ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–திரு மங்கை ஆழ்வார்- பெரிய திரு மொழி-2-1-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தடை நீங்கிய பின்பு -மது கைடபர் ஒழித்து -தாய் மகிழ –திரு ஆலிங்கனம் பண்ணி கொண்டாள்-
மனோகர திவ்ய ரூபம் ஸ்ரீ ஸ்வாமினி -பிரதி யோகி தம்பதி –க்ருகிணிக்கு அன்றோ ஓலை எழுதி கொடுப்பது —
ஆஸ்ரித ஜன பிரியதான சீலே –ஜனனம் அறுத்து ஸ்வாமி கொடுப்பவள் –ஸ்ரீ வேம்கடேச  தயிதை–தவ சுப்ர பாதம் –
சேர்த்தியில் கைங்கர்யம் அடைய பிரார்த்தித்தார் -அடைந்தேன் அடியேனை ஆட கொண்டு அருள் -இனி யான் உன்னை விடேன் -சொன்னார் கீழ் –
நித்யர் சம்சாரி யாவரும் இப்படி இன்றி -குத்ருஷ்டிகள் பாக்யர்கள் உண்டியே உடையே போய் இருக்க -தனியன் —
மனசு தான் காரணம் உணர்ந்தார் கொண்டாடுகிறார் இதில் –

வானவர் தங்கள் சிந்தை போல என் நெஞ்சமே! இனிது வந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்துஉறைகின்ற எந்தை
கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேம்கடம் மேவி
மாண் குறளான அந்தணர்க்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே—2-1-1-

உறவு சுற்றம் ஓன்று இல்லா ஒருவன் உகந்தவர் தம்மை மண் மிசைப்
பிறவியே கெடுப்பான்  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்!
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேம்கடத்து
அறவன் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-2-

இண்டை ஆயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வான் இடைக்
கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்!
வண்டு வாழ் வட வேம்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்க்குஅடிமை தொழில் பூண்டாயே 2-1-3-

பாவியாது செய்தாய் என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை  
மேவி ஆட் கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர் வேம்கடமலை யாண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே 2-1-4-

பொங்கு போதியும் பிண்டியும் முடை புத்தர் நோன்பியர் பள்ளி வுள்ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என் நெஞ்சம் என்பாய்!
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேம்கடம் மேவி நின்று அருள்
அம் கண் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-5

துவரி யாடையர் மட்டையர் சமண்  தொண்டர்கள் மண்டி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய்!
கவரி மாக் கணம் சேரும் வேம்கடம் கோவில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-6-

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவார் அலக்கண் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்!
மருட்கள் வண்டுகள் பாடும் வேம்கடம் கோவில் கொண்டு அதனோடும் வான் இடை
அருக்கன் மேவி நிற்ப்பார்க்கு அடிமை தொழில் பூண்டாயே 2-1-7-

அருக்கன் மேவி நிற்பார்– சூர்ய மண்டல மத்திய வர்த்தி–தர்க்கத்தினால் -பேச நின்ற பிரமற்கு -தர்க்க சமணர்-
வேத சாஸ்திர விரோதி –வேத பாக்கிர் -சமணர் -வேத குருஷ்டிகள் வேதம் ஒத்து கொண்டு தப்பு அர்த்தம் –
சமண சப்த வாதம் -இல்லை என்று சொல்லலாம் /இருக்கு  என்று சொல்லலாம் /இல்லையும் இருக்கு என்று சொல்லலாம் /
சொல்ல முடியாது என்று சொல்லலாம் /இருக்கு என்று சொல்லாம் சொல்ல முடியாது என்று சொல்லலாம் /
இல்லை என்றும் சொல்லலாம் சொல்ல முடியாது என்றும் சொல்லலாம் /இல்லை என்று சொல்லலாம் சொல்ல முடியாது என்றும் சொல்லலாம் /
இருக்கு இல்லை என்று சொல்லலாம் சொல்ல முடியாது என்றும் சொல்லலாம் –
வைபாஷிகன்  சொவ்த்ராந்திகர் யோகாச்சர்யர் மாத்யமிகன் -புத்தன்-நான்கு விதம் –பிரத்யஷமாக தெரிந்து கொள்ளலாம்
பிரித்து ஆத்மா இல்லை ஞானம் இருக்கு அறிந்து கொள்ளும் லோகம் இருக்கு -ஞானம் க்ஷணம் தான் இருக்கும் நீடித்து இருக்கும்
என்று நினைத்தால் சம்சாரம் /அடுத்து அனுமானம் தான் /அடுத்து ஒன்றே போதும் ஞானம் மட்டுமே /
அடுத்து எல்லாமே பொய் -சூன்ய வாதம் /திரளை மிடற்று இடை இறுக்குவார்-நிறைய சாப்பிட்டு கொண்டு- துன்பம் அடைகிறார்கள் —
மருள் இசை வண்டு பாடும் -வேம்கடம் கோவில் கொண்டு அதனோடும் -சூர்ய மண்டல வர்த்தி இருப்பாற்க்கு அடிமை தொழில் பூண்டாயே-

———————-

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டு இருந்
தே என் நெஞ்சம் என்பாய்! எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேம்கடமலை கோவில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே  2-1-8

ஆயர் நாயகனுக்கு இன்று அடிமை பூண்டாய் -குற்றம் சிலர் சொல்வார்  பரம பத நாதன் -சேயன்–எட்டா கனி என்பர் –
அணியன் -சாமான்யன் /சிறியன் -விபவம் ராமன் கிருஷ்ணன் -மானுஷ ரூபம்-அர்ஜுனனுக்கே கை ஆள்  /
அந்தர்யாமி -பெரியன் -என்று பேச கேட்டு இருந்து -யாதானும் பற்றி நீங்கும் விரதம் –இதில் குத்ருஷ்டிகளை விட உயர்ந்த நெஞ்சம் —
என் இடம் ஒன்றும் சொல்லாமல்-அடிமை பூண்டாயே கொண்டாடுகிறார்  -வேய்கள் மூங்கில் -முத்து பொழிந்து மேவும் —

——————————————

கூடி யாடி உரைத்தாய் என் நெஞ்சம் என்பாய்! துணிந்து கேள்
பாடி யாடி பலரும் பணிந்து ஏத்திக் காண்கிலர்
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர் கோனும் நின்று ஏத்தும் வேம்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-9-

வேம்கடத்தில் ஆடும் கூத்தன் -மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் -இவன் நிற்பதே கூத்தாடுவது போல் –துணிந்து கேள் -நெஞ்சே என்கிறார்–
சாதனாந்தர பிரயோஜனான்தரர் விட ஏற்றம்– இதில் சொல்கிறார்  வேற வழியில் அவனை அடையாமல்/ வேற ஒன்றை கேட்காமல்/
அவனாலே அவனை அடைவதே வேண்டும் –இந்த இரண்டு கள்ளத்தனம் இன்றி இருக்க வேண்டும் —
தாமரையோன்-பிரம -ஆடுகை பெருமை/நடை ஆடுகை அதில் இருப்பது /உண்டாகுகி/ ஈசன் -ருத்ரன் அமரர் கோன் –
இந்த்ரன் நின்று ஏத்தும் -இவர்கள் கூட சேராமல்- பாடி ஆடி பணிந்து இருப்பவர் உடன் கூடாமல் /
காண்கிலார்-காண்கிலா ஆடு தாமரையோன் என்று பிரமனுக்கு விசெஷனம் -பரமனையே பார்த்தது இல்லை என்றும் கொள்ளலாம்-

————————————-

மின்னு மா முகில் மேவு தண் திரு வேம்கட மலை கோவில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த  அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே 2-1-10-

வான் உலகு தான் இடம் -பலன் சொல்லி தலை கட்டுகிறார்-கழுத்தே கட்டளையாக ஜாலம் கொண்ட மேகம்-
கண்ணுக்கு இலக்காக மின்னல்-தழுவும் திரு வேம்கடம் கருணை தான் -அவன் உண்டு கருத்து
அலர் மேல் மங்கை தாயார் -உறை மார்பன் –ஹம்ச அவதாரம் -அமரர் கோன் -கலி கன்றி கலி முடிக்கும் –
அழகிய தமிழால் -மன்னு பாடல் எம்பெருமான் திரு வுள்ளத்தில் மன்னி- வேதம் போல் பாவ கற்பமாக -நெஞ்சும் மன்னி கிடக்கும் –

—————————————
இவனே ஸ்ரீ உலகளந்த உத்தமன்
வேம்கடம் மேவி மாண் குறளான அந்தணர்க்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே—2-1-1-
இவனே ஸ்ரீ கண்ணபிரான்
வேம்கடத்து அறவன் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-2-
வேம்கடம் மேவி நின்று அருள் அம் கண் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-5-
வேம்கடமலை கோவில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே  2-1-8-
வேம்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-9-

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: