பிரமேய சாரம்-1/2- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

பிரம -புத்தி
பிரமாணம் –கருவி மூல புத்தி ஏற்பட உதவும்
 பிரமாதா புத்திக்கு இருப்பிடம்–ஆழ்வார்கள் ஆசார்யர்கள்
 பிரமேயம் அறிய படுபவன் -ஸ்ரீமன் நாராயணன்
பிரமாதாக்கள் -அறிகிறவன்
அர்த்த பஞ்சகம் -ரகஸ்ய த்ரயம்–கொண்டு அறிவது பிரமேயம்-சாரம்-பகவத் கைங்கர்யம் -அவனை அறிந்து கைங்கர்யம் பண்ணுவதே —
திரு மந்த்ரம் அர்த்தம் சொல்ல வந்தவை இது
முதல் மூன்று பாசுரங்கள் பிரணவம்  அர்த்தம் அருளுகிறார்
 அடுத்து நான்கு பாசுரங்கள்  -நம சப்த அர்த்தம் அருளுகிறார்
8th பாசுரத்தால் நாராயண சப்த அர்த்தம் அருளுகிறார்
 9 /10 பாசுரங்களில் அர்த்தம் ஒரு சேர அருளி நியமித்தார்
தனியன்
நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள் நிலத்தீர்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்து அளிக்கும்
பூம் கா வளம் பொழில் சூழ் புடை வாழும் புதுப் புளிமன்
ஆங்காரம் அற்ற அருளாள மா முனி அம் புயமே (பதமே )
அம்புயம் மேகம் போல் பொழிகிறார்-ஞானம் வர்ஷிகிறார் -பரிவு அன்புடன் அருளி-
நல்லது கொடுக்க கூடிய பிரமேயம்–பெறும் தேவி கேட்டு அருளாய்-பெருமாளுக்கு தக்க பெருமை உடைய சீதை பிராட்டி/பெருமாளுக்கும் பெருமை கொடுப்பவள்–புதுப் புளி என்ற ஊருக்கு மன்னன் போல் இருப்பவர்–ச்வாதந்த்ரமில்லாத அங்காரம் அற்ற –
அவதாரிகை
சகல சாஸ்த்ர நிபுணராய்-சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் ..சுருதிகள் நான்கும்  எல்லை இல்லா அற நெறி யாவும் அறிந்தவர்– தத்வ–அசித் சித் ஈஸ்வர மூன்றும்– ஹித-கர்ம பக்தி ஞான பிர பத்தி  ஆச்சார்ய அபிமானம் -ஆகிய ஐந்தும்  புருஷார்த்தம் -ஐஸ்வர்ய கைவல்ய ஈஸ்வர மூன்றும்  தத்வ ஹித புருஷார்த்த யாதாத்மா  வித் அக்ரேசனராய் –உண்மையான பொருளை அறிந்து -முதன்மை பெற்ற தலைவர்–சமஸ்த சம்சார சேதன உஜ்ஜீவன காமராய்–அருளாள பெருமாள் எம்பெருமானார் தன்னையே உதாரணம் அடியிலே அங்கீ கருத்த எம்பெருமானார் —ஆசை உடையோருக்கு எல்லாம்-பேசி வரம்பு அறுத்தார்-ஸ்ரத்தையே அமையும்-மனம் உடையீர்-அனைத்தும் வாழ பிறந்த எதிராச மா முனியே —
கைங்கர்யம் பண்ணி தத்வ ஹித புருஷார்த்தம் சரம பர்வ நிலை வரை கேட்டு அறிந்து–

அம்புயம் மேகம் போல் பொழிகிறார்-ஞானம் வர்ஷிகிறார் -பரிவு அன்புடன் அருளி-
நல்லது கொடுக்க கூடிய பிரமேயம்–பெறும் தேவி கேட்டு அருளாய்-பெருமாளுக்கு தக்க பெருமை உடைய சீதை பிராட்டி/பெருமாளுக்கும் பெருமை கொடுப்பவள்–புதுப் புளி என்ற ஊருக்கு மன்னன் போல் இருப்பவர்–ச்வாதந்த்ரமில்லாத அங்காரம் அற்ற –

பக்குவம்பட வைத்து -மூன்று பர்வம் பிரதமம் பல்லவிதம் புஷ்பிதம் பல பர்யந்தம்—ஆச்சார்ய அபிமானமே நிஷ்ட்டை-
பரம கிருபையால் சம்சார சேதனர் உஜ்ஜீவனத்துக்கு சகல சாஸ்திரம் -ஒவ் ஒரு பிரசேதத்திலும் தாத் பர்யம் -அறிவதற்கு அரியதாக இருக்கும் அர்த்த விசேஷங்களை சந்க்ரகித்து ஞான சாரம் அருளி தலை கட்டினார்-
சகல சாஸ்த்ர சந்க்ரகம் ஆகையால் பிரமாண சாரம் ஆன திரு மந்த்ரம்- மூன்று தயிர் தாழி -ஓம் காராம்–ரிக் யஜுர் சாம வேதம்-மூன்றிலும் இருந்து மூன்று எழுத்துகள் — அ உ ம காரம் எடுத்து ..–பிரதி பட படும் பிரமேயம் சாரம்-இரண்டாவது கடைந்து -விரஜையில் குளித்து சூஷ்ம சரீரம் போக்குவது போல்–பிரமேய சாரம் அருளி செய்கிறார்

அவ்வானவருக்கு மவ்வானவர் எல்லாம்
உவ்வானவர் அடிமை என்று உரைத்தார் –இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டு இருப்பார் மீட்சி இல்லா
நாட்டு இருப்பார் என்று இருப்பன் நான் –1
சப்த பர்வ  நிலை–அடியார் அடியார் தம் அடியார் அடியார் தம் அடியார் அடியார்க்கு -அடியேன் ஏழு தடவை ஆழ்வார் அருளினார்-சந்தசில் இடம் இல்லை என்று ஏழு உடன் நிறுத்தினார் –அ கார வாச்யன்-சர்வேச்வரனுக்கு – ம வாசகர் ஜீவாத்மா அனைவரும்–எல்லாம் என்று -பலர் குறிக்க-பக்தர் முக்தர் நித்யர் ஈர் இல ஒண் பொருள் –உ வானவர் ஆசார்யர் அடிமை என்று உபதேசித்து –
ஆத்மா பரமாத்மா வேறு ஆத்மா பலர் -தங்களுக்குள் வேவ் வேற -ஒருத்தருக்கு பலர் -நித்யா நித்யானாம் ஏகோ பகுனாம் சேத சேதனானாம் யகா காம்மா விதாதாதீ -நாராயணனே நமக்கே ஒருமை பன்மை அருளியது போல்–உ ஆச்சார்யர் சொல்லும் பிராட்டியையும் சொல்லும் கடக கிருத்தியம்-சேர்த்து விடுபவர் –கடகத்மே சொரூபம் -சேர்பார்களை பச்சிகள் ஆக்கி ஞான கர்மங்களை சிறகு என்னும்–பறவை/சிறிய திரு அடி ஆச்சார்ய ஸ்தானம்-உரைத்தார் -என்று கேட்டு இருப்பார்- கேட்டு அதன் படி அனுஷ்டித்து இருப்பவர்கள் –திரு அரங்கர் தாம் பணித்த மெய் வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார்-கேட்டு அநிஷ்டித்து இருக்கிறார்–

உபதேச முகத்தாலே கேட்டு அதில் நிலை நிற்ப்பவர்–அப்படி பட்டவர்களுக்கு கைங்கர்ய பரர-ஆள் என்று  கண்டு இருப்பவர்–புனர் ஆவர்த்தி இல்லா -நச புனர் ஆவர்ததே -அடியார் குழாங்கள் உடன் கூடி இருப்பார்கள் என்று நான் -எம்பருமானார் திரு அடியில் இருக்கும் அடியேன் -நம்பி இருக்கிறேன்–
பிரமேயம் சார அம்சம் அருளி இதில்
அகர முதல் எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு-சப்தங்களுக்கு காரணம் போல் அனைத்துக்கும் இவனே காரணம் அகார அர்தோ விஷ்ணு-அ என்பதே பிரமம் -சமனாதிகரணம்-சமான ஆஸ்ரமம்-புத்தகம் கடிகாரம் மேஜை மேல் இருக்கின்றன -போல்-இருப்பிடம் ஆச்ராயம் –பின்ன பிரவர்த்தி -குடம் நீலம் வாயும் வயிறும் வேலைப்பாடு மண்-நான்கும் மண் குடம் நீல வர்ணம் -நான்கும் குடத்தை ஆச்ரயித்து இருக்கிறது -உபயோகம் வேவ் வேற –மண் குடம் தங்கம் இல்லை நீல குடம் சிகப்பு இல்லை வேலை பாடு-விலை அதிகம் வாயும் வயிறும் -பெரிய என்பதை காட்டும்..

பின்ன பிரிவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம் -ஏக ஸ்மின் அர்தே விருத்தி -ஏக பொருளில் சாமான அதிகரணம் குடத்தை -குறிப்பது போல்
ஸ்வேத கேது–ஏக விக்ஜனா பகு விக்ஜ்னனாம் -ஒன்றை அறிந்து பல அறிவது ஏக தேவ அத்வதீயம் தத் தும் அஸி பிரமம் நீ இருகிறாய் பிரமம் நீ இருகிறாய் மகா வாக்கியம்- விட்டு இலக்கணம் விடா இலக்கணம் -விட்டு விடா இலக்கணம்–ஐ ததாத்மா  இதம் சர்வம் —கண்ணால் பார்க்கும் எல்லாம் பிரமத்தை அந்தர் ஆத்மா வாக கொண்டவை-சமானமாக  கொண்டவை–தத் சத்யம் –தத்வமசி ஸ்வேத கேது –ஜகம் அனைத்தும் சரீரம் ஆக கொண்ட பிரமம் -ச்வேதகேது ஆத்மா வாக கொண்டவன்-சாமான அதிகாரம்–ஜகமே நீ சொல்ல வர வில்லை-யஸ்ய ஆத்மா சரீரம் எல்லாம் சொன்ன பின்பு அவரே ஓன்று இல்லை சொல்லுமா –தனித்து தேடி போகாதே உனக்கு உள்ளும் இருக்கிறான் என்று சொல்ல வந்தது அது போல் அ  எழுத்தும் வாசகம்-பிரமம்-வாச்யம் – ஈஸ்வரனை சாமான அதிகரணமாக கொண்டவை –வாச்ய வாசக சம்பந்தம்–சரீர ஆத்மா சம்பந்தம் வேற -ம கார வாசகம் ஜீவாத்மா -ஞானம் இருகிறவன்–25 தத்வம் ஜெவாத்மா -24 அசேதனங்கள் 25 எழுத்து ம– ஐந்து வர்க்கம் -ம ஏக வசனம் -இருந்தாலும்-அத்வைதம் ஒன்றே ஆத்மா எதற்குள் இருக்கிறது தெரியாது அதனால் எல்லோரும் அனுஷ்டானம்பண்ண வேண்டும்–அனைத்தும் பொய்-மித்யா –அனைத்து ஜீவாத்மா குறிக்கும் -ஜாத் ஏக வசனம் சமஷ்டி வாசகம் கோஷ்டி–பிரமேய சாரம் கேட்க்கும் கோஷ்டி-ஒருமை சொனாலும் பலரை குறிக்கும்-திரு அடி -சொன்னாலே இரண்டையும் குறிக்கும் போல்-திரி வித ஆத்மா வர்க்கம் குறிக்கும் -இருந்தாலும் எல்லாம் என்கிறார் தெளிவு படுத்த —

உ கார வாச்யர் ஆச்சர்யரை சொல்லுகிறது –பிராட்டி வாசகம் சாஸ்திரம் சொல்லும் –கடகத்வம் சொரூபம்-வைமுக்த்யம் -மாற்றி -சேர்த்து வைப்பார் –இருவரும் –சேர விடுவதும் பிராட்டி மூலம் தான்-கடகத்வம் மூலம் அவள் திரு அடி சம்பந்தம் அடியாக தான்–கூரத் ஆழ்வான்–குரு பரம்பரை பற்றி –தேவி பலத்த்தால் சேர்ப்பி பாள்–திரு அடி பலத்தால் வந்த ஐக்கியம்-எம்பெருமானார் ஒரு நாள் உகப்பால் பிரணவ சன்க்ரகம் கிரந்தம் முதலி ஆண்டானுக்கு அருளியதை கந்தாடை ஆண்டான் – முதலி ஆண்டான் திரு குமாரர்–எம்பெருமானார் விக்ரகம் ஸ்ரீ பெரும் புதூரிலும் திரு அரங்கத்திலும் எழுந்து அருள பண்ணினவர்-ஆலிங்கனம் பண்ணி சக்தி கொடுக்க மந்த்ரோதமாக எழுந்து அருள பண்ணும் பொழுது எம்பெருமானார் ஸ்ரீ ரெங்கத்தில் நோவு பட்டார்-பராசர பட்டருக்கு அவர் சொல்ல  –மிதிளா சாளக்ராமம் மேலக் கோட்டைக்கு  பராசர பட்டார் போகும் பொழுது அனந்தாழ்வான் -சிறி புத்தூர் -இன்று திரன்கூர் பெயர் -மிக பெரியவர் -சேவித்து எங்கள் குடிக்கு அரசே கொண்டாடினார் நாமே திரும்பி வந்து பட்டார் ஆக பிறந்தோம் என்றார் எம்பெருமானார்-ஆச்சர்யரை உ கார வாசகன் சொல்லி இருக்கும் கிரந்தம்-ஐவரும் எம்பெருமானார் திரு அடி ஆஸ்ரயித்து கிரகித்த அர்த்தம் சாதித்து இருக்கிறார்
அடிமை -சேஷம் கடகர் சம்பந்த ஞானம் உணர்த்துவார்-ஈஸ்வரன் சேஷியாய்-இத் தலை சேஷன் என்றுமே -மறதி போக்கி நினைவு படுத்துகிறார் சம்பந்தம் அநாதி –  தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து –கைங்கர்யமும் இழந்து –இழந்தோம் என்ற இழவும் இன்றி –சம்பந்த நினைவு படுத்தி பிரகாசித்தார் அடிமை என்று உணர்த்தினார்–பெருமானுக்கும் உபதேசித்தார் நம் ஆழ்வார்- நால்வருக்கு அக்ஜர் ஞானிகள் அறியாதருக்கு உய்ய -கரை ஏற்றும் அவனுக்கு நாலு ஆரும் உணர்த்தினார் –கிருபை பார்த்து ஷமிக்க பண்ணுவார் -சாஸ்திரம்  பார்த்து தண்டனை –சரணம் சொன்னால் தன் அடி சேர்த்து கொண்டு–வியாபாரி பிள்ளை கதை–இருவரும் சரக்கே ஒரு சரக்காய்-சம்பந்தம் புதிதாக உருவாக்க இல்லை-ஞானம் தான் உணர்த்த வேண்டும்–ஜீவாத்மா சரீரம் சிறை பவ சாகரம் சூழ்ந்து மனசு ராவணன் பத்து இந்த்ரியங்கள் பரமாத்மா எங்கு தெரியாமல் துன்பம் ஆச்சார்யர் சங்கு சக்கர லாஞ்சனை திரு அடி கனை ஆழி போல் –முதலி ஆண்டான் சாதித்தது -இங்கு நமக்கு தான் தெரியாது பெருமாளுக்கு தெரியும் -அங்கு சீதை இணங்க வில்லை மனசு வழியில் நாம் போகிறோம் இரண்டும் வாசி இங்கு–துவாரகை -கண்ணன் சங்கு சக்கர லாஞ்சனை உள்ளவரை விட சொல்லி போனானே மரியாதையை தோற்ற அந்தரங்க அறை செல்ல போக அனுமதி இவர்களுக்கு தான்–சம்பந்தம் விட ஞானம் முக்கியம்–சுகர்-வாசு தேவன் கதை சொல்பவர் கேட்பவர் சொல்ல தூண்டினவர் 21 தலை முறை -திரு விக்ரமன் திரு அடி தீர்த்தம் போல்-மீன்கள் தொமிங்கலம் உல் இருந்தும் மோஷம் இல்லை சம்பந்தம் உண்டு ஞானம் இல்லை –உபகார்யா வஸ்து ஏற்றத்தால்  ஆச்சர்யருக்கு கொண்டாட்டம்.–வெள்ளி கொடுத்தவர் தங்கம் கொடுத்தவர் போல் –போட்டி அனுபவித்து கொண்டே மோஷம் –இதுவும் அதுவும் வேண்டும்..இவ்வாறு கேட்டு இருப்பார்க்கு-இப் பிரகாரத்தை உபதேச கம்யமாக கேட்டு—கைங்கர்யம் செய்து குரு பரம்பரை -அருளி செயல்- வியாக்யானம்-கைங்கர்யம்-முடிக்கும் -ஆச்சார்யர் உபதேசம் -பண்ணி அறிந்து–அதில் உறுதி கொண்டு மனசால் நினைத்து அனுஷ்டானம் பண்ணி-இருக்கும் இவர்கள்–பாகவத சேஷத்வம்-அடுத்த கோஷ்டி-ஆழ்ந்த பொருள் தத்வ யாதாத்மா ஞானம் -பெருமாள் விரும்புகிறார் –மதுர கவி ஆழ்வார் நிலை–உலக இன்பம் தாண்டி பகவான் அடைய- கிருஷ்ணா பக்தி தாண்டி சடகோப பக்தன்-நழுவினால் பெருமாள் பக்தர் மடியில்-ஆழ்வார் நழுவினால் சம்சாரம் -இரண்டு கை மாறினால் நல்லது தானே எல்லைக்கு எல்லை-அனந்யார்க்க சேஷத்வம் -அநந்ய சரன்யத்வம்-அநந்ய போக்யத்வம் மூன்று ஆகாரம் –பாகவதர்கள் இடம் ததீயர் இடம் வரை போக வேண்டும்..சப்தத்தில் இல்லை அனுமானித்து அறிந்து கொள்ள வேண்டும்–அ–ஸ்ரிய பதி சொல்லும் அனுமானித்து ரஷிக்கும் பொழுது பிராட்டி வேண்டும்-தேவ தத்தன் பருத்து இருக்கிறார் பகலில் சாப்பிட வில்லை- அர்த்தம் இரவில் சாப்பிடுவான் அனுமானம் இது–பாகவத சேஷத்வம் வெளி இட்டார் இதில்–திரும்ப வருதல் இல்லாத திரு நாட்டில் இருப்பார்கள் தெளி விசும்பு திரு நாட்டில் அடியார் குழாங்கள் உடன் நித்யர் முக்தர் உடன் இருப்பார் என்று சு பிரவர்த்தி -இருப்பன் நான்-அண்ணிக்கும் அமுது ஊரும் என் நாவுக்கே போல்–மதிர் மம சஞ்சயன்-ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -அகங்காரம் -சாத்விகம்—எம்பெருமானார் திரு அடியில் சேவித்து –ஆப்த தமர்-சர்வக்ஜராய்–பரம ஆப்தராய் இருக்கையால் தாம் அறுதி இட்டதே அர்த்தம் என்று சாத்விக அகங்காரம்-என்று இருப்பன் நான் மாறுளதோ இம் மண்ணின் மிசையே ஆழ்வார் போல்–எம்பார் சிஷ்யர் கொண்டாட ஒத்து கொண்ட ஐதீகம்-அனைத்தும் எம்பெருமானார் திரு அடி பலம் அபிமான துங்கன் பெரி ஆழ்வார் -நமக்கு பெருமை ஏற்று கொள்ள கூடாது அபிமான பங்கமாய்–அமுதனார் முதலில் அருளிய ராமானுஜ நூற்று அந்தாதி மாற்றி-அருளியதை -சூஷ்மம் அறிந்து ஆழ்வார் ஆச்சார்யர் சம்பந்தம் அருளி-காட்டு அழகிய சிங்கர் சந்நிதியில்–சாத்து முறை மூன்று ஸ்வாமியே நேராக வந்த பின் அருளி செய்தவை ..வாத்தியம் நிறுத்தி நெய் பந்தம் உடன் நம் பெருமாள் கேட்டு அருளுகிறான் ஆசை உடன் –கோபுர வாசலில் மட்டும் வாத்தியம்- திரு வேம்கடம் உடையான் தனியாக ஒரு நாள் 22 ராமானுச நூற்று அந்தாதி தனி கேள்வி-அனந்தாழ்வான் பிரார்த்தித்து ஏற்பாடு –தண்ணீர் அமுது வழி திருத்தும் உத்சவம் 23 திரு நாள் —
குலம் ஓன்று உயிர் பலது அங்கு உற்றதால் இட்ட
கலம் ஓன்று காரியமும் வேறாம் –பலம் ஓன்று
காணாமை காணும் கருத்தார் திரு தாள்கள்
பேணாமை காணும் பிழை -2
ஆச்சார்யர் அபிமானம் ஒதுங்காமல் இருப்பதே நம் குற்றம்–ஜன்மம் -சேஷத்வ குலம் ஒன்றே -இயற்கையான குணம் ஒன்றே ..
ஆனால் ஜீவாத்மா பலர்- சேஷத்வம் ஆஸ்ரயம் ஆக இருப்பவர் பலர் -கர்மம் -குற்றம் -அதனால் கலம் -சரீரம்-கர்மாதீனத்தால் ஏற்பட்ட சரீரம் ஓன்று–தேவாதி பேதத்தால் சரீரம் பல பிரகிருதி கொண்டு பண்ண பட்டதால் ஒன்றே –குடம் மடக்கு சட்டி அனைத்தும் மண் பாத்ரம் போல்–காரியமும்-புண்ய பாப பல அனுபவ  ரூபமான கார்யம்-வேறாம் பல வகை பட்டு இருக்கும்–பட்டாம் பூச்சி வகையே பல லஷம்

பல்கி பெருகி வள வகை -சம்சாரம்-கருத்தார் ஆச்சார்யர்-கருத்தை உடையவர் கியாதி புகழ் லாபம் பூஜை இதற்க்கு இன்றி சொத்து ஸ்வாமி இடம் சேர்த்து வைக்கும் ஒரே நோக்கம்–நாடு திருந்த வைத்தார் நம் ஆழ்வாரை–ஆத்மா உஜ்ஜீவனம் காணும் கருத்து கொண்டு-ஆசார்யன் சிஷ்யன் ஆர் உயிரை பேணும் அவன்–அவர் திரு அடி பற்றாதது ஒன்றே பிழை
சதாசார்யர் சமாச்ரண்யம் இல்லாமை காண் சம்சாரத்தில் அழுந்தி இருப்பது ..திரு அடி சம்பந்தம்-ஆச்சர்யரே அவன் திரு அடி-சதாச்சர்யர் கைங்கர்யமே பரமபுருஷார்தம்–திரு அடிகளை சேர்ந்தார் உபாயமாக இல்லை உபேயமாக கைங்கர்யம் பண்ண தான்–

பக்தர் -சம்சாரம் மாறி மாறி அழுந்தி இருக்கைக்கு அடி -சதாசார்யர் பற்றாமை –
நிருபாதகமாய் நித்தியமாய் இருப்பது தான் கீழ் சொன்ன சேஷத்வம் ..குலம் ஓன்று தான்
இட்டு வைத்த கலம் ஓன்று -கர்மம் அடியாக இடுகிறார் -ஈஸ்வரன் குற்றவாளி இல்லை-
பிராக்ருதம் ஒன்றாலே ஆக்க பட்டவை அனைத்தும் தேவ மனுஷ திர்யக் ஸ்தாவர ஜாதிகள்-
அவாந்தர பேதங்கள்  இவற்றுக்குள்–தள்ள தக்கது அனைத்தும்
காரியமும் வேறாம் சரீரத்துக்கு தக்க படி சிங்கம் கர்ஜிக்கும் மயில் அகவும் போல் கர்ம பல அனுபவம் தான் கார்யம்
வேறாக இருப்பது -பாப புண்ய உபய பல அனுபவம்–தேசிகன்-புண்யம் பலனாக சுகம் அனுபவிக்கலாம் நம்பி சம்சாரத்தில் இருக்கிறோம்-
அடி மேல் அடி விழுந்தால் போக முயல்வோம்
சரண் அடைவது அடுத்த பிறவியில் மோசமாக இருப்போம் என்கிற பயம் தான் வைராக்கியம்காரணம் இல்லை-
காரியமும் -பல வகை பட்டு இருக்கும்..எழுதி வைத்தது போல் மாறி மாறி நடப்பது -பலம் ஒன்றில் கண் வைக்காமல் ஆத்மா உஜ்ஜீவனம் ஒன்றே குறியாக கடாஷம் அருளும் ஆச்சார்யர் ஆச்ரயிக்கா விடில் ஈஸ்வரன் கோபம் அடைந்து சம்சாரம் தொடர்கிறது–தாழ்ந்த பலத்தில் கருத்து இல்லாதவர் ஆச்சார்யர் பேணாமை -விரும்பாமை –
அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம்-

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s