ஞான சாரம்-38/39/40-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்

தானே குருவாகி தன அருளால் –மானிடர்க்காய்
இந நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாள் இணையை
உன்னுவதே சால உறும் –38
ஞானங்களின் சாரம் –ஞான சாரம் -புத்தி தர்ம பூத ஞானம் -ஓன்று தான் -கண்ணால் அறிந்து கொள்ளும் ஞானம் காதால் கேட்டு அறியும் ஞானம் -அவர் அவர் தமது தமது அறிவு அறிவு வகை வகை–இவை அனைத்திலும்  சாரமான ஞானம் அருளுகிறார்-ஆச்சார்ய அபிமானமே உத்தாரம் என்பதே சாரம் -பகவான் திரு அடி பற்ற அருளுகிறார்- கை பிடித்து கார்யம் கொள்ளாமல் திரு அடி பிடித்து கார்யம் கொள்வதே ஆச்சார்யர் அபிமானம் – தேனார் கமலா கொழுநன் தானே வைகுந்தம் தரும் .இதே சொல்கள் கொண்டு மா முனிகள் அருளுகிறார்  –மா மகள்=பெரிய பிராட்டியார் கொழுநன்=வல்லபன் –மைத்துனன் பேர் பாட -கணவனே –சர்வாதிகன் தானே சர்வ அதிகத்வம் மேம் பட்டவன்- குரு= இருட்டை போக்குபவன் ஆக அவதரிக்கிறான் –மானிடர்க்காய்-சாஸ்திர வசம் பட்டவர் தான் மனிதர் –உபதேசித்தால் திருந்த யோக்யதை உள்ளவர் -வாசக பிரபாவம் போல் தானே வாசகன்–மனத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் ஆதரிப்பது போல் சேஷத்வம் கொண்டே ஆத்மாவை ஆதரிப்பார் –அவதாரமே சௌசீல்ய பிரகாசம் தானே -அவதரித்து விதுரர் கூனி போல்வாருக்கு காட்டி நம்மை ஆள் கொண்டானே -ஞானம் உள்ளவர் அனைவருக்கும் பகவத் அவதாரமான ஆச்சார்யர் திரு அடி-சேஷன்–சேஷி பூதர்– பாகவதர்கள் சேஷிகள் போக்கியம் -பயிலும் சுடர் ஒழி நெடுமாற்கு அடிமை– ஆச்சார்யர் சேஷன் சேஷி-அனுஷ்டித்து அவர் தம் ஆச்சர்யாராய் பற்றுவதால் இரண்டும் அறிந்தவர் -சொரூபத்துக்கு அனுகுனமான நெறி உபாயம் இது தான் -சரணா கதி விட -ஆச்சார்யர் அபிமானமே -யாதாத்ம்யம்-அறிந்து அறிந்து தேறி தேறி –பாகவத சேஷத்வம்பாகவத  பாரதந்த்ர்யம் அறிந்து -என்கிறார்..-ஆச்சார்யர் வைபவம் பகு விதமாக அருளி செய்கிறார் –புரிய வைக்கிறார்–ஞான விகாசம்–இவை எல்லாம் தகும் என்பதை அவரே பகவத் அவதாரம் என்னும் அத்தை பிரகாசிக்கிறார் இதில்–நிகமிகிறார் இத்தால்-சாரமான ஞானம்–தன ஓட்டை ச்பர்சத்தால் ஏப் பொழுதும் ஒக்க செவ்வி இருப்பதால் மது ஆர்ந்து இருக்கும் -போகஸ்த்னாம் -அவள் சம்பந்தத்தால் -அல்லி மலர் மகள் போக மயக்குகள்–அவள் ஸ்பர்ச்த்தாலே இவன் மலர்ந்து இருக்கிறான்-பூத்த நீள் கதம்பம் –விஷ மூச்சால் அனைத்தும் பட்டு போக -அமிர்த கலசம் சொட்டு விழுந்த ஸ்தானம் முதல் அர்த்தம்-கண்ணன் திரு அடி நேராக பட்டதால்-வினதை போல் ஆசீர்வதித்தாள் கௌசல்யை-கருடன் அருணன்-தேர் ஒட்டி கருடன் தேர் அனைத்து வாகனமும் இவர் அம்சம் தானே –பெண் அமுது அமர்ந்த திரு மார்பு– ஆரா அமுதன் –பத்மினி பத்ம தலயா –பத்மா தாமரையாள்-ஸ்ரீகி-பெரிய பிராட்டி ஆறு விதம் ஸ்ரேயதே ஸ்ரியதே– ஸ்ருனோதி ஸ்ராவாயதி — –ஸ்ருனாதி சரீனாதி செர்பிகிறார்–வெரி மாறாத பூவில் இருப்பாள் வினை தீர்பாள் -அவளுக்கு கொழுநன் -வல்லபன்-சர்வாதிகன்–வாலப்யம் இருந்தால் தான் சொன்ன சொல் செல்லுபடி ஆகும் உரிமையால் இல்லை -இத்தலை நம்மையும் அவனையும் திருத்துவாள் உபதேசத்தால் மீளாத பொழுது நம்மை அருளாலே திருத்தி–வாத்சல்யாதி ரேகம் -அவனை அழகாலே திருத்துவாள் வால்யாப்தி ரேகம்–தானே -நேராக -ஆவேச அவதாரம் இல்லை–சொரூபத்தால் ஸ்ரீ ராம கிருஷ்ணன் -இங்கு ஸ்ரிய பதி நேராக -ஆச்சர்யரும் பத்தினியும் —

அவரே -பராத்பரன் -பெரிய பிராட்டி கொழுநன்-அவதரிக்கிறான் இவர்களாக –பரம சுவாமி ரமா பதி-ரமா பதி -அபரமன்-மேம் பட்டவர் இல்லாதவர் இல்லை-அபரமா-பிராட்டி இல்லாது இருக்கிறவர்-அபரமனாக இருந்தவன் அபரமானாக தான் இருப்பான்-அம்மானை பின் தொடர்ந்த அம மான்-திரு இல்லா தேவரை தேவர் என்று சொல்ல மாட்டோமே ஹத்தி கிரி அத் திகிரி-பிரிக்கலாம் போல்–முராரி உரசி திரு மார்பில் உரசி குங்கும பூ செம்பளித்த மார்பு கொண்டவன்–பெரிய பிராட்டி வைபவம்-உ காரம் ஆச்சர்யரையும் பெரிய பிராட்டியையும் குறிக்கும் –அனந்யார்க்க சேஷத்வம் -இருவரும் புருஷ காரம் செய்பவர்–அபிராக்ருத ரூபம் மறைத்து கொண்டு மனுஷ்ய ரூபமாக ஆச்சர்யராக அவதாரம்–காளிங்கன் -குன்று எடுத்தும் அவனையே நம்ப வில்லையே -சர்வேஸ்வரன் அவதரிக்கிறான் என்று புரியாமல் இருக்கிறார்களே –பித்தளை தங்கம்- ஹாடகம் ஆக்க-பித்தலாட்டம்–அவஜானந்தி மூடாக — திருத்தி பணி கொள்வான்–முயல்கின்றேன் –கொடுத்ததுக்கு சமமாக திருப்பி க்ருதக்ஜை காட்ட முடியாது -ஞானி பிரியமாக இருக்கிறான்-நானும் காட்ட பார்கிறேன் அவனுக்கு சமமாக செய்ய முடிய வில்லை என்கிறான் கீதாசார்யன்-

-நிர்ஹெதுக கிருபையால் தான் ஆச்சார்யர் ஆக்க அவதாரம் -வரவேறு ஓன்று இல்லை வாழ்வு இனிகிறதே-நெறிஞ்சி முள் காடு மேய்ச்சல் நிலமாக மாற நினைத்ததும் சங்கல்பிததும் பிருந்தாவனம் -அக்லிஷ்ட கர்மான– ச்ரமம் இன்றி கார்யம் சாதிகிறவன்–கிலேசம் இன்றி செய்கிறான்–ஜகத் ஸ்ருஷ்ட்டி பண்ணுவதும் இதை மாற்றுவதும் சமம் தான் அவனுக்கு சர்வ சக்தன் –நம் மேல் ஒருங்கே பிரள வைத்தார்–சம்பந்தமே ஹேது-குற்றம் வாராது–குடல் துவக்குசம்பந்தம் –அவதாரம் சனத் குமரர் பிராட்டிக்கு இல்லை –மானிடர்க்கு பிரம்மா தொடக்கம் –கர்த்ருத்வம் ஆத்மாவுக்கு உண்டு-செய்விக்கிறார்-நியத கர்ம சாபம் படி அநியதகர்ம ஜீவாத்மாவே பண்ணுவது தான் -கர்த்தா -வேதம் செய்ய விதிகிறதே ஜீவாத்மாவை பார்த்து தானே -பகவானை விதிக்காதே சத்யமேபேசு தர்மமே பண்ணு—ஆச்சார்ய அனவதய -கர்ம -ஏர் புடைய கர்மம் பின் பற்று நோ இதராணி மற்றவை செய்ய கூடாது -கிரியாதேயம் –போன்றவை விதிக்கும்–நாம் தான் கர்த்தா என்றால் நாமே கர்த்தா என்று எ காரம் சேர்த்து பகவான் எதற்கு -பரார் து –நீயும் கர்த்தா என்றது–இந்த இரண்டு சூதரம் எல்லாம் விளக்கும் -ஐந்து பேரும் உண்டு — பராத்மா ஜீவாத்மா சரீரம் பிராணன்  புலன்கள் –அவன் பிரதானம் -கர்த்துத்வ தியாகம் வேண்டும்–குதிரை நாம் கடிவாளம் -குண கலவை சாரதி பகவான் –ஸ்வதந்திர கர்த்தா இல்லை- தன இச்சை படி ஏவ மாட்டான் நம் கர்மா படி ஏவுகிறான் –கர்மாதீனம் -கர்த்துத்வ தியாகம் செய்து -சரண் அடைந்து செய்யும் செயலுக்கு பலன் கேட்காமல் -அனுகூல-பிரதி கூல வர்ஜனம்-சரணம்  சொன்ன பின் பு அனைத்தையும் ஏற்று கொள்கிறான் பொறுப்பை- இதற்க்கு பின் நம் இச்சை படி செய்ய கொடாது –ஒருவரை-புண்ய ஆத்மா குள் ஒருவரை- தேர்ந்து எடுத்து மதி நலம் அருளி-ஆழ்வாராக ஆக்குகிறான்-நிர்ஹெதுகம்–உபதேசம் கொண்டு திருந்த யோக்யதை-மனிச ஜாதி ஒன்றே -பிரஜை விழுந்த கிணற்றில் ஒக்க விழுந்த தாய் போல் குதித்து-சம்சாரத்தில் அவதரித்து -சம்சார மக்னராய் கிடக்கும் இந நிலத்தில் -ஆச்சார்யர் அனைவரும் பிடிக்க லாம் படி-ஸ்திரீகளும்  நான்கு வர்ணம் -வானத்தவருக்கும் …அல்லாதவருக்கும் ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –போல்-பிராப்யம் பிராபகம் அவர் தாள் இணை உன்னுவதே -ஏ காரம் இதை விட வேறு ஒன்றும் வேண்டாம் சொரூபம் அனுரூபமான உபாயம் –

ஸாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநும்
மக் நாநுத் தரதே லோகான் காருன்யாத்சாச்த்ரா பாணினா
தஸ்மாத் பக்திர் குரவ் கார்யா சம்சார பய பீ ருணா
ஜயாக்ய சம்ஹிதையில் சாண்டில்யன் சொன்னது
அலகை முலை சுவைத்தார்க்கு அன்பர் அடிக்கு அன்பர்

திலதம் எனத் திரிவார் தம்மை –உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாது அவர்  இவரை
போற்றிலது புன்மையே யாம் –39
தூற்றுதலே புகழ் –ஆச்சார்யர் அபிமானமே உத்தாரம் என்று இருப்பவரை—நல்ல நடத்தையை பார்த்து புகழ்ந்தால் இகழ்ச்சி-
அபாகவதரை உள்ளே விட வேண்டி -பாகவதர் உள்ளே போக -அவன் வாயால் பாகவதர் சொன்னதை மகிழ்ந்தாரே -அலகை பேய்ச்சி பூதனை-சுவைதார்க்கு -தன்னை நோக்கி  தந்தவன் பக்கல் -தன்னை ரஷித்து கொண்டவன்–அன்பர்களுக்கு அன்பன்–அன்பன் தன்னை அடைந்தார் களுக்கு எல்லாம் அன்பன்– திரிவாரை பழி தூற்றில்–வரனாச்ராம தர்மம் பாக்காமல்  அனைவரயும் பாகவதர் என்று இருக்கும் இவரை நிந்திக்கில் ஸ்துதியாகும்–
குண பிரகாசம் இது –தூற்றாது இவரை நல்லவர் என்று –பகவானை பற்றாமல் ஆச்சார்யர் பற்றி இருப்பவரை –இரண்டாம் நிலை வசவு -உலக இன்பம் ஆழ்ந்து -விட்டு பகவத் அனுபவம் போகிறவரை இகழ்வார் போல்–முதல் நிலை வசவு..தத் விஷயம் விட ததீய விஷயம் ஏற்றம்-ததி ஆராதனம்–பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி-சுவைத்து -பிராணன் போல்-தனக்கு என்று வந்த எல்லாம் அனந்யார்ஹத்வம்—பால் உடன் பிராணன் -பிராணன் சகிதமாக சுவைத்தான் -மிக இனிமையாக விட பால் அமுதா அமுது செய்திட்ட மாயன்–அதையே அமுதமாக்கி கொண்டு -இதனால் -இந்த செயலுக்கு தோற்ற -உன்னை காத்து கொண்ட இந்த செயலுக்கு தோற்ற பக்தர்-அன்பு கொண்ட பக்தர் –ரசிக்கும் குழு ஒவ் ஒரு செஷ்டிதங்களுக்கும் –எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்..அமர்ந்த நின்ற சயனித்த பெருமாளுக்கு ஆதரவு–லோகத்துக்கு இவர் திலகம் என்று மகாத்மாக்கள் கொண்டாடுவார்- அன்பர் அன்பர் அடி கோஷ்டிக்கு இவர்கள் திலகம் –என்றும் கொள்ளலாம் –அனந்தாழ்வான் நோவு சாதிக்க பெருமாள் ஆள் இட்டு அந்தி தொழுவார் இல்லை என்றாராம் புறப்பாடு கண்டு அருளி வர -ஸ்ரீ வைஷ்ணவர் வந்து இருந்தால் வர வேற்று இருப்பேன் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்

ஓர் இருவர் உண்டாகில்—எல்லாருக்கும் உண்டாகாதது அது -அப்படி பட்ட ஒருவரை இகழ்வது புகழ்வே–தூற்றாமல் போற்றில் -லோக சங்கர கத்துக்கு  ஆசாரம் அனுஷ்டிக்கும் பொழுது -முன்னோடியாக பண்ணுவதை-புகழ்ந்தால்-நல்ல ஆசார சீலன் -என்பதை கொண்டாட்டம் இகழ்ச்சி என்கிறார் —அது இந்த அதிகாரத்துக்கு சேராது பாகவத அபிமானத்தில் இருப்பவரை-
நிச வித்தைக நிஷ்டானாம் வைஷ்ணவானாம் மகாத்மனனாம்
ப்ராக்ருதாபி ஷ்டுநிர் நிந்தா நிந்தா ஸ்துதிரிதி ஸ்ம்ருதா
அல்லி மலர் பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர்
சொல்லும் அவிடு ச்ருதியாம்–நல்ல
படியாம் மநு நூலுக்கு அவர்  சரிதை பார்வை
செடியார் வினை தொகைக்கு தீ –40
பெரிய பிராட்டியார் விஷயத்தில் பிரேம யுக்தனாய் இருக்கும் சர்வேஸ்வரன்-அடிக்கு அன்பர்-பிரேம யுக்தராய் இருக்கும் அன்பர் அவிடு-விநோதமாக சொன்ன திண்ணை வார்த்தை-கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்து -சாஸ்திர அர்த்தம் ஆகும் -திண்ணை பேச்சு-அன்பர்கள் பேசினால் எதுவானும் சாஸ்திர அர்த்தம் ஆகும்–

அவர்கள் அனுஷ்டானம் மநு நூலுக்கு மூலம் ஆக் இருக்கும்-இவர்கள் பார்த்து மநு எழுதி தர்ம சாஸ்திரம் என்றாராம்-ஆதாரம் -ஆக் இருக்கும் – இவர்கள் கடாஷம் கர்ம சமூகத்துக்கு தீ போல் இருக்குமாம்
நாட்டாருக்கு புரியாமல் பழிப்பார்கள்-பிரத பர்வதுக்கும் ஒக்கும் –உக்தி பேச்சு விருத்தி செய்கை கடாஷம் மூன்றும் சொல்கிறார்-பாகவத பக்தன்-பற்றி சொன்னவர் இதில் -பக்த பக்தன்-சொன்னது -பக்த பக்தனுக்கு சொன்ன குறை இதற்கும் உண்டு–கோல மலர் பாவைக்கு அன்பாகிய -இதுவே சொரூப நிரூபகம் -பிரேமமே நிரூபகம் ஆக கொண்ட பக்தர்–சொல்லும் சொல்லே– சொல்லும் அவிடு ஸ்மிர்த்தி-அபுருஷமாய் நித்ய நிர் தோஷமாய் ஆப்த தமமாய் இருக்கும் –அவர்கள் வாழ்வில் அனுஷ்டிக்கும் -குரு பரம்பரை முக்கியம்–தர்ம சாஸ்திரம் மநு தர்ம சாஸ்திரம் ஏற்றம்–வேதங்களில் புருஷ சுக்தம் போலேயும்-பாரதத்தில் கீதை போலேயும்  புராணங்களில் விஷ்ணு புராணம் போல்–இத்தை கொண்டே இது சொலிற்று என்னும் படி மூலமாக இருக்கும் -படி தன்னை கொண்டு பிரதி கொள்ளும் படி இருக்கும்..படி எடுக்கலாம் படி பெருமை–கடாஷம் தூறு மண்டி இருக்கும் கர்மம்-நிஸ் சேஷமாக போக்கும் -வேத சாஸ்திர ரதம் ஒட்டி-ஞானம் வாள் -விளையாட்டாக சொன்னவை

வேத சாஸ்த்ர ரதா ரூடா ஞான கட்க தராத் விஜா I
க்ரீடார்த்த மபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம பரமோ மத :II
வாசு தேவம்   பிரபன்னாம் யான்யேவ சரிதானி வை I
தான்யேவ தர்ம சாஸ்த்ராணீ த் யேவம்  வேத விதோ விது ஈ
 ந ஸூத் த்யதி ததா ஜந்துஸ் தீர்த்த வாரி சதைரபி I
லீலா யைவ யதா பூப வைஷ்ணவானாம் ஹி வீஷணை II
இதிகாச புராண வசனங்கள் பிரமாணங்கள்

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s