ஸ்ரீ கீதா கிருஷ்ணன்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

வேத வேதாந்தம் கொண்டே அவனை அறிய முடியும் உபநிஷத்தின் சாரம் கீதை போக்தா கோபால நந்தன் பார்த்தோ வத்சன் -அர்ஜுனன் வியாஜ்யம் -கீதை அமுதம் பால்போன்ற்றது..சம்சாரம் போக்கும் இனிய மருந்து -மருந்தும் விருந்தும் இதுவே –இல்லாத கருத்துகள் இல்லை -அவனே ஜோதி வாய் திறந்து அருளியது இது ஒன்றே —

வெறுக்க தக்க சுகமே இன்பம் என்று உழன்று இருப்போரை உய்விக்க உபதேசம் -மயக்கம் -அநித்தியத்தை நித்யமாக கொள்வது தான் மயக்கம் ஒன்றை மற்று ஒன்றாக மாற்றி பிரமித்து இருப்பது தானே மயக்கம் –சரீரம் ஆத்மா என்று இருப்பது தான் பெரிய மயக்கம் ..
பக்தி ஒன்றே அனைத்தைக்கும் மருந்து வாழ்வின் லஷ்யம் முக்தி அடைவது ஒன்றே -மீண்டும் பிறக்காமல் இருக்க –வழி பக்தி ஒன்றே -கீதை சாரம்
அவதார ரகசியம்- சேஷ்டிதம் ஜன்ம கர்ம மே திவ்யம் -அறிந்து நாம் பிறவி அறுக்கலாம் -தெளி விசும்பு திரு நாடு அடைந்து அந்தமில் பேர் இன்பம் பெற அனந்யா சக்த்யா பக்த்யா– ஞாதும் த்ரஷ்டும் –அறியவும் காண்பதற்கும் அடையவும் பக்தி வேண்டும்..
சேயன் அணியன் சிறியன் மிக பெரியன் ஆயன் துவரை கோன் –மாயன் அன்று ஓதிய வாக்கு அதனை கல்லார் உலகத்தில் ஏதும் இலாதார் -திருமழிசை ஆழ்வார் -வேதம்-புருஷ சுக்தம் சிறந்த பாகம் போல் தர்ம சாஸ்திரம்– மனு பாரத– கீதை புராணம் -விஷ்ணு புராணம்–திரட்டு பால் போல் –கண்ணனே உபதேசம் -ஸ்ரீ கண்ணன் கேட்டது ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் இரண்டுமே சிறந்தது –இரண்டு சேனைகள் நடுவில் ஜோதி வாய் திறந்து உபதேசம் –சர்வ லோக மகேஸ்வரன் சர்வ சக்தன்–ரிஷிகேசன் அர்ஜுனன் குடா கேசன் -கேசவ அர்ஜுன சம்வாதம் சஞ்சயன் திருஷ்ட்ராஷ்டிர சம்வாதம் -சஞ்சயன் தூது வர கண்ணன் சத்யபாமை அர்ஜுனன் திரௌபதி நால்வரும் இருக்க -உள்ளே வர விடச் சொல்லி-பொறாமை இல்லாதவன்-ஒன்றைபி பத்தாக பேசி அங்கு உள்ளோர்க்கு தோல்வி உறுதி-ஒரே கேள்வி திருஷ்ட்ராஷ்டிரன் ஸ்ரீ கீதையில்-ஒரு ஸ்லோஹம் மட்டுமே – சஞ்சயன் திவ்ய கண் பெற்றான் முன் பார்க்கும் படி -பார்த்து பேசுவான்..-தர்ம ஷேத்திர குரு ஷேத்ரம் –எங்கே கண்ணனோ எங்கே அர்ஜுனனோ அங்கு வெற்றி என் மதம் கடைசியில் நேர் அடி பதில் –ஷட்கம் =ஆறு அத்யாயம்-ஆத்ம சாஷாத்காரம் கர்ம யோகம் -உள்ள படி ஆத்மா அறிய–நித்ய நிர்விகார தத்வம் ஞான ஆனந்த மயம்–அணு மாத்திர ஸ்வரூபம் -தன்மையை உள்ள படி அறிய -சாஷாத் காரம் –இது தான் பார்க்க முடியாது -நான் -அஹம் சப்த கோசாரமே ஆத்மா –மாணிக்கம் சேற்றில் விழுந்தது போல் சரீரத்தில் அழுந்தி மாறி மாறி பிறந்து இருக்கும்- அவனுக்கே அடிமை யான சொத்து -கர்ம ஞான யோகம் பண்ணி அறிந்து கொள்ள வேண்டும் இதை –அடுத்த ஷட் அத்யாயம்-பக்தி யோகம் அடுத்து -கர்ம யோகத்தில் அர்ஜுனனை மூட்டு கிறான்–ஷத்ரியன்-போர் புரிந்து -அது தானே விதிக்க பட்ட கர்ம யோகம் -மூன்று தியாகம் -நான் செய்கிறேன் என்ற எண்ணம் இல்லாமல் அவன் செய்விக்கிறான்–தாழ்ந்த பலனில் ஆசை இன்றி உயர்ந்த பலனுக்கு ஆத்ம சாஷாத்காரம் -பல தியாகம்- என் உடைய மமதை என்கிற எண்ணம் விட்டு-முதல் படி ஆத்மா பற்றி அறிவது–அடுத்து பரமாத்மா பிராப்தி-அவனுக்கு அடிமை அவன் சொத்து–பக்தி கொண்டு அவனை அடைந்து பக்தி பண்ணுவது -நோக்கம்-மருந்தும் விருந்தும் பக்தி ஒன்றே –இங்கு இதன் வழியாக அங்கு அடைந்து அங்கும் அத்தையே செய்து அனுபவித்துக்கொண்டு ஆனந்தம் அடைந்து -நித்ய தெளி விசும்பு திரு நாடு-இத்தைப் பண்ணி மோட்ஷம் இன்றி அவன் அனுக்ரகத்தால்-ஆழ்வார் நெறி-வியாபாரம் இல்லை-எதையும் பிரார்த்திக்காமல்–பக்தி மார்க்கம் இரண்டாவது ஆறு அத்யாயம்-சொல்லி அடுத்து விட்டதும் சொல்லி விளக்கமும் கொடுக்கிறான் மூன்றாவது பகுதியில்..
பீஷ்மர் -யாரைகே கொன்றாலும் ஐவரை கொல்ல மாட்டேன் பீமன் யாரை விட்டாலும் நூற்றுவரைக் கொல்லாமல் விடமாட்டேன்-பார்த்ததுமே துரியோதனனுக்கு அச்சம் -பாஞ்ச சன்யம் ஒலி- வெளுத்த தேர் -சர்வ லோக மகேஸ்வரன் தேர் ஒட்டி-உள்ளம் உழுத்துப் போனதாம் ஒலி கேட்டதும்–அர்ஜுனன் சொன்ன இடத்தில் தேரை ஒட்டியும்–விஸ்வாமித்ரர் சொன்னதை ராமன் கேட்டான்-முன்பு -பீஷ்மர் துரோணர் முன்பு தேரை நிறுத்தினான்-கீதை சொல்ல ஏற்பாடு- துரி யோதனன் துச்சா தனன் முன்பு நிறுத்தி இருந்தால் உடனே முடித்து இருப்பான் –புருவ ஜாடை அறிந்து தேரை செலுத்துகிறான்-இரண்டாவது பதில் இது-சஞ்சயன் சொன்னது புரிய வில்லை இன்னும்-
மனம் தளர்ந்து காண்டீபம் கீழே போட–கர்மம் தர்ம யுத்தம்-அஸ்தான சிநேகம்- -மது சூதனா -நீ சாந்தீபன் சூதனன் இல்லையே — என்னை மட்டும் பீஷ்ம சூதனன் துரோணர் சூதனன் பெயரை வாங்க இவர்களைக் கொல்ல வைக்கிறாயே -நோய் நாடி நோய் முதல் நாடி- சரீரம் தான் விழும் ஆத்மா இல்லை என்பதை விளக்குகிறான் -ஆத்மா நித்யம் சரீரம் அநித்தியம் –திடமாகச் சொல்லிப் புரிய வைக்கவே இரண்டு எதிர் மறை சொல்களை வைத்து அருளுகிறான் -நானும் நீயும் நேற்று இன்று இருந்தேன் எனபது இல்லை –நாளை இருப்பேன் என்பதும் இல்லை—உடல் சட்டை போல் தானே–ஆத்மாவை வெட்டுவதோ நனைப்பதோ கொளுத்துவதோ முடியாது–அழிவற்றது –ஞான ஆத்ம மயம்–சுகம் துக்கம் சமமாக கொள்ள வேண்டும்–வெற்றி தோல்வி-லாபம் அலாபம்- யுத்தம் செய் பலனில் ஆசை இன்றி-ராம பிரான் காட்டுக்கு போக -அப் பொழுதைக்கு அலர்ந்த செந்தாமரையை வென்றது சந்திரன் இருட்டில் தானே பிரகாசம் ராம சந்திரன்-கர்ம பலனுக்கு நாம் காரணம் இல்லை–கர்ம யோகம் விளக்கி-தூய்மை யான எண்ணம் ஞான யோகி இந்த்ரியங்களை வென்று–தறி கேட்டு ஓடும் இவற்றை ஆத்மா பக்கமும் பரமாத்மா பக்கமும் செலுத்த வேண்டும்-செருப்பு வைத்து திரு அடி தொழுவாரை போல்-நம்பிள்ளை -அழுக்கு போக ஆகார சுத்தி வேண்டும்—ஞான யோகம் விட கர்ம யோகம் சிறந்தது கண்ணனே குதிரை ஒட்டி தண்ணீர் காட்டி இருக்கிறானே–செயல் பாட்டு பகுதி அறிவு பகுதி இரண்டும் உண்டு கர்மாவில்-யந்த்ரம் போல் இன்றி -உணர்ந்து பண்ண வேண்டும் ஞான பாகத்துக்கு ஏற்றம்–அன்புடன் ஞானத்துடன்பண்ண வேண்டும்–விவச்வானுக்கு -உபதேசம் மனு இஷ்வாகு உபதேசம் -முன்பு -௨௮ சதுர யுகம் -அவதார ரகசியம்-நான்கு ஸ்லோஹம் -உண்மையாக அறிந்தவன் திரும்பவும் பிறப்பது இல்லை–சுத்த சத்வ திருமேனி–ஆத்மா பார்த்து அனைத்தும் சமம் -ஓன்று இல்லை-வெவ் வேற ஆத்மா –இன்றியமையாத சரீரம்–ஸ்திரமான ஆசனம்-இருந்து -மூக்கு நுனி பார்த்து-தியானம் பண்ணும் விதம் விளக்குகிறான் –யோகம் பண்ணப் பண்ண ஆத்ம சாஷாத் காரம்-அடைவோம்–பக்குவம் ஆவோம்–சித்தம் ஒரு முனை படுத்துதல்-அடக்கி பெருமான் இடம் செலுத்துதல்–
உடுத்து களைந்த பீதக ஆடை–கலத்தது உண்டு–அவன் இடம் இந்த்ரியங்களைச் செலுத்தி–புருஷோத்தமன் பெருமை அறிந்து–எல்லாம் அவன் சொத்து–ஞானி -வாசு தேவனே சர்வம் துர் லபம்-உண்ணோம் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்–கடைசி வரை பக்தி பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும்-எதை நினைத்து உயிர் விட்டாலும் ஜடபரதர் மான் போல் பிறந்தாரே –ஆராதனம் சுலபம்-பக்தி தோய்ந்து பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –தூய்மை உடன் –மடி தடவாத சோறு- விதுரன் போல்–சுண்ணாம்பு தடவாத சந்தனம்—பூசும் சாந்தம் என் நெஞ்சமே –அனந்ய சிந்தை -அவனையே கேட்டு பெற்று அவனை ஆனந்தம் படுத்த வேண்டும்..–எனக்கே தன்னை தந்த கற்பகம்–மாம் நமஸ் குரு -நெஞ்சை செலுத்தி அன்பு மாறாமல் அவனுக்கு பூஜை செய்து-விஸ்வ ரூபம் காட்டி -புருஷோத்தமா வித்தை-அனைத்துக்குள்ளும் நீக்கம் அற நிறைந்து இருப்பதை காட்டி சாத்விக வாழ்வு-தேவ அசுர வாசி காட்டி–சரம ஸ்லோகம் அருளி–மா ஸூச –பாபம் போக்கி -திரு அடி பற்றி- சரண் அடைந்த பக்தி தொடங்கி மோஷம் பெற வழி காட்டி முடித்தான்

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத ஸ்ரீ பார்த்த சாரதி திருவடிகளே சரணம் ..
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: