திரு விருத்தம் -23-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

இவனை நோக்கி இவர்கள் சில வசோக்தி -நெஞ்சம் நிறைய அன்பை வைத்து கொண்டு தேவை அற்ற வினாக்களை எழுப்புதல்–சொல்ல ,இவன் தானும் ,இவர்களை சில வசோக்திகள் சொல்கிறான்
புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாட மெரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23-
 
பாசுரம் -23-புனமோ புனத்து அயலே -தலைவன் குறை யுற உரைத்தல் –கடல் ஞாலம் செய்தேனும் -5-6-
புனமோ –பாவியேன் சேதனனாய் கெட்டேன்-என்கிறான்
இதற்குள் நின்றோம் ஆகில் முழு நோக்கு பெறல் ஆயிற்று இறே
இங்குற்றை அபாங்க  வீஷணம் தானும் ஒன்றுக்கு ஆக இறே
புனத்தயலே வழி போகும் –புனதுக்கு உள்ளே புகுந்தோமோ?
உங்கள் புனத்துக்கு வெளி இல்லையா ?
சம்பந்த சம்பந்தத்தை இட்டு தொடருகுறீரே  —

எங்கேனும் போகிலும் புனத்து அருகு அல்லது வழி இல்லை இறே இவனுக்கு

வழி போகும் -நாங்கள் வழி அன்றோ போகிறது ?
வழி போகுவார்க்கு காட்டிலும் முள்ளிலும் புகலாமோ ?
இவர்கள் ஒழிந்த  இடம் காடு முள்ளுமாய் இருக்கிற படி
அறு வினையேன் மனமோ–எங்கேனும் போகிலும்  புனத்தயலே வழி போக வேண்டும்
பாபத்தை பண்ணினேன் –பிள்ளை திரு நறையூர் அரையர் -உகந்து அருளின தேசம் எல்லாம் கிடக்க-திரு நகரி அருகே போக வேண்டும் பாபம் உண்டாவதே -இது பாவம் ஆனால் இதற்க்கு எதிர் தட்டான பகவத் விஷயம் புண்ணியம்-
பகவத் விஷயத்தை சமா ஸ்ரீ யித்து கொண்டை மேலே காற்று அடிக்க திரிய பெறாதே மீள ஒண்ணாத பாகவத சம்ச்லேஷத்தில் இழிவதே-என்று-கொண்டை மேல் காற்று அடிக்க -என்றது தலைக்கு மேல் காற்று அடிக்க -அதாவது கவலை இன்றி இருத்தல்-

நும் காவல்-புனமோ மனமோ உங்களுக்கு காவல்

மகளிர்-ஒருவனை பாதிக்கைக்கு உங்களுக்கு கிடக்கிற ஐக கண்ட்யம்
சொல்வீர் -சிறை இட்டவர் ஜீவனம் இடாரோ ?
தனை அனாதாரியா நிற்க செய்தேயும்  “சொல்லீர் “என்கிறான்-ஆசாதி சயம் இருந்த படி

புண்டரீகம் -இத்யாதி-தச்யயதா கப்யாசம் புண்டரீகம் எவம் அஷணீ-என்னும் படி –அம் கேழ் -அழகிய நிறத்தை உடைய தாமரை காடு போலே ஆனகண்-ஓர் என்றது ஒரு வகைக்கு ஒப்பு என்ற படி -அத்வீதிய மான தாமரை காடு போல் என்றும் ஆம்ஓர் என்றது அவ்வயவயுமா ஆகவுமாம்

கண்ணன் -நீர்மை
புண்டரீக -இத்யாதியால் வடிவழகு சொல்லிற்று
வானாட மரும்  தெய்வத்தின்  மோரனை யீர்களாய் -பரமபதத்தை -சதா பச்யந்தி என்னும் படி-நித்ய வாசம் செய்யும் எல்லாரும் கூடினாலும் ,இத் தலைக்கு ஒரு வகைக்கு ஒப்பாய் இருந்த படி-சம்சார போகம் ஒருவருக்கும் போறாதே இங்கு அறாட்டு பறாட்டாய் இருக்கையாலே  இங்கு தனி அல்லது இல்லை

அங்கு எல்லாரும் புஜித்தாலும் ஆள் தேட்ட மாய் இருக்கையாலே இனமாய் இருக்கும்  இவையோ உங்கள் உடைய ச்வாபங்கள்–என் நெஞ்சை வளைக்கையும் ஜீவனம் இடாது ஒழிகையும்-கிட்டினவரை கீழ் சீரை அறுத்து கொண்டு அவர்களை அநாதாரிக்குமா போலே நெஞ்சை  அபகரித்து முகம்-கொடாதே இருக்கிற படி-

ச்வாபதேசம்-
 ஆழ்வார் நித்ய விபூதியில் பிரவணராய் இருக்கும் இருப்பை கண்டு  இவர் பக்கல் பிரவணராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தை-
நாயகன் ஏங்குவது இவளின் கடை கண் பார்வைக்கு -புனம் ஆகவாது இல்லாமல் போனேனே -பிருந்தாவனம் செடி கொடி-மண் துகள் ஒன்றாக ஆசை பட்டது போல் இவனும் புவன் ஆக இல்லாமல் போனேனே பாவி என்கிறான்..
இவர்கள் இல்லாத இடம் எல்லாம் முள்ளாக தோற்றுகிறதாம்
———————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: