ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–திரு மங்கை ஆழ்வார்- பெரிய திரு மொழி-1-10-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

இஷ்ட பிராப்தி பிரார்த்தித்தார் கீழ் இதில் அநிஷ்டம் நிவ்ருத்தி பிரார்த்திக்கிறார் –இஷ்டம் கிட்டியதே அநிஷ்டம் தொலைத்து தானே —
அறிவு பிறக்கும் நிலை முயற்சி  நிலை அடைந்து அனுபவிக்க பர பக்தி பர ஞானம் பரம பக்தி –
ஸ்வாமி கேட்டாதும் அஸ்துதே என்றானே நம் பெருமாளும் –சரீரம் தொலைத்து  அகம்காரம் மம காரம் தொலைத்து
கர்மம் தொலைத்து கேட்டதும் அதற்கும் அஸ்துதே என்றார்–ஸ்ரீ வைகுண்டம் துறந்து ஸ்ரீ வராக புஷ்கரணி வந்து சேவை சாதிகிறதே இதற்க்கு தானே .
.பிர பன்னனுக்கு பர பக்தி உண்டா –சத்யா உபாயம் கர்ம ஞான பக்தி யோகங்கள்– -பிரவ்ருத்தி மார்க்கம் சித்தோ உபாயம் பிர பத்தி —
அவன் திருவடிகளே உபாயம் உபேயம் -நிவ்ருத்தி மார்க்கம் -சரணாகதனுக்கும் கர்மம் ஞானம் பக்தி உண்டு ஆனால் அவை வழி இல்லை —
கர்மம் கைங்கர்யம் தான் –ஞானம் சம்பந்தம் அறிந்து உறவு கெட்டி பட –பக்தி ஆசை வளர்க்க –அவன் ஆனந்தத்துக்கு தான் இவை எல்லாம் –
அடையும் வழியாக இல்லை –திரு  வெள்ள குளம் பதிகமும்-அண்ணன் கோவில்  இது போல் தான் பாடல் அருளி இருக்கிறார் —

——————————-

கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன்
திண்ணாகம் பிளக்க சரம் செல உய்த்தாய்!
விண்ணோர் தொழும் வேம்கட மா மலை மேய
அண்ணா! அடியேன் இடரை களையாயே  1-10-1

திரு புள் குழி -ஸ்ரீ ராமன் திருவடி பட்டதால் இலங்கை  கொண்டாடுகிறார் –கண்ணார் கடல் -அழகிய –
அபிமானம் இதைக் கொண்டதால் –இலங்கைக்கு இறைவன் –கிரி துர்க்கம் வன  துர்க்கம் ஜல துர்க்கம் —
அவன் மார்பை பிளக்கும் படி சரம் உய்த்தாய்–விண்ணோர் தொழுவதே சரம் உய்த்த பின் தானே —
சீதை பிராட்டி துன்பம் களைந்தது போலே–சீதை ஆத்மா -அசோகா வனம் -உடல் -உப்பு கடல்-
சம்சார  இந்த்ரியங்கள் தலை மனசு ராவணன் -செய்தி தெரியாது பகவானைப் பற்றி ஆச்சார்யர் போல் ஹனுமான் –
பெருமாளுக்கு நம்மை தெரியும் மோதிரம்  சங்கு சக்கர லாஞ்சனை -ஆத்மா மனசுக்கு பணிந்தது இங்கு
அங்கு சீதை ராவணனுக்கு பணிய வில்லை இரண்டு வித்யாசம் –சென்று அங்கு தென் இலங்கை  செற்றாய் திறல் போற்றி —
கண்ணனும் தேர் தட்டில் முன் நின்று ரஷித்தானே -கலையும் சிலையும் –துணையாக –
மதிள் நீர் இலங்கை வாள்  அரக்கன் தலை பத்தும் -சந்திர காசம் வாளையும் நாளையும் நம்பி அவர்களுக்கு அந்தர்யாமி அவனை மறந்தான் —
தான் போலும் என்று எழுந்தான் தரணி ஆளன் அது கண்டு பொறுத்து இருப்பான் அரக்கர் தங்கள் கோன் போலும் என்று எழுந்தான் —
குன்றம் அன்ன இருபது தோள் துணித்தான் — ராவணன் வார்த்தை யாக கொள்ள வேண்டும் –இடர் களைதல் சம்சாரம் தொலைத்தல்

————————————–

இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டு அவர் மாளக் கொடி புள் திரித்தாய்!
விலங்கல் குடுமித் திரு வேம்கடம் மேய
அலங்கல் துளபா முடியாய்! அருளாயே 1-10-2

ரக்ஷண தீஷை மாலை போட்டு கொண்டு இருக்கிறான் -அலங்கல் துளப முடி -என்றும் இறையாய ராஷசர் —
பொல்லா அரக்கரும் உண்டு நல்ல அரக்கரும் உண்டு –அதனால் தான் விபீஷணன் அப்புறம் –புற்று என்றும் பாம்புக்கு இடம் போலே —
கும்பனோடு நிகும்பனும் பட்டான்- குலம் கெடுத்து -யானை குதிரை கால் ஆள் படை தேர் படை முடித்து -அரக்கர் குலம் முழுவதும் அழித்து–
ராவணன் முன்னால் வந்து இருந்தால் அவனோடு போய் இருக்கும் –கருட புள் கொடி -பொருள் அல்லா என்னை பொருள் ஆக்கி–

——————————–

நீரார் கடலும் நிலனும் முழுது உண்டு
ஏராலம் இளம் தளிர் மேல் துயில் எந்தாய்!
சீரார் திரு வேம்கட மா மலை மேய
ஆரா அமுதே!அடியேற்கு அருளாயே 1-10-3-

—————————————

உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக
கொண்டாய் குறளாய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகரத் திருவேம்கடம் மேய
அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-

———————————–

தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்!
சேணார் திரு வேம்கட மா மலை மேய
கோணா கணையாய்! குறிக் கொள் எனை நீயே–1-10-5-

——————————————–

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன் இன் அருள் செய்யும் தலைவன்
மின்னார் முகில் சேர் திரு வேம்கடம் மேய
என்னானை என் அப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-

ஐந்து வரை  அருளாயே என்றவர் –ஆறாவது பாசுரம்  பிரார்த்தித்து நடந்தது —
என் நெஞ்சில் உளானே- என் மனம் குடி கொண்டு இருந்தாயே- என்கிறார் குறி கொள் -பிராப்யம் கொடுப்பாய் —
கோன் நாகணையாய்- ஸ்வாமி மிடுக்கன் -பேணாத அவுணன்- தூணாய் அரியாய் -வாசி இன்றி –
நெய் உண்டான் அகப்பட்டவன் நினைவு வர உரலும் கண்ணனும் வாசி இன்றி –
இருவரும் மேலும் கீழும் பெருத்து கருத்து அழுதது தான் வாசி -உரலினோடு ஏங்கி இருந்த எளிவு -இங்கு தூணோடு தூண் —
உள்ளே பிறந்த பொழுதே அரி இருந்தானாம் –அளந்திட்ட தூணை அவன் தட்ட –உளம் தொட்டு -பேணாத அவுணன்-
ஸ்ரீ வல்லபனை பேண வில்லை- ஆஸ்ரிதரை நலிதலே அவனை பேணாமல் இருப்பது —பிரகலாதனை நலிந்தவன் —
மம பிராணன் பாண்டவ –விதுர போஜனம் பண்ணும் கட்டத்தில் அருளினானே–
சம்பந்தம் அறிந்த  பின் கைங்கர்யம் பெற வேண்டுமே -இசைவு பார்த்து வருவான்-

—————————————–

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன் இன் அருள் செய்யும் தலைவன்
மின்னார் முகில் சேர் திரு வேம்கடம் மேய
என்னானை என் அப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6

குற்றம் அவனது இல்லை–என் ஆனை -சதா தர்சநீயம் —என் அப்பன்-உபகாரன்–என் நெஞ்சில் உளானே –
கைம்மாறு இல்லா உதவி –நிலை இல்லா மனிசர் பதவி நீக்கி தன் ஆக்கி -சாம்யா பத்தி மோஷம் கொடுத்து –
எட்டு கல்யாண குணங்களில்  சாம்யம் அபகத பாப்மா- பாபம் அண்டாது விசார-மூப்பு இல்லாமல்  வி சோக-சோகம் இன்றி
விஜிக்த்சக-பசி இன்றி  அபி பாச -தாகம் இன்றி சத்ய காம சத்ய சங்கல்பம் –தன் இன் அருள் தன் ஆனந்தத்துக்கு –
செய்யும் தலைவன் -இன்னும் ஒன்றும் பண்ண வில்லையே என்று சொல்லிக் கொள்வான் –மின்னல் உடன் சேர்ந்து முகில்-
அவன் தான் வேம்கடேசன் -நாச்சியார் உடன் -சேர்ந்து –சீதள காள மேகம் –சிகராலய காள மேகம் அவன் தானே-

———————————————

மானேய்  மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆன் எழ விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே! திரு வேம்கட மா மலை மேய
கோனே! என் மனம் குடி கொண்டு இருந்தாயே 1-10-7-

தனியாக வரவில்லை- நப்பின்னை பிராட்டி உடன் சேர்ந்து வந்தான் –குடி கொண்டு இருந்தான் –பேரேன் என்று —
நப்பின்னை திறத்து -அவளுக்குகாக தன் திறத்து எதிர் வந்த ஏழு ரிஷபங்களை-அவள் கண் அழகு –
இவன் தோள் அழகு காட்டி அணைத்தான் அணி வரை -அழகும் பலிஷ்டமும்-அவளுக்கு அழகு ரிஷபம் அடக்க வரை தோள் —
இனியவன்-தேன் -திரு நறையூர் -நாச்சியார் கோவில் நப்பின்னை பிராட்டிக்கு –தாயாருக்கு தான் முதலில் கண்டு அருள பண்ணுவார்கள் அங்கு –
கோவை வாயாள் பொருட்டு-கோட்டு இடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே ஒரு கொம்புக்காகா ஏழு கொம்பில் குதித்தான் —
தேன் வர்த்திக்கும் இடம் திரு வேம்கடம் -கோனே அடிமை கொள்ள –அகம் படி வந்து புகுந்தான் அரவிந்த பாவையும் தானும்-

———————————————–

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள்
வேய் விண்டு உதிர் வேம்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே 1-10-8

மடப் பாவை வந்த பின் ஆயன் -வந்து புகுந்த பின் கைங்கர்யம் -ஆயன் திரு வேம்கடத்தில் இருக்கிறான் —
பிரகாசம் -மூங்கில் வெடித்து முத்து ஒளி விட /சேயன் பிரதி கூலருக்கு எட்டா கனி அணியன் –
அநு கூலருக்கு -மெய்யன் ஆகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம் பொய்யன் ஆகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம் —
என சிந்தையுள் நின்ற மாயன்–துளி பக்தி இருப்பதால் வந்து குடி புகுந்தான் -மற்று அறியேனே –
தை தவிர வேறு ஓன்று தெரியாது -இதரநிரபேஷணன் ஆனவன் அநந்ய கதியாய் கொண்டு என் பக்கல் வந்து புகுர –
சாபேஷனான நான் அவனை விட்டு போவேனோ –அபாத சமஸ்த காமன் என்னை நோக்கி வர –
அவன் திருவடி வேண்டும் என்று கொண்ட நான் வேறு எங்கும் போகேன்-

———————————————-

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்!
நந்தாத கொழும் சுடரே! எங்கள் நம்பீ!
சிந்தா மணியே! திரு வேம்கடம் மேய
எந்தாய்! இனி யான் உன்னை என்றும் விடேனே 1-10-9

பர பக்தியை பிரார்த்திக்கிறார் -வந்தாய் ஸ்ரீ வைகுண்டம் விட்டு வந்தாய் — என் மனம் புகுந்தாய்
இத்தனை நாளும் தடுத்து இருந்தேன் மன்னி நின்றாய் -நான் இசைய வில்லை அதனால் வந்து –
இப் பொழுதும் விலக்காமை-அனுமதியே பற்றாசாக -கறவை வராதே சொல்ல வில்லை என்பதால் பின்  போனானே –
இசைவு பார்த்து மன்னி நின்றான் நந்தா கொழும் சுடர் இப் பொழுது தான் ஒளி மிகுந்து அடியாரை அடைந்த  ஆனந்தம் —
அவிகாராய -அன்பால் கிருபையால் -தளிர் புரியும் திரு வடி என் தலை மேலே -அடியார் ஸ்பர்சம் பட்டதால் ..
நம்பீ குண பூரணன் -கட்டாம்தரையில் பாட்டம் மழை பொழிந்த பூரணன் -சிந்தா மணி- சகல பல பிரதன் –
நினைக்காமல் -சிந்திக்காமல்- கொடுப்பவன் சிந்தா மணி -கீழே போட்டாலும் சிந்தினாலும் உடையாமல் —
மணி –ஞானம் வந்த பின்பு தான் வேண்டும் என்று ஆசைப் பட வைக்க வேண்டிய மணி உலகத்து மணி ஞானம் வந்ததும் வேண்டாம்
இனி -வந்த பின்பு நான் உன்னை விட மாட்டேன்-

—————————————-

வில்லார் மலி வேம்கட மா மலை மேய
மல்லார் திரள் தோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரள் தோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் அவர் வானவர் ஆகுவர் தாமே 1-10-10

நித்யர் பெரும் பலன் இங்கேயே பெறலாம் வானவர் பெற்ற கைங்கர்யம் பெறுவார்கள் —
வில் கொண்ட வேடர்கள் நிரம்பிய திரு வேம்கடம் -அஸ்தான பய சங்கை ஆதி சேஷன் அழல உமிழும் அது கேட்டு சாம கானம் கேட்டு –..
இங்கு யாரும் வரலாமே —மணி வண்ணன் அழகு /கல் போல் மிடுக்கு உள்ளவர் —
ஆஸ்ரிதர் ரட்ஷிக்க மல்லார் அவன் இவரோ அடியார் அவன் வேடர் மூவரையும் ரஷிக்க –

—————————————–

இவனே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்
கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம் பிளக்க சரம் செல உய்த்தாய்!
விண்ணோர் தொழும் வேம்கட மா மலை மேய அண்ணா! அடியேன் இடரை களையாயே  1-10-1-

இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கெட்டு அவர் மாளக் கொடி புள் திரித்தாய்!
விலங்கல் குடுமித் திரு வேம்கடம் மேய அலங்கல் துலாபா முடியாய்! அருளாயே 1-10-2-

இவனே ஸ்ரீ ஆலிலை துயின்ற பாலகன்
நீரார் கடலும் நிலனும் முழுது உண்டு ஏராலம் இளம் தளிர் மேல் துயில் எந்தாய்!
சீரார் திரு வேம்கட மா மலை மேய ஆரா அமுதே!அடியேற்கு அருளாயே 1-10-3-

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக கொண்டாய் குறளாய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகரத் திருவேம்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-

மானேய்  மட நோக்கி திறத்து எதிர் வந்த ஆன் எழ விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே! திரு வேம்கட மா மலை மேய கோனே! என் மனம் குடி கொண்டு இருந்தாயே 1-10-7-

வேம்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே 1-10-8-

இவனே ஸ்ரீ உலகளந்த உத்தமன்-
குறளாய் நிலம் ஈர் அடியாலே விண் தோய் சிகரத் திருவேம்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-

இவனே ஸ்ரீ நரஸிம்ஹன்
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்!
சேணார் திரு வேம்கட மா மலை மேய கோணா கணையாய்! குறிக் கொள் எனை நீயே–1-10-5-

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: