ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–திரு மங்கை ஆழ்வார்-பெரிய திரு மொழி-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

செம் பொன் செய் கோவில் -நாங்கை 4 நாங்கூர் 7 /நாங்கை நன் நடு வுள்– என்று அருளி இருக்கிறார் —  
மணி மாட  கோவில் -சூர்யன் கிரணம் பெருமாள் திரு முகம் உத்தராயணம்  தட்ஷினாயணம் பொழுதும் இன்றும் /
இங்கு தான் கருட சேவை மங்களாசாசனம் /அனுபவம் பின்னாட்டி இங்கும் திரு வேம்கடம் அனுபவிகிறார்

அன்றிய வாணன் ஆயிரம் தோளும்
துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேம்கட மலை மேல்
மேவிய வேத நல் விளக்கை
தென் திசை திலதம் அனையவர் நாங்கை
செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை
வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே—-4-3-8-

வணங்கி வாழ்ந்து ஒழிந்தேனே –பாலையும் சக்கரையையும் சேர்த்தல் போல செம் பொன் கோவிலையும் திரு வேம்கடத்தையும் சேர்த்து அனுபவிகிறார்
நந்த கோபாலன் யசோதை கண்ணன் -கட்டிலையும் தொட்டிலையும் பிடித்து யசோதை நடுவில் ..காவலுக்கு நந்தன் முதலில் ..
பேரனையே -அணிருத்னன்- கட்டில் உடன் கொண்டு போன இடம் /காமனை பயந்த காளை இவன் –சாஷாத் மன்மத மன்மதன் —
கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபாலன்  குமரன் –பாணாசுரன் அறிந்த ரகசியம் ராவணன் அறிந்து
பிராட்டியையும் பெருமாளையும் சேர்த்து சிறை படுத்தி இருந்தால் பிழைத்து இருப்பான்
நேர் செறிந்தான்  கொடி கோழி கொண்டான் பின்னும் நேர் செறிந்தான் எறியும் அனலோன் அலம் போதும் —..
பின்னும் நேர் செறிந்தான் முக் கண் மூர்த்தியும் கார்த்திகை யானும் கரி முகத்தானும் அனலும் முக் கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகு இட்டு மூ வுலகும் பூத்தவனே ..தீர்த்தனை ஏத்தும் ராமானுசன் -அன்றிய சீறி எதிர்த்து வந்தான்  —
ஈர் ஐநூறு துணித்தான் -வாணன் பிழை பொறுத்தான் —
கோவிந்தம் பஜம் மூடமதே -ஆதி சங்கர பகவத் -முதல் வைஷ்ணவர் தான் ..யாதவ பிரகாசர் இடம் ஸ்ரீ ராமானுஜர் கற்றாரே
பாகு பாடு இன்றி அவர்கள் இருந்தார்கள் –விரோதி போக்கும் -அவனே திரு வேம்கட மலை மேல் மேவிய  வேத நல விளக்கு —
சுயம் பிராகாசம் –பர பிரகாசம் மற்றவரால் விளக்க படுவது -அவன் தன்னை தானே காட்டி கொடுப்பான் ..
வேதத்தால் காட்ட படுபவன் வேத விளக்கு -இரண்டும் உண்டு வேததினாலே-சப்தம் ஒன்றாலே – –
பிரத்யட்ஷம் அனுமானம் இரண்டாலும் அறிய முடியாத –வேதம் கொடுத்து தன்னை தானே காட்டி கொடுக்கிறான்  —
தென் திசை திலகம் போல் இருக்கும் செம் பொன்  செய் கோவில் –மன்றம் -உயர்ந்தவர்கள் சேர்ந்து -பாகவத சேர்க்கை -பொலிய ஒலி வரும் படி

வேடார் திரு வேம்கடம் மேய விளக்கே!
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திரு வெள்ளக்  குளத்தாய்
பாடா வருவான் வினையாயின பாற்றே  4-7-4

இவை அனைத்தையும்-சொரூப ரூப குணா விபவம் – திரு வேம்கடத்தில் கண்டு கொள்ளலாம் –
விளக்கு ஏற்ற கூடு போல வேடர்கள் சுற்றி காத்து இருக்கிறார்கள் 
வேடர்கள் பரிவும் ரட்ஷிக்க ஆண்மை கொண்ட வேடர்கள் –இந்த விளக்கு திரு வெள்ள குளம் இருந்து வந்ததாம் —
வேதியர் மல்கி வாழும்  திரு நாங்கூர் —உன் அருகில் வந்து -பூ உடன் இருக்கும் நாறும் மணக்கும் -சர்வ கந்தன் –
பெரியோர் சகவாசம் குணம் நமக்கும் வருமே -சாம்யா பத்தி பிரார்த்திக்கிறார் -குமுத வல்லி நாச்சியார் பிறந்தகம் –
அண்ணன் கோவில் -என் பாபம் விரட்டி அடுப்பாய்

வாம் பரி யுக மன்னர் தம் உயர் செக ஐவர்கட்க்கு   அரசு அளித்த
காம்பினார் திரு வேம்கட பொருப்ப! நின் காதலை அருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில் வாயது துவர் பெய்த
தீம் பலம் கனித் தேன் அது நுகர் திரு வெள்ளறை நின்றானே 5-3-4

எதிர்த்து வரும் குதிரைகள் வாழும் படி/ காம்பினார் மூங்கில்கள் சேர்ந்த -திரு வெள்ளறை கைங்கர்யம் பிரார்த்திக்கிறார் –
எடுத்த கார்யம் முடி -என்னை ஆழ்வார் ஆக்கினாய் கைங்கர்யம் கொடுக்க வேண்டாமோ — பொற்பு -மலை –
நின் காதலை அருள்-பூர்வ ஷணம் வேண்டிய -ஷேமுபுசி பக்தி ரூபம் -ஞானம் கலந்த பக்தி சுவாமி ராமானுஜர் பிரார்தித்தாரே –
மதி நலம் -ஞானம் கனிந்த நலமான பக்தி -பக்திச்த ஞான விசேஷம் -மடப்பம் கொண்ட குயில்–வாய் துவர்ப்பு –
மாம் பலம் குத்தி -துவர்ப்பு மாத்த -தீம் பல கனி பலா பழம் வாய் வைத்து -தேனில் உண்டு மாற்றி கொண்டதாம் —
பார்த்தன் தன தேர் முன் -மண் அஞ்ச பாரத போர் படை தொட்டான் -எந்த குதிரை கொன்றான் எந்த மன்னரை கொன்றான் –
ஐவர்கட்க்கு அரசு அளித்தான் எயவர்கத்க்கு திறன்கள் காட்டி இட்டு செய்த மாயம் –தானே கொன்று பெயரை அர்ஜுனன் –
கருவி தானே அவன் -விஸ்வரூபத்தில் காட்டினானே அதனாலே கண்ணனே கொன்றது போலே காட்டினான் –
கொல்லை அரக்கியை மூக்கு அறிந்திட்ட குமரனார் சொல்லும் பொய் ஆனால் போல லஷ்மணன் பெருமாள் திரு கரம் போலே
அர்ஜுனன் கண்ணனின் கருவி –விபவம் சொல்லி அர்ச்சை அருளி இருக்கிறார் –
ஸ்ரீ தேவி நாச்சியார் -ஆக உள்ள திரு வெள்ளறையும் திரு வேம்கடமும் சேர்ந்து அருளி இருக்கிறார்

வெருவாதாள் வாய் வெருவி
வேம்கடமே! வேம்கடமே! என்கின்றாளால்
மருவாளால் என் குடம் கால் வாள் நெடும் கண்
துயில் மறந்தாள் வண்டார் கொண்ட
லுருவாளன் வானவர் தம் உயிராளன்  
ஒலி திரை நீர்ப் பைவம் கொண்ட
திருவாளன் என் மகளை செய்தனகள்
எங்கனம்  நான் சிந்திக்கேனே 5-5-1

திரு அரங்கம் 50 பாசுரங்கள் மங்களாசாசனம் –தாயார் வார்த்தை இதில்–அஞ்சாதவள் இவள் மகள்–மறைக்க தெரியாது —
ஐதீகம் பட்டார் கோஷ்டியில் தும்பிய ஒருவர் –அனந்தாழ்வான் இடம் சொல்லி மீண்டும் வந்து இந்த பாசுரம் சொல்லி  –
பட்டர் இது தாய் பாசுரம் தானே -மகள் திரு அரங்கமே சொல்லி இருப்பாள் -வாய் வெருவி தாயார் கேட்க்காமல்
வேம்கடமே என்று சொல்லி இருப்பதாக சொன்னாராம் –ராவணனை கொன்ற  ஸ்ரீ ராமன் தெற்கு வாசல் வழியாகாவும்  
திரு வேம்கடத்தானே வடக்கு வாசல் வழியாக வந்து சயனித்தாராம் என்று பட்டார் நன்ஜீயருக்கு  சொல்லி —
அதனால் இவனே அவனே என்றாராம் -வேம்கடமே -அர்ச்சை -பர வியூகம் விபவம் அந்தர்யாமி விட்டு என்கின்றாள் —
இரண்டு தடவை இல்லை வெருவி கொண்டே தாமரை கண்களால் நோக்காய் நோக்காய் அரையர் சொல்லி கொண்டே இருக்க –
அரையர் ஆக்கி நோக்கினதால் தானே –இன்று நாம் இருப்பது அவன் நமக்கு கொடுத்த பரிசு
நாளை நாம் பண்ணுவது அவனுக்கு கொடுக்கும் பரிசு -சொல்லும் அழகுக்கு சொல்லி கொண்டு இருந்தாராம் அரையர் —
தாயார் நானும் சொல்லி பார்த்தேன் மகள் சொல்வது போல் இல்லை என்கிறாளாம்

அனந்தாழ்வான் திரு வேம்கடம் சொல்வது போலே பட்டார் அழகிய மணவாளன் சொல்வது போலே அரவிந்த லோசனன்
நம் ஆழ்வார் சொல்வது போலே திரு கண்ண புரம் திரு மங்கை ஆழ்வார் சொல்வது போலே சோமாசி ஆண்டான்
எம்பெருமானார் சொல்வது போலே இருந்ததாம் –இவளை பிரிந்து அவன் துடிப்பு இருக்க –
ஸ்ரீ ராமன் சீதை பிராட்டி பிரிந்து துடித்தது போலே /இங்கு இவள் துடிக்கிறாள் –மடியில் சேர பெறாமல்-
வாள் ஒத்த கூர்மை நெடும் கண் -பகவானை அகப் படுத்தி கொள்ள கூடிய கண்கள் இங்கு அவன் இடத்தில் அகப் பட்டு துடிக்கிறாள் —
வண்டார் -தேனீக்கள் படிந்த மேகம்–திரு வேம்கட மேகம் தேன் குடித்து இருக்குமாம்-அதை குடிக்க வண்டு படிந்து உள்ளதாம் —
திருவாளன் -ஸ்ரிய பதியாய் இருந்து மகளை துன்பம் படுத்துகிறானே —

சிந்தனையை தவ நெறியை திரு மாலை பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வட மலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்ந்த
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே 5-6-7

முப்பிரி ஊட்டிய -திரு கோவலூர் திரு அரங்கம் திரு வேம்கடம்
மனோ ரதம் ஆசை படும் படி இருக்கும் பிராப்யம் /தவ நெறி -அதை அடைய வழியும் அவனே
நாராயணனே நமக்கே பறை தருவான் போலே –கண்ணே உன்னை காண எண்ணே கொண்ட -கண்ணாலே கண்ணை காண்பது —
திரு மாலே சிந்தனை திரு மாலே தவ நெறி –அடையும் வழியாக இருக்கும் பொழுதும் ஸ்ரீ தேவி சம்பந்தம் / சிந்தனை –
ஸ்ரீ மதே நாராயண கைங்கர்யம் பண்ணும் பொழுதும் அவள் வேண்டுமே –பிரியாது-வட மலையை பிரியாமல் இருந்த
எம்பெருமான் வந்து பிரியாமல் என் மனத்து இருந்தான் –வட மலையை -மலையானை இல்லை –மலையே திரு மேனி —
வட மா மலை உச்சியே அவனே –பொழில் கோவல்–இதையும் சொல்லி -உலகு அளந்த திருவடி நினைவு வர –
பிராப்யம் பிராபகம் இரண்டையும் சொன்னதும் இணை திருவடி நினைவு வர –அந்தணனை- பிராமண பிள்ளையாய் வாமனன் போனானே —
வினீத வேஷம் -ஸ்வாமி யாய் சொத்தை மீட்க்க போனான் -என் சேஷத்வம் பரி போகாமல் வந்து அருள்வாய் என்கிறார்—
தாள் பரப்பி மண் தாவிய ஈசனே திரு வேம்கடத்தான் -ஆழ்வார் –
பிரதி வாத பயங்கர அண்ணன் ஸ்வாமிகள் அருளிய சுப்ரபாதம் -லஷ்மி நிவாசன்–நிரவத்ய -தயைக சிந்தவ் –
குற்றம் இன்றி குணம் நிறைந்த -குணங்களுக்கு கொள்கலம்– இரண்டுக்கும் அவள் விட்டு பிரியாமல்  இருப்பதே காரணம் –
அகில  ஹேய பிரத்ய நீகன் கல்யாண குண   தாயகன் –சம்சார சாகர சமுத்திர அணைக்க சேது — தாண்டுவிக்கும் பாலம்–
அணை தடுக்கிறவன் – திரு வெக்கா வெக்கனை–தடுத்து நிற்கும் அணை மட்டும் இல்லை இக்கரை இல் இருந்து அக்கரை போக தாண்டுவிகிறான் —
போய் சேருமிடம் வேற அவன் வேறு இல்லையே –தாண்டி போகிற இடம் சேது இல்லையே
தயைக சிந்து என்பதால் சேது தாண்டி குண கடலில் சேருவோம் -பிராப்யமும் பிராபகமும் அவன் தான்–
பிராட்டி சம்பந்தம் இரு பக்கமும் உண்டு–வேதாந்த வேத்ய  நிஜ வைபவம் பக்த போக்ய  
ஸ்ரீ வேங்கட சலபதே சொல்லி காடினதே -தனக்கும் தான் தன்மை அறிவரியான் –பக்த போக்யன்-கிட்டே வந்து சேவை சாதிகிறானே–

மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண்
தாள் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திரு வேம்கடத்தானை
நான் சென்று நாடி நறை யூரில் கண்டேனே 6-8-1

திரு நறை யூரிலும் ஸ்ரீ நிவாசன் நாச்சியார் கோவில்-
கல் கருடன் சேவை–பிரம  சாரி வேஷம் -விபவம் சொல்லி அர்ச்சை சொல்வார்—மான் தோல் தோளில் கொண்டு–
மாணியாய்-பூர்வ ஜன்மமும் இரந்தே இருப்பது போல் கை ஏந்திய அழகாம் –மாவலி மண் -சொல்லலாமா -அவன் சொத்து தான் —
உலகம் முழுவதும் பேச வைத்தானே அதனால் -தான் கொண்டான் -உலகம் பேசும் படி கொண்டான் -ஒவ்தர்யம் வாரி கொடுத்தான்
கொடை யாளி பட்டமும் கொடுத்து –தாளால் -ஆழ்வார்கள் திரு முடி -தாயார் வருடும் திரு வடி –
இப்படி கல்லும் மண்ணும் கடலும் கடந்து அளந்தானே -பெருமான்–கொண்டு- தீர்த்தம் கொண்டு  அளந்தான் —
பெற்ற ஷணமே–அளந்து முடித்தான் –இரண்டு தீர்த்த தாரையும் ஒருசேர விழ –கங்கை நீரும்=திருவடி தீர்த்தமும்
குறை கொண்டு குண்டிகை நீரை –இந்த கையில் பட்ட தீர்த்தம் சிலீர் பூரிக்க வளர்ந்தானாம் அளந்தானாம்–
இரந்தவனே பெருமான்–இதனாலே வைபவம் –தாழ்ச்சியாலே பெயர் வாங்கி கொண்டவன் –சாரல்-தாள் வரை –
தேன் ஓடுகிறதாம் –திரு விக்ரமன் பின் பட்டார் சேவிக்க திரு வேம்கடம் -நான் நாடி -இத்தனை நாளும் வேறு எங்கேயோ
நாடி சென்று அவன் வரும் பொழுது விலக்கினவன் நான் சென்று நாடி –முதல் அடி அவனது தான் -தாளால் அளந்தவன் முதலில் –
அது பலித்தது நான் சென்று நாடி–விடாய்த இடத்தில் தண்ணீர் கிடைத்தது போலே –அருகாத பயணம்  போய் பரம  பதத்தில் காண்கை
அன்றிக்கே -இங்கேயே கிடைத்ததே –திரு வேம்கடம் நினைவு வர அங்கேயே போக வேண்டாம் படி திரு நறையூரில் கண்டேனே ..

தாரேன் பிறர்க்கு உன் அருள் என் இடை வைத்தாய்  ஆரேன் அதுவே பருகி களிகின்றேன் 
காரேய் கடலே மலையே திரு கோட்டி  ஊரே உகந்தாயை உகந்து அடியேனே–திரு நறையூர் – பாசுரம் -7-1-3-

மலை- சொன்னாலே திரு மலை– திரு வேம்கடம் தான் –உன் அருளை என் இடம் வைத்தாய்-
எங்கும் பக்கம் நோக்கு அறியாத விசேஷ கடாஷம்– என் -நீசன்-நான் என்று பார்க்காமல்- உன்னையும் பார்க்காமல்–
தாரேன் பிறர்க்கு-  இன்பம் பகிர்ந்து உண்ண  வேண்டுமே அது கொடுக்க எனக்கு யோக்யதை இல்லை –கொடுக்க வேண்டியது நீ –
கிடைத்ததை உபதேசிப்பேன்– அனுபவித்து ஆர வில்லை–எக் காலத்து எந்தையாய் என்  உள் மன்னில் எக் காலத்தில் மற்று
யாது ஒன்றும் வேண்டேன் அக்கார கனியே– திரு மாலை ஆண்டான்- ராமானுஜர் -நிர்வாகம் —
ஒரு தடவை வந்து போனால் போதும் என்று இல்லை — எப் பொழுது இருக்க வேண்டும் தழுவனும் என்று இருப்பவர் ஆழ்வார்–
நம் போல் போய் கொண்டே சேவித்து சீக்கிரம் கிளம்பி கணக்கு பண்ணி சேவிப்பவர் இல்லையே —
ஆசை விடாமல்-இயல்புக்கு ஏற்று -விஸ்வாமித்ரர் ஸ்ருஷ்ட்டி- இல்லையோ –ஸ்வாமி 9/10 பாசுரங்களில் வேறு நிர்வாகம் அருளி இருக்கிறார் – 
எக் காலத்திலும் மற்று யார் ஒன்றும் வேண்டேன்– நீ மனசில் இருப்பதை விட வேறு ஒன்றும் கேட்க மாட்டேன் –
திருக் கோஷ்டியூர் நம்பி இதை கேட்டதும் ஆளவந்தார் இதை அருளி கேட்டு இருக்கிறேன் என்றார் -ஆளவந்தார் கொடுத்த அர்த்தம் தான்—
அதுவே பருகி களிகின்றேன்–இதை கொடுக்க -கரி கடல்-திரு பாற்கடல்/மலையே -திருவேம்கடமே- திருக் கோஷ்டியூரே-
உகந்தாய்- நானும் உகந்தேன் அடிமை பண்பு கொண்டு-சௌகரி பல வடிவு கொண்டது போல –ஏ காரம்
தனித் தனியே இங்கு இருந்தது எல்லாம் 108 திவ்ய தேசங்களில் இருப்பதற்கு சமம்–தனி தனி ஏற்றம் –
சொவ்பரி முனிவர்  தவம் இருந்து மோட்ஷம் அடைய தனியாக நதியில் கீழ் இருந்து இருக்க –
கண் திறந்து பார்த்து தாய் மீன் 50 குட்டிகள் உடன் உளையாட மாந்தாதா ராஜா இடம் சென்று 50 பெண்களை கல்யாணம் பண்ணி
தனி தனி மாளிகை –ஒவ் ஒருவரும் தம் கூடவே இருப்பது போல் –
ஆபாச விருத்திக்கு ஐம்பது சரீரம்–ஆதி சேஷன் சென்றால் குடையாம்-கைங்கர்யத்துக்கு வடிவம் கொள்வது –
அது போல கடலே மலையே திரு கோஷ்டியூரே -108 திரு மேனி உடன் சேவை சாதிக்கிறான் பர கால நாயகியை கொள்ள

ஆங்கு வென் நகரத்து அழுந்தும் போது
அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு தாமரை அன்ன பொன்னார் அடி
எம்பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற
வேம்கடத்து அரியை பரி கீறியை
வெண்ணெய் வுண்டு உரலின் இடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி
என் மனம் சிந்தை செய்யாதே 7-3-5

சரணாகதி அடைந்தவனை ரட்ஷிகிறான் -கர்ம பலன் அனுபவித்தே தீரனும் சாஸ்திரம் போய் ஆக்க முடியாது
பீஷ்மர் தம் தகப்பன் சாத்தனு பித்ரு பிண்டம் நேராகா கொடுக்காமல் சாஸ்திரம் படி கொடுத்த கதை /
தாங்கு தாமர அன்ன -ஆசன பத்மம் — அடி கொண்டு என்னின் தாங்கினான் -பொன் -சுத்த ச்வாபம்
தாமரை செவ்வி நாற்றம் குளிர்த்தி அழகு மிருது ச்வாபம்  இவற்றுக்கு –எனக்கு உபகாரகன் எம்பிரான் —
திருவடி காட்டி கொடுத்தானே –மோஷ இஷ்யாமி மா சுச –உம்பர்க்கு அணியாய் -சாமான்யன் இல்லை இவன் –
வேம்கடத்து -நமக்காக -அரியை-பகைவன் –பயம் உயர்ந்தவன் வெறுப்பு -சிம்ஹம் –அர்த்தம்–
பரி கீறியை கேசி ஹந்தன் கேசவன் –செஷ்டிதம் நினைவு வர -வெண்ணெய் உண்டான் உரல் இடை ஆப்புண்டான் –
கழித்து வந்து இதில் நிற்கிறார் –கண்ணன் அளவும் வந்து நவநீத சேஷ்டிதத்தில் நிற்கிறார் —
கரும்பினை தேனை நல் பாலினை –தனி வைபவம் மருந்தும் விருந்தும் போக்கியம் -ச்வாதந்த்ர்யம் -செருக்கு -தீம் கரும்பு–என்கிறார்

எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை
வாசவர் குழலாள்மலை மங்கை தன்
பங்கனை பங்கில் வைத்து உகந்தான் தன்னைப்
பான்மையை பனி மா மதியம் தவழ
மன்குலை   சுடரை வட மா மலை
யுச்சியை நச்சி நாம் வணங்கப் படும்
கங்குலை பகலை சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே 7-10-3

பெரும் புறக் கடல்- பெரிய திரு மேனி -காம் போட்ட புடவை சாத்துவார்கள் கருடனுக்கு  அமிர்த கலசம் –
இவனை என்றே சொல்லுவார் பத்து பாசுரங்களிலும் –அருள் செய்கின்ற ஈசனை–ருத்ரன் பார்வதிக்கு இடம் கொடுத்தவனை-
அவனுக்கு -தான் இடம் கொடுத்து –கூராளும் தனி உடம்பன்–உகந்தான் தன்னை -போக்கிடம் இன்றி இருக்கும் நமக்கும்
அபிமானியான ஈசனனுக்கும் ஒக்க அருள் புரிகிறான்–ச்வாபமிது –புழு மணல் மேட்டில் போகும் குறித்தால் போல அன்றி
கல் வெட்டில் பதித்தது போல –சந்தரன் தவழும் ஆகாசம் நிர்வாகன்-சூர்யா மண்டல மத்திய வர்த்தி-சுடரை–
வட மா மலை உச்சியை- தேடி நாம் வணங்க -அவனே கங்குல் பகல்–பிராபகம் பகல் சம்பாதிக்க கங்குல் அனுபவம் –
பிராபகம் பிராப்யம் அவனே-உன் தனக்கும் குரிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்–
பெரிய வாச்சான் பிள்ளையாக  கண்ணனே -ஆவணி ரோகினி -அவதரித்து நம் பிள்ளையாக திரு மங்கை ஆழ்வாரே அவதரித்து-
கார்த்திகை கார்த்திகை – அர்த்தம் சாதித்தார் –ஜகம் எல்லாம் ஆகாரம் –மலையான்- மலையை உச்சியை –மலையில் ஏக தேசம் அவன் —

அருவி சோர் வேம்கடம் நீர் மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருகின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ ? 8-2-3

மலை தாள் வரை என்பதால் தெண்ணீர் பாய் வேம்கடம் கொட்டி கொண்டே இருக்கும் –அகழி போலே அருவி சேர்த்து ரட்ஷனம் —
விரக தாபம் -தாய் பாசுரம் –வேங்கடம் அருவி உள்ளது வேம்கடம் உடையான் கருணை  அருவி பொழிய வில்லையே –
தாப ஹரம்-தன் விரகம் தீர்க்க –மலையே நீராக கொண்ட நீர் மலை சொல்லி பார்க்கிறாள்–
அபஹிருத ஹ்ருதர் -ஹிருதயம் பறி கொடுத்து உளருகிறாள் -மனசில் நினைத்து பேச முடியாதே வாய் வெருவி —
மெய்யம் சத்யன் வினவி இருக்கிறாள் -மூன்றும் மலை–இந்த பாசுரத்தில் — 
குடவரை கோவில் திரு மெய்யம் ..சத்ய வ்ரத ஷேத்ரம் –திரு மெய்யம் கோடா வர வில்லை வினவி -பதில் இல்லாமல் இருக்கிறாள்-
விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் -கேட்டு அநுஷ்டித்தார் போல -இங்கு வினவி பதில் வராமல் இருக்கிறாள் —
அடுத்து பெருகு  சீர் -நித்யம் சீர் கூடி கொண்டே -பேசினாள் -பேசுதலே உருகுதல் ஆடி ஆடி –அகம் கரைந்து –உள் மெலிந்தாள்-
ஜீவாத்மா உருகாத தத்வம்- வெட்டவோ  நனைக்கவோ முடியாதே –வேம் எமது உயிர் அழல் மெழுகில் ஒக்கு —
பகவத் விஷய காமம்–அச்சேதம் என்ன படுவது காற்றும் கட்டி அழ பத்தி நூல் வரம்பு இல்லை –ந சாஸ்திரம் ந க்ரமம்–
மதுரை சொன்னாலே  பாபம் போகும் என்றார்களே என் பெண் நான்கு திவ்ய தேச பெயர் சொல்லியும்
சரீரம்  இளைத்து  துக்கம் தான் வருகிறது என் பெண்ணுக்கு  என் செய்வேன் என்கிறாள் தாயார்

வடவரை நின்றும் வந்து இன்று கண புரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள்
கடவது என்? கண் துயில் இன்று இவர் கொள்ளவே 8-2-6

அநுகரித்து பாடுகிறார் கோபிகள் அனுகரித்து இருந்தது போலே–கண்ணன் காளியன் போலேயும் —
ஆண்டாள் திரு ஆய்ப்பாடி பெண் போலே அநுகரித்து பாடினது போலே –பிரகலாதனும் ஜகமே நான் –
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -எல்லாம் நானே –ஆழ்வார் –வைதிக லோகாயுத மதம் —
சாரு வாக்- கண்ணால் பார்க்கிற உடம்பே மெய் அதை பேணி  கொள்ள வேண்டும் உடல் ஒழுங்கா இருக்க சாஸ்திரம்
பாபம் புண்யம் ஒன்றும் இல்லை என்பர் -அதனையும் அவன் -எனக்குள்ளும் அவன் -சரீர ஆத்மா பாவம் தெரிந்து பேசுகின்றார் —-
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை–கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே அனுகரித்தார் ஆழ்வார் —
இங்கு பர கால நாயகி–அறிந்தது எல்லாம் அர்ச்சை தானே -நானே திரு வேம்கடத்தில் நின்றேன் –
வட வரை =திரு வேம்கடம் –பூர்வர் நிர்வாகம் –அங்கு இருந்து வந்து திரு கண்ண புரம் இடமாக கொண்டேன் என்கிறாள் —
ஆப்பான் திரு அழுந்தூர்   அரையர் -அணுகார பிரகரணம் இல்லையே என்று கேட்க்க —
மகள் அநுகாரம்  பல செய்வதை தாயார்  ஒன்றை மட்டும் எடுத்து சொல்கிறாள் பட்டர்  -நிர்வாகம் —
காட்டில் வேம்கடம் கண்ண புர நகர் ஆண்டாள் -வடக்கு திரு மலை மூலம் திரு கண்ண புரம் –
ஸ்ரீ வைகுண்டம் விட்டு அங்கு வந்தான் சொல்ல வில்லையே —
திரு மால் வைகுந்தமே திரு வேம்கடமே எனது உடலே ஆழ்வார் அருளி இருக்கிறாரே –மடவரல்- மடப்பம் கொண்டவள்–
திரு ஆய்ப்பாடி போல் குற்றம் சொல்லி கொண்டு போக வில்லை என்கிறாள் தாயார் –
என் பேதை-பருவம்–கணவன் வீட்டு போகும் வயசு வர வில்லை–தூக்கம் பறித்து போனாரே –என் செய்வேன்

பண்ணுலா மென் மொழி பாவை மார் பணை முலை அணைத்தும் நாம் என்று
எண்ணுவார் எண்ணம் அது ஒழித்து நீ பிழைத்து உயக் கருதினாயேல்
விண்ணுளார் விண்ணின் மீது இயன்ற வேம்கடதுளார் வளம் கொள் முந்நீர்  
வண்ணனார் வல்ல வாழ சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே ! 9-7-4

கோல பிரான் செல்ல கொழுந்து நாச்சியார் திரு வல்ல வாழ-கண்ட கர்ணனுக்கு சேவை –
பேசி வஞ்சம் செய்யும் பெண் முலை அணைய-ஆசை விட்டு  உய்ய –திரு மார்பு ஆலிங்கனம் பெருமாள் -திருவடி/
பரதன்–கண்ணன் -அக்ரூரர் /சௌலப்யம் அழகு உள்ள திரு வேம்கடம் -வல்ல வாழ சொல்லி மருவு என்கிறார் –

வலம் புரி ஆழியானை வரையார் திரள் தோளன் தன்னை
பலம் புரி நூல் அவனைப் பொழில் வேம்கட வேதியனை
சிலம்பியல் ஆறு உடை திரு மால் இரும் சோலை நின்ற
நலம் திகழ நாரணனை நணுகும் கொல்? என் நன் நுதலே 9-9-9-

ரட்ஷிக்க திவ்ய ஆயதங்கள் கொண்டவன் -தன பெண் எதை எல்லாம் கண்டு மயங்கினாள் என்று சொல்லி கொண்டு வருகிறாள் தாய் ..
இவை இன்றியும் ரட்ஷிக்க வல்ல தோள் வலிமை  கொண்டவன்– திண் தோள் கொண்ட இவர் தானே தோளை கொண்டாடலாம் —
திரண்ட தோள் கொண்ட தொண்டை மன்னனையும் கொண்டாடினாரே இவர் –புலம் புரி நூல் அவனை–அழகன் –
காதுகண் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு கொண்டவன் –இந்த்ரியங்கள் பறிக்க கூடிய யக்ஜா பவீதம் கொண்டவன் —
பொழில் வேம்கட வேதியன் -அழகையும் ரட்ஷனத்தையும் காட்ட இருக்கிறான்- வேதத்தால் கொண்டாட படுபவன் —
நூபுர கங்கை–மண்டூக மக ரிஷி–சிலம்பு இயல் -ச்வாபம் கொண்டவர் –பொன்னை மா மணியை அணி ஆர்ந்தோர்-

மின்னை  வேம்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை ஆள் உடை ஈசனை எம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே–10-1-2

18 திவ்ய தேசங்களை ஒரே பதிகம் இதில் –பிறந்த வீட்டில் சொல்லி கொண்டு போகும் பெண் போல் ஜன்ம பூமி விட்டு
பரம பதம் போகும் பொது  தன பக்கம் உள்ள அர்ச்சை பெருமாள் எல்லோர இடமும் சொல்லி கொண்டு போகிறார் —
அழகான மின்னல் போன்றவன்பொன்னை போலவும் மா மணி போலவும் -முந்தானையில் கொண்டு கொள்ளலாம் படி—
இருப்பாரை மதிப்பாரை போல /இழந்தால் அழுது புரள வைக்கும் –எனக்கு நிர்வாகன்-கைங்கர்யம் கொள்பவன்- 
எம் பிரான் -உபகாரன் -அழகை காட்டி என்னை திருதினவன் ஆதாரம் பெருக ஐயப்பாடு அறுக்க அழகன் —
திரு தண் கா -சேர்த்தார் திரு வேம்கடத்து உடையானையும்

மன்றில் மலிந்து கூத்து வந்தாடி
மால் விடை எழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க ஆனிரை காத்த
ஆண்மை கொலோ?அறியேன் நான்
நின்ற பிரானே! நீள் கடல் வண்ணா
நீ இவள் தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா  
முன் கை வளை கவர்ந்தாயே 10-9-2-

நின்ற பிரானே -திரு வேம்கடம் என்றார் பெரிய வாச்சான் பிள்ளை–பூதனை முடித்து பஞ்ச லஷம் பெண்களுக்கும் கொடுத்தேனே என்று சொன்னான் –அதை சொல்லியே என் பெண்ணை படுத்த வேண்டாம் -இவ் ஊரில் கூத்தாடிநானே விடை கொன்றேனே -நப்பின்னை பிராட்டிக்கு –மலை சுமந்தது இல்லையோ –ஒரு மலை மேல் நின்று வருவார் உண்டா என்று எதிர் பார்த்து இருக்கிறேனே -என்றான் -நின்ற பிரான் திரு மலை-குன்றம் ஏந்தி குளிர் மலை காத்தவன்-பரன் சென்று சேர் திரு வேம்கடம் -நின்ற வேம்கடம் – கதை சொல்லி -மாயவர மதி நலம் அருளியவரின் தாயார் என்பதால் இவளுக்கும் ஆயானாகி வேயர் தோள் விரும்பிய நின்ற பிரான் -அர்ச்சையே -அடி தோறும் அருளுவாறே இவர் -அந்த கண்ணனே திரு வேம்கடம் உடையவன் -நின்ற பிரான் இவனை தான் சொல்கிறாள் என்று கொண்டாள்–

————————————————

4-3-8-/5-3-4-/5-6-7-/6-8-1-/ 7-1-3-/7-3-5-/7-10-3-/8-2-3-/8-2-6-/9-7-4-/9-9-9-/10-1-2-/ 10-9-2-/–ஆக -13-பாசுரங்கள்

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை மின் திகழ் குடுமி வேம்கட மலை மேல்
மேவிய வேத நல் விளக்கை–4-3-8-
வாம் பரி யுக மன்னர் தம் உயர் செக ஐவர்கட்க்கு   அரசு அளித்த காம்பினார் திரு வேம்கட பொருப்ப! –5-3-4-
வேம்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் வுண்டு உரலின் இடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே 7-3-5-
மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை எழும் அடர்த்து ஆயர் அன்று நடுங்க ஆனிரை காத்த ஆண்மை கொலோ?அறியேன் நான்
நின்ற பிரானே! நீள் கடல் வண்ணா நீ இவள் தன்னை நின் கோயில் முன்றில் எழுந்த முருங்கையில் தேனா   முன் கை வளை கவர்ந்தாயே 10-9-2-

இவனே ஸ்ரீ உலகளந்த உத்தமன்
மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண் தாள் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திரு வேம்கடத்தானை நான் சென்று நாடி நறை யூரில் கண்டேனே 6-8-1-
வட மலையை வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்ந்த
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே 5-6-7-

இவனே ஸ்ரீ நரஸிம்ஹன்
வேம்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் வுண்டு உரலின் இடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே 7-3-5-

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: