ஸ்ரீ துவய அர்த்தம்-முமுஷு படி -ஸ்ரீP.B.A. ஸ்வாமிகள் ..

முமுஷு படி இறுதியில் அருளினார் ஸ்ரீ பிள்ளை லோகாச்சர்யர்
தமிழ்/ குறித்தும் /விரித்தும் இன்றி -ரத்னம் போன்றது முமுஷு படி-
மூன்று ரகச்யங்களும் அறிய வேண்டும் முமுஷு-
பக்தர் முத்தர் நித்யர் -மூன்று வகை சேதனர்-
பிரம்மா ஞானம் இல்லாதவன் அசத் தானே -மோஷம் இச்சை படுபவன் தான் முமுஷு-
மோஷம் உண்டாகும் பொழுது தத்வ த்ரய ஞானம் உண்டாக வேணும்.
பிராட்டி சம்பந்தம் -ஸ்ரீ சம்பந்தம் அனுசந்தேயம் -ரஷிக்கும்  பொழுது பிராட்டி சந்நிதி வேண்டியதாலே — சம்பந்தம் வேண்டும் என்பதால்
திரு மந்த்ரத்தில் –ச்வதந்த்ரன் அவன் என்பதால் கடக கருத்தியம் பண்ண வேண்டும்
மாம்- பிராட்டி உடன் கூடிய என்னை பற்று ஸ்பஷ்டமாக சொல்ல வில்லை
திரு அடி பிரஸ்தாபம் இரண்டிலும் இல்லை வன் புகழ் நாரணன் திண் கழல் சேரே –
ஸ்ரீ சப்தமும் திரு அடி பிரஸ்தாபமும் ஸ்பஷ்டமாய் உள்ள மந்த்ரம் த்வயம் ஓன்று தானே துவயம் அர்த்த அனுசந்தானம் பண்ணி கொண்டு ஸ்ரீ ரெங்க வாசம்  திரு மேனி இருக்கும் வரை ஸ்வாமி எம்பெருமானாருக்கு நியமனம்

ஏவம் -சதா -இப் பொழுது பண்ணி கொண்டு இருப்பதை எப் பொழுதும் பண்ணி கொண்டு இருக்க வேண்டும்
பட்டர்-பத்து அர்த்தம் -நித்ய யோகம் -ஸ்வாமித்வம்– பிரபல தர விரோதி போன்றவை
மூன்று/ஆரு /பன்னிரண்டு-பதங்கள்–இரட்டிப்பு மூன்று ரகஸ்யங்கள்
சமஸ்த பதமாக முதலில் கொண்டு-
ஸ்ரீ -பெரிய பிராட்டியாருக்கு திரு நாமம் அமர கோஷம் நிகண்டு-
ஸ்ரியதே– ஸ்ரேயதே –ஆசரிக்க படுகிறாள் அனைவராலும்-இவளும் அவனை ஆச்ரயிகிறாள் -கடகர்
ச்ருணோதி– ஸ்ராயவதி—கேட்கிறாள் மாத்ரு பிராவன்யத்தால்–அவனை கேட்பிக்க வைக்கிறாள் -பாலகனாய் பல தீமைகள் செய்தாலும் ஷமித்து கிருபை காட்ட சொல்கிறாள்

ஸ்ரினாதி– ச்ரீனாதி– உள்ளுவார் உள்ளத்தில் எல்லாம் உடன் இருந்து அறிதி-என்ற ரீதியில் -சர்வக்ஜன் -அறிந்து சொல்ல –தோஷம் கழித்து -மணல் சோற்றில் கல் ஆராய போவார் போலே –குற்றமே வடிவு கொண்ட நம் மேல் குற்றம் தேடி கொண்டு – -உளை- புள்ளி மான் உடம்பில் புள்ளி எண்ணுவது போல்–குணங்களால் சந்தோஷ படுதுபவள்-
ஆரும் இருந்தாலும் பரம கருணையால் முதல் இரண்டையும் அருளுகிறார்-
எல்லார்க்கும் இவளை பற்றி ஸ்வரூப லாபம் –இவள் தனக்கும் அவனை பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்கும் -என்று
அடுத்து மது -நித்ய யோகம்-அகல கில்லேன் இறையும் என்று -இருவர் சேர்த்தியும் நித்யம் என்கிறது .
ஈஸ்வர ச்வாதந்த்ர்யத்தையும் சேதனன் உடைய அபராதத்தையும் கண்டு அகல மாட்டாள்
இத்தால் ஆச்ரயிக்கைக்கு ருசியே வேண்டுவது –காலம் பார்க்க வேண்டா என்கிறது

புருஷகார பலத்தாலே ச்வாதந்த்ர்யம் தலை சாய்ந்தால் தலை எடுக்கும் குணங்களை சொல்லுகிறது நாராயண பதம்
அவை யாவன -வாத்சல்யமும் ஸ்வாமித்வமும் சௌசீல்யமும் சொவ்லப்யமும்–ஞானமும் சக்தியும் -ஆரும்-
குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம் -என் அடியார் அது செய்யார் செய்தாலும் நன்றே செய்தார் உகந்து செய்தானா பரிச்சை -தாமரையாள் சிதை குலைக்குமேல் -என்னடி யார் அது செய்தார்-உன் அடியார் இல்லை என் அடியார்–கன்றின் உடம்பின் வழு அன்றோ காதலிப்பது அன்று அதனை ஈன்று எடுத்த ஆ -நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் திரு மலை–நிகரில் புகழாய்
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் -உலகம் மூன்று உடையாய்
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம் –என்னை ஆள்வானே
கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் -திருவேங்கடத்தானே
விரோதியை போக்கி தன்னை கொடுக்கைக்கு ஞான சக்திகள் –நிகரில் அமரர் விரும்பும் -சக்தன்–முனிக் கணங்கள் விரும்பும்-ஞானவான் சரணவ்-திரு அடிகளை —

இத்தால் சேர்த்தி அழகையும் உபாய பூர்த்தி யையும் சொல்லுகிறது
பிராட்டியும் அவனும் விடிலும் திரு அடிகள் விடாது திண் கழலாய் இருக்கும் –அபராத சக்ரவர்த்தி யாய் இருக்கிறோம்
தரு துயரம்-உன் சரண் அல்லால் சரண் இல்லை — ஈன்ற தாய் அகற்றிடினும் அவள் அருள் நினைந்தே அழும் குழவி -ஆழ்வார்
ஆள வந்தார் காலை கட்டி கொண்டு அழும் –தவ பாத பங்கஜம் –உன் திரு அடிகளை விட மாட்டேன்-
மாது சரணவ் விடாத குழவி போல்..–
கை பிடித்து கார்யம் கொள்வதை விட காலை கட்டி கொண்டு கார்யம் கேட்டால் உதறி போக மாட்டான்
வன் புகழ் நாரணன் திண் கழல் சேரே -திரு வாய் மொழி-உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே —புகல் ஒன்றும் இல்லா அடியேன்–சரணவ்-துவி வசனம்-காலால் நடக்கிறேன் இரண்டு காலால் அர்த்தம் தானே -காதால் கேட்டு என்றாலும் இரண்டு காதை தான் சொல்லும்-இங்கு துவி வசனம் -மா முனிகள்-உபாய பூர்த்தியை காட்டுகிறது –சேர்த்தி அழகையும் -இரண்டையும்-சொல்லும்..-இரண்டுக்கு மேற்பட மற்று ஓன்று புக சகியாமையாலே துவி வசனம்–

சென்றால் குடையாம் -மரவடியாம் –அரவு-நிவாச ஆளவந்தார்-சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
–மன்னி -பொருந்தி அவஸ்தை-உடனாய்-தேசம்–அசித் போன்ற பாரதந்த்ர்யம்-ஆய சப்தம் சொல்லும் கைங்கர்ய அர்த்தம்-
சேர்த்தியில் கைங்கர்யம்-உத்தர வாக்யத்திலும் பூர்வ வாக்யத்திலும்-ஸ்ரீ சம்பந்தம்
இங்கு சேஷித்வத்தில் நோக்கு  -ஸ்வாமி-கைங்கர்ய பிரதி சம்பந்தி–சர்வ சேஷயாய் உள்ளவன்-
திரு மேனியையும் குணங்களையும் சொல்லும் –
சேஷத்வம் துக்க ரூபம் அன்றோ நாட்டில் காண்பது –உகந்த விஷயத்தில் சேஷத்வம் சுக ரூபம் தானே
துஷ்யந்தன்-சகுந்தலை-சேஷமாய் இருக்கும் இருப்பு சுகமாக கண்டானே –
இங்கும் அவன்  திரு கல்யாண குண அடியாக /ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்- சொரூப பிரயத்தம்
கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட அடியன் ..மாயன் அடுக்கி சொல்கிறாள் அவன் தோஷம் –ஆகிலும் பராங்குச நாயகி–கண்ணன் தோழி கடியனே -என்ற தோழிக்கு –கொண்டானை அல்லால் அறியும் குல மகள் போல்-

எம்பிரான் பிரம குருவாக வந்து -அவன் அவன் அடியார் ஆழ்வார் ஆச்சார்யர் இடம் கைங்கர்யம் பண்ணுவது சொரூப பிராப்தம் –
நம -திரு மந்த்ரம் -சொரூப விரோதி- விரோதி மூன்று உபாய விரோதி – பல விரோதி -யானே நீ என் உடைமையும் நீ –உபாய விரோதி கழி கை
களைவாய்  துன்பம் .. பிராப்த விரோதி கலிகை மற்றை என் காமங்கள் மாற்று
இங்கு நம -அவன் ஆனந்தத்துக்கு பண்ணும் கைங்கர்யம் –படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –சேதன தர்மம் அனுபவிக்க வேணும்–
விபீஷணன் பட்டாபிஷேகம் -கிருத கிருத்திய விஜுரகன்-
-கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கே –
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே
பிரபல விரோதி-கழி கை

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே P.B.A ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s