நெறி அறியாதாரும் அறிந்தவர் பால் சென்று
செறிதல் செய்யா தீ மனத்தர் தாமும் –இறை வுரையைத்
தேறா தவறும் திரு மடந்தை கோன் உலகத்
தேறார் இடர் அழுந்துவார் –27
தத்வ ஞானம் மோஷம் கொடுக்கும் -இல்லை என்றால் சம்சாரம் –நெறி =உபாயம் அறியாதவர் -தக்க நெறி -உபாயம்-
உஜீவனதுக்கு உபாயம் அறிந்தவர் பக்கல் சென்று -செறிதல் -வணக்கம் திரு அடி வருடி கைங்கர்யம் சிச்ருஷை செய்யாதவர்-துஷ்ட ஹிருதயம் படைத்தவர்
இறை உரையை சரம ச்லோஹா அர்த்தம்புரிந்து மகா விசுவாசம் இல்லாதவர் –
மூவரும் ஸ்ரீ வைகுண்டம் சேராமல் சம்சாரத்தில் அழுந்தி கிடப்பார்கள்
ஜீவனம் இவ் உலக வாழ்வு உஜ்ஜீவனம் -அங்கு உள்ள இருப்பு -தங்களுக்கும் தெரியாமல் சொன்னாலும் புரியாமல் -சரம ஸ்லோக அர்த்தம் விச்வசிக்காமல்-துக்க சாகரத்தில் மகனர் ஆவார் –உபாயம் அன்வயம் இல்லை மூ வகையாலும்
சம்சாரம் தப்புவிக்க வழி- கர்ம ஞான பக்தி -பிர பத்தி –நான்கும்–பஞ்ச உபாய நிஷ்டர் அடுத்த வகை ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் -என்றும் அறியாமல்–அறியாதர்க்கு உய்ய புகும் ஆரும்–நம் ஆழ்வார் நால்வருக்கும் உபதேசம்-வீடு முன் முற்றவும் வீடு -மாலை நண்ணி – கமலா மலர் இட்டு -சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -போன்ற உபதேசம்-சொல்வார் வார்த்தையும் கேட்காமல்-உபாயம் அவன் அருகில் கூட்டி செல்லும் வழி–ஆழ்வார் இடம் கேட்டு திருந்தினார் பொலிக பொலிக பொலிக -அருளினார் ச்வேப தீப வாசிகளுக்கு பல்லாண்டு திரு மாலை ஆண்டான்நிர்வாகம் -திரு குருகூர் வாசி -நிற்க பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் போல்வாருக்கு எம்பெருமானார்.நிர்வாகம்—ஞானிகள் தத்வ தர்சினிகள் — கேள்வி கேட்டு நமஸ்கரித்து சேவை கைங்கர்யம் பண்ணி உபதேசம்-மோகித்து இருந்த பொழுது திரு மேனி காத்தது சேவை பட்டோலை கொண்டது சேவை சங்க பலகை வைத்து ஏற்றம் எண் திசையும் அறிய இயம்புவேன் —நாத முனிகளும் பெற்றார் கேள்வியும் கேட்டு -மாறன் உரை வளர்த்த சேவை தாளம் இசை கூட்டி வேத சாம்யம் சாதித்து –பரிச்பிரச்னம் -பக்க வாட்டில் இருந்து கேட்கணும் கடாஷம் பெற்று அப்ராதனம் விஷயம் அறிந்து கொள்ள பரிட்சை பண்ண இல்லை புரியும் வரை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் பக்தி உண்டானால் மோஷம்-நம சங்கீர்த்தனம் சப்தாகம் கேட்பார்கள் நாள் முழுவதும்–மனசு தெளிய தான் பகவத் விஷயம் கேட்பது –பிரநிபாதம் அபிவாதம் பரிபிரசனம் சேவை-செய்து -சஜாதி புத்தியால் அவர்கள் பக்கல் தோஷம் கண்டு –யாதானும் பற்றி நீங்கும் விரதம்-துஷ்ட ஹிருதயம்– ஆற்றம் கரை கிடக்கும் –கடல் கிடக்கும் மன்னன் உரை இருக்கும் உள்ளம்-திரு மழிசை ஆழ்வார் – சேயன் அனியன் –துவரை கோன் அன்று ஓதிய வாக்கு – தனை கல்லார் ஏது இலராம் —அர்ஜுனனை உத்தேசித்து வியாஜ்யம் அனைவரும் உஜ்ஜீவிக்க அருளிய வார்த்தை ஷத்ரிய தர்மம் மட்டும் சொல்ல வில்லையே -சோக படாதே -விதி வார்த்தை இது–ஆணை இட்டாலும் சோக பட்டால் விசுவாசம் இல்லை–சத்ய வாக்யன் மலை அளவு பாபமும் கடுகு அளவு தான் சர்வ சக்தன் –தர்ம தியாகம்/அவனை பற்றுவதில்/ உபாய /புத்தி -இப் படி ஒவ் ஒரு சப்தம் உடன் சேர்த்து -விச்வசிக்க வேண்டும்..-திரு மடந்தை கோன் உலகம்-அவள் உலகம்-ஸ்ரீ வைகுண்டம்-திரு மால் இரும் சோலை மலையே திரு பாற் கடலே எண் தலையே —திரு மால் வைகுந்தம் -இருவருக்கும் பொது –இடரில் அழுந்துவார் -மாதரார் – வலை உள் பட்டு அழுந்துவார் கிலேச பாஜனம்–சம்சயம் கொண்டால் அக்ஜச்ய அசரத்தை ச்தானச்ய சம்சயாது கீதை வாக்கியம் ஒட்டி இந்த பாசுரம்-ந பர ந சுகம் –
சரணா கதி மற்று ஓர் சாதனத்தை பற்றில்
அரண் ஆகாது அஞ்சனை தன சேயை –முரண் அழிய
கட்டியது வேர் ஓர் கயிறு கொண்டு ஆர்ப்பதன் முன்
விட்ட படை போல் விடும் -28
சணப்பானார் கண்ட ப்ரக்மாஸ்த்ரம் போல் –மகா விசுவாசம் கொண்டு அகிஞ்சன அதிகாரி யால் அனுஷ்டிக்க படுவது -வேறு ஒரு சாதனமாக பேற்றுக்கு உபாயமாக பற்றினால் ரஷகம் ஆகாது –நழுவி போகும்..முரண்=மிடுக்கு பலன்-இந்த்ரஜித் கட்ட பட்டு–கட்டுகையில் தொடங்கிய உடனே போனதே போல் –அடிப்படை நிதர்சன உண்மைகள் –விசுவாசம் ஏற்பட்ட அருளாள பெருமாள் எம்பெருமானார் போல் இருக்க வேண்டும்..அநந்ய சாத்தியம் -மகா விசுவாசம் பூர்வகம் ததேவ உபாயம் பிரார்த்தனா ரூபகமான நம்பிக்கை தான் பிர பத்தி தானே சரணா கதி -புத்தி விசேஷம் தானே இது உறுதி உபாயம் இல்லை அவனே உபாயம் என்ற வேண்டு கோளை உள் அடக்கி கொண்டு இருப்பது தான் –உறுதி மட்டும் போதாது வேண்டு கோளும் வேண்டும் –அகிஞ்சனன் அகதி பிரார்த்தனா மதி சரணா கதி..–ஐந்தும் வேண்டும் அபராத சக்ரவர்த்தி /வேறு புகழ் இல்லை/வேறு உபாயம் இல்லாதவன் /நீயே உபாயம் உறுதி கொண்டவன் /நீயே உபாயம் என்று வேண்டி கொள்கிறேன்–அமோகம்– குற்றம் இன்றி நழுவாமல் கார்யம் பண்ணும்.இந்த ஐந்தும் இருந்தால் -ஆர்தனுக்கு சடக் என்று கொடுக்கும் சுனை கேடன் கண்ணன் சுனை அதிகம் ராமன் ஆசாரம் சீதை பிராட்டி புடவை தலைப்பு பட்டது போல் கனவு கண்டாலும் சரயு நதியில் தீர்த்தம் ஆடுவான் இணை அடிகள் துணை அடிகள் -ஓன்று உபாயம் ஓன்று பிராப்யம் வேறு ஒன்றை சகியாது .–நிர்கேதுகம் குடல் துவக்கு அடியாக சரண் என்று நீ கற்று கொடுத்த வார்த்தை சொல்லி பெற்று போவோ–உபாயான்தரம் இரண்டையும் பொறுக்கும் — உபாயம் -ஈஸ்வரன் -தன்னை பொறுக்கும் இதி பிர பத்தி இரண்டையும் பொறுக்காது –தன்னோடு சேர்ந்த சேதனன் -தன வைபவம் அறிந்து -பேரு தப்பாது என்று துணிந்து –விச்வசித்து இருக்காமால் துணைக்கு வேறு ஒன்றை செய்ய நினைத்தால் /காம தேவன் காலில் விழுந்தது பிராப்யம் துரையால் செய்தாள் –உபாய புத்தி இல்லை–சு யத்தன ரூப உபாயங்களில் அன்வயம் இன்றி –அவன் உபாயம் /நம் பிராப்யம் அன்வயம் இருக்கலாம்/கைங்கர்யம்-உபாயம் ரூபம் இன்றி அவன் ஆனந்தத்துக்கு சு எத்தனம் ஆக இருக்கலாம் –தெப்ப கையர்-இரண்டையும் பிடித்து -விட்டத்தில் இருந்து கடல் வருவதை பார்த்து இருப்பது போல் இருக்க வேண்டும்.. விட்ட படை போல் -விட்ட ப்ரக்மாஸ்த்ரம் போல் விட்டு போகும்..சாம-நல்லவர்கள் இல்லை-சொல்லி திருத்த முடியாது – தான திரு அடி மதித்த ஐஸ்வர்யம்– பேத குழாங்கள் பேர் அரக்கர் குழாம் வீழ -அதனால் தண்டம் எடுத்தார்
-தர்மம் அனைத்தையும் விட்டு விட்டு அவனை பற்ற சொன்னான் –சவாசனமாக லஜ்ஜை உடன் விட்டு பரித்யஜ்ய —
ஈஸ்வரன் புருஷ கார சாபேஷமாய் புருஷ சாபேஷமாய் இருக்கும் -அதிகாரி வேண்டுமே –உபாயாந்தரம் எதிர் பார்க்க மாட்டார்
அவளை முன் இட்டு பண்ணினால்-உபாயமாக இல்லை–புருஷ காரம்- கோபம் தணிக்க -கொடுக்க வல்லவனாக குற்றம் மறக்க வைத்து சேர வைக்கிறாள் –சாகி சர்வத்ர சர்வருக்கும் சர்வ பல பிரதம் சக்ருதேவ உச்சரித்தால் சம்சாரம் நாசம் ஆகும் —
மந்திரமும் ஈந்த குருவும் அம் மந்திரத்தால்
சிந்தனை செய்கின்ற திரு மாலும் –நந்த லிலா
தென்றும் அருள் புரிவர் யாவர் அவர் இடரை
வென்று கடிது அடைவர் வீடு –29
திரு மந்த்ரம் அருளிய ஆச்சார்யர் வைபவம் -அர்த்த பஞ்சக ஞானம் இதுவே அருளி அவன் இடம் சேர்க்கும்
சரணாகதி உரைக்க வல்ல -அனுசந்திப்பவரை காக்கும் திரு மந்த்ரமும் ஆச்சர்யரும் திரு மாலும் —நந்தல் -இடை விடாமல்-சர்வ காலமும் பிரசாதம் பண்ணுகைக்கு விஷய பூதர் –சம்சார துக்கம் ஜெயத்து சீக்கிரம் மோஷம் அருளுவார்-
மந்திர –குரு -மந்திர பிரதான் -அவன் -மந்திர விஷயம் -மூவர் அனுக்ரகம் சர்வ காலமும் அருளி –
சம்சாரமே துக்கம்- சம்சாரத்தில் துக்கம் -துக்கமே சம்சாரம்-வாழ்வில் கஷ்டம் கஷ்டமே வாழ்வு போல்-
மந்திரத்தை மந்தரத்தால் மறவாது -நினைப்பவரை இருவரும் ரஷிப்பார்மந்த்ரம் கொடுப்பவர் -குரு மந்த்ரார்தம் கொடுப்பவரும் –இரட்டை சம்பாவனை -திரு நறையூர் திரு கண்ண புரம் –100 பாசுரங்கள் அருளி –உத்தார ஆச்சார்யர் அர்த்தம் அருளியவர் –உபகார ஆச்சார்யர் மந்த்ரம் அருளியவர்–மந்திர விஷயம் ஸ்ரிய பதி-திரு மால் தானே சொல்ல படுகிறார்–சிந்தை செய்கின்ற திரு மால்-மிதுனமே உத்தேசம்– நந்துதல் =கேடாய்-குறைதல் அது இல்லாத விச்சேதம் இல்லாமல் இருக்கும் – நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாராயணன் –சர்வ காலமும் பிரசாதம் பெற்று கொள்ளும் சிலர்-ஆச்சர்ய சம்பந்தம் பகவான் அருள – திரு மந்திர ஞானம் அவர் கொடுக்க -அர்த்த பஞ்சக ஞானம் இது அருள –சம்சார கிலேச பாஜனம் அவிவிவேக திக் பிரமம்-காடு பாலை வனம் -பகுத்து அறிவு-பற்றுதல் எது விடுவது எது என்று அறிந்து –துக்க வர்ஷணி இருட்டும் மழையும் காடில் போகும் பொழுது -பரம புருஷார்த்தம் அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் —
ச பிரதம சாதனம்-திரு மந்த்ரம் அதற்க்கு உள் ஈடான வஸ்து -தெய்வாதீனம் ஜகத் சர்வம் அந்த தெய்வம் மந்திர ஆதீனம் அந்த மந்த்ரம் ஆச்சர்ய ஆதீனம் பிரம்மா ஞானம் உள்ளவர் –அதனால் ஆச்சரயரே உத்தாரம் மாதா தேவோ பவ பிதா தேவோ பவகுரு தேவோ பவ அதிதி தேவோ பவ -பிரமாணம் இருந்தால் தான் பிரமேய அனுபவம் தேவு மற்று அறியேன் -திருப்த பிர பின்னர் சரீரம் முடியும் -ஆர்த்த பிர பின்னர் -சடக்கு என்று -கொடுத்து அருள்வான்
மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் –பீடு உடைய
எட்டு எழுத்தும் தந்தவனே என்று இராதார் உறவை
விட்டு இடுகை கண்டீர் விதி -30
ஓர் இருவர் உண்டாகில் –எல்லாருக்கும் அண்டாதது அது
–மாடும்-பால் முதலானவைகொடுக்கும் பசு
/மனை போக ஸ்தானம் கிரகம்/
கிளையும் சக வாச யோக்யர் ஆன பந்துகள்/வாழ்தலே இல்லை சக வாச யோக்யதை இல்லா பந்துகள்-
மறை முனிவர் தேடும் வைதிக முனிவர் ரிஷி விரும்பி தேடும் ஸ்ரீ வைகுண்ட மோஷமும்-யோர் வீடு-தாழ்ந்த வீடு -கைவல்யம்
செந் நெறி-அர்ச்சிராதி கதி-
பீடு உடைய பெருமை உடைய சம்சாரம்போக்கும் பெருமை எட்டு எழுத்தை தந்தவனே –இவை இத்தனையும் சேர்ந்து ஆச்சர்யார் -என்று இராதார்
இவர்கள் உடன் உறவை விட்டு விட வேண்டும்
கற்பார் ராம பிரானை அல்லால் -எடுத்து கழிக்க கண்ணனை யே சொல்கிறார்
விதி சாஸ்திரம் விதித்தது —
கேட்பார்கள் கேசவனை அல்லால் மற்றும் கேட்பாரோ-ராமனை இங்கு -அவன் கொடுத்த அனுபவம் ஆழ்வாருக்கு -வித்யை உபாசனம் -கற்க -ராமனுக்கு ஏற்றம்– கண்ணன் பற்றி கேட்பதே இவருக்கு ஏற்றம் –சேஷடிதம் அறிந்தே மோஷம் பக்தியே ஞான விசேஷம் —
ஐகிகம்–தனக்கு அபெஷிக்கும் ஆசை படும் – மாடு மனை கிளை ஆமுஷ்மிகம் அவ் உலக இன்பம்–ஆச்சர்யனே
ஆச்சார்யர் நியமனம் படி இருக்க வேண்டும் -தூயதாக நெஞ்சினில் தோன்றினால் தேசாந்தரம் இருக்க முடியாது -எப் பொழுதும் அவர் நினைவு இருக்க வேண்டும்.நின்ற வன் கீர்த்தியும் -வைகுண்ட நாடும் -நிறை வேம்கட பொன் குன்றமோ அர்சைக்கு பிரதி நிதி -கல்லும் கனை கடலும் -அர்சைக்கு பிரதி நிதி .உன் தனக்கு எத்தனை இன்பம் தருமோ –அது போல் எனக்கு உன் இணை மலர் தாள் கள் -அமுதனார் இவர் திரு அடிகளே ஐந்தும் இவருக்கு –பாட்டு கேட்க்கும் இடமும்-கூப்பீடு கேட்கும் இடம் –குதித்த இடமும் –வளைத்த இடம் –ஒருவனை பிடிக்க ஊரை வளைப்பாரை போல் சீரார் திரு வேம்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் நான்கு பக்கமும் யானை-தென் ஆனாய் வட ஆனாய் –ஊட்டும் இடம் அந்தர் யாமி இரா மேடம் ஊட்டுவாரை போல் -எல்லாம் வகுத்த இடம் என்று இருக்க வேண்டும் –எல்லாம் இது கொடுக்கும் குலம் தரும் –அருளோடு பெரு நிலம் அளிக்கும் அம்பரமே தண்ணீரீ சோறே ஏ வகாரம் -கண்ணனை கொடு என்கிறாள் ஆண்டாள்- உண்ணும் சோறு பருகும் நீர் திண்ணும் வெற்றிலை எல்லாம் கண்ணனே இவளுக்கும் — அவனை எடுத்து கொடுக்க அம்பரமும் தண்ணீரும் சோறும் இவனே –
-பரம போக்யமான பால் கொடுக்கும் மாடு—என்பதால்
பரம போக்யமான திரு மந்த்ரம் கொடுக்கும் திரு மந்த்ரம்
பரம போக்யமான அவனை கொடுக்கும் திரு மந்த்ரம் -ஆத்ம உஜீவனம்
போகய வஸ்து கொடுப்பவர் ஆச்சார்யர்–போக்கியம் அனுபவிக்கும் ஸ்தானமும் அவரே –இனியது தனி அருந்தேல் கிளை–சக வாசிகள்-பகவத் விஷய சிந்தனை கொண்டவர்கள்-சம்சார விரக்தி கொண்டு-இவர்களும் ஆச்சார்யர் –ஐ கிக போகய வஸ்துகளின் உப லஷணம் இவை –
உயர் வீடும்–பகவத் மனன சீலர் -மறை கொண்டு-வைதிக -பிராப்யம் என்று விரும்பி தேடும் -கைவல்யம் இன்றி -ப்ரீதி கார்ய கைங்கர்யம் –உத்க்ருஷ்ட -எம்மா வீடு-திறமும் செப்பம்-எம்மை அனுபவிக்கும் மா வீடு ஸ்ரீ வைஷ்ணவமும் சொல்லாதே -உனக்கு ஆனந்தம் ஒன்றே குறிக் கோள் –நின் செம் மா பாத பறப்பு -பரத நம்பிக்கு பாதுகையும் அரசும் ஈந்து– இளையவர்க்கு அளித்த மௌலி அடியேனுக்கும் கவித்தி -அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் -செந் நெறியும் செம்மையான வழி அர்ச்சிராதி மார்க்கம்-உபாயமும் சொலிற்றாம்—இவையும் ஆச்சார்யர் தான்
சம்சாரம் வளர்த்து கொடுக்கும் -மந்த்ராந்தரம்-மந்த்ரத்துக்கு அந்தரம்-எதையோ கழிக்க வில்லை ராம மந்த்ரம்-புத்திர பலன்-கிருஷ்ண -கோபால மந்த்ரம் போல்வன செல்வம் பாக்கியம் போல்வன பெற -ஷுத்ர பலன்–ரகஸ்யம்-த்ரயம்-மட்டுமே பரம புருஷார்த்தம் கொடுக்கும் –வியாபக மந்த்ரங்களுக்கு தான் ஏற்றம்-சிறந்த பலன் கொடுக்கும் – சிஷ்யனுக்கு ஆச்சார்யர் திரு மேனியில் நோக்கம் திரு முகம் மலர -ஆச்சார்யர் சிஷ்யன் ஆத்ம யாத்ரை பற்றியே நோக்கம் –சிஷ்யன் பகவான் இடம் ஆச்சார்யர் ஆத்ம ரஷணம் பிரார்கித்து கொண்டும்-ஆசார்யர் சிஷ்யன் தேக ரஷணதுக்கு பிரார்த்தனை –நடுவில்- இருவரும் தம் தம் குற்றைத்தை ஷமிப்பிக்க -இருவரும் ஆச்சார்யர் மூலம் தான்-விபீஷணன் சுக்ரீவன் மூலம் செல்ல சுக்ரீவன் விட்டே கூட்டி வர சொன்னார் பெருமாள்-அன் நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வது நம் குற்றம்- அவன் கர்மாதீனம் வர காத்து இருப்பான்
–இரண்டு பேருக்கும் குறை–அதனால் ஆச்சார்யர் மூலம்
சம்பந்தம் ஏற்பட தீய கந்தம் –விலகி இருக்க வேண்டும்–சாஸ்திரம் விதிக்கிறது இவர்கள் சம்பந்தம் விட –பிரமாணம் காட்டி அருளுகிறார் மா முனிகள்-
———————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
%d bloggers like this:
Leave a Reply