திரு விருத்தம் -மேன்மை பொருத்திய பராங்குச நாயகி உடைய விருத்தம் –அகப் பொருள் இலக்கணம்-பாடுடை தலைவன்–
கிளவி தலைவன் –மானச சாஷாத் காரம் தான் இவன்-76 பாசுரம் கிளவி தலைவனாக பாடி–அவன் அடியாரை கற்பித்து –
அகப் பொருள் -ஸ்ரீ வைஷ்ணவ பாகவத உத்தமர்கள் -சேர்பித்தவர்கள் என்பதால்–அடுத்து பாட்டு உடை தலைவனை பாடுகிறாள் —
அக புற பொருள் பாடல்–24 அகப் பொருள் என்பர்–ஒவ் ஒரு பாசுரமும் இரண்டு வியாக்யானம்–அர்த்தம் ஒரு தடவை ச்வாபதேசம் —
ஸ்ரீ வைஷ்ணவர் என்ன பேசுகிறார் என்பர்- இதற்கும் ஈடு உண்டு -ஈடு இணை இல்லாத வியாக்யானம் –
முத்து தேடி எடுத்தது போல பலர் ஆழ்ந்து அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள் —
அசித் பக்த முக்த நித்ய ஈஸ்வர தத்வம்-ஆழ்வார் ஐந்திலும் சேர வில்லை—காரி மாறன் உலக இயல்பில் மாறி சம்சாரி இல்லை —
சேமம் குருகையோ செய்ய திரு பாற் கடலோ -நாமம் பராங்குசமோ நாரணமோ
தாமம் துழவமோ வகுளமோ தோளும் இரண்டோ நான்கோ –சங்க கால ஓலை சுவடியில் உண்டு —
அவன் மாம் ஏகம்-நாகனை மிசை நம்பிரான் சரணே சரண் என்று சொல்ல மாட்டானே –ஆறாவது தத்வம்-
உருவாக்கின பெருமை அவனுக்கு தானே –உலகோரை திருத்துவது முன் சம்சார கண்ணில் பட அதை மூன்று சப்தம் –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -ஞானம் பெற சக்தி இல்லை நீ தான் காத்து அருள வேண்டும் என்கிறார் —
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே என்கிறார் ..
-8 பாசுரங்கள் அருளி இருக்கிறார்–
கட்டள கலி துறை–தலைவன் பொருள் பெற பிரிதலை குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்கு உரைத்தல் —
ஆழ்வாரை விட்டு திரு வேம்கடம் செல்லும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -சொத்தை தேடி போக -கிளவி தலைவன் -உண்டு அகப் பொருள் —
பிரிந்து போகும் பொழுது ஸ்ரீ ராமன் சீதை பிராட்டிக்கு சொல்லி போனது போல் —
தோள் மாலை கொடுத்து போனது போல் இவர்களும் ஆழ்வாரை விட்டு போக முற் படுகிறார்கள்
காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் இந் நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேம்கடத்து உம்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே –8
மாயோன் வட திருவேம்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்றி லீர் உரையீர் நுமது
வாயோ அது வன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ! இது அறிவு அரிதே–10
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மரவேன்மினோ கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னம் செல்லீரோ ? இது தகவோ என்று இசைமின்களே–30
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் என் தலை மீதே –அடியார் அடியார்–பயிலும் சுடர் ஒளி குலம் தாங்கு ஜாதிகள் நாலில்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் –பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் -பயிலும் பிறப்பிடை தோறும் -எம்மை ஆளும் பரமரே ..
மேகங்கள் -கடகர் தூது போகும் எல்லாரும் –ஆச்சார்யர்கள்–அம் பொன் அரங்கருக்கும் ஆவிக்கும் அந்தரங்க சம்பந்தம் காட்டி –
நார அயனம்- நாரங்களுக்கு இருப்பிடம்–நவ வித சம்பந்தம்–ஒழிக்க முடியாத –மறக்கவும் முடியாத மறைக்கவும் முடியாத மறுக்கவும் முடியாத உறவு —
காட்டி -தடை நீக்கி உம்பர் திவம் என்னும் வாழ்வுக்கு வழி காட்டும் -அரு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை —
ஆச்சார்யர் பத்னி புத்ரர் திருவடிகள் -இசைமின்கள் -அகப் புற பாடல்–தூது விட்டது திரு வேம்கடத்தான் இடம்
ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ! கடாகின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத் தாய்
மன்ன முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே–50
தலைவன் மீண்டு வருகையில் பாகனொடு கூறல்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு வேம்கட யாத்ரை முடிந்து –
தங்கள் மனோ ரதம் ஓட்டும் நெஞ்சம் கூட பேசும் -அகப் பொருள்- பாசுரம் -ஒள் நுதல் -பராங்குச நாயகி-ஊர்த்த புண்டரீம்
அழகாக சாத்தி கொண்டு–குறி அழியும் முன் தேரை விரைந்து -வலவ -தேர் ஒட்டி/நெஞ்சே –மானச அனுபவம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு —
ச்வதந்த்ரன் சேரலாம் பிரியலாம் -அடியவனை நாம் பிரிய கூடாதே –நீண்ட திரு கிரீடம் மாலை சாத்தி கொண்டு-அதில் தேன் ஒழுக –
முதல் நாயகன்-ஜகத் காரணன்-காரணத்தை தியானம் பண்ண வேண்டும் -வேதம்- ஆத்மா /ஹிரண்ய கர்பன்/ஜகம் காரணம் சொல்லும் -ஒன்றாக சொல்லாது ஒருங்க விட வேண்டும் /-தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -வேதாத தேசிகனுக்கும் ஆழ்வார் பாசுரங்கள் தெளிவு கொடுக்கும்
ஒன்றும் தேவும் யாரும் இல்லா அன்று –நின்ற ஆதி பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே —
ஆரோக்கியம் பாஸ்கரன் சூர்யன் செல்வம் அக்நி ஞானம் சங்கரன் மோட்ஷம் ஜனார்த்தனன் —
விண் முதல் நாயகன் நீள் முடி–சூசுகம் -வெளுத்து முத்து மாலை -மண் அளவு நீண்டு இருக்கும் –500 பவுன் நித்யம் சாத்தி கொண்டு இருக்கிறானே —
அருவி திரு மலை இல் இருந்து கீழ் வரை போவது போல் -அருவி செய்யா நிற்கும் –மா மலைக்கே -என்கிறாரே -ஆழ்வார் –
சீதை பிராட்டி கல்யாணம் ஆனா பின்பு அயோத்யையிலே இருந்தது போலே ஆழ்வாரும் சரண் அடைந்த பின்பு திருமலை நீங்காமல் இருக்கிறார் –
மா மலை என்பதால் ஆழ்வார் உகந்த தெற்கு திரு மலையாகவும் கொள்ளலாம் என்கிறார்-போய் —
மத் சிந்த மத் பிராண ..போத யந்த பரஸ்பரம் –வண் பொன்னி பேர் ஆறு போல் வரும் கண்ணா நீர் கொண்டு
அரங்கன் முற்றம் சேறு ஆகி நெற்றிக்கு திலகம் குலசேகர ஆழ்வார் —
பரதன் நோக்கி பெருமாள் விரைந்தது போலே ..-ஸ்ரீ வைஷ்ணவர்கள் விரைந்து வருகிறார்களாம்
முலையோ முழு முற்றம் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ வரை இல்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே ? பெருமான்
மலையோ திரு வேம்கடம் என்று கற்கின்ற வாசகமே–60–உயிரான பாசுரம்
காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல வென்று
ஆவியின் தன்மை யள வல்ல பாரிப்பு அசுரரை செற்ற
மாவி யம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேம்கடம் சேர்
தூவி அம் பேடை அன்னாள் கண்களாயது துணை மலரே—67–தலைவன் பாங்கனுக்கு தன் வலி அழிவு உரைத்தல்
மாதவன் கோவிந்தன் –வேம்கடம்-பாபங்கள் கொளுத்த படுகின்றன
அன்னம் போன்ற -இவள் ..ஞானத்தின் அழகு கண் அழகு– சீலத்தில் ஆழ்ந்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
காவி செம்கழு நீர் -சிகப்பு ஆசை பக்தி கடந்தது நீலம் கரு நீல வண்ணன் ஞானம் அஞ்சனம் மை எழுதுவது —
வேலும் கயலும் கூர்மை மிளிர்ந்து கர்ம யோகம்–இவை கடந்து அவன் மேல் திடமான விசுவாசம் ஆழ்வாரின் ஞானம் —
அதவா –காவி ரஜோ நீலம் தமோ பிரகிருதி அசித் தத்வம் கடந்து –தமோ மயக்கம் தூக்கம் –சரீரம் தண்டி–ஆவி-பிராணன்
ஆத்மா அளவும் தாண்டி-அளவு அல்ல ஈஸ்வரன்- தத்வ தரியமும் கடந்த ஞானம் –வேம்கடம் சேர் தூவியம் பேடை-அலர் மேல் மங்கை தாயார் –
அவளுக்கு சாம்யம் பராங்குச நாயகிக்கு –அவள் கண் வளர்ந்தது -ஞானம் பெருகியது என்கிறார்
உருகின்ற கன்மங்கள் மேலான ஒர்ப்பிலராய் இவனைப்
பெறுகின்ற தாயார் மெய் நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்
துருகின்றிலர் தொல்லை வேம்கட மாட்டவும் சூழ் கின்றிலர்
இறுகின்ற தாலி வளாகம் மெல்லாவி எரி கொள்ளவே–81-
வெறி விலக்குவிக்க நினைத்த தோழி இரங்கல் ..-இதை அறிந்தாலே முடிவாள்–ஆத்மா அழியும் -தீர்ப்பாரை யாம் இனி —
சகி வெறி வில க்கு -மன்னார் குடி ராஜ கோபாலன் -வெண்ணை தாழி திரு கோலம் வண் துவராபதி மன்னன் —
நோய் தீர்க்க வைத்யோ நாராயணன் அவன் தானே நோய் கொடுத்தான் –ஆசை பட்டது -போர் பாகு தான் செய்து ..
தேர் பாகன் பாகிலே பிடி பட்ட பாவை இவள் –அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் கொண்டு ஆடேன் மின் -பர கால நாயகி –
இது போல் இன்றி பெரும் தெய்வம் -உற்ற நல நோய் இது தேறினோம்
ஆராயாமல் தப்பு பண்ணுகிறீர்கள்–மெய் நொந்து பெற வில்லை போலே –துழாய் -கொண்டு சூட்ட வேண்டும் ..
திரு வேம்கட திவ்ய தேசம் நாட மாட்டம் வேண்டும் பிரசாதமும் திவ்ய தேச வாசனையும் வேண்டும் வாட்டம் தணிய வீசீரே ..
சூடி களைந்த –சூடும் இத் தொண்டர் களோம்-சத்வ குணம் வளர –தாரை கொடுக்க லஷ்மணன் –
பெருமாளுக்கு அமுது செய்யாமல் உண்டால் நாய் உண்ட எச்சில் போலே —
பரமன் உண்ட எச்சிலே நச்சினேன் –திவ்ய தேச வாசம் -உகந்து அருளின நிலம்-புறப்பாடு சேவை–
முடியும் நிலைக்கு வந்து விட்டாள்–அகப் புறப் பாடல் கிளவி தலைவன் இல்லை என்பதால் ..
கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும்
புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் பிரம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்–பெரிய திரு அந்தாதி-68
புவியும் .நின் அகத்தே நீ என் செவியின் உள் புகுந்து ..யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவர்–
யான் பெரியன் -நிச்சயம் -நீ பெரியை யார் அறிவர் பெரிய திரு அந்தாதி பெயர் காரணம் -ஸ்வாமி ராமானுஜர் உகந்த பாசுரம்
அர்ச்சைக்கு எடுத்து காட்டு –பாம்பு -அரவு-மாணியாய்-திருவிக்ரமன் – நெருக்கம் கல்- திரு வேம்கடம் —
அரவிந்த பாவையும் தானும் வந்து புகுந்தான்– அவை எல்லாம் சின்னதாக இருந்ததாம் ஆழ்வார் உள்ளமே பெரியதாக இருந்ததாம்
அங்கு எல்லாம் புல் எழும் படி
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply