(செங்கயல் பாய் வயல் திருவரங்கா
நாரங்கள் வாழ -அது தாயார் பாசுரம்
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-
இங்கும் பொரு நீர் திருவரங்கா –
சங்குகளை ரஷிக்கும் காவேரி இருக்க -நீர் ரஷியாது இருக்கலாமோ
இது போல் முன்பு யாருக்குமே துன்பம் கொடுக்காமல்
கஜேந்திரன் திரௌபதி ப்ரஹ்லாதனன் போல்வார் அளவிலே விரைந்து வந்து ரஷித்தாய்
திருத்துழாய் நலிய நாம் இழப்போம்
நடுவு பிராப்தியே இல்லாத வாடையும் வந்து நலிய வேண்டுமோ
7-1-இந்திரியங்கள் நலிய -பெண் துன்பப்பட பட -தாயார் கேட்டது 7-2
இங்கு 27 -மகிழ்ந்து -இப்பொழுது 28-வியசனம்
நடுவிலே நடந்ததை-ஆச்சார்யர் வியாக்யானம் கொண்டு அறிய வேண்டும்
கீழ் உண்டான மானச அனுசந்தானம் இத்யாதிகள் )
அவதாரிகை-
கீழ் உண்டான மானச அனுசந்தானம் விஷய வைலஷண்யத்தாலே
அவ் வருகே ருசியை பிறப்பித்து
ருசியின் உடைய அதிசயத்தாலே
பாஹ்ய சம்ஸ்லேஷ அபேஷை பிறந்து ,
நினைத்த படி பரிமாற பொறாமையாலே விஸ்லேஷமாக தலைக் கட்டிற்று.
சம்ஸ்லேஷ தசையில் அனுகூலித்த-பதார்த்தங்களும் இப் பொழுது பிரதி கூலிக்க தொடங்கிற்று
தத் யாவக உபாயதே பிரசாதாய ஜாதயே — என்று
யாதோர் அளவிலே நிர்வாகன் ஆனவன் கோபித்தால் ,அவன் பரிகரமும் அப்படியே நிற்கும்
திரு வெக்காவின் நின்றும் பிரசாதம் வந்தது என்ற போது
வாடை காற்று குளிர்ந்து
அது தான் இப் பொழுது சுடத் தொடங்கிற்று
சோறும் கறியும் சமைத்த பின்பு இட பற்றாதால் போலே
திரு வெக்காவின் நின்றும் பிரசாதம் வந்தது என்ற அநந்தரத்திலே
உள்ளே புக்கு அணைக்க பெறாமையால் வந்த ஆற்றாமை-
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –28-
பாசுரம் -28-தண் அம் துழாய் வளை கொள்வது –
தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்துதல் –
கங்குலும் பகலும் -7-2-
பதவுரை
வள்வாய் அலகால்–கூர்மையான வாயின் நுனியினால்
புள்–பறவைகள்
நந்து உழாமே– (தன்னிடத்துள்ள) சங்கைக் கோர்த்தாதபடி-ஹிம்ஸியாதபடி –
பொரு–அலை மோதுகிற
வளை கொள்வது–(எமது) கை வளைகளைக் கொள்ளை கொள்ளா நின்றது
யாம்–(உன் பக்கல் ஈடுபட்ட) நாம்
இழப்போம்–வளையை இழக்கிறோம்; (இப்படி யிருக்க)
ஓர் வாடை–(எமக்கும் தனக்கும் யாதொரு ஸம்பந்தமு மில்லாத காற்றானது.
நடுவே–இடையே பிரவேசித்து
நீர்–காவிரி நீர் சூழ்ந்த
திரு அரங்கா–ஸ்ரீரங்கமென்னுந் திருப்பதியை யுடையவனே!
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய (உனது திருத்துழாயானது
வண்ணம் துழாவி உலாவும்–(எமது) மாமை நிறத்தைக் கவர்ந்த பொருட்டுத் தடவித் தேடிக் கொண்டு ஸஞ்சரிக்கத் தொடங்குகின்றது.
அருளாய்–(அதற்கு யாம் மாமை யிழக்காதபடி) வந்து சேர்ந்தருள வேணும்.
எண்ணம் துழாவும் இடத்து (மனம் தடுமாறு மளவிலும்)
பண்டும் இன்னன்ன உளவோ-முன்பும் இப்படிப்பட்ட (எம் நிலைமைகள் போன்ற) நிலைமைகள் (வேறு எங்கேனும்) உள்ளனவோ?
வியாக்யானம்-
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் —
இதில் சேதம் (விரோதம்)இல்லை
இது செய்யலாம்
திரு துழாய்க்கும் தனக்கும்
பாத்ய பாதக-சம்பந்தம் உண்டாகையாலே ,
திரு துழாய் அங்கு உற்ற அசாதாரண பரிகரம் ஆகையாலும்-
தனக்கு திருவடி களிலே சம்பந்தம் உண்டு ஆகையாலும்
பாத்ய பாதக பாவ சம்பந்தம் தனக்கு பாதகமே ஆகிலும்
திரு துழாயோடு ஒரு சம்பந்தம் உண்டாக அமையும் போலே காணும்
ராஜாக்கள் முனிந்தால்
அவன் பரிகரமும் எதிரி யாம் போலே
சர்வேஸ்வரன் நெகிழ்ந்த படியாலே-
அவன் உடைய அசாதாரண திரு துழாயும் நலிகிறது
(அந்தப்புரத்தில் உள்ளாரைத் தண்டிக்க அசாதாரண பரிகரம் வேண்டுமே )
நடுவே-
பாத்ய பாதக பாவ சம்பந்தம் இன்றியிலே இருக்க
நலிகிறது என்
விபூதி சாமான்யத்தாலே நலிகிறது அத்தனை
நாங்கள் குடி மக்கள் அல்லோம்
(அந்தப்புரம் சேர்ந்தவர்கள் அன்றோ )
நடுவே-
ஸ்வரூப பிரயுக்தம் அன்று —
ஔபாதிகம் என்றுமாம் (ஆகந்துகம் -வந்தேறி என்றபடி )
வாடையைச் சொல்லுகையாலே
பூதங்களில் பிரதானத்தை எடுத்து ,
பிரக்ருதிக்கு உபலஷணமாக சொல்லிற்று
பிரகிருதி பிரவாஹத்தாலே நித்தியமாய் இருக்க ,
இத்தை உபாதி என்னும் படி எங்கனே என்னில்
அந்தவத்தாகையாலே-ஆதி மத்தென்று கொள்ளுகிறோம்
முகத்தில் அழுக்கை கழுவினால் அவ் வழுக்கு போனதை கண்டு வந்தேறி என்று கொள்ளலாகா நின்றது
அழுக்கு இந்த நாள் தொடங்கி பற்றிற்று என்று அறிய வேண்டுவதில்லை என்று
(பிரகிருதி என்பது ஒரு நாள் முடியுமே
அந்தவத்து என்றாலே ஆதிமத்தாக இருக்க வேண்டுமே )
வண்ணம் துழாவி –
வருகிற போதே கண்ணால் கண்டாரை விழ விட்டு கொண்டு வாரா நின்றது-
கலந்து பெற்ற-நிறத்தை அழித்து கொண்டு வாரா நின்றது
ஓர் வாடை-
அத்வதீயன் –
தனி வீரன் என்றுமாம்
உலாவும் –
தனக்கு எதிரி இல்லாமையால் மத முதிதமான கஜம் பாகனை
விழ விட்டு உலாவுமா போலே-வாரா நிற்கும்
நிராஸ்ரய்மாய் நில்லாது என்று இந்நிறம் நிற்கும் ஆஸ்ரயத்தை கணிசித்து உலாவா நின்றது-
அசம்பாதமாக உலாவா நின்றது
(ஒளியைத் தான் கவர வந்தது
ஒளிக்கு ஆஸ்ரயமான இவள் தகிருமேனியையும் அழிக்கவே உலவா நின்றது )
இவள் உடைய அவசய அதிசயத்தை கண்ட திரு தாயார்
பெரிய பெருமாள் திரு அடிகளில் பொகட்டு-
நீ இங்கே கிடக்கிற கிடைக்கைக்கும்
இவள் சோகத்துக்கும் சேர்த்தி கண்டிலோம் –
(தலைவி ஏங்குகிற பாசுரம் தான் இது -தாயார் பாசுரம் இல்லை இங்கு )
வள்வாய் இத்யாதி —
ஒரு ஸ்திரீ குற்றம் செய்தாள் என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்து
இவளை ஹிம்சிக்க வேணும் என்ன-
புறம்புள்ள எல்லா வற்றையும் விட்டு ,
இவ் ஊரிலே உத்தேசய்மாய் இருக்கிற இவளை எத்தைச் சொல்லி
நாம் நசிவது என்று அருளிச் செய்தார்
வீர சுந்தரனோடே எம்பார் விரோதித்து இருக்க ,
அவ் ஊரில் உள்ளான் ஒருவன் அவனுடைய எதிரியாய் அவனுக்கு அஞ்சி ,
எம்பார் திரு அடிகளில் சரணம் புக ,
ஸ்ரீ பாதத்திலே வர்திக்கிறவர்கள் அவனுடன் பண்டே விரோதம் உண்டாய் இருக்கச் செய்தே
இவனையும் கைக் கொள்ளக் கடவதோ என்ன
நம்மை -சரணம்-என்று புகுந்தவனை நாம் கை கொண்டால்
சரணா கதி தர்மமே எல்லா வற்றையும் ரஷிக்க வல்லது காண் என்று அருளி செய்தார்-
வளைத்த வாய் அலகை உடைத்தான புள்ளானது , சங்கை ஹிம்சியாத படி
தன்னுடைய நீர் திரை ஆகிய கையாலே எதிரியோடு பொருது
சங்கை ரஷிக்கும் படியான ஊரிலே இருக்கிறவனே
பொரு நீர்-புள்ளானது ஆமிஷித்தை கணிசித்து நீர் கரையிலே இருக்க
சங்கானது நம்மை ஹிம்சிக்க போகிறது என்று அறியாது
என்னை நீர் நோக்க வேணும் என்று சொல்லாது இருக்க
தன் பக்கலிலே வர்த்திக்கும் இவற்றுக்காக
அவற்றின் எதிரியான புள்ளின் முகத்திலே
தன் திரை ஆகிய கையாலே யுத்தம் பண்ணி ,
உள்ளே போராய் என்று கையை பிடித்து கொண்டு போகா நின்றது –
இத்தால் செய்கிறது –
அசேதனமான நீரானது தன் பக்கலிலே வர்திக்கிறவற்றை இப்படியே நோக்கா நின்றால்
பரம சேதனரான தேவரீருக்கு இவள் திறத்து என் செய்ய வேண்டா என்கிறது
(பவத் விஷய வாஸிந என்பதையே கொண்டு சராசரங்களை நல்பாலுக்கு உய்த்தினாயே )
சுத்த சத்வ மயமான ஆத்மாவை
ஜடமான சம்சாரம் நலியாமே நோக்குகைக்கு அன்றோ
தேவரீர் இங்கு வந்து கிடக்கிறது
திரு அரங்கா அருளாய் —
அருளாய் என்ற பொழுது அருளக் கண்டிலர்
இப்படி அருளாது ஒழிவது என் என்னில் ,-
ஈஸ்வரன்
1-கரண களேபராதிகள் நமக்குத் தந்தோம் ஆகில்
2-பக்த்யாதி உபாயங்களை காட்டினோமாகில்
3-இதுக்கு அடியான பிரமாணங்களை காட்டினோம் ஆகில்
அவற்றை அனுஷ்டித்து நம்மை வந்து கிட்டுகிறீர் என்று ஆறி இருக்க —
சர்வஞ்ஞனாய்
சர்வ சக்தியான நீ இவற்றை எல்லாம் இங்கனே பண்ணினாய் அத்தனை அல்லது
வேறு பட பண்ணிற்று இல்லையே
நான் உண்டாய் இருக்க கிட்டும் படி என் என்கிறார்
(கூடவே பாரதந்தர்யத்தையும் காட்டி அருளினாய் அன்றோ
அருளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தேன் என்று அறிவிக்க வேணுமே )
(நான் உண்டாய் இருக்கும் படி கிட்டும் படி -அடைய
காட்டும்படி -உபாயாந்தரங்கள் பல நீ காட்டிப் படுப்பாயோ )
பகவத் விஷயத்தில் இதனை அவகாஹரான இவர் இத்தனை அஞ்சுவான் என் என்னில்
பகவத் பிரசாதம் அடியாக வந்த ஞானம் ஆகையாலே
த்யாஜ்ய பூர்வமாக பிராப்யத்தை காட்டிக் கொடு நின்றது
பிராப்யத்தில் ருசியும் மிகா நின்றது
ருசி அனுகுணமாக பிராப்தி அளவும் செல்லாமையாலே
அதுக்கு அடியான விரோதி தர்சனத்தை பண்ணி அஞ்சுகிறார்
சம்சாரத்தை பார்த்தால் பயப்பட வேணும்..
சர்வேஸ்வரனை பார்த்தால் பயம் கெட வேணும் ..
அவனைப் பார்த்துப் பயம் கெட்டிலன் ஆகில் பகவத் பிரபாவம் அறிந்திலனாம்–
சம்சாரம் பார்த்துப் பயப்படிலன் ஆகில் சம்ஸார ஸ்வாபம் அறிந்திலனாம் —
ஞான கார்யம் ஆவது
ஆகார த்ரயம் உண்டாகை–
(அநந்யார்ஹ சேஷத்வம் அநந்ய சரண்யாத்வம் அநந்ய போக்யத்வம் )
சம்சாரம்-மித்யை காண் என்னுதல்–
ஔபாதிகம் காண் என்னுதல்
ஜீவன் முக்தி காண் என்று சொல்லும் சூத்ரவாதிகளுக்கு அன்றோ இத்தை-
நினைத்தால் அஞ்சாது இருக்கல் ஆவது
(புத்த பாஸ்கர சங்கர )
பகவத் பிரபாவமும் அறிந்து ,
சம்ஸார ஸ்வபாவத்தையும் அறிந்து ,
சம்ஸார பய பீதனாய் இருப்பான்-ஒருவனைப் பெற்றால் அன்றோ
சர்வேஸ்வரனுக்கு மாஸூச என்னல் ஆவது —
இப்படி மாஸூச என்றால் அன்றோ
இவனுக்கு ஸ்திதோஸ்மி என்னாலாவது
(சித்த வேண்டா சிந்திப்பே அமையும்
உபாயாந்தரங்களில் போகாமல்
நிலை பெற்று நில்லுங்கோள்
பயமும் அபயமும் மாறி மாறிச் செல்லாமல் ஸ்திதோஸ்மி நிலை பெற்று இருங்கோள் )
சித்த வேண்டா சிந்திப்பே அமையும்
உபாயாந்தரங்களில் போகாமல்
நிலை பெற்று நில்லுங்கோள்
பயமும் அபயமும் மாறி மாறிச் செல்லாமல் நிலை பெற்று இருங்கோள்
திரு அரங்கா –
நீ இங்கு வந்து கிடக்கிறது
1-உன்னுடைய கர்ம பல அனுபவம் பண்ணவோ —
2-போக பூமி தேடியோ —
3-ஒரு குறைவாளர் இல்லையாமையோ —
4-ருசி உடையார் இல்லாமையோ —
நீ அருளாது ஒழிகிறது என்
அருளாய்-
மதி நலம் அருளினன் என்றால்
அதன் பயனான
துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ண வேண்டாவோ-
அறிவு கலங்கினார்க்கு இப்படி அருளாது ஒழிகை அநாதியோ —
இப்போது உண்டானது அத்தனையோ —
(அருளாத நீர் திரு நாமம் இப்போது அன்றோ பெறுகிறீர் )
உளவோ பண்டும் இன்னன்ன –
ஆர்த்தருக்கு பண்டு உதவினான் –என்னும் இடம் பிரசித்தம் அன்றோ —
1-திரௌபதிக்கு –
2-கஜேந்த்ரனுக்கு-
3-பிரகலாதனுக்கு
4-ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு-
5-காகத்துக்கு –
தாத்பர்யம்
கீழ் பிரசாதம்-மானஸ மாத்திரம்
பாஹ்ய ஸம்ஸ்லேஷம் கிடையாமல் -அவசன்னராய்
விபூதி நலிய
திருத்துழாய் நலியட்டும்
வழிப் போக்கான வாயுவும் கூட
நிறத்தையும் கொண்டு என்னையும் கொள்ள வேண்டுமோ
மத்ஸ்யாதிகளை கொக்கின் வாயில் அகப்படாமல் காக்கும் திருக் காவேரி
பாயும் திருவரங்கத்தில் நித்யவாஸம் செய்து அருளும் நீர்
அருளாமல் உபேக்ஷிப்பது எதனால்
உன்னைச் சேர்ந்த நீர் ரக்ஷிப்பதிலேயே தீஷிதனாய் இருக்க
ஆபத் ரக்ஷணம் பண்ணுவதே ஸ்வபாவமாக இருக்கும் தேவரீர்
இப்போது எனக்காக கொண்ட நவநீத விரதம் எதுக்கு
மித்ர பாவேன விரதம் கொண்ட நீர் -இப்பொழுது நவீன விரதமாய் கொண்டுள்ளீரே –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்