலே-சூழப் பட்டு போன படி….பெருமாளை பிரிந்து ,மித்ர வர்க்கம் சேவிக்க ,போகிறானோ என்னில்-கால்நடை கொடாமையாலே தாங்கி கொண்டு போன படி..
அத்யந்த சுக சம்விருத்த –ஆரண்ய காண்டம் -16-30-சக்கரவர்த்தி அறுபத்தி னாராயிரம் சம்வச்தரம் மலடு-நின்று பெற்றவன் ஆகையாலே ,அவன் கொண்டாடின சுகம் இறே இவனுடைய சுகம் .
உம்முடைய கண்ணாலே பார்க்கவும் பொறாத  சொவ்குமார்யம்
உம்மோடு கலவிக்கு சிதனைத்தனை அல்லது பிரிவுக்கு சிதன் அன்று இறே
கதந்னு-தன் படியே என்று நினைக்கிறார் பிரிவு இல்லாமையாலே தமக்கு நீர் குளிருகிற படியாலே-சுடும் என்று அறியாதே குளிரும் என்று அஞ்சுகிறார்
அபர ராத்ரேஷு –அகாலத்திலே போவான் என் என்னில் ,புதிசாக வைதவ்யம் வந்தவர்கள் ,ஆள் கிளம்பு வதற்கு முன்னே-மனிதர் முகத்தில் விழியாமல் போமா போலே ,,கைகேயி மகன் என்றும்,இவனாலே இப்படி புகுந்தது என்றும்
சொல்லும் அதற்க்கு அஞ்சி ,சரயூம் அவகானே -நீரிலே முழுகினால் தடவி எடுக்க வேண்டும் படி-ஒரோ குடங்கை -சிறுமை சொல்லிற்று அன்று –போக்தாக்க களுக்கு அளவு பட்டு இருக்கை
கயல் பாய்வான -பிள்ளும் மௌக்த்யவமும்
பாய்வான பெருநீர்-
-ஏகார்ணவம் பிரவகித்தால் போலே இருக்கை   ,
கயல் பாய்வான பெருநீர்–ஒரு கடலிலே ஒரு கயல் இடம் வலம் கொண்டால் போல் இருக்கை
கண்கள் தம்மொடும் -பாஹ்ய கரணங்கள் இங்கே பிரவணமான படி சொல்லிற்று
குன்றம் ஒன்றால்-ரஷிக்கும் இடத்தில் எடுத்தது பரிகரமாய் இருந்த படி
புயல்வாய் –   புயல் இடத்து -திரு ஆய்ப்பாடியில் வர்ஷம்-தீ மழை-என்று தோற்றி இருக்கிற படி

 இன நிரை காத்த— ரஷிக்கும் இடத்தில் ரஷ காந்தர்பாவமே வேண்டுவது-ஞான அஞ்ஞானங்கள் பாராதே ரஷிக்கும் ..கருன அநுகார நிவ கோபிரார்ஜிவ–பசுக்களைஇட்டு காட்டும் படி  இறே இடையர் உடைய ச்வாபம்-அவர்களையும் கடாஷித்த படி

புள் ளூர்தி -சர்வாதிகன்
கள் ளூரும் துழாய் -மதுச்யந்தியான திரு துழாய் -திரு வடி தோளிலே அலைய விட்ட திரு துழாய்  மாலை யோட கூட அணைக்க ஆசை படுகிறாள்

இவனும் விரும்பும் தார் ஆகையாலே -பதி சம்மா நிதா சீதா -அயோத்யா காண்டம் -16-21–பெருமாள் சக்கரவர்த்தி பாடு சுமந்த்ரன் அழைக்க எழுந்து அருளுகிற பொழுது , தொடர்ந்து-பின்னே புறப்பட்ட பிராட்டிக்கு திரு தோளிலே மாலையை வாங்கி இட்டு ,நாம் வரும் அளவும் விருத்த கீர்த்தனம்-பண்ணி இரு என்று பழையவர்கள் நிர்வாகம் –மாலையை இட்டு திரு அடிகளை பிடித்து கொண்டு எழுந்து அருளினார்-என்று பட்டர்..அஸி  தேஷணா -இவர் தோளில் மாலை  இட்டதுக்கு இவள் கண்ணாலே மாலை இட்ட படி-

கொயல்வாய் மலர் மேல்-வட்டமாய் செவ்வியை உடைத்தான மாலையிலே மனம் ஆயிற்று-எம் கோல் வளைக்கே -என்னால் முடிய புகுகிறது என்று அறிகிலேன்
மலர் மேல் மனத்தொடு -அந்த கரணம் பிரவணம் ஆன படி-
ச்வாபதேசம்-
இப் பாட்டில் சம்சாரத்துக்கு இவர் உளர் என்று இருக்க ,இவருக்கு பகவத் விஷயத்தில் உண்டான-அதிமாத்ர பிராவண்யத்தை கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்  -இவர் படியும் இப் படி ஆவது இது என்னை முடிய கடவது -என்று இருக்கிறபடி-
——————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: