ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ நம் ஆழ்வார்-திரு வாய் மொழி -3-3–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

உண்ட வைகாசிக்கு ஒப்பு —
ஆண்டாள் மதுர கவி எம்பெருமானாரை சேர்த்து மணவாள மா முனிகள் உபதேச ரத்ன மாலையில் அருளினார் ஆச்சர்யரே தெய்வம் என்று இருந்தவர்கள்-
மாதா பிதா -மாறனே–நம் பெருமாள் நம் ஜீயர் நம் பிள்ளை  நம் ஆழ்வார் என்பர் அவர் அவர் ஏற்றத்தால் –
கம்பரை- நம் சடகோபரை பாடினீரோ–விஞ்சிய ஆதாரத்தோடு கேட்டானே –
ராமனை பாடினவர் கற்பார் ராம பிரானை அன்றி மற்றும் கற்பரோ –அவரை பாட மறந்தேனே தேவில் சிறந்த தைவ புலவர் ஆழ்வார் — 
குல பத்தி-பிர பன்ன குலம்–உண்டோ ஆவணி ரோகிணி ஒப்பு -சொல்லாமல் உண்டோ வைகாசி விசாகம் ஒப்பு -பிள்ளை லோகம் ஜீயர்–
ஒரு அர்ஜுனனை கூட திருத்த முடிய வில்லை- அழுதுண்டே தன் அடி சோதிக்கு போனானே –அவஜானந்தி மாம் மூடா —
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது ..வாழ்ந்திடிவர் பின்னும் தம் வாய் திறவார் —
ஊரும் நாடும் தன்னை போல் எம்பெருமான் பேரும் நாடும் பிதற்ற —
ஆழ்வார் பண்ணி வைத்து பொலிக பொலிக பொலிக போய் இற்று வல் உயிர் சாபம் —
கிருதே அத்ரி -ததத்ராயர் -சுத்த பரமர் அடுத்து -ராமன் ஷத்ரியன் கண்ணன் வைஸ்ய -கலியில் பராங்குசர் —
ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மகா பாரதம் அவனை பேச வந்து கங்கை காங்கேயன் கதை  சொல்லி எச்சில் வாய் ஆனதாம் –
பூசல் பட்டோலை–ஸ்ரீமத் பாகவதம் பாடி பிராய சித்தம் வியாசர் –செம் பொன் மாட திரு குருகூர்–உண்டோ இதற்க்கு ஒப்பு —
பக்தி அசைக்க ஒண்ணாது அங்கு பிறந்தாலே –கொசித் கொசித் -சுகர் பரிஷித் தாமர பரணி பிறப்பார் —
யோகி -நாய் -திறந்து கிடக்கும் வாசல் தோறும் நுழைந்து திரியும் –ஆழ்வார் திரு வீதி எச்சில் -உண்டு ஸ்ரீ வைகுண்டம் போவதை பார்க்க —
அந்த நோயோடு பேய்க்கும் வழி கொடுத்தால் பழுதோ – ஆழ்வாரை கேட்கிறார் யோகி–முப்புரி ஊட்டிய திரு நட்ஷத்ரம் –
பகவான் ஆழ்வார் ஆச்சார்யர் ஸ்வாதி- நரசிம்கர் –பெரியாழ்வார் பெரிய திரு மலை நம்பி // 
ரோகிணி கண்ணன் திரு பாண் ஆழ்வார் திரு கோஷ்டியூர் நம்பி திரு வோணம்- பெருமாள்  பொய்கை ஆழ்வார் பிள்ளை லோகாச்சர்யர் –
விசாகம் -நம் ஆழ்வார் திரு வாய் மொழி பிள்ளை-குந்தி நகரம் ராஜாவாக இருந்தார்  -இஷ்வாகு குல ஆதி விசாகம் என்றான்- –
புனர்வசு ராமனே பிறந்தாலும் -ஆயில்யம் -லஷ்மணர் சத்ருணன் பிறந்த ஏற்றம் உண்டே —

ஆழ்வார் துவயம் அனுசந்திக்க -இரண்டு பதிகம் -ஒழிவில் காலம் எல்லாம் -ஸ்ரீ மதே நாராயணா நாம –
உத்தர வாக்ய அர்த்தம்-/உலகம் உண்ட பெருவாயா –ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் பிர பதயே -பூர்வ வாக்கியம் அர்த்தம்–
பெரிய வானுள் நிலாவுவரே பலன் சொல்லி ஒழிவில் காலம் திரு வாய் மொழி அருளுகிறார் ..–
சத்வ குணம்- ஆரோக்கியம் சாஸ்திரம்- வேதாந்தம் தத்வம் -அலை கடல் கடைந்தவன் போல் ஆத்மா ஷேமம்-
துவயம் மந்த்ரம்  தானே ..-அத்வீதியம் -ஒத்தர் மிக்கார் இலையாய மாமாயன் /இரண்டு வாக்கியம் /
மூன்று கண்டங்கள் -பிரித்து வியாக்யானம் /நான்கு நாலாவது பிருஷார்தம் கொடுக்கும் /அர்த்த பஞ்சகம் சொல்லும்/
சப்தங்கள் ஆரு/சப்த அரவனங்களின் சீர்மையும் உண்டு /எட்டு எழுத்து திரு மந்திர ராஜா
விவரணம் தான் மந்திர ரத்னம் ராஜா ரத்னம் விரும்புவான் -ரத்னம் ராஜாவை தேடி போகாது –
திரு மந்த்ரத்தில் விடஅர்த்தம் சொல்லும்  பட்ட -வ்யக்தமாகாத பிராட்டி சம்பந்தமுண்டு /நவ ரசம் ஷாந்தி கொடுக்கும் துவயம்

ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேம்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே..3-3-1

நாமும் அழுது கைங்கர்யம் கேட்டு பெற வேண்டும் -பாரிப்பு இருக்க வேண்டும் -ஆழ்வார் -தன்னை தான் பாடி–
பெருமாள்  அனைவரும் வந்து கையில் தாளம் கொடுத்து தம்மை மங்களா சாசனம் பாட கேட்டு வாங்கி போவார்கள்–
எல்லா திவ்ய தேச பெருமாளும் ஆழ்வார் இடம் வந்து பெற்று போவது இன்றும் கருட சேவை அன்று சேவிகிறோம் —
ஸ்வாமி தானே சொத்தை தேடி போக வேண்டும் –வாசிகமாய் அங்கு அடிமை செய்தான் —
கைங்கர்யம் பண்ண பண்ண தான் கிட்டே போவோம் அபயம் கிட்டும் பயம் நீங்கும் —
புஷ்ப கைங்கர்யம் பெரிய கேள்வி  அப்பன் ஜீயர் இன்றும் பண்ணி கொண்டு இருக்கிறார்–
ஞப்தி-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -இரண்டாம் பத்தில் சொல்லி ஞப்தி பல முக்தி –முக்தி பல வியக்தி–
முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணா -என்னாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே -கதறினார் முந்தின பத்தில் —
இந்த்ரியங்கள் -ஐவர் திசை திசை வலித்து எத்துகின்றன –நித்யர் போலே ஆக்குவாய்-
இங்கே பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் இருகிறதே –நித்தியரும் தங்கள் இந்த்ரியங்களால் தொட முடியாத பெருமை –
உயர்வற உயர் நலம் உடையவன் என்று  நீரே பாடினீரே–என்னை அனுபவிக்க போக ஆசை படுகிறீரா பரம பதம் அனுபவிக்க போகிறீரா –
நீர் தானே நான் எங்கும் இருக்கிறேன் -பாடினீர் -நீர் ஆசை படுவது  போக்குவது முக்கயமா நான் ஆசை பட்ட திரு வேம்கடம் வரீரா கேட்டான் –
ஆழ்வார் சொரூபம் விரோதமாக கேள்வி கேட்டேனே -நிர்பந்திக்காமல் -நீ இட்ட வழக்காய் இருக்க வேண்டியவன் தானே —

இன்று என்னை பொருளாக்கி வைத்து அன்று என்னை  புறம் போக வைத்தது -வெட்கி தலை குனிந்து புது மண பெண்
காலால் தரையை கிழித்து கொண்டு இருந்தானாம் –சொரூபம் இழந்து கேள்வி கேட்டேனே என்றாராம் ஆழ்வார் –
தாகம் இருந்தனீர் ஏல நீர் கொடுத்தால் குடிப்பீரா என் தண்ணீர் எப்படி வந்தது கேட்கணுமா –
கொடுக்க வேண்டிய தண்ணீர் கொடுக்கிறவன்  கொடுக்கும் இடம் மூன்றும் சித்தமாக திரு மலையில் இருக்க –
உடனே சென்று மங்களாசாசனம் பண்ணுகிறார் –ஒழிவு இல்லா  காலம் எல்லாம்—கடந்த நிகழ் வரும் காலம்–மூன்றும் –
பிராட்டியை -பிரிந்த காலம் கொண்டு வர முடியாது பெருமாளே சொன்னார் –வாள் களாக நாள்கள் செல்ல —
பழுதே பல காலம் போயினே -இழந்தோம் என்ற இழவும் இன்றி இருக்கிறார்களே –பண்ணும் கைங்கர்ய அனுபவம் முன்பு
பண்ணாத கைங்கர்யம் நினைவே வராத படி கொடுக்க கேட்கிறார் ..உடனே- தேசத்தால் இடை யூறு இன்றி-
லஷ்மணன் பெருமாள் இன்றி இல்லையே -பின்பு பிறந்து முன்பே சரயுவில் இறங்கினாரே –அது போன்ற கைங்கர்யம் கொடு —
மன்னி- விட்டு பிரியாமல் கூடவே– திரை சேர்த்து ஏகாந்தம் தானே பிராட்டி குடன் -பள்ளி அறைக்கு லஷ்மணன் வர வில்லை–
அவன் என்று சொல்வதற்கு சொன்னேன் -எனக்கு ஏற்றம் -பள்ளி அறைக்கு திரை உண்டே விளக்கு உண்டே கட்டில் உண்டே
விதானமுண்டே சந்தனம் உண்டேஎதாவது ஒன்றாய் இருந்து கைங்கர்யம் கொடுக்க வேண்டும் ..–
அது போல் யாருக்கு –ஆதி சேஷன் பர்யங்கம் இருகிறாய்-சென்றால் குடையாம் ..மணி விளக்காம் -அரவு –கொடுத்து இருகிறாய்–

நிவாச -ஆளவந்தார்–நஞ்சீயர் சன்யாச ஆஸ்ரமம் தீஷை ஆச்சர்ய கைங்கர்யம் தடை -அனந்தாழ்வான் பட்டருக்கு பிரம ரதம்
தூக்கும் கைங்கர்யம் இழப்பீரே -கைங்கர்யத்துக்கு விரோதமாக இருந்தால் திரி தண்டம் உடைத்து வெள்ளை சத்தி கொள்வேன் என்றாராம் ..
துணை நூல் மார்பில் அந்தணராக இருக்க கூடாது பிரம ஞானம் வேண்டும் ..எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே-
அணைய ஊர -பெரு மக்கள் கேட்ப்பார்களே –மேல் வழி இலா -அடிமை வேண்டும் —
பரதன் நாட்டில் நின்ற கைங்கர்யமும் வேண்டும் -கூட வந்த லஷ்மணன் கைங்கர்யமும் வேண்டும் –
பார தந்த்ர்யமும் சேஷத்வம் இரண்டும் -வேண்டும் அஹம் சர்வம் கரிஷ்யாமி -அவர் ஆசைக்கே முக்கியம் —
செருக்கு கலவாத கைங்கர்யம் வேண்டும் ..பைம்கமல தண் தெரியல் பட்டர் பிரான் -ஆண்டாள் பெரியாழ்வார் மாலை குளிர்ந்து இருக்கும் –
பெரிய பெருமாள் ச்வாதந்த்ர்யம் கலந்து சுடுமாம் / வழு இலா -பிரபல விரோதி -அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் —
மற்றை நம் காமங்கள் மாற்று -லஷ்மணன் ஆனந்தம் –கைங்கர்யம் பண்ணி -அவர்கள் ஆனந்தம் கண்டு முகம் மலர்தல் –
சீதை ராமன் ஆனந்தம் -கைம்  கர்யம் கொண்டதால் ஆனந்தம் -பகவத் ப்ரீத்யர்த்தம் —
அர்ச்சைனையும் அவன் திரு நாமம் கேட்க தான் பண்ண வேண்டும் -அடிமை நித்ய கைங்கர்யம் -செய்ய வேண்டும் –

எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திரு வேம்கடத்து
அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே —3-3-2

தனக்கு முன் பலரை  சொல்லி  கொள்கிறார் -அடியார் அடியார் . தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் .தம் அடியோங்களே
அடி நாயேன் நினைந்து இட்டேனே–பீதி விட்டு ப்ரீதி உடன் கைங்கர்யம் பண்ண வேண்டும் –குழந்தை போல நினைத்து கொண்டு–
அங்கு உள்ளவர் கூட இங்கு வந்து கைங்கர்யம் செய்கிறார்களே –விஷ்வக் சேனர் -நித்யர் உடன் வந்து -சிந்து -பூ –
அர்ச்சிக்கும் சமர்ப்பிக்கும் இல்லை–எளிமை கண்டு ஆச்சர்யம் பட்டார்கள் எத் திறம் மயங்கி -வானரங்கள் வேடர் அனைவருக்கும் சேவை-
பூ மகிழுமா –சேர்ப்பவனோ சேவியனோ மகிழலாம்-அங்கு -பரம பதம் -இருந்து கொண்டு வந்த புஷ்பம் திரு மலை ஸ்பர்சம் கிட்டி மகிழ்ந்ததாம் —
அதவா-இங்கு உள்ள புஷ்பம் போல் அங்கு இருக்காது –சூத்திர வதி-விஷ்வக் சேனர் பத்னி சொல்ல –
அங்கு இருந்து பறிக்காமல் இங்கு வந்து பறித்தார் –அவன் திருவடிகளுக்கு போவதால் மகிழ்ந்தனவாம் —
அந்தமில் புகழ்- முடிவு இல்லாத புகழ்–திரு வேம்கடத்தில் அந்தமில் என்றால் ஸ்ரீ வைகுண்டத்தில் அந்தம் உள்ள புகழாம்–நலம் அந்தமில் நாடு தானே அது —
சாம்யா பத்தி மோட்ஷம் கிட்டும் அங்கு –அப்ராக்ருத திரு மேனி -கல்யாண குணங்கள் -அவனை அனுபவிக்க —
அவன் பெருமைக்கு தக்க -இருந்தும் அனுபவித்து முடிக்க முடியாது –இங்கோ நம் பிரக்ருத சரீரம் கொண்டு அனுபவிக்க —
கார் எழில் அழகன் அலங்காரன்–குணம் இல்லை என்றாலும் அனுபவிக்க தக்க -காதுகண் இல்லை என்றாலும் விட ஒண்ணாத வடிவு அழகு ..
அண்ணலே –ஸ்வாமி பிராப்தன் பெத்த தாய் தந்தை ஒழிக்க ஒண்ணாதா சம்பந்தம் குணம் அழகு இல்லை என்றாலும் விட ஒண்ணாத –

அண்ணல் மாயன் அணி கொள் செம்தாமரை
கண்ணன் செம் கனி வாய்க் கரு மாணிக்கம்
தென் நிறை சுனை நீர் திரு வேம்கடத்து
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனே 3-3-3

ஸ்வாமி /அழகாலும் குணங்களாலும் கலந்து ஆச்சர்ய பூதன் -அம்மான் பொடி-மந்திர வாதம் -குழந்தை பிடிக்க வசப் படுத்த –
அணி கொள் செம் தாமரை கண்ணன் -இது தான் வசிய பொடி தூது செய் திரு கண்கள் –ஜிதந்தே புண்டரீகாட்ஷா–
காண வாராய் காண வாராய் என்று துடிக்க வைப்பான் வச படுத்தியதும் மறைந்து ..
பர வாசு தேவனுக்கு இரண்டு திரு கண்கள் போதும் பகல் விளக்கு பட்டு இருக்கும் ..திரு பாற் கடல் நாதனுக்கு 20 வேண்டும்
ராமகிஷ்ணர் 200 வேண்டும் -ரெண்கனுக்கு ௨௦௦௦ வேண்டும் திரு மேனி முழுவதும் கண்ணாக நாடு பிடிக்க –
பெரிய வாகி -நீண்ட அப் பெரிய வாக கண்கள்–அலம்பனமாக பிடித்து கொள்ள திரு மண தூண்கள்–
அருள் கிருபை பிரவாகம் வந்து நம்மை தள்ளும் பொழுது ..-அதற்கும் வசியம் இல்லை என்றால்
செம் கனி வாய்- ஸ்மிதம் காட்டி –யானை கொன்று மல்லரை மாட்டி கஞ்சனை குஞ்சி பிடித்து  இழுத்து மாய்த்தது போலே–
கரு மாணிக்கம் -அவனே -மந்த ஸ்மிதம் தாண்டி வந்தால்- வியாக்யானம் பண்ணுகிறானாம் –
கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்கள் -அஞ்சேல் என்று காட்டும் அபய ஹஸ்தம் —
கரு மணியை கோமளத்தை காட்டிய பின் -தோற்றே போவோம் -அடுத்து இதற்கும் தப்பி வந்தால் —
தெளிந்த நீர் சுனை நீர் திருவேம்கடம் –ஏழு மலைக்கு ஏற்றம் –எண்ணில் தொல் புகழ் -வானவர் ஈசனே –
குணம் தோஷம்  இரண்டையுமே எண்ண  முடியாது -நித்யர்களுக்கு கொடுத்த கைங்கர்யம் நமக்கும் கொடுப்பான்

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேம்கடத்தானுக்கு
நீசனேன்  நிறை ஒன்றும் இலேன் என் கண்
பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே  3-3-4

நித்யர் விட நம் மேல் பாசம்- உயிர் ஆன பாசுரம் ஒளி விட்டு கொண்டு இருக்கிறான் –நீசனாய் இருக்கிறோம் —
நம் இடம் பாசம் வைத்தது தான் அவனுக்கு ஆனந்தம் –இதை விட்டு நித்யர் ஈசன் எனபது தேசம் —
நீசன் இருப்பதால் தான் வானவர்க்கு ஈசன் என்று சொல்லி கொண்டு இருக்கிறேன் அடுத்த நிர்வாகம்  
சிறையில் இருந்தவன் சிம்காசனம் இருக்கும் பொழுது அதை நினைவு படுத்துவது போலே —
அங்குத்தை இருப்பு சிறையாம் இங்குத்தை இருக்கு சிம்காசனம் -நீசன் நிறை ஒன்றும் இல்லாதவன்
துவீத பரிகிரகம் பிடித்த விஷயம் அது மனைவி -விட்டு விட்டு அபிமத விஷயம் என் இடம் ஆழ்ந்து  இருக்கிறான் –
எங்கு ஆசையோ அதை பற்றி தான் சொல்ல வேண்டும் –சிறு பேர் அழைதனோம்  சீறி அருளாதே —
அறியாத பிள்ளைகள் அன்பினால் -மூன்று காரணம் அறியா தனம் சின்ன பிள்ளைகள் அன்பினால்-
இனி உன்னை–குறை ஒன்றும் இல்லா  கோவிந்தா என்றே -பசு மாடுகளின் பின் போகும் இடையனே –
இடை சாதி பிறந்து இடக் கை வலக் கை அறியாதவனே -ஆசாரம் இல்லாதவனே –
நாராயணன் பரமன் உத்தமன் பத்ம நாபன் மாயன் -போன்று எல்லாம் தெரியாமல் அழைத்தோம் ..–
அது போல் ஈசன் வானவர் என்றது -அர்ஜுனனும்  விஸ்வ ரூபம் கண்டதும் பழைய நான்கு திரு கைகளுடன்
தேனைவ ரூபேனே சதுர புஜத்துடன் சேவை சாதிக்க கேட்டனே –பாசம் வைத்த -அவன் என் இடம் வைத்து —
நானும் அவன் இடம் பாசம் வைக்கும் படி வைத்த இரண்டும் பண்ணி கொடுத்தானே–
பரம் சுடர் ஜோதி- கலந்த பின்பு தன ஒளி விட தொடங்கிற்றாம்–வெறுப்புடன் கலக்க வில்லை –
பாசம் வைத்ததால் வந்த பரம் சுடர் சோதி –தளிர் புரியும் திரு வடி என் தலை மேல் -மலர் புரியும் திரு வடி-
ஈசன் -தலைவன் -பாசம் -அன்பு -வானவர்க்கு பாசம் சொல்லியேன் கண் ஈசன் என்று சொல்லி இருக்கலாமே –
எனக்கு அன்பன் –அவர்களுக்கு தலைவன்- கணவன் ஸ்தானம் காதலன் நாயகன் அன்பன் போல –
மாம் ஏகம்-அங்கி திறந்து காட்டி-வெளுத்து கிடந்த -நீல மேக சியாமளன் கண்ணன் என்னும் கருத்த –
அவன் கூட வெளுப்பாகா மாறி சேராததால் –திரு மந்தரத்தால் நம்மை கொண்டவன் –கருமை காருண்யம் வள்ளல் தனம் நிறைந்த —

சோதியாகி எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ ?
வேதியர் முழு வேதத்து அமுதத்தை
தீதில் சீர் திரு வேம்கடத்தானையே 3-3-5

வேம்கடங்கள்  மெய்ம்  மேல் வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேம்கடத்து உறைவார்க்கு நம வென்ன
லாம் கடமை அது சுமந்தார்கட்கே 3-3-6

சாரா வாக்கியம் சேர்த்து -மாதவன் சொல்வதே ஒத்தின் சுருக்கு –மாதவன் என்று என்று  ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம்  சாரா —
ஸ்ரீ மன் நாராயணனே மாதவன் — சரண் அடைந்த பின்பு வினைகள் சேராது –வேம்கடங்கள்  மேல் வினை முற்றவும் சாரா எனபது மெய் என்றார் —
திரு கோஷ்டியூர் நம்பி வந்து இந்த அர்த்தம் ஆள வந்தார் சொல்ல கேட்டு இருக்கிறேன் ..
ஸ்ரீ ராமானுஜர் –நேராகா கடாஷித்து -திரு மாலை ஆண்டான் -ஆச்சார்யர் -வைத்தது -சத்தை பெற தான்–
பிள்ளை லோகாச்சர்யரும் இச்சால் நீயும் வேண்டாம் நானும் வண்டாம் பாபங்கள் தானே போகும் —

சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று  எழும் திரு வேம்கடம் கம் கட்கு
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே 3-3-7

புஷ்ப மண்டபம் –போக மண்டபம் தியாக மண்டபம் –பூவும் பூசனையும் இவருக்கே -சடை முடியானுக்கு இல்லையே —
ஜீயர் கைங்கர்யம் இன்றும் –இதற்கே அருளிய பாசுரம் இது –நமன்று =சேவித்து -சமன் கொள் வீடு -சாம்யா பத்தி
ஒக்க சிம்காசனம் போட்டு -நமக்கும் பரமம் சாம்யம் கிடைக்கும் -ஐக் யா  பத்தி மோட்ஷம் சங்கரர் இரண்டற கலக்கிறான் –
அவனுக்கு நிகர் தான் -சக பிராமணம் சா தர்ம நிலை –எட்டு கல்யாண குணங்களில் —
அபஹத பாப்மா-விஜர -விமிர்த்து -விசோக- விஜிக்த்சக அபி பாதக -தாகம் இன்றி – சத்ய  காம சத்ய சங்கல்பம் —
வாசு தேவ சர்மம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் அவனே
நாஜி கேதசுக்கு இதை தான் யம தர்ம ராஜன் சொல்லி காண்பித்தான் —
தடம் குன்றம் –வீசி நடம் ஆடலாம் இங்கு போல் அங்கும் –பனி விடை செய்து நமக்கு ஆனந்தம் கொண்டு அவன் ஆனந்தம்–
திரு வேம்கடமே கொடுக்கும் –நங்கட்க்கு சமன் கொள் வீடு கொடுக்கும் திரு மலையே

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8

ஊரை காத்தவன் முதலில்-குன்றம் எடுத்து -காத்தானே  உலகம் காத்தவன் அடுத்து திரு விக்ரமன் -வந்து சேர்ந்த இடம் –
வராக ஷேத்ரம் –முதலில் எல்லாம் அவனுக்கு -அனந்தாழ்வான் புஷ்ப கைங்கர்யம் -கூப்பிட வர வில்லை கோபம் கொண்டு–
நீயும் வந்து சேர்ந்தவன்- சென்று சேர் -ஆழ்வாரை பாட வைத்தாயே -இருவரும் வந்து சேர்ந்தவர்கள் தானே ஆச்சார்யர் நியமனத்தால் வந்தேன் —
திரு விக்ரமனே திரு வேம்கடத்தான் –உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் –கோவர்த்தன கிரி தாரியே திரு வேம்கடத்தான்

ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி
வீயுமாறு செய்வான் திரு வேம்கடத்து
ஆயன் நாள் மலராம் அடி  தாமரை
வாய் உள்ளும் மனத்து உள்ளும் வைப்பார்கட்கே 3-3-9

பிணி -ஷட் பாவ விகாரம் அசதி -வினச்யதே இருக்கிறது பிறக்கிறது மாறுகிறது வளர் கிறது தேய் கிறது மாய்கிறது —
ஆயன் -போகுமாறு செய்வான் -வாயால் ஓவாது உரைக்கும் உரை -மறக்காமல் மனசில் வைத்து –அனுக்ரகத்தால் ஓயும் —
பாலை குடிக்க காலை பிடிப்பார் உண்டோ -வேப்பம் குடி நீரையா குடிக்க சொல்கிறார் இல்லையே –
சம்சாரிகளே என்கிறார் ஆழ்வார் -மலரை ஒத்த திருவடிகள்

வைத்த நாள் வரை எல்லை குறுகி சென்று
எய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பு அனையான் திரு வேம்கடம்
மொய்த்த சோலை மொய் பூம் தடம் தாழ்வரே   3-3-10

சோலை உடன் கூடிய குன்றில் வந்து சேர்ந்தான் பாம்பு அணை விட்டு வந்தான் –பலம் குறை முன்பு வைத்த நாள் வரை
காத்து இருக்காமல் -எல்லை குறுகி சென்று சரண் அடையாமல்–சரீரமும் நெஞ்சும்  -நின்றவா நில்லா நெஞ்சினை உடைத்து –
திரு நாரணன் தாழ் காலம் பெற சிந்தித்து இருமினோ–அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லி வைத்தேன் —
நினைவு பொறுப்பை-அஹம் ச்மாராமி மத பக்தம் -கொண்டு -நம்மை வாழ்விகிறான்

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்  சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
வாழ்வார் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே 3-3-11

தாள் பரப்பி -திரு விக்ரமன்-மண் தாவிய ஈசன்– பூமியில் நம் தலை கொதிக்க -தாமரை போன்ற திருவடிகளை வைத்தான் –
பொழில் சூழ்ந்த  திரு குருகூர் –திருவடி தீண்டிய -குடை பிடிக்கும் படி நீள் பொழில் -கேள் =ஒப்பு இல்லாதா ஆயிரம் பாசுரம்–
அதில் இப் பத்தும் ஒப்பு இல்லை –வாழ்வார் வாழ்வு எய்தி -கைங்கர்ய சாம்ராஜ்யம் பெற்று  வாழ்வார்கள் —
நான் என்றும் முடிவு இல்லா துன்பம் கொடுக்க அதை துடைக்க லஷ்மணன் என்றானே பரதன் -அது போலே வாழ்த்துவார்கள் —
லஷ்மணனை பெற்று இன்பம் பட்டேன் தசரதன் -ஞாலம் புகழவே –அது போலே நாமும் கைங்கர்யம் பண்ணி புகழ படுவோம்

————————————————-

இவனே ஸ்ரீ கண்ணபிரான்-
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8-

ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி வீயுமாறு செய்வான் திரு வேம்கடத்து
ஆயன் நாள் மலராம் அடி  தாமரை வாய் உள்ளும் மனத்து உள்ளும் வைப்பார்கட்கே 3-3-9-

இவனே ஸ்ரீ உலகளந்த உத்தமன்
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்  சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர் வாழ்வார் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே 3-3-11

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: