என்றும் அனைத்து உயர் க்கும் ஈரம் செய் நாரணனும்
அன்றும் தன் ஆரியன் பால் அன்பு ஒழியில் –நின்ற
புனல் பிரிந்த பங்கயத்தை பொங்கு சுடர் வெய்யோன்
அனல் உமிழ்ந்து தான் உலர்த்தி அற்று –35
நின்ற புனல்-தாமரை பிறந்த முதல் தாரகமாக இருந்த –கப்யாசம் தண்ணீரை குடித்து தானே –தண்ணீரை விட்டால் அலர்த்தி விடுவான்-சிஷ்யன் ஞானத்தால் பிறந்த அன்று தொடங்கி ஞான ஜன்மம் எடுத்த நாள் முதல் ஆச்சார்யர் தான் தாரகம்-பொங்கு சுடர்-நிக்ரகிக்கும் இடத்தில் சூடு பொங்கி
தாபம் குறைக்க மாட்டான் -செம் தழலே –வந்து அழல செய்திடினும் செம் கமலம் -வெம் கதிருக்கு அன்று –விகாசம் ப[அண்ணி கொண்டே இருக்கும் சூர்யன்-அதே சூர்யன் அனல் உமிழ்ந்து தானே உலர்த்தி விடுவான் –அதே தாமரை சூர்யன்-ஆச்சர்ய சம்பந்தம் குலையாமல் இருக்கும் பொழுது அனுக்ரகம் செய்யும் -சொரூப விகாசம் செய்பவன்-ஆச்சர்ய சம்பந்தம் குலைந்ததும் நிகராக சீலனாய்–சீலதிலும் நிக்ரகம்-சீறி அருளாதே -அனைத்து குணங்களும் -தேவி சம்பத் ஆசூரி சம்பத் –விபத்து இல்லை -அசுரன் அபிப்ராயத்தால்–ஆத்மா சொரூபம் சந்கொசித்து–காலம் தாழ்த்தாது ஞான கை தருபவனே -குறுக வைப்பானாம் –
நாரயனோபி விக்ருதம் யாதி குரோபிரச்யுதச்ய துற புத்தே
கமலம் ஜலாத பேதம் சொஷயதி ரவிர ந தோஷ எதி
உதாசீனராக இருப்பவர்-கோபம் பட்டு நிக்ரகிறார் -எப்பொழுதும் குணவானாக இருப்பவர் இப்படி பண்ணுவது ஆச்சர்ய சம்பந்தம் இல்லாமல் போனதால் வில்லார் மணி கொழிக்கும் வேம்கட பொன் குன்ற முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதி கள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்து தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36
அர்ஜுனன் கைலாச யாத்ரை பாசுபத அஸ்தரம் -கண்ணனை பிரதஷினம் பண்ணி தானே வாங்கி கொண்டான்-சங்கை தீர புஷ்பம் கொண்டு திரு அடியில் இட மறு நாள் சிவன் முடியில் பார்த்தான்-நாரணன் பாத துழாயும் திரு முடி கொன்றை கலந்து இழி புனல் கங்கை–ராமானுஜர் பிரதஷினம் பண்ணி பூமி சுற்றி வர யாதவ பிரகாசர் பூமிக்கு அதிபதி ஸ்வாமி தானே சாபம் தீர்த்து கொண்டார்–அனைத்தும் தனக்கு வகுத்த இடமே- இன்று அவன் வந்து இருப்பிடம் மாயன் ராமானுசன் மனத்து -அவை தன்னோடும் இன்று இவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்தில் –தனி கடலே தனி உலகே விட்டு ஆழ்வார் உள்ளம் வந்தான்-கல்லும் கனை கடலும் புல் என்று ஒழிந்தன கொல்–அனைவரும் கொண்டு அமுதனார் இதயத்துள்ளே அவன் தனக்கு இன்புறவே –ஆச்சார்யர்
ஆச்சார்யர் திரு அடி தலையில் வைத்து -பஞ்ச பிராகார சாம்யம் –கொக்கு வாயும் படு கண்ணியமாக ஊமை ஐதீகம்சரணாகதி மானசம்–
கூரத் ஆழ்வான்-மயங்கி விழுந்தாரே ஊமை பெற்ற பேறை கண்டு—தேஜஸ் கொண்ட ரத்னம் -வில் வீசும் என்கின்றாளால் -வில்-தேஜஸ்- அருவிகள் புரட்டி கொண்டு வந்து திரு அடியில் சமர்பிக்குமாம் பொன் குன்றம் கெளரவம் தோற்ற -செல் மேகம் செறிந்து இருக்கும் பொழில் கள் சூழ்ந்த திரு பதிகள் -அக்ஞானம் ஆகிற அந்த காரம் போகும் படி- சிஷ்யன் சிரசில் நிர்கேதுக கிருபையால் தன் திரு அடியில் வைத்து அருளின அவரே -திவ்ய தேசங்கள் எல்லாம் அவர்—சதாச்ர்யனே அனைத்து திவ்ய தேசங்களும் என்று சத் சிஷ்யன் பிரேமை உடன் கொள்வான்–
சாத்யாந்தர நிவ்ருத்தி-பல சாதனா சிஸ்ருஷை –ஆதரவு –ஆர்த்தி –அனசூயை -ஐந்தும் உள்ளவன் சத் சிஷ்யன்–
சிந்தா மணிகள் பகர் அல்லை பகல் செய்யும் திரு வேம்கடம்-இரவும் பகல் ஆக்க வைக்கும் -அந்தி விளக்காம் மணி விளக்காம் –ஆர்தல் மிகுதி வில் தேஜஸ்-கானம் உடைய வேம்கடம் பல் மணி நீரோடு பொருது உருளும் தெளி குரல் அருவி வேம்கடம்–பொன் குன்றம்–திரு =தங்கம் சொர்ணம் அபிமான தேவதை அவள்-தென்னல் அருவி மணி பொன் முத்து அழைக்கும் திரு வேம்கடம்–தொடக்கமான செல் ஆர்-மேகம் படிந்து இருக்கும் – மேகம் அரித்து கொள்ள தங்கி அரிப்பை போக்கி கொண்டு போகும் மதி தவழும் குடுமி மால் இரும் சோலை —எல்லா திவ்ய தேசங்களும் ஆச்சார்யர் திரு அடிகளே
ஈர் இருபதாம் சோழம்-ஈர் ஒன்பதாம் பாண்டி -என்று சொல்ல வேண்டாம் —இரு தான் -இரண்டு தானே -இருந்தால் போதும் எங்கும் தேடி போக வேண்டாம் இவையே உபாய உபயமாக இருக்கலாம் –மருள் -அக்ஞானம் இருள்-அந்த காரம் -நன்கு போகும் படி மத்தகத்து -சிரசில் சிஷ்யன்-கேட்காமலே -கிருபையால் வைத்து அருளிய பெருமாள் ஸ்வாமி சொத்தை அனுபவிக்க தன் தாளை வைத்தார் அர்ச்சை சொன்னது பர வியூக விபவம் அனைத்தும் வகுத்த இடமே என்று இருக்க கடவன்–தேவு மற்று அறியேன்-வெறும் தரையாக இருந்த -பகவத் விஷய மழை பொழிய வைத்து –பிரார்த்தித்து சேர விட்டார் சம்சாரம் இருந்து தப்பு பண்ணி திருத்து சேஷி ஸ்வாமி போக்கின் சஜாதியனாக இருந்து திருத்துகிறார் -எனிவ குறுநா யஸ்ய ஞாசவித்யா ப்ரதீயதே
தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச
பொருளும் உயரும் உடம்பும் புகலும்
தெருளும் குணமும் செயலும் –அருள் புரிந்த
தன் ஆரியன் பொருட்டாச் சங்கற்பம் செய்பவர் நெஞ்சு
என் நாளும் மாலுக்கு இடம் -36
ஆச்சர்யனே எல்லாம் என்பவன் உள்ளத்தில் மால் இருக்கிறான்- ஆசார்யரே எல்லாம் என்று சங்கல்பிதவர் பால் இருக்க அவன் சங்கல்பித்து இருக்கிறான்–ஹஸ்தி கிரி நாதன் -அடியார் சிறு இடை வெளி கொண்ட தகரம் புண்டரீகத்தில் இருக்கிறான்–இதில் ஆசையா –தாமரை மலரில் -ஆசன தாமரை-இதில் ஆசையா-வேதாந்தம் மேல் இருப்பது ஆசையா -சடாரி நம் ஆழ்வார் திரு முடியில் இருப்பது ஆசையா வேல மழை மேல் இருப்பதில் ஆசையா -மயிர் கூச்சம் -போல் நாளம்–சிலிர்த்து நிற்கின்ற இடம் கூரத் ஆழ்வான்-கேட்ட கேள்விக்கு இங்கு பதில் பக்தன் திரு உள்ளத்தில் இருப்பதில் ஆசை-ஆச்சர்யரே எல்லாம் என்கிற பக்தன்– கரிய கோல திரு உரு காண்பன் என்கிறார் மதுர கவி ஆழ்வார்-ஆழ்வார் பின்னல் போகிறவனுக்கு கெஞ்சி சேவை சாதிக்கிறார் பிடிவாதமாக காட்டி/ஆழ்வார் திரு உள்ளம் மகிழ கும்பிடு சொன்னோம்—தொனடனுக்கு அடியார் தம் அடியேனுக்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் பக்த பக்தனுக்கு பிரீதி அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே —-புகல்-கிருகமும் /குணமும் சம தம குணம் -அனைத்தும் அங்கீகரித்து அருளின -ஆச்சார்யர் -என் நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ என்று ஆச்சார்யர் பொருட்டாகா சங்கல்பித்து இருக்கும் அவர்கள் நெஞ்சகம் அவன் ஆனந்தமாக வசிக்கிறான் -சர்வ காலமும் வாசச்தாலம் அவனுக்கு இது தான் -வடுக நம்பி தன் நிலையை எனக்கு அருள்வாய்-ஆந்திர பூர்ணர் –அனைத்தையும் அவனுக்கு சேஷமாக சங்கல்பித்து இருக்கும் நெஞ்சு சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கும் இடம்
இளம் கோவில் கை விடேல் என்று இவர் பிராத்திக்க இங்கு இருக்கிறான்–பிரதம பரிக்ரகதுக்கு செங்கல் கூறை வைப்பது போல் அன்பாகிய என் அன்பேயோ–பராங்குச நாயகி தர்ம தரமி ஐக்கியம் அபிமத விஷயம்-அந்தரங்க அனுபவம் இவருக்கு –அனைத்தும் ஆச்சர்யர் அடிமை என்ற நினைவு வேண்டும் ஸ்ரீ ரெங்க விமானம் பாஷ்யம் -சேஷி அறிவது திரு அரங்கத்தில் -சட கோப வாக் திரு மேனியில் நீங்காமல் சேவை சாதிக்கிறார் –தெருளும் ஞானமும் செயலும் பிரவர்த்தி மாதா பிதா வகுளாபிரமம் உரு பேரு செல்வமும் -அனைத்தும் திரு வாய் மொழி தான் ராமானுஜருக்கு –சங்கல்பம் செய்பவர் நெஞ்சு உறுதி கொள்பவன்- தேவு மற்று அறியன் இருக்க பெருமாள் இருப்பிடம் மற்று அறியன் என்கிறான் சரீரம் வசூ விக்ஜானம் வாச கர்ம குணா நசூன்
குர்வர்தம் தாரேன் யஸ்து ச சிஷ்யோ நெதராஸ் சம்ருத
குர்வர்தம் சவாத்மான பும்ச க்ருதக்ஜச்ய மகாத்மான
சுப்ர சன்னஸ் சதா விஷ்ணுர் ஹ்ருதி தஸ்ய விராஜதே
ஜய சம்ஹிதையில் ஸ்ரீ வராக நாயனார் அருளி செய்தது-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
%d bloggers like this:
Leave a Reply