உபதேச ரத்ன மாலை-1-3 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

அசித் தத்வம்-ஐஸ்வர்ய அனுபவம்/சித் -கைவல்யம்-பகவத் -நித்ய கைங்கர்ய மோஷ லாபம் –ஆழ்வார் ஆச்சார்யர் பற்றிய ஞானம் வேண்டும் முதல் படியாக –கோவில் கந்தாடை அண்ணன் ஸ்வாமி தனியன்-

முன்னம் திரு வாய் மொழி பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின் படியை தணவாத சொல் மணவாள முனி
தன் அன் புடன் செய் உபதேச இரத்தின மாலை தன்னை
தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் என் உடைய நெஞ்சகம் போல் சுவர் வழி எழுதி கொண்டேன் பெரிய ஆழ்வார்
அது போல் மா முனிகளும் மறக்காமல் -தணவாத சொல் -உபதேச ரத்ன மாலை நெஞ்சில் வைத்து இருப்பவர் ஸ்வாமி–அன்புடன் செய்து அருளி-தணவாத -மறக்காமல்– நேர் தன்னின் படியை- சொல்லிய படியே —
73 பாசுரங்கள் திரு பல்லாண்டு 12 பாசுரங்கள் பெரிய வாச்சான் பிள்ளை பேடிகா பாகம் -மூன்று அதிகாரிகளை அழைக்கிறார் -வந்து சேர்ந்தனர் சேர்ந்து தானும் பல்லாண்டு அருளுகிறார் -பல சுருதி கடைசியில்
அது போல்- 10 பாகம் இதில்-
முதல் மூன்று  அவதாரிகை-யார் உபதேசம் எந்த பலனுக்கு-விரும்பி ஏத்துவர் -சொல்ல வந்த விஷயத்துக்கு பல்லாண்டு மூன்றாம் பாசுரம்
4-26 வரை 23  பாசுரங்கள் ஆழ்வார் தினம் நஷத்ரம்-வைபவம் –
மேலே 27 -29 எம்பெருமானார் விஷயம்–
ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் 30–௦-33 -நான்கு பாசுரங்களும் 
திவ்ய தேச அனுபவம்–34-49 -வரை 16 பாசுரங்கள் ஆச்சார்யா வைபவம் –திரு வாய் மொழியை காத்த குனவான்கள்–
50 -52 -மூன்றும் அவதாரிகை–ஸ்ரீ வசன பூஷண ஏற்றம் சொல்ல போகிறார்–
பிள்ளை லோகாச்சர்யர் பெயருக்கு அவதாரிகை–நம் பெருமாள் நம் ஜீயர் நம் பிள்ளை ஏற்றம் சொல்லி –
அடுத்து -உலகாரியன் நம் பிள்ளைக்கு முதலில் என்பதால் —
7 பாசுரங்களால் அவதார சிறப்பு 53 -59 அருளி அடுத்து —
60 -70௦ வரை 11 பாசுரங்களால் சரம பரவ நிஷ்ட்டை ஸ்ரீ வசன பூஷண கருத்தை சுருக்கமாக
71 மூர்க்கர்கள்  72 ஆச்சார்யர் தேசிகன் 73 பல சுருதி-எதிராஜர் திருவடி சம்பந்தம் பெற்று கைங்கர்ய பலன்..
18 பாசுரங்களால் ஸ்ரீ வசன பூஷணம் ஏற்றம்–ஆக 10 பகுதிகள்
எந்தை திருவாய் மொழி பிள்ளை இன் அருளால்
வந்த உபதேச மார்க்கத்தை -சிந்தை செய்து
பின்னவரும் கற்க உபதேசமாய் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து –1
பேசுகின்றேன்-உபதேச மார்க்கத்தை/வெண்பாவில்/பின்வரும் கற்க /சிந்தை செய்து -நான்கிலும் –கொண்டு கூட்டு பொருள் —
அன்ன பட்டர் தர்க்க ஸங்க்ரஹம்-வாதம் பண்ண-பாலர்களுக்கு–விஷயம் கிரகித்து தரிக்கும் சாமர்த்தியம் கொண்டவர் பாலர்–
அது போல் பின்னவரும் கற்க-ஆசை ருசி ஒன்றே வேண்டும்–
என் ஆச்சார்யர் இன் அருளால்–திரு வாய் மொழி பிள்ளை–சாம வேத சாரம்-திருவாய் மொழி–
வாச்தல்யம் கொண்டு–எம்பெருமானார்-திருப் பாவை ஜீயர்–
பட்டர் திரு நெடும் தாண்டகம் சாஸ்திரம் வல்லவர்–நம் ஜீயரை ஆட கொண்டதும் இது கொண்டு தான்–
மாதவாசார்யர் முன் பெயர்–ஸ்தநிகர்-வேதாந்தி–
திரு மலை ஆழ்வாருக்கு திரு வாய் மொழியில் ஊற்றம் கொண்டவர்–எந்தை ஒரு சப்தம்-சம்பந்தம் சொல்லும் இதி–
திரு வாய் மொழி பிள்ளை ஞான பூர்த்தி –இன் அருள்-தயை பூர்த்தி-மூன்றும் ஆச்சார்யர் இடம் வேண்டும்..–
சதானந்தர் ஜனகர் குரு-அகல்யை தாய் சாபம் போக்கினவர் என்றதும் -நின் அன்னை சாபம் முடித்தனன் –கம்பர்–
கிருஷி பலன் -பகவான் ஆச்சார்யர் இடம் சேர்ப்பிக்கிறான் ஆபிமுக்யம் மாற்றி பகவான் இடம் சேர்ப்பிப்பார் ஆச்சார்யர்–
ஞானம் உடையவர்–அருள் கிருபை தயை-இன் அருள்–மூன்றும் முக்கியம்–
வால்மீகி-நாரதர்–முனி புங்கவர் வாக் சாதுர்யம் ஞானம் அங்கும் மூன்றும் சொல்லி ஆரம்பம்–

ஆதி-அந்தம் பிர பந்த சாரம் அறியலாம்-உயர்வற உயர் நலம்  பிறந்தார் உயர்ந்தே -உது அர்த்தம் விரித்து 1102 பாசுரங்கள்–
உபதேச மார்கத்தை பேசுகின்றேன் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் முடிக்கிறார் அதே அபிப்ராயம் —
எந்தை-தந்தை ஸ்தானம் குரு–தாய் பிரியம் தந்தை ஹிதம் –நோக்கு–
அத்தனாகி அன்னையாகி என்னை ஆளும் எம்பிரான் ஆழ்வார் –
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்–மதுர கவி ஆழ்வார்–
ஹிதம் தான் பகவான் முதலில் சொல்ல ஆழ்வார் பிரியம் முதலில் சொல்லி மனம் ஒரு நிலை பட்ட பின்பு
ஹிதம் பிள்ளை பேகணியாமல் மண்  தின்ன விட்டு பின்பு  பிரத்ய அவ்ஷதம் இட்டு –போல —
பரம்பரையாக வந்த சுருதி ஸ்மிர்த்தி வாயால் கேட்டு சந்தை முறையால் கற்ற -ஓர் ஆண் வழியாக சம்ப்ராயதாயம் –
எயிற்று இடை மண் கொண்டு இரா பகல் ஓதுவித்து என்னை–
அறியா காலத்து அடிமை கண் அன்பு வைத்து –ஆவி உள் கலந்தே –வாமன அவதாரத்துக்கும் இதற்கும் சம்பந்தம்–
என்ன நடக்கிறது தெரியாமல் அளந்தான் அது போல் அறியாமல் வஞ்சித்தாய் சேர  மாட்டேன் என்று விலகி இருந்தாலும்–
கர்ம யோகம் 28 சதுர யுகம் முன்பு வாசமான் இடம் சொல்ல மனு  இஷ்வாகு சொல்ல குரு பரம்பரை அங்கு–
சிந்தை-குரு பரம்பரை ஒன்றையே சிந்தித்து அகரூர் யாத்ரை அர்சிராத்ரி மார்க்கம் திரு வேம்கட யாத்ரை–
பின்னவரும் கற்க-கல்விக்கு விஷயம்–சிந்தை செய்து யோசித்து பேசணுமா-
-பத்துடை அடியவர்க்கு எளியவன்-கணக்கரு நலத்தவன் நெறி உள்ளி  உரைத்த -வழியை யோசித்து சொன்னான்–பகவானும் ஆராய்ந்து சொல்லனுமா

உள்ளி-சங்கை இன்றி–கலை இலங்கு மொழியாளர் பேசுவதே வேதம் கண புரம் கை தொழும் பிள்ளையை -பிள்ளை எண்ணாமல் –
நீராட போதுவீர்-கௌரவம் தோன்ற உபதேசம்–ஓர் ஆன் வழியாக சொன்னதை சகயமாக பேசுவது அனுவர்த்தி ஆச்சார்யர்–
சிந்தை செய்தேன் பேசுகிறேன்–மனத்தால் நினைப்பதை வாயால் பேசி அதையே செய்வது–முக் கரணங்களும்-ஒருங்கி–
வெண்பா இனம்–கலி துறைராமானுச நூற்று அந்தாதி–சீர்மை-சீர் முச்சீர் நான்கு சீர் –மாறன் புகழ் பழிந்த பா-
அத்துடன் ஒத்து இருக்கும் சீர்மை–பேசி தலை கட்டி முடியாத விஷயத்தை பேசுகின்றேன்–
சிரமம் தீர்க்க -சம்சாரிகள் துக்கம் போக்க -பேசுகின்றேன்–கேளுங்கோ சொல்ல வில்லை–
பேசாமல் இருக்க முடியாது விஷய வைலஷண்யம் சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவேன் போல் கேள்மினோ -என்றார்–
ஆழ்வார் -இவர் கேள்மினோ சொல்லாமல் –பேசுகின்றேன்-அபேஷா நிரபேஷமாக –நிர்கேதுக கிருபையால் –
நாட்டையும் உலகையும் மாற்ற பேசுகின்றேன்..அருள் கொண்டாடும் —
ஆயிரம் இன் தமிழ் பாடினான்-தமிழ்/இன் தமிழ் ஆயிரம் இன் தமிழ் பாடினான்-சம்ஸ்க்ருதம் இல்லை வெண்பா –
சிரமம் இல்லை இன் தமிழ் அழகான -இன் அருளால் இனிமை போக்யத்வம் ஆச்சார்யர் உபதேசத்தா ஆயிரம்-
சுருக்கமும் விஸ்தாரமும் இன்றி அனைவரும் கற்க பின்னவரும் கற்க அனைவரும் பயன் பட -மூன்றும் காட்டினார் 

கற்றோர்கள் தாம் உகப்பார் கல்வி தன்னில் ஆசை வுள்ளோர் 

கற்றோர்கள் தாம் உகப்பார் கல்வி தன்னில் ஆசை வுள்ளோர்

பெற்றோம் என உகந்து பின்பு கற்பார் -மற்றோர்கள்
மாச்சரியத்தால் இகழில் வந்தது என் நெஞ்சே !
இகழ்கைஆச்சரியமோ தானவர்க்கு –2
தானவருக்கு தான் அவர்க்கு ஆசுர பிரக்ருதிகள் தானவர்–இரண்டும் கொள்ளலாம்
மாச்சர்யம்-பொறாமை-ஸ்வாபம் தான் பிரதி கூலர்களுக்கு–போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்–
நெஞ்சை குறித்து சொல்கிறார்–கற்றோர்-வேத அத்யயனம்-பண்ணியவர்கள்–தெளிந்த நீரோடை போல்–
உபதேச ரத்ன மாலையை கற்றோர்களும் ஆனந்த படுவர்–அகங்காரம் இல்லை–
தொண்டர்க்கு அமுது உண்ண-ஆழ்வார் அருளியது போல் திராவிட வேத சாகரம் —
பக்தாம்ருதம்–உபதேசம் என்பதால் விஷய கௌரவம் தோன்ற –சீறி அருளாதே -சீற்றம் கூட அருள்
ஆஸ்ரித விரோதிகள் இடம் சீற்றம் வேண்டும் அபிமான பங்கமாய் -வந்தோம்-
அபிமான துங்க செல்வன் போல்- செல்வ நம்பி -கூடணும்–
எம்பெருமானாரின் திரு அடி சம்பந்தி என்பதில் அபிமானம் வேண்டும்–சேஷத்வ அபிமானம் வேண்டும்
படித்தவன் குணம் பணம் உள்ளவன் என்ற அபிமானம் ஓடாது –
எம்பார் வைபவம் உண்டு என்று பலர் சொல்ல உண்டு-திருவடி சம்பந்தத்தால் வந்ததால் ஒத்து கொண்டார்–
அருள்மாரி இன்ப மாரியே -அடியார்க்கு -இறுமாப்பு வேண்டும்–கற்று முடிக்க விலை ஆசை மட்டும் உண்டவர்-
பெற்றோம்-நிதி கிடைத்தால் போல் -உகந்து பின்பு கற்பார்–வைத்த மா நிதி-திரு கோளூர் திரு நின்ற ஊர் நித்தில தொத்து –

பிறர் மினுக்கம் பொறாதவர்கள்-மற்றோர்கள்–பொறாமை இல்லை பெருமையும் பெற்றோமே —
நெஞ்சே வந்தது என்–என் நெஞ்சே –பிறர் மினுக்கம் பொறாமை இல்ல பெருமை கொண்ட நெஞ்சே–
அபாகவதர் வாயால் பாகவதர்-மிளகு ஆழ்வான் வைதீகம்–ஆநந்த கூத்தாடினார்–இகழ்கை ஸ்வாபம் தானே இவர்களுக்கு –
பட்டரை வைத மனிசர்க்கு சம்பாவனை-தன தோஷம் சொல்வதும் பகவான் குணம் சொல்லுவதும் கடமை
என்னால் செய்ய முடியாத அனுஷ்டானம் செய்ததால் சம்பாவனை பண்ணினார்–
பாக்யர்கள் குதிர்ஷ்டிகர்கள் இடம் கோபம் படாமல் -திரு அடி கிடைக்காமல் இழந்து போகிறார்களே  என்று வறுத்த பட வேண்டும் —
குட்டம் நட்டம் இட்டு -தலையினோடு  ஆசனம் தட்ட-உலோகர் சிரிக்க அதையே தாளம் ஆக கொண்டால் அமரரால் தொழ படுவீர்கள் —
கேட்ப்பார் செவி சுடு கீழ்மை வசவுகளை வையும் –சிசுபாலன் -வசுவுகளை கேட்க்க ஜீவனம் வைத்து  வந்தோரும் தங்கள் செவி சுடும் படி–

ஆழ்வார்கள் வாழி அருளி செயல் வாழி
தாழ்வாதும் இல் குரவர் தாம் வாழி ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்த அவைகள் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து-3
சங்கரக பாசுரம் -உயர்வற உயர் நலம் பாசுரம் போல் கல்யாண குணங்கள் திவ்ய விக்ரகம் உபய விபூதி உண்டு –மூன்றையும் ஒரே பாசுரத்தில் அருளியது போல்–உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் –பிரமாதா-ஆழ்வார்கள்  பிரமாணம்-மறை/பிரபந்தம்  பிரமேயம்–பகவான் -முதல் இரண்டும் வேண்டும்..மங்களா சாசனம் பண்ணுவது முனிக்கு ஸ்வாபம் இவரும்  மா  முனி தான் விஸ்வாமித்ரர் கௌசல்யா ..உத்திஷ்ட-அருளியது போல்-என்னை நோன்பு நோற்றாள் கொலோ பெற்ற வயிறுக்கு பட்டம் கட்டி கிடந்ததோர் கிடை அழகாய் அனுபவித்து வாழி வாழி பல்லாண்டு எனபது போல்–தண்ட காரண்யா ரிஷிகள்-ராஷசர் தின்ன உடம்பை காட்ட வந்தவர்கள்-மங்களம்-மறவரி மான்தோல் தரித்து வந்த பெருமாளை கண்டு-அழகுக்கு கண் எச்சில் பட கூடாது என்று—அருளி செயல் ஒன்றால் தான் இன்றும் ஸ்ரீ வைஷ்ணவம் நடமாடுகிறது–பட்டர் பரம பதத்துக்கு படி கட்டு கட்டி இருப்பார்–மயர்வற மதி நலம் அருள பட்டு செய்த செயல் அவன் அருள் இவர்கள் செய்த பாசுரம்- வேதம் வேத –அங்கம் வேத – உப அங்கம் போல -24 பிர பந்தங்களும்..–ராமானுச நூற்று அந்தாதியும் -வியாக்யானம் அருளி செய்த -குரவர்கள்-தாழ்வு ஏதும் இல்லாத —பகவத் விருத்தாந்தம் ஒன்றே பேசும் குரவர்கள் –எச்சில் வாய் இல்லை–ராமாயணம் சொல்ல வந்தவர் கங்கை காங்கேயன் சொல்லி- நாராயண கதை சொல்ல வந்த -பூசல் பட்டோலை–வியாசர்–ஸ்ரீ மத பாகவதம் சொல்லி ஆநந்த பட்டார் அடுத்து-இது போலதாழ்வு இல்லை–ஏதும் இல்லை–வேறு பிரயோஜனம் எதிர் பார்க்காமல் சுயம் பிரயோஜனமாக அருளிய பாசுரம்–இதையே அனுபவித்து போகும் குரவர்கள்–பொழுது போக்கு அருளிசெயல் ஒன்றே..மடி தடவாத சோறு–எழ பார் எழ லோகம் உய்யும் படி– மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்–உய்யுவதே அவன் திரு அடி காண்பிப்பதே–செய்ய மறை தா உடன் சேர்ந்தே -உபய வேதாந்தம் -இரண்டு கண்களும் –வேதம் தமிழ் செய்த மாறன்–நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்  =சத்யம் ஞானம் ஆநந்தம் –மகா வராக ச்புடத் பதற லோசனணன்-பெரும் கேழல் லார் கண் மலர் புண்டரீகம்–புறப்பாடு போது வேதம் கடந்து செல்வான் வேதத்தின் முன் செல்க –விரிஞ்சின் முதலானோர் ..பிரம்மா –  ஞான கொழுந்தின் முன் செல்க -எங்கள் தென் குருகூர்  புனிதன் கவி பாதத்தின் முன் செல்ல மாட்டான் யானை அங்குசம் தாண்டாதவன் பரனுக்கே அங்குசம் இட்டவர் பராங்குசன்–செய்ய மறை–அனுகூலர்களுக்கு விஷயம் காட்டும் பிரதி கூலர்களுக்கு காட்டாது –செய்மை இதுவே–முன் மறையாக இருந்தது அருளி செயல் உடன் சேர்ந்த பின்பு செய மறை ஆபரணம் திரு ஆபரணமானது போல் அவனுக்கு சாத்தின பின்பு–பல்லாண்டு பாடுகிறார் அனைவருக்கும்–

கண் எச்சில் வாராமல் பல்லாண்டு அருளுகிறார்…ஒண் மிதி-தளிர் புரியும் திருவடி என் தலை மேலவே–ஸ்பர்சம் பட்டதும் சருகு போல உலர்ந்த திருவடி தளிர -அது போல் மறை அருளி செயல்/வியாக்யானம் குரவர்கள் எடுத்து ஆண்ட பின்பு செய்ய மறை ஆனதாம் தெளியாத மறைகள் தெளிய பெற்றோம் –வேத அத்யயனம்-அல்ப ஸ்ருதர் பாராயணம் பண்ண வருவர் பக்தி அனுஷ்டானமில்லாமல் இருப்பார்கள் கலக்கி விபரீத அர்த்தம் பண்ணுவார்கள்–ஷாட் மத -தங்கள் மதத்துக்கு தக்க படி எடுத்து கலக்கி நல ஞான துறை சேர்ந்து -காட்டாறு-வெள்ளம் சிற்றாறு-படித்துறை -போல தெளிவிற்று -ஆழ பொருளை அறிவித்தது-தெளிந்த நீர் உள்ளுக்குள் இருப்பதை காட்டி கொடுப்பது போல்-
பிள்ளை லோகம் ஜீயர்  திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s