திரு விருத்தம் -19-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை-
இவள் இருந்து பொய் என்னும் காட்டில் பொய் ஆகாது இறே
ரனோத் யததாம் இவ வரணானாம்-கிஷ்கிந்தா காண்டம் -28-32-என்று ஆணை அணி வகுத்தால் போல-மேகம் நாலு மூலையும் கையும் அணியும் வகுத்து வர்ஷிகிற படியை கண்டு இவள் மோஹிக்க-
“எம்மின் முன்னவருக்கு மாய்வர் “-திருவாய் மொழி -1-1-5என்னும் படி இவள் உடைய மோகத்தை கண்டு    தோழியும் மோகிக்க
இவ் அளவிலே உணர்ந்து இருந்த தாயார் இவ் அவசாதம் நீங்கிடுக என்று ரஷா விதாநம் பண்ணுகிறாள்-
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி  அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள்  ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19-
பாசுரம் -19-காரிகையார் நிறை காப்பவர் யார் என்று -செவிலி பழிக்கு இரங்குதல் –பாலனாய் ஏழு உலகு -4-2-
 காரிகையார் நிறை காப்பவர் யார் என்று-நாங்கள் சஞ்சரியா நிற்க ஸ்திரிகளின் அடக்கத்தை நோக்குவன் என்பார் யார் ?–பெண் பிறந்தாராய்  இருந்து வைத்து எங்கள் சந்நிதியில் தம் தாமுடைய ஸ்த்ரீத்வத்தை நோக்கி கொடு இருப்பார் யார் ? என்றும்-
கார் கொண்டு-கறுத்து கொடு
இன்னே மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் –அதிவ்ருஷ்ட்டியான  வர்ஷம் ஆனது அணிக்கு அணியும் தூசியும் ஆக தோற்றின படி-/அறை இடும் காலத்து –அறை கூவுகிற படி–மகா ராஜர் பெருமாளை அண்டை கொண்டு வாலியை அறை கூவினார் போல் –இது அங்கனும் அன்றியே , தனி நின்று வென்ற படி-
அங்கு ஓர் ஏக வீரனான வாலியை–இங்கு ஓர் அபலையை –அங்கு சொல்லிற்று ஒரு அறிவானனான சேதனன் –இங்கு அசேதனம்
வாழியரோ–இவ் அவசாதம் நீங்கி ஜீவித்திடுக
சாரிகை புள்ளர்— அபரிகரனாய் வாராது இருந்தான் அல்லன் கிடீர் –பதினாலாண்டு கூட வந்த வழியை இன்றும் போகலாமோ –என்று இருக்க வேண்டாத படி சகசாரியான பரிகரத்தை உடையவன் ..ஆசீதரை இட்டு தன்னை நிரூபிக்கும் படி அவர்களுக்கு வைத்து கொடுத்த தரம்-

பெரிய திரு அடி மேலே போரா இருத்தல்–திரு ஆழியை கையிலே உடையன் ஆதல்–பெரிய பிராட்டியாரை எனக்கு என்ன பெறுதல்–திரு துழா யை தனக்கு தாராக உடையன் ஆதல் –இவை இறே சர்வாதிகார லஷணம்

அம் தண் துழாய் -போன உயிரை மீட்க வற்றாய் இருக்கை –சாந்தா கரணி -விசல்யா கரணி-என்னுமா போலே —
இறை கூய் அருளார்–பிரணயித்வம் தவிர்ந்தால் ச்வாமித்வமும் தவிர வேணுமோ ?
தாம் வந்து அணைத்து தம் தோளில் மாலை என் மார்பில் கிடக்க பேரா விட்டால் சத்தா தாரமாக அது  தனையும் தந்தால் ஆகாதோ ?
தாமே வரவுமாம் ..அழைக்க்கவுமாம்–பேறு அத் தலையாகவே என்று இருந்த படி
சேரிகை ஏறும்  பழியாய் விளைந்தது –சந்நிவேசத்தில் உள்ளார் எல்லாரும் ஒரு விஷயத்துக்காக இப்படி துடிப்பதே-என் தலையாலே பேறு-என்று இருப்பதே என்று- கை எடுத்து கூப்பிடும் படி ஆயிற்று
சின் மொழிக்கே -இதுக்கு எல்லாம் பருவம் இல்லை கிடீர் –சொல் என சொல்ல மாட்டாத பருவம் கிடீர்–இவ்வளவென்று   பழியின் கனம்-
இத்தால் ஆழ்வாருக்கு பக்தி வியதிரேகத்தில்   அங்கே  சம்பந்தம் உள்ளதால் ஒன்றாலே ஆகிலும் தரிக்க வேண்டும் படி ஆற்றாமை மிக்க படி சொல்லிற்று-
—————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: