ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ நம் ஆழ்வார்-திரு வாய் மொழி –6-10-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒழி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆர் உயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேம்கடத்து எம்பெருமானே
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே 6-10-1-

மந்திர ரத்னம்-திரு மந்த்ரம் மந்திர ராஜா -ஸ்ரீ சம்பதம் வாக்ய துவ்யத்தால் வ்யக்தம் ரகஸ்ய துவயத்தில் வ்யக்தம் இல்லை
கறவைகள் பின் சென்று பூர்வ வாக்கியம் –சித்தரம் சிறு காலே உத்தர வாக்கியம் –மேம் பெருள்– திரு மாலை பாசுரமும் துவய அர்த்தம் சொல்லும்
37  பாசுரங்கள் பெட்டி போல் –ரத்னம் 38 மேல் பாட்டுகள் மூடி போலே என்பர்–வாழும் சோம்பரை உகத்தி போலும் –
அங்கும் க்ரமம் நம் ஆழ்வாரை போல் மாறி இருக்கும் –நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய அவனுக்கு விசும்பில் இருக்கும் இருப்பு —
முன் பதிகம் கேட்டதும்  -கூவினது  தன் தவறு என்று உணர்ந்தார் –தப்பை செய்தோம் தப்பை சொன்னோம் என்றுணர்ந்து —
சரண் அடைய நமக்கு என்று சேவை சாதிக்கும் திரு வேம்கடம் –கீழே  நான்கு பதிகங்களில் சரண்-
நோற்ற நாலிலும் சரண் பண்ணினார்–ஒரு தடவை தானே பண்ண வேண்டும் —
இதில் பிர பத்தி துவய மகா மந்த்ரம் போல் கீழே பிர பத்தி திரு மந்த்ரம் சரம ஸ்லோகம் போல் –
அதில் ஸ்ரீ சம்பந்தம் வ்யக்தம் ஆக இல்லை–7 பத்து தவிர எல்லா பத்திலும் திரு வேம்கடத்தான் பாசுரம் உண்டு –
அதில் ஸ்ரீ ரெங்கத்தானை அருளி விட்டார் இவரே அவர் என்பதால் — இதில் தென் திரு வரங்கம் கோவில் கொண்டானே –
ஆழ்வார் திரு வேம்கடத்தான் அடி கீழ் அமர்ந்தே அருளி இருக்கிறார் இந்த பதிகம் —
மாரி மாறாத அவன் கிருபையால் தான் இவர் பிர பந்தம் அருளி இருக்கிறார் –ஆழ்வார் திரு நகர் நான்கு பக்கமும் திரு வேம்கடத்தான்
பாசுரம் தோறும் அடி -அடி பாடி தொடங்கி அடியில் முடித்தாள் ஆண்டாளும்-
அது போல் ஆழ்வார் இந்த பதிகம் முழுவதும் அடி அருளி இருக்கிறார்– 8 பாசுரம்– பிரமாதி தேவர்கள் சொல்லும் திருவடி

கூறாய் நீராய் நிலனாகி கொடு வால் லசுரர் குலம் எல்லாம்
சீரா வெறியும் திரு நேமி வலவா  தெய்வ கோமானே
சேறார் சுனை  தாமரை சென் தீ மலரும் திரு வேம்கடத்தானே
ஆரா அன்பில் அடியேன் உன் அடி சேரர் வண்ணம் அருளாயே 6-10-2-

வண்ணம் அருள் கொள் அணி மேக வண்ணா மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே
தென்னால் அருவி மணி பொன்  முத்து அலைக்கும் திரு வேம்கடத்தானே
அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆவா வென்னாயே 6-10-3-

ஆவா  என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல்
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே–6-10-4

வென் நகரம் சேரா வகையே சிலை குனித்தான்-தீ வாளி–அம்பு–மலை போலே பொழிந்ததாம் சர வர்ஷம்-
சார்ங்கம் உதைத்த சர மழை –வில்லாண்டான் -திரு மகள் கேள்வா –சிலை யாண்டதால் மகிழ்ந்தவள்
அவள் தானே தம் குழந்தைகள் ரட்சிக்க பட்டதால் -தம் த்ருஷ்ட்வா —அந்த  ஸ்ரீ ராமனை அணைத்தாள் -புருஷ விக்ரகம் –
ஆண் உடை உடுத்திய -குத்தல் பேச்சு-போக்கி பேரை அ சகாய  சூரனை கொன்றவனை -தேவா –
அணைத்ததால் வந்த ஆனந்தம் ஒளி விட்டான் –உன்னை அமிர்தம் சொல்லும் என்னை ரட்சிப்பாய்-
பூவார் கழல்கள்- பூவால் அர்ச்சிக்க படும் பூ போட்டி போட்டு தோற்ற கழல்கள் —
அரு வினையேன்–சர்வ சக்தன்–துடித்து கொண்டு இருக்கிறேன் -பொருந்துமாறு -அருள வேண்டும்

புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ
புணரேய்  நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார்  மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே
திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-

என்ன வேண்டும் கேட்டானாம்–உனது பாதம் சேர்வது என் நாள் -சீட்டு எழுதி கொடுத்தால் போதும் –
உடன் கொடுக்க சொல்லவில்லை–சீதை பிராட்டிக்கு மாசம் -தேவகி இடம் 10 வருஷம் பரதன் 14 வருஷம்
கோபிகள் இடம் ஒரு பகல் சொன்னாயே –சந்தேகம் பட்டவனுக்கு சக்தி காட்டினாயே -அம்பால் ஏழு மரங்களை–
இரண்டு மரம் நடுவில் சென்று மருத மரம் முடித்தாயே–அஹங்காரம் மம காரம்/காம குரோதம் -நடுவில் சென்று முடித்து ரட்ஷிக்க வேண்டாமா –
முதல்வா -ஜகத் காரணன்–மேகம் பார்த்தால் யானை போல் இருக்குமாம் யானை பார்த்தால் மேகம் போல் இருக்கிறதாம் –
அனைத்தும் தெரிந்து வந்த அஞ்ஞானம் அடி களைஞ்சு பெரும் ஞானம் முதிர்ந்து வந்த அஞ்ஞானம் இது –
விதுரன் போல –மத யானை போல் எழுந்த மா முகில்காள் -அந்யதா ஞானம் விபரீத ஞானம் –
சங்கு வெண்மை மஞ்சள் நினைப்பது அந்யதா /தூணை திருடன் விபரீத  ஞானம் –கனைத்து–இளம் -கீழ்  வானம் -சிறு வீடு —
கிழக்கு பார்த்து இருகிறீர் காந்தி வீசி பிரதி பலித்து இருட்டு விலக எருமை போல இருந்ததாம் –
திண்மை கொண்ட சார்ங்கம் பிடித்து இருக்கிறான்–அதில் அகத் படாதவர்களை கட்டு படுத்த திரு வடியாம்–
சார்ங்கம் விரோதி போக்கி அடி கீழ் அமர்த்துவான்

என்னாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேம்கடத்தானே
மெய் நான் எய்தி என்னாள் உன் அடிக் கண் அடியேன் மேவுவதே 6-10-6-

அந் நாள் பரம பதம் சொல்ல நித்தியரும் இங்கே வர அதை எனக்கும் இங்கே கொடுப்பாய் என்கிறார்–
இமையோர்கள் சொல்லும் வார்த்தை இந்த பாசுரம் –மண் அளந்த திரு விக்ரமன்-மதியம் மூர்தன அலங்க்ருஷ்யதி–
என்று நின்று திரள் திரள் ஆக இறைஞ்சி கொண்டு இருக்கிறார் -மெய் நா மனம் -முக் கரணம் —
நாக்காலும் மனசாலும் சத்ய வழி பாடு–பலம் எதிர் பார்க்காமல் –மெய் நான் எய்தி -உன்னோடு சேர —
உன்னை திருமேனி தழுவ வேண்டும் -யோகிகள் கண்ணை மூடி அனுபவிக்கலாம் எனக்கு உன் திருவடி மேவுவது–
வேண்டும் -மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே -நெகிளுதலும்  கூட தாங்க ஒண்ணாது

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே
கொடியா வடு புள் ளுடையானே கோல கனிவாய் பெருமானே
செடியார் வினைகள் தீர் மருந்தே திரு வேம்கடத்து எம்பெருமானே 
நொடியார் பொழுதும் உன பாதம் காணா நோலாது ஆற்றேனே — 6-10-7-

சரீரம்   விழும் வரை காத்து இருக்க வேண்டுமே – -தனி சிறையில் விழ புகுந்து பிராட்டி காத்து இருந்தாளே–
நான் தான் முதல்-நமக்கும் பூவின்  மிசை நங்கைக்கும் இன்பனே -தம்மை முதலில் சொல்லி கொள்கிறார் —
கடி மலர் பாவைக்கும் சாம்யம் ஷட் விதம் -அடியேன் -மேவி அமர்கின்ற அமுது-அரசை அவதாரம்–
அநந்ய பிரயோஜனாராக அவன் இடம் போவதே –இமையவர்கள் அமிர்தம் வேற -இருக்க வைக்க என் அமுதம்
என்னை கூட்டி கொண்டு அவன் இடம் நிறுத்த நித்யர் போல–செடியார் வினைகள் -பாபம் மூலம் சேர்ந்த அசத் கர்மம் –
துக்கம் போக்குகிறான்–மருந்தும் அவனே விருந்தும் அவனே –மருந்தும் பொருளும் அமுதமும் தானே —
திரு மலை மேல் தேக்கி வைத்த அமுதம் சாய் கரகத்தில்  உள்ள அமுதம் –ஒரு நொடி கூட -பிரியாமல்-
நோற்று நோற்று கதறுவார்கள் சாதன நிஷ்டர்கள் -நான் நோற்க வில்லை இருந்தும் ஆற்றேன் —

நோலாது ஆற்றேன் உன பாதம் காணா வென்று நுண் உணர்வின்
நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேம்கடத்தானே
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே 6-10-8-

பிரமாதி தேவர்களும் சாதனம் பண்ணியும் ஒன்றும் பண்ண வில்லை என்பார் /நான் ஒன்றும் நோற்றாமல் அதை சொல்லுவேன்–
ருத்ரன் பிரம  இந்த்ரன்-மூவரும் -சொல்லி –வேதம் போல் ச பிரம ச..சத்வ குணம் -பயம் வந்த பொழுது மனைவிகள் கூட்டி
கொண்டு சேலே கன்னியர் உடன் வந்து திருவடிகளில் விழுவார்கள் —மாலாய் மயங்கி- நான் மயங்கி தெரிந்து கொள்ளும் படி/
கிருஷ்ண குண சேஷ்டிதங்கள் காட்டி கொடுக்க வேண்டும் மாலாய் பிறந்த நம்பி ஏலா பொய்கள் உரைப்பானை

வந்தாய் போலே வாராதே வாராதே போல் வருவானே
சென் தாமரை கண் செம் கனி வாய் நால் தோள் அமுதே  எனது உயிரே
சிந்தா மணிகள் பகர் அல்லை பகல் செய் திரு வேம்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே 6-10-9

வரேன் சொல்லி விட்டு வர மாட்டான் /ஆங்கே ஒருத்தி தன பால் மனம் வைத்து –அவளுக்கும் மெய்யன் இல்லை–
வந்தாய் போலே வாராதே– வாராதே போலே வருவானை– வடிவு அழகு காட்டுவான் திரு கண்கள் முதலில் தூது செய் கண்கள் 
செம் கனி அந்த புஷ்பமே காய்த்து  பழுத்த கனி-மாசுச சொல்வான் –தோளை காட்டி என் உயிர் உன்னது எழுதி கொண்டவனே ..-
இரவு பகல் வாசி இன்றி -நித்ய மண்டலம் ஆக்குகிறதாம் இதையே சிந்தா மணிகள் –போக்கியம் துடிப்பு சக்தி ஆர்த்தி ஒன்றும் குறை இல்லை-
அடியேன் உன்ன பாதம் சுடர் மிக்கு இருக்கிற –அருள் கொடுத்து கொள்ள  வேண்டும் ..

அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே
புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே 6-10-10

ஸ்வாமி சரணா கதி அடைந்த பின் ஸ்ரீ ரெங்கத்தில் துவயம் அனுசந்தித்து கொண்டு அர்த்தம் அனுசந்தித்து
ஸ்ரீ ரெங்கம் உறைய அருளினாரே –நித்ய யோகம்சேர்க்கை மத்து சொல்லும் –இறையும் அகல கில்லேன் —
வெள்ளி கிழமை திரு மஞ்சனம்–பிரிவு ஆற்றாமைக்கு நாச்சியார் திரு மொழி அனுசந்தித்து இருக்க நியமித்தார் ஸ்வாமி ராமானுஜர்–
விஷய வைலஷன்யத்தால்-காதல் கொண்டு அருளுகிறார்–காகாசுரன் தப்பித்தான் இவள் சந்நிதியால் —
ராவணன் தொலைந்தான் -அவள் அசந்நிதியால் –இறையும் அகலகில்லேன் என்று தன் பெருமை சொல்ல வில்லை
அவன் பெருமை சொல்கிறாள் –அவன் மார்பை விட்டு பிரியல் அன்றோ அ ஷரத்தில் -அ காரத்தில் – நின்று பிரிவது .. 
பகவதீம் நித்ய அனபாயிநீம் -சரணா கதி உண்மை படுத்த கால நியமனம் இல்லையேஸ்ரீ நிவாசன் –
அலர் மேல் மங்கை உறை உறை மார்ப –ஸ்ரிம் பிடச்ய-ரிக் வேதம்–இது வரை ஸ்ரீமத் –இனி நாராயண சப்த அர்த்தம்–
புருஷ காரம்-அவனை நம்மை இருவரையும் புருஷன் ஆக்கிகிறாள்—நிகரில் புகழாய்–

நிகரில் புகழாய் — உலகம் மூன்று உடையாய்–என்னை ஆள்வானே–..நிகரில் அமரர் முனி கணங்கள் …திரு வேம்கடத்தானே — 
நான்கு குணங்களையும் — வாட்ச்லய ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் –புருஷ கார பூதை -நம்மை அவன் நோக்கி
நடக்க வைத்து அவனை நீண்ட கைகளால் கொடுக்க வைத்து –மூன்று இடத்திலும் தனி  கோவில் நாச்சியார் —
திரு மார்பு நாச்சியார் -உபய நாச்சியார்கள்–நம் பெருமாள் மட்டும் நின்று -கண்ணால் களித்து உபய நாச்சிமார்கள்
கருடன் அமர்ந்து ஆதி சேஷனும் பெரிய பெருமாளும் கிடந்தது –வடக்கு வாசலில் ஸ்ரீ ரெங்க நாச்சியாரும் அமர்ந்து —
குற்றம் ஓன்று இல்லாத நம்மை– குறை-அடிப்படை  ஒன்றும் இல்லா கோவிந்தா –குற்ற இயல் சட்டம் தான் சொல்வார்– 
உம் குணம் பாரும் குற்றம் பார்க்காதீர் –நீர் பூத்த நெருப்பு போல் ச்வாதந்த்ரயத்தில் கிடக்கும் –இவள் கிளறி விட வேண்டும் —
ச்வாதந்த்ர்யம் தலை சாய்க்க கல்யாண குணங்கள் தலை எடுக்க இவள் வேண்டுமே –இவள் மன்றாடினாலும் அவன் விட மாட்டான் –
நிகரில் புகழாய்–தன் அடியார் அது செய்யார் செய்தாலும் நன்றே செய்தார்–தாமரையாள் ஆகிலும் சீதை குலைக்குமேல்–
மாதர் மைதிலி –லகுதர ராமஸ்ய கோஷ்ட்டி –அசைத்து பார்க்கிறாள்- சேர்த்து வைக்க இவள் மன்றாடி —
அப்புறம் இவள் மன்றாடிலும் விட மாட்டான் தூண் அசைத்து பார்ப்பாள் –நிகரில் புகழாய் தொட்டாரை தொட்டவன் உபதேசித்தவன்
திரு வடிக்கு -நம்மை சேர்க்க கேட்க்க வேண்டுமோ–பிளவங்கமே -குரங்கே -என்றாள்–இஷ்வாகு குலத்தில் பிறந்தால் தானே ரட்ஷிக்க தெரியும் —
சீதா ராமரை அறியீர் ..யார் தான் குடவாளி இல்லை என்னை பிரிந்தானே அக்நி சாட்சியாக பிரியேன் —
என் கணவன் குற்றவாளி என்று உம் இடம் சொல்வதே என் குற்றம் –இருவரையும் திருத்துவாள் உபதேசத்தால் —
உபதேசத்தால் திருந்தா விடில் அருளாலே நம்மையும் அழகாலும் அவனை–அல்லி மலர் பாவை போக   மயக்குகள்-
ஓடம் ஏற்றி கூலி கொள்வாரை போலே –வாத்சல்யம்  காட்டினார் நிகரில் புகழாய் என்று –ஸ்வாமித்வம் -உலகம் மூன்று  உடையாய்–
சௌசீல்யம் -என்னை ஆள்வானே –தாழ்ந்தவன் என்று இன்றி -ஏழை எதலன் கீழ் மகன் என்னாது —
நிகரில் அமரர் முனிவர்–திரு வேம்கடத்தான்-சௌலப்யம் சுலபன் எளியவன் –பற்ற ஆஸ்ரித சௌகர்ய ஆபாத கல்யாண குணங்கள் —
உன் அடி கீழ் சரணவ்-லோக விக்ராந்த சரணவ்–உலகம் அளந்த பொன் அடியே உன் பொற்றாமரை அடியே
நாகணை மிசை நம்பிரான் சரணே சரணம் –எங்கும் திருவடி தான் –சரணம் =அமர்ந்து பிர பதயே-பற்றுகிறேன் –
மனசால் – =புகுந்தேனே –எங்கும் போக வேண்டாம் -அமர்ந்தாள் போதும் -மார்கண்டேயனும் கரியே-
நக்க பிரானும் உய்ய கொண்டது –மானச -அனுசந்தானமே- பிரார்த்தனா  மதி -சரணா கதி –/புகல் ஒன்றும் இல்லா  அடியேன் –
ஆகிஞ்சன்யம் அனந்யகதித்வம் அடியேன் சொரூப ஞானம் கொண்டவன்–
அதிகாரி சொரூபம் வியக்தம் ஆக்கி காட்டுகிறார் ஆழ்வார் துவயத்தில் இல்லை

அடிக்கீழ்  அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும்
படிக்கேழ்   இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து திரு வேம்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே 6-10-11-

அடியீர் வாழ்மின் -பெருமாள் வார்த்தை அருள் கொடுக்கும் மாசுச-சோகம் விடு  விட ஏற்றம் இங்கு —
ஆனந்தம் படு என்கிறார் திரு வேம்கடத்தான் வாழ்க்கை இங்கு –படி கேள் நிகர் வேற யாரும் இல்லை என்று இருக்கும்/
பழன குருகூர் நீர் நில வளம் கொண்ட முடிப்பான் சம்சாரம் முடிக்க அருளினார் -ஆழ்வார் பிறந்து நாம் பிறக்க வேண்டாம்
பல நீ காட்டி படுப்பாயோ நெறி காட்டி நீக்குதியேல்–அன்று சரண் பண்ணினார் –
ஆழ்வார் அடியார் அடியார்  பற்றினால் -வீற்று இருக்கலாம் சாம்யா பத்தி மோட்ஷம் கிட்டும் நிலவுகிறான் அங்கேயே இருந்து நித்ய அனுபவம்

———————————-

இவனே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்
ஆவா  என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே–6-10-4-

புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய்  நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார்  மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய்  நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார்  மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-

ஸ்ரீ உலகு அளந்த உத்தமனே இவன்
என்னாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேம்கடத்தானே மெய் நான் எய்தி என்னாள் உன் அடிக் கண் அடியேன் மேவுவதே 6-10-6

———————————

ஸ்ரீ பொய்கையார் -10..
ஸ்ரீ பூதத்தார் -. 11..
ஸ்ரீ பேயார்- 19..
ஸ்ரீ திருமழிசைப் பிரான் 16–
ஸ்ரீ நம்மாழ்வார் -48 –
ஸ்ரீ பெரியாழ்வார் -7–
ஸ்ரீ ஆண்டாள் -16—
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் – 11–
ஸ்ரீ திருப்பாணாழ்வார் 2–
ஸ்ரீ திருமங்கையாழ்வார் -66 –

76- 106-ஸ்ரீ ராமானுச நூற்று அந்தாதி –ஸ்ரீ அமுதனார் சாவித்திரி காயத்ரி  மந்த்ரம் போல் இவை
ஆக மொத்தம் -206 பாசுரங்கள் –வியாக்யானம்  படி உண்டான பாசுரங்கள் சேர்த்து சேர்த்து –

நின்ற வண்  கீர்த்தி நீள் புனலும் -வேம்கட பொன் குன்றம் எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே —
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் — திரு அனந்தாழ்வான் போல் கைங்கர்யம் பண்ணி ஆனந்தம் அடைந்தது போல் உம் திருவடி எனது அருள வேண்டும்

இருப்பிடம் வைகுந்தம்  வேம்கடம் –மால் இரும் சோலை என்னும் போருப்பிடம் மாயனுக்கு முன்பு–அவை தன்னோடும் -கிளப்பி வந்து இருப்பிடம்
ராமானுசன் மனத்து -இன்று அவர் அனைவரையும் கொட்டி என் உள்ளம் வந்தார் தனக்கு இன்பம் பெற தான்–

37-நாள்களாக ஒரு வருஷமாக- 80 மணி நேரமாக அருளிய ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: