திரு விருத்தம் -22-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை-
உங்களை புனம் காக்க இங்கன்   கொண்டு வைத்த தார்மிகரோ என்கிறாள்
அபிமத விஷயம் இருந்த இடத்தே -தண்ணீர் -என்று கொண்டு புகுவாரை போலே
கையிலே தழையை முறித்து பிடித்து இவர்கள் இருந்த இடத்தே சென்று ,-இங்கனே ஓர் யானை போந்ததோ என்று-கேட்க அவர்கள் நாங்கள் புனம் காக்க இருகிறோமோ உமக்கு மறு மாற்றம் சொல்ல இருகிறோமோ என் சொன்னீர் ஆனீர்
என்கிறார்கள்–தழை கொண்டு போகிறது என் என்னில் ஆச்ரயத்தை இழந்த தளிர் வாடுமா போலே ,காண் உன்னை பிரிந்து-நான் பட்டது என்று தன தசையை அவர்களுக்கு அறிவித்து கொண்டு சொல்லுகிறபடி ….இவன் உடைய கர ச்பர்சத்தாலே ,இது-சதசாகமாக பணைத்த படியை கண்டு ,உம்முடைய ஆற்றாமை அறிவிக்க வந்தீர் ஆகில் , கொம்பிலே நிற்க செய்தே காட்டா விட்டது என் என்கிறாள் –பிறந்த இடத்தை விட்டு உம்முடைய பாடு வந்தாருக்கும் உண்டோ வாட்டம் ..உம்மை பிரிந்து பிறந்த இடத்தே இருப்பார்க்கு அன்றோ வாட்டம் என்கிறாள் –
கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாட்
டம்பார் களிறு வினவுவதையர் ,புள் ளூரும் கள்வர்
தம்பாரகத் தென்று மாடாதனதம் மிற்கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –22-
 
பாசுரம் -22-கொம்பு ஆர் தழை கை ,சிறு நாண் எறிவிலம் -தோழி தலைவனைக் கேலி செய்தல் -நல்குரவும் செல்வமும் -6-3-
 வியாக்யானம்-
கொம்பார் தழை கை –தழையை காட்டி ஜெயிக்கும் இடத்தே ,வில்லை காட்டி ஜெயிக்க ஒண்ணாது இறே
சிறு நாண் எறிவிலம்— கையிலே வில் பிடித்த தழும்பு கண்டிலம் நாண் என்ற வில்லுக்கு தர்மம்-தர்மம் ஆகிறது தர்மியை ஒழிந்து அன்று இறே இருப்பது ..உம்முடைய கையிலே வில் கண்டிலம் என்கிறாள்
இது இறே வில் என்று தழையை காட்டுகிறான்
வேட்டை கொண்டாட்டு–வில் இதுவே இருந்தது –நீர் புக்க இடம் எங்கும் கொண்டாடுகிறது வேட்டையாய் இருந்தது-இதுஒரு சேர்த்தி இருந்த படியே என்கிறார்கள் -வில் இதுவாகில் அம்பு எங்குற்று என்ன –இலக்கான ஆனையில் பட்டு ,உள்ளே குளித்தது என்கிறான்
அம்பார் களிறு வினவது ஐயர் -ஐயர் சொல் சேர்த்தியான வார்த்தைகளை சொல்லா நின்றீர் பெரு முதலியாய் இருந்தீரே என்கிறார்கள்
புள் ஊரும் கள்வர்-சர்வாதிகர்
தம்பாரகத்  தென்று மாடாதன –இவருடைய லீலா விபூதிக்குளே நடை ஆடாதனவாய் இருந்தது ..நித்ய விபூதியில் உண்டோ ?-இல்லையோ ? என்று அறிய மாட்டுகிறிலோம்
தம்மில் கூடாதன –இரண்டு இடத்திலும் இல்லை ஆகிலும் ,இன்று தொடங்கி இத்தை வார்த்தையாக  கொண்ட கொண்டாலோ என்னில்-
இருவர் கூட நிரூபத்தால் சேருகிறதில்லை–தமக்கும் தம்முடைய வார்த்தைக்கும் ஒரு சேர்த்தி இல்லை
சதாகாரையான ப்ரநீதியும் ,அசாதகாரையான பிரநீதியும் ஒழிய –சதசத் விலஷணம் – என்ற தனக்கு என்ற ஒன்றை
மாயாவதி சொல்லுமா போலே லீலா விபூதியிலும் ,நித்ய விபூதி யிலும்  அன்றியே உமக்கு என்ன ஓன்று எங்கனே சம்பாதித்த படி-என்கிறார்கள்
வம்பார் வினா சொல்லவோ எம்மை வைத்தது –புதுமை மிக்கு இருந்துள்ள பிரசன்னத்துக்கு ,பிரதி வசனம் பண்ணவோ ?–எங்களை வைத்தது ..
புதுமை மிக்கு இருந்துள்ள வார்த்தைக்கு பிரசனம் பண்ணவோ ?எங்களை வைத்தது என்னவுமாம்
 இவ் வான் புனத்தே –இதுக்கு அவசரம் உண்டோ ?இப் பரம்பு நோக்கவே போராதோ பணி என்கிறாள்-
ச்வாபதேசம்-
எம்பெருமான் உடைய ஸ்வரூப ரூப குணங்களிலே ஈடு பட்ட ஆழ்வார் உடைய ஸ்வரூப ரூப குணங்களை-கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தைக்கு ஆழ்வார் வார்த்தை-
————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: