ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ நம் ஆழ்வார்-திரு வாய் மொழி —ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

48 பாசுரம்  நம் ஆழ்வார் அருளி இருக்கிறார் –66 திரு மங்கை ஆழ்வார் —

———————–

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பனே 1-8-3

ஐந்து வியாக்யானம் இன்பம் மிகு ஆறாயிரம் திரு குருகை பிரான் பிள்ளை நம் ஜீயர் ஒன்பதி னாயிரம் படி 32 எழுத்து =1 படி – –
கண் -ரட்ஷகன் காக்கும் இயல்பினான் கண்ண பிரான் -திரு வேம்கடத்தில் ரட்ஷகன் –கண் ஆவதர்க்காக –
திரு வேம்கடத்தில் ஞானம் கொடுப்பதற்காக இருக்கிறான் –என்றும் -நித்யம்
கீதை அன்று வந்து உபதேசம் பண்ணி விட்டு போனது போலே இல்லை –வாசி இன்றி மண்ணோர்க்கும் வின்னோர்க்கும்–
உயர்வு தாழ்வு இன்றி –தங்களை ரட்ஷித்து கொள்ள தாங்கள் கார்யம் செய்ய வேண்டியது இல்லை என்பதில் சாம்யம் —
குளிர்ந்து இருக்கிற -அவன் தாபமும் தணிய –நமக்கும் தணிய-தண்ணார் வேங்கட –விண்ணோர் வெற்பு –
வானவர்களுக்கு திரு மலையா -நம்மை தள்ளி விட்டாரா –வானவர்கள் சந்தி செய்ய நின்றான் —
இவன் விட்டு வந்தாலும் இரங்கி வந்து சொந்தம் கொண்டாடும் படி சௌலப்யம் பட்டு ஆழம் கால் பட்டு அவர்கள் அபிபிராயத்தால் அருளுகிறார் ..
ஆட்சியில் தொடர்ச்சி நன்று -ஆட்சி போனாலும் அறிக்கை விட்டு கொண்டே இருக்க வேண்டுமே —

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்  
சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் தண் வாடை
அடல் கொள் படை ஆழி அம்மானை காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோற ஊழியே  2-1-4

ஆற்றாமை மிக்கு விஞ்சி நிற்க புலம்புக்ஜிறார் நாரை முதலில் பார்த்தார் வெளுத்த உடம்பு
உன்னையும் வஞ்சித்து போனானா -உஊராய எல்லாம் ஒழிய போய் தேட போகிறேன் –
துழாவி தேடுகிறதாம் காற்று அவனை–இரவும் பகலும் -கங்குலும் பகலும் –அடல் =மிடிக்கு —
சுற்றி இருப்பது ஸ்வபாவம் -அபயம் சர்வ பூபேப்யோ– விரதம் எடுத்து -ஆயுதம் எடுக்க மாட்டேன் —
பிரதிக்ஜை பண்ணினாலும் ஆயுதம் எடுத்த மிடுக்கு —
கருது இடம் பொருது கை நின்ற சக்கரத்தன்–பீஷ்மர் தொழ ஆரம்பித்தாரே இதை கண்டதும் –விரதம் குலைத்த உடன் —
பீஷ்மர் ஆயுதம் எடுக்க வைப்பேன் -சத்யம் ஆக்க சத்ய வாக்யன் தன் வார்த்தை போய் ஆக்கி கொண்டு —
இருந்தும் காற்றே நாம் சுற்றி போய் தேட அவன் பீஷ்மருக்கு -சேவை /
கடல்  மலை விசும்பு -அம்பச்ய வேத  வாக்கியம் போலே -வேதம் தமிழ் செய்த மாறன்- திரு வேம்கடம் திரு பாற் கடல் ஆகாசம்–
தேடி நோய் பட்டாயே -ஓடி கொண்டு இருகிறாயே -உனக்கா நோய்- சர்வ ரட்ஷக பிராணன் உனக்குமா நோய் —
உயிர் கொடுக்கும் உனக்கு நோயா –எனக்கு தான் என்றால் –ஊழி தோர் ஊழி விடியாது போலே —
பிரிந்தால்– வினாடியும் ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -விளக்கும் சுடுகிரதாம் காதலுக்கு நூல் வரம்பு இல்லை கட்டி அழுகிறார்
பிரிந்து ஓட -வைகுந்தன் வந்து கலந்தத தின் பின் -செய்கின்ற நைச்சியம் -உன்னை நான் விடேன் என்றதும் -ஆனந்த பட்டான் எம்பெருமான்

எந்தாய் தண்  திரு வேம்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மரா மரம்
பைம் தாள் எழ உருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழா  யி னாய்  அமுதே உன்னை என் உள்ளே குழைத்த எம்
மைந்தா வானேறே இனி எங்கு போகின்றதே 2-6-9

சேஷி சேஷன் ஞானம் கொடுத்தாயே –கைங்கர்யம் கொடுத்து -ஞானம் இருந்தால் தண் திரு வேம்கடம் இல்லை என்றால் வேம் –
இலங்கை சற்றே- கைங்கர்யம் பண்ண  முடியாமல் இருந்த விரோதம் போக்கி அருள்வாய் –காம குரோதம் அகம்காரம் மம காரம் போக்கி —
சுக்ரீவனுக்கு நம்பிக்கை வர ஏழு மரா மரம் எய்து காட்டினானே –தும்துபி சரீரம் தூக்கி போட்ட பின்—
மரம் ஏழையும் ஓர் அம்பால்-கொந்து ஆர் தண் அம் துழாய் –ஸ்ரீ மன் நாராயணனுக்கு எந்த மாலையும் துழாய் தான்-
ஆயுதம் எல்லாம் சக்கரம் தானே –அது போலே துரும்பால் கிளறிய சக்கர கையன் –அமுதே–
இலக்கு எல்லாம் நோக்கியது போல தமக்கு   விசேஷ கடாஷம் அருளி- குழைத்த -ஒரு தத்வமாக கலந்து —
என் மைந்தா –நீராய் நிலனாய் கூப்பிட்ட –குலைத்தது போல் அந்தர் ஆத்மா -வானில் இருப்பு அரிது  ஆகி —
ஆழ்வார் உடன் கலந்த காரணத்தாலே மைந்தா ஆகி இருக்கிறான் –வான் ஏறே -நித்யர் கை விட மாட்டாய்
அவர்களும் விட மாட்டார்கள் அது போல் –என் இடம் –சர்வ வியாபகன் நீ –
உன்னை விட்டு எங்கு போக முடியும் சர்வச்ய வசதி வாசுதேவன்

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக்கு காலங்கள் தாய் தந்தை உயிர்
ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ உலகுக்கும் நாதனே பரமா தண் வேம்கடம்
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே 2-6-10-

ஆழ்வார் கிடைத்த சந்தோசம்- மாலை தரித்து இலையும் தொடையுமா -பூ பந்து கையில் கொண்டானாம் —
முக் காலமும் தாய்தந்தை போல் –ஜெயந்தன் கை விட பட்டான் தாய் தந்தையால் -காகாசுரன்–ஈஸ்வரனை ஒழிந்தவர் ரட்ஷகன் அல்ல —
இனி விட மாட்டேன் -இவர் விலகி போவாரோ பயம் -இது நான் அவருக்கு சொல்லும் மாசுச -உன்னை நன் பிடித்தேன் கொல் சிக்கனவே —
என்பதே -உலகம் முழுவதும் பரவி இருக்கின்ற -பாகின்ற ஜகம் பிரசித்தம் -பெருமாள் திரு கரம் பிடிக்க சொன்னாள் சீதை பிராட்டி ராவணனை —
 
பத்ம நாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்-
என்  பரன் என்னை ஆக்கி கொண்டு எனக்கே தன்னை தந்த
கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேம்கட நல்
வெற்பனை விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே  2-7-11-

உயர்வற உயரும் பெரும் திறலோன்-ஞான சக்தி   பலம் வீர்யம் ஐஸ்வர்யம் தேஜஸ் உள்ளவன் –பத்ம நாபன்–
ஜகத் காரணம் -என் பரன் -என் இடமே எண்ணம் கொண்டவன்–எங்கும் பக்க நோக்கு அறியான் –
என்னை ஆக்கி கொண்டு எனக்கே தன்னை தந்த கற்பகம் –அடிமை ஞானம் உணர்த்தி –கற்பக விருஷம் பண்ணாது -எனக்கே —
ஏ காரம் -இவருக்கு மட்டும் தான் –கற்பக விருஷம் அனைவருக்கும் கொடுக்கும் -பாசுரம் பாடும் அனைவரும் இப்படி சொல்லும் படி
பக்தி வளர்கிறானே இவன் –தன்னை தந்தான் -கற்ப விருஷம் தன்னை கொடுக்காதே  நல்  வேம்கட நல் வெற்பன்–
கொட்டி கொண்டே வள்ளல் தன்மை ஜல தல விவாகம் இன்றி மின்னு மா மழை போல் மேக வண்ணா –
வெளுத்து போகும் மழை பொழிந்த பின் வெட்கி மேகம் வேகமாக ஓடும் -இவனும் அடியார்க்கு என் செய்வன் என்று இருத்தி
அனைத்தும் கொடுத்த பின்பும் —விசும்போர் பிரான் -எந்தை – தாமோதரன்–லஷணம்-
நம் ஜீயர் இதை பார்க்க நம் பெருமாள் திரை  பின் இதை பார்த்த ஐதீகம்  
தாமோதரனை ஆமோ தரம் அறிய –ஆபத்தினில் புடவை சுரந்தது கோவிந்த நாமம் இரே -பிள்ளை லோகாசார்யர்
நாராயணன் பெருமை சொல்லி கொண்டு வரும் பொழுது கோவிந்தன்–எந்தை நடுவில் –
விசும்போர் பிரான் தாமோதரன் யொரண்டு பக்கமும் மேன்மை எளிமை இரண்டுக்கும் தோற்று

தலை பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலை பூண் உண்ணும் அவ் அல்லல் எல்ல்லாம் அகல
கலை பல் ஞானத்து என் கண்ணனை கண்டு கொண்டு
நிலை பெற்றேன் என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே 3-2-10

அனுபவிக்கும் காலத்தில் –இழு பறி -அவன் அங்கு இழுக்க -முதலை யானை போராட்டம் போலே–அவ் அல்லல் –
இதற்க்கு நிகர் வேற இல்லை–ஆத்மா நித்யம் தான்-தாஸ்யம் சொரூபம் போகாமல் கண்ணனை கண்டு கொண்டதால் பெற்றேன்–
இதில் திரு வேம்கடம் நேராகா இல்லை -இருந்தாலும் அடுத்து ஒழிவில் காலம் பதிகம் என்பதால் –
கண்ணனை கண்டு கொண்டதை திரு மலை அப்பனை கண்டார் -இதில் பயம் வருத்தம் ஆழ்வாருக்கு
திரு மலை அப்பன் சேவை சாதிக்க –கண்ணாவான் அவன்  என்பதால் —

வார் புனல் அம் தண் அருவி வட திரு வேம்கடத்து எந்தை
பேர் பல சொல்லி பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகி குனிப்பார் அமரர் தொழப் படுவாரே 3-5-8

திரு நாம சங்கீர்த்தன மகிமை -சுவாமி ராமானுஜர் கோவிந்த நாம சங்கீர்த்தனம் பண்ணி திரு மலை ஏற நியமித்தார் –
பேர் பல சொல்லி -புகழ் நன் ஒருவன் எங்கோ கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன் நான்கு வேத பயன் எங்கோ
பால் எங்கோ சதி மாணிக்கம் எங்கோ போன்ற பல

விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய்
மண் மீது உழல்வாய்  இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
என் நீதி யன்ற அண்டத்தாய் எனதாவி
உள்  மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ ?  5-9-5

விண் மீது இருப்பாய்- மலை மேல் நிற்ப்பாய்- கடல் சேர்ப்பாய் -மண் மீது உழல்வாய் –இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் —
பகல் ஓலக்கம் இருந்து–கார்யம் மந்திரித்து  -வேட்டை ஆடி –கருப்பு உடுத்து சோதித்து –ஆராமங்களிலே விளை யாடும்  ராஜ நீதி —
ஐந்து நிலைகள் –மலை என்றாலே அர்ச்சை திரு அரங்கம் -எண் மீது அண்டம் -புற அண்டத்தாய் –
எனது ஆவி உள் மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ –முடிந்து பிழைக்கவோ– பகவத் அனுபவம் கிட்டாமல் —
முடிகையும் உன் கையில் தானே –சேவை தராமல் அவன் திருட்டு–தேகமே ஆத்மா என்று எண்ணுவது நமது திருட்டு-

வேத கடலை – மறைப் பால் கடைந்து திரு நாவின் மந்தரத்தால் கடைந்து துறை பால் படுத்தி -கரை பாம்பணை பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து-
நிறைப்பான் கழல் அன்றி சென்ம விடாய்க்கு நிழல் இல்லையே -சென்மம் தீர்க்கும் -பிள்ளை பெருமாள் ஐயங்கார் —
சம்சார நோய் தீர்க்கும் –பிறவி என்னும் நோய் போம் மருந்து -கம்பர் ..தேவு மற்று அறியேன் -நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் —
என் அப்பனில் -நண்ணி — தென் குருகூர்  நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே —
ஆழ்வார் ஆத்மா  உடல் -வெறுப்பு கொண்டு தலைவன் இடம் போவதை  அருளுகிறார்–
பிராப்ய பிராபக ஆபாசம் இன்றி–அவன் திருவடி ஒன்றே வழி அதில் கைங்கர்யமே வேண்டியது —

நங்கள் வரி வளை யாயன்காளோ 
நம் உடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்க்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன் நிறமாய் தளர்ந்தேன்
வெம் கண் பறவையின் பாகன் எம் கோன்
வேம்கட வாணனை வேண்டி சென்றே 8-2-1

வேம்கட வாணன் கருட வெம் கண் பாகன்—ஒ பத்ம நாபாவோ -கதறினாள் முன்பு – ஒ ஒ உலகினது இயல்பே ஈன்றவள் இருக்க  மணநீர் ஆட்டுவதே —
ஆழ்வார் துக்கம் -தேற வைக்க வளை கொண்டு -லஷ்மணன் தன காவல் சோர்வால்  பிராட்டி பிரிந்த  துக்கம் –
துக்கம் படாமல் இருப்பது போல் வீறு கொண்டு இருந்தானாம் பெருமாள் துக்கம் குறைக்க -வேஷம் கொண்டு இருந்தது போல்–
ஏதலர் -விரோதி என்று தாயாரை சொல்கிறாள் ஆபாச பந்து –வெட்கம் இல்லை கோபம் -சேர ஒட்டாமல் போக்கினதால் —
நுங்கட்க்கு பதில்-அவன் சிரமம் படுத்துகிறான் என்று சொல்ல மாட்டார் ஆழ்வார்–உடம்பை காட்டி இப்படி வெளுத்தது என்று
இந்த அளவு என்று காட்ட முடியாத வைபவம் உடையவன் –அவன் வைபவம் பேச முடிந்தாலும் என் துக்க எல்லை சொல்லி முடிக்க முடியாது ..-
வளையல்கள் கழன்றன –ஜகத் அச்தமிதம் என்கிறார் –ஆழ்வாரை விட்டு அவனாலும் இருக்க முடியாது என்பதை தான் சங்கம் கழன்றன
அவனை நிந்திக்காமல் நம்பிக்கை உடன் பேசுகிறாள் அவன் அடியாருக்கு என்று சொன்ன சத்ய வாக்யன் தானே –சாய் -எழில் இழந்தேன் ..
கருத்த மனம் ஒன்றும் வேண்டாம் கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –தான் இதனை பாடும் பாட்டுக்கு காரணம் சொல்கிறார்
வெம் கண் கருடன்–பொறு சிறை புள் உவந்து வந்து கூட்டி வரும் பொழுது -அக்ரூரை க்ரூர  ஹிருதயன் கோபிமார்கள் சொன்னது போல ..
ஸ்வாமி கோன் என்கிறார் -வருந்தினாலும் ஸ்வாமித்வம் மறக்க மாட்டார் –தேறியும் தேறாமலும் மாயன் திறம்  தான் இத் திரு —
கணவன் ஸ்வாமி -அன்பு இல்லை -விட்டு பிரிந்தானே –வேம்கட வாணனை -வேண்டி சென்றே —

இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள்
பூவைகாள் குயில்காள் மயில்காள்
உடைய மாம் மாமியும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய ஒட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பார் கடலும்
அஞ்சன வெற்ப்பும் அவை நணிய
கடையற பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவன் அவை காண் கொடானே 8-2-8

அனைத்தையும் துரந்தாள்-சம்பந்தம் இல்லை-உமக்கும் எனக்கும் -யான் வளர்த்த -முன் சம்பந்தம் இருக்கிறது –
உன்னோடும் தோழமை கொள்வேன் உலகு அளந்தான் வர கூவாய் –ஆண்டாள் பிரசாத கிளி பிரசித்தம் மார்கழி மாசம்
நித்ய கிளி கொள்வான் திரு வேம்கடனாதன் -கிளியை வளர்த்ததனால் பயன் பெற்றேன் –
ஆழ்வார் இவை நிறமும் குரலும் கோவை பழ நிறமும் அவனை நினைவு படுத்த -அனைத்தையும் எடுத்து கொண்டு போய் –
தப்பி வைகுண்டம் போனான்-இல்லை உடையவன் அவன் தானே –ஸ்வாமி அடியவன் எண்ணம் மாறாது –
கொண்டு போய் தன் பட்ட மகிஷி நித்யர் இடம் காட்ட –அஞ்சனா வெற்பு-திரு வேம்கடம் —

——————————————–

1-8-3-/2-1-4-/2-6-9-/2-6-10-/2-7-11-/3-2-10-/3-5-8-/5-9-5-/8-2-1-/8-2-8—ஆக -10- பாசுரங்கள் –

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பனே 1-8-3-
தலை பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால் அலை பூண் உண்ணும் அவ் அல்லல் எல்ல்லாம் அகல
கலை பல் ஞானத்து என் கண்ணனை கண்டு கொண்டு நிலை பெற்றேன் என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே 3-2-10

இவனே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்
எந்தாய் தண்  திரு வேம்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மரா மரம் பைம் தாள் எழ உருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழா யினாய்  அமுதே உன்னை என் உள்ளே குழைத்த எம் மைந்தா வானேறே இனி எங்கு போகின்றதே 2-6-9-

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: