ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–திரு மங்கை ஆழ்வார்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திரு குரும் தாண்டகம் 19 திரு மங்கை ஆழ்வாருக்கு  /
நம் ஆழ்வார் திரு விருத்தம்- 99 நான் கண்ட நல்லதுவே /சஞ்சயன் மதிர் மம /மதுர கவி ஆழ்வார் அண்ணிக்கும் அமுதூரும் உயிரான பாசுரம்கள்

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை வியன் திரு அரங்கம் மேய
செம்மையை கருமை தன்னை திரு மலை ஒருமை யானை
தன்மையை நினைவார் என் தன் தலை மிசை மன்னுவாரே–திரு குறுந்தாண்டகம்- 9

இந்த லோகத்தில் தன்னை பற்றிய ஞான கை தா -நடுவே வந்து உய்ய கொண்டவன்–மறுமை தன்னை -கைங்கர்யம் கொடுப்ப
அவன் -எமக்கு வீடாகி நின்ற மெய்ம்மை-சத்யம்- -உபாயமாகவும் –சத்யமான வழி இது ஒன்றே —
திரு அரங்கம் மேய செம்மையை கருமை தன்னை–நான்கு யுகம் நான்கு வர்ணம் நிறம் வெளிது சிவந்து கரும் பச்சை கருமை–
கலி யுகம்  இயற்க்கை நிறம்-கேட்டு நிறம் மாற வேண்டிய காரணம் இல்லை–திரு மலை ஒருமையானை-
ஏக சொரூபம் கண்ணாவான்-மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்–நடுவில் திரு மலை மேல் நிற்ப்பதால்-
சௌலப்யம் தன்மை-இரட்டை குழந்தைக்கும் தாய் மார்பில் கொடுத்து கொண்டு–என் தன் தலை மேல்-
அடியார்க்கு அடியார் ..-தலை மிசை மன்னுவாரே -அவன் திருவடி விட்டு இவர்கள் திருவடி பற்றுகிறார்
திரு பாவை ஜீயர் போலே திரு நெடும் தாண்டகத்தில் பராசர பட்டார் ஈடு பாடு –நம் ஜீயரை  வென்றார் இதை கொண்டே — –
மாதவாசார்யர் இயல் பெயர்—திருத்திய பின் ஓரான் வழியில் பட்டருக்கு பின் குறு பரம்பரையில் இடம் கொடுத்தார் –
யக்ஜ மூர்த்தியை ஸ்வாமி–அருளாளா பெருமாள் எம்பெருமானார் திரு நாமமும் கொடுத்து  
தன் கோவில் ஆழ்வார் திரு ஆராதன கைங்கர்யம் கொடுத்தார் –ஒன்பது திவ்ய தேசம் ஒரே பாசுரத்தில் அருளி இருக்கிறார்

நீரகத்தாய் நெடு வரியின் உச்சி மேலாய்
நிலா திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெக்கா வுல்லாய்
உள்ளுவார் உள்ளத்தாய்உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார் வானத்து உள்ளே கள்வா
காமரு பூம் காவிரியின் தென் பால் மன்னு
பேரகத்தாய் பேராது  என் நெஞ்சின் உள்ளே
பெருமான் உன் திருவடியே பேனினேனே–திரு நெடும் தாண்டகத்தில்-8

வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம்–தாள் பரப்பி மண் தாவிய ஈசனே இங்கு சேவை–
ஒவ் ஒரு குணம் காட்ட இங்கு 9 திவ்ய தேசம் அருளி இருக்கிறார் ..

வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
மழலையாய்மதில் கச்சி ஊராய் பேராய்
கொங்கத்தார் வளம் கொன்றை அலங்கல் மார்வன்
குல வரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற் கடலாய் பாரின் மேலாய்
பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா
எங்குற்றாய் எம் பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இங்கனமே உழி தருகேனே–திரு நெடும் தாண்டகத்தில்-9

பிரயோஜனாந்தரருக்கும் சாதனாந்தருக்கும் சேவை -கானமமும் வானரமும் வேடம் உடை வேம்கடம்

பொன்னானாய் பொழில் எழும் காவல் பூண்ட
புகழ் ஆனாய்  இகழ் வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னல் அல்லால்
என் அறிவன் ஏழையேன்? உலகம் ஏத்தும்
தென்னானாய் வடவானாய் குட பாலனாய்
குண பால மத யானாய் இமையோர்க்கும் என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தானாய் முதலானாயே -திரு நெடும் தாண்டகத்தில்-10

இகழ்ச்சி உண்டு இருந்தாலும் தொண்டன் -நீ தானே அடிமை தனம் காட்டி வளர்த்தாய் –யானை-சதா தர்சநீயம் —
தானே தூக்கி வைத்து கொள்ளும் -வேண்டானால் தள்ளி விடும்-பரதன் குகன் /ச்வாதந்த்ரம்-செருக்கு –மாலை யாருக்கும் போட்டு ராஜா ஆக்கும் —
குளித்து விட்ட உடனே மண்ணை தலையில் போட்டு கொள்ளும் –நெறி காட்டி நீக்குவான் பல நீ காட்டி படுப்பாயோ –
கையரை தானே எடுத்து கொடுக்கும் -பக்தி இவனே வளர்ப்பான் –கண் நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ண பண்ணிய பெருமான் ..

பக்தி ஒன்றாலே அவனை அறிய முடியும் -நான்கு ஆனை கட்டினார் கலியன் உலகம் ஏத்தும் -தென் ஆனை-திரு மால் இரும் சோலை
வட ஆனை- -நித்யர் வானவர் மன்னவர் அனைவருக்கும் திரு வேம்கடம் -மேற்கு -திரு அரங்கம் -கிழக்கே திரு கண்ண புரம் –
வேலை மோதும் மதில் சூழ் -சமுத்திர கரை அன்று இருந்து இருக்கும் –குண பால மத யானை- உடையவர் மன்னனாரை அருளி செய்வார் –
பெரிய முதலியார் -நாத முனிகள் ஆளவந்தார் -அபிமானத்தால் -காட்டு மன்னார்  குடி கோவில் ராஜ மன்னாரை சொல்வார் —
காடும் மன்னார் ஸ்ரீ வைஷ்ணவ சப்ரதாய முதலிகளை காட்டி கொடுத்தவர்

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்  
கடி பொழில் சூழ் கண புரத்து  என் கனியே என்றும்  
மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திரு வேம்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் கலைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோர சோர் கின்றாளே–திரு நெடும் தாண்டகத்தில்-16

அடி தோறும் அர்ச்சை சேர்த்து அருளுவார் –திவத்திலும் பசு நிறை மேய்த்து உவத்தி -கன்று மேய்த்து இனிது உகக்கிறான்-
சரணாகதி பண்ணாதவர்க்கு காய்-பொழில் சூழ்ந்த -காய்த்து கனித்த பழமே சௌரி பெருமாள்–
மன்றம் அமர -பெரிய திரு நாள் முடிந்த பின்பும் -மேலே நடந்து கொண்டே இருக்கும் படியே தோன்றுவது போல் –
கூத்தாட்டம் முடிந்து கண்ணன் போன பின்பும் -ஆடுவது போலே தோன்றும் –அனைவரும் அவனுக்கு ஆடுவர்
தும்புரு நாரதர் அப்சரஸ் ஸ்திரீகள்- இவன் தானே ஆடி –மகிழ்ந்தான் -பார்த்தவர் மட்டும் இல்லை தானே மகிழ்ந்தான் –
பிராப்யமும் பிராப்தாவும் பிராப்திக்கு உகப்பானும் அவனே தான் ..-இங்கு ஊருக்கு கூத்தாடினது திரு வேம்கடத்தில் உலகத்துக்கு ஆடுகிறான்–
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி வலது திரு கையால் காட்டி -பாபம் வற்ற வைக்க கடி ஹஸ்தம் காட்டி –கூத்தாடி காட்டுகிறான்-
இங்கும் நடுவில் அவ் உலகம் இவ் உலகம் நடுவில் -அங்கு மன்றத்தில் அம்பலத்தில் நடு போலே மைந்தா -இளையவன் -காளை புகுத்த கனா கண்டேன் –

சிறிய திரு மடல்–25 திவ்ய தேசங்கள்- சீரார் திரு வேம்கடமே -முதலில் அருளுகிறார்
அவன் -குணங்கள் அழிக்க போகிறேன் என்று –தமிழில் மடல் எடுத்தவர் ஆழ்வார் மட்டுமே –
சிறிய திரு மடலில் விபவம் அழிக்க பெரிய திரு மடலில் அர்ச்சை அழிக்க –பறை அடித்து சொல்ல போகிறேன்
காரார் திரு மேனி காணும் அளவும் போய் சொல்ல போகிறேன் என்றவர்–
முதலில் திரு வேம்கடம் -நித்யர் சம்சாரி இருவருக்கும் உபய விபூதிக்கும் ஆள் ஆகா தா படி என் வடிவை காட்ட போகிறேன் —

பெரிய திரு மடல் -தென்னன்  உயர் பொருப்பும் தெய்வ வட மலையும்–பிராட்டிக்கு திரு முலை தடங்கள் –
மன்னர்கள் எல்லோரும்  -என்னது என்று அபிமானம் இருக்கும் படி தெற்கு திரு மலை -மேரு ஹிமாசலம் விந்தியா-காந்தன் விரும்பி கிடக்கும் இடங்களை தானே கொண்டாடனும் –என்று இவை– தென் கொள் திசைக்கு திலகம் ..-நாங்கள் குன்றம் கை விடான்–தெய்வ தன்மை பொருந்திய வடக்கு திரு மலை —
குபேரன் சித்ர ரதம் போலே ராமன் சித்ர கூடம் மலையில் அழகர் திரு மால் இரும் சோலை மலையில் ஆனந்தம் அடைவது போல் இருந்தானாம் ..
அழகரே வந்த இடம் தெய்வ வட மலையாம் -மின்னி மழை தவழும் வேம்கடத்து எம் வித்தகனே – –
குச்சி வழியே புக்கு –மேகம் ஆராதனம் பண்ணும் -ஆஸ்ரித வித்தகனே -மேகங்கள் மின்னலை கை வழக்காக கொண்டு வருமாம் —
மின்னகத்து மங்கையை திரு மார்பில் கொண்டவன்- மேகம் அவன் மின்னல் அலர் மேல் மங்கை

66 பாசுரங்கள் மொத்தம் அனுபவித்தார்-

————————————-

திரு குறுந்தாண்டகம்- 9-/திரு நெடும் தாண்டகத்தில்-9-10-16-/சிறிய திரு மடல்–25/பெரிய திரு மடல்-6-124/-ஆக -7-பாசுரங்கள் –

ஸ்ரீ கண்ணபிரான் இவன்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்   கடி பொழில் சூழ் கண புரத்து  என் கனியே என்றும்  
மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் வட திரு வேம்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்– துணை முலை மேல் துளி சோர சோர் கின்றாளே–திரு நெடும் தாண்டகத்தில்-16

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: