ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–திரு மங்கை ஆழ்வார்- பெரிய திரு மொழி1-8-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

கொங்கு அலர்ந்த மலர் குருந்தம்  ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரை கண்ணினன்
பொங்கு புள்ளினை  வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர்  
செம் கயல் திளைக்கும் சுனை திரு வேம்கடம் அடை நெஞ்சமே !–1-8-1

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலை திரு வேம்கடம் அடை நெஞ்சமே ! –1-8-2

கலி யுகம்- சேவை சாதிக்க கேட்க்க வில்லை இயற்க்கை நிறம் வெள்ளியான்  கரியான் மணி நிற வண்ணன்-
நாள் தோறும் தெள்ளியார் வணங்கும் மட நெஞ்சமே -படுத்து – திரு பாற்கடல்/நின்றது -திரு வேம்கடம்

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணை தாமரை அடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிதா நிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே !–1-8-3

குன்றம் எடுத்தவன்–நிற்கிறது மலை-கையில் கோவர்த்தன மலை- இரண்டும் ரஷிக்கும் —
ஓன்று ஆதார மலை- தாங்கிய மலை அது தாங்கும் மலை- ஆதேயம்-கோவர்த்தனம்–
முயற்சிகள்  தவறலாம் முயற்சிக்க தவற கூடாது —
இரண்டு மரம் – இரண்டில் நடுவே போன முதல்வாவோ–மா மருது இற்று வீழ- நின்ற அடை மொழி -அசுர ஆவேசத்துடன் நின்ற –
பெரிய -மா- உடையும் பொழுது கண்ணன் மேல் விழ கூடாதே- நினைத்து மா மருது என்கிறார்–
தானும் கண்ணனும் சேர்ந்து நிற்க -முதலில் நடந்தது -இதில் நடந்தது -தோஷம் இன்றி -முறிந்து விழ எண்ணம் இன்றி —
எல்லாம் அவன் சொத்து தானே–கல்மஷம் இன்றி–விட்டில் பூச்சிகள் விளக்கில் தாமே விழுந்து சாக —
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி  விளக்கு –
தசரதன் பெற்ற மணி தடம்-கழுத்தில் கல்லை கட்டி கொண்டு விழுந்தார்கள் அங்கு —
நேமியான்-கருது இடம் பொருத்தும் கை நின்ற சக்கரத்தான்-இவன் போக வேண்டுமா —
என்றும் கை தொழும்- தனியன் இல்லை இவன்–இணை தாமரை அடி-உபாயம் உபேயம்-பிராப்யம் பிராபகம்-
அடைவிக்கும் வழியும் அடைந்து அனுபவிக்கவும் இதுவே —
ஆத்தி கீரை கொண்டு பசு மாட்டை அழைத்து அதையே கொடுப்பது போல–ஆறும் பேரும் இதுவே —
எம்பிரான்-தனக்கு உதவினான்-புக்க பேரும் சோற்றை-அன்ன கூட உத்சவம்-பெரிய திரு பாவாடை உத்சவம்–

கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை- சொன்ன உடன் செய்தார்கள்–கடிது சென்று குன்றம் எடுத்தான்–
முதல் துளி படும் முன்-கேட்க்காமல் –கீழே நின்மலன்-பார்த்தோம்–இங்கு அவர்கள் கேட்க்கும் முன் தானே ரஷித்தான்

————————————–

பார்த்தற்க்காய் அன்று பாரதம்  கை செய் திட்டு வென்ற பரம் சுடர்
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இட எந்தை மேவிய எம்பிரான்
தீர்த்த நீர் தடம் சோலை சூழ் திரு வேம்கடம் அடை நெஞ்சமே ! 1-8-4

அதி ரதர்களையும் வென்றான்–தீர்த்த நீர் தடம்–புனித பாவன அடைவிக்கும்–கை செய்திட்டு–தேர் ஒட்டி சைன்யம் அணி வகுத்தது –
வென்ற பரம் சுடர்-வெல்வித்தான் இல்லை–அர்ஜுனனை -சண்டை போட வைத்தானே– இவற்றை நினைக்க நினைக்க பரம் சுடர்-
துயர் அறு சுடர் அடி–நம் துயர் அறுக்கும் தானும் அரும்–விலகின சொத்து கிட்டியதால் வந்த இன்பம்–
அது போல வென்ற பர சுடர்–கிருத க்ருத்யன் வி ஜுரக ஸ்ரீ -ராமன்- திரு புல்லாணியில் பட்டாபிஷேகம் பண்ணி –
தம்பிகள் எல்லோரும் அரசு வேண்டாம்-சொல்ல -நின்னொடும்  எழுவர் ஆனோம் சொல்லி விட்டானே–
சேராத சேர்த்து- பரமாத்மாவும் ஜீவாத்மாவும்- குரவை கோத்ததும்–பிரதான்யம் இருவருக்கும்-என் கோவலன்–வைதிக காமம்–
ஏத்துவார் தம் மனத்து உள்ளான்–இட எந்தை மேவிய- நித்ய கல்யாண பெருமாள்–அரச்சை களை  சேர்த்தே அருளுவார் இவர்–

—————————————

வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே ! 1-8-5

ஆச்ரயிருக்கு இரந்தும்–என் கையான்- திரு அஷ்ட  புய கரத்தான் நினைவில்- இமையத்து உள்ளான்-
திரு பரிதி– திரு மால் இரும் சோலை–மூன்றையும் சேர்த்து இதில் திரு வேம்கடம் –அருளுக்கு இலக்கு ஆகினான் மா பலியை–
வண்மை இருந்ததால்–நிலம் மாவலி மூவடி–பருத்தி பட்ட 12 பாடு இவன் இடம் பட்டது மண் அதை போய் –
கொட்டை வாங்கி பண்ணி கோது விலக்கி சுருட்டி நூலாக்கி ௪ /பாவோடி-நெய்து -மடித்து விற்று -தோய்த்து உலர்த்தி உடுத்தி கிழித்து -12 பாடு—
சேர்ந்து கொண்டு பிரளயம் -விபக்தம் ஆக்கி- பிரித்து -பஞ்சி கிருதம் ஆக்கி -கலந்து -அண்டம் ஆக்கி -14 லோகம் -தேவாதி சரீரங்கள் ஆக்கி —
லோக விவஸ்திதி உண்டாக்கி –அவாந்தர ஸ்ருஷ்ட்டி பண்ணி- மூன்று லோகம் -ரஷித்து-ப்ரமாதிகளை ஆக்கி வருணன்  வாயு-
உண்டாக்கி-பிரளயத்தில் எயற்றில்  வைத்து வயிற்றில் வைத்து ரஷித்து உமிழ்ந்து சம்ஸ்க்ருதம் ஆக்கி —
இதை போய் இரந்து பெற்றானே –மரா மரம் ஏழும் எய்து–
துந்துபி சரீரம் முதலில் தூக்கி எறிந்த பின்பு-அடியவர்க்கு நம்பிக்கை ஊட்ட எல்லாம் பண்ணுவான் —
திண் கைமா துயர் தீர்த்தவன்–அதையும் ரஷித்தானே –கைமா துன்பம் கடிந்த பிரான்–நாம் ஜன்மங்கள் பல —
திரு மலை அப்பன்– பிற் பட்டாரை  ரஷிக்க காத்து இருக்கிறான்
அரை குலைய தலை குலைய வந்தானே –கருடனையும் தொக்கி கொண்டு –காரணத்வம் காட்டி கொள்ள —
வினதை பிள்ளை -கண்ணாடி போல வேதாத்மா –வந்த வேகத்துக்கு பல்லாண்டு- பட்டர்–திரு ஆபரணங்கள் மாற –
காலம் தாழ்த்த வந்தோமே வருந்தினானே -நாமும் ஜன்மம் பல -மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –
கஜேந்த்ரனுக்கு 1000 தெரிந்தது –திரு வேம்கடம் நோக்க நடக்க சொல்கிறார்..

———————————————-

எண் திசைகளும் எழ உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இல்லை பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள எயற்றோடு
திண் திறல் அரியாயவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே  ! 1-8-6

அடுத்து உண்டு உமிழ்ந்த கதையும்  / நரசிம்கன் சரித்ரம் சொல்கிறார்  –சொன்ன நிமிஷமே தோன்றினவன்-
சித்தமாக காத்து இருந்தான்– இரந்ததை உண்ட சமர்த்தன் -வாமனனாய் இரந்தான் –
மண்ணையும் உண்டான் எழ உலகும் பிள்ளை வாயில் கண்டாள்–பொன் வயிறு- மண் போகிறதே ஆதாங்கம் —
ஆனந்தம் வல்லி -மானுஷ்ய -வேலை செயும் சக்தன் -அசன சீலத்வம் சாப்பிட்டதை ஜீரணிக்கும் சக்தி –கொண்டவன் –
ஆல் இலையில் பள்ளி கொண்டவன் -தாமரை டால் தாமரை எடுத்து தாமரையில் போட்டு கொண்டான் கையால் காலை வாயில்-
களத்து  மேடில் ஒரே அளவு கொண்டு —அளந்த திரு வடி கொண்ட அதே திரு வடி கொண்டு பார்த்தானாம் —
சந்தரன் சாபம் தீர்த்த-சூர்ய புஷ்கரணி கருடன் சந்நிதி பக்கம்–பிறை யின் துயர் தீர்த்தவன்–மதிக்கு இடர் தீர்த்தவன்-
பின்னை மரம்-உயர்ந்த -திருவாய் மொழி கேட்ட  உயர்த்தி பட்டர் -உரத்து உகிர் வைத்தவன்–
திறல் அவுணனுக்கும் அரியாய் இவருக்கும் பரியனாகி வந்த அவுணன் -வரத்தினில் சிரத்தை வைத்த –பிள்ளையை சீறி வெகுண்டு–
நாராயண -திரு மந்த்ரம் சொன்னதால் ரஷித்தான்- செய்தி சொல்கிறார் நமக்கும் ஆழ்வார் —
அரி-சிங்கம்-பாபம் போக்கும் -திரு வேம்கடத்தான் தீர்ப்பான் —

————————————————

பாரும் நீர் எரி காற்றினோடு  ஆகாசமும் இவை யாயினான்
பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகும் இடம்
காரும் வார் பனி நீள் விசும்பு இடை சோறு மா முகில் தோய் தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திரு வேம்கடம் அடை நெஞ்சமே !1-8-7

பிறந்ததையே அருளினார் இது வரை அவன் பிறப்பிலி அஜகன் -பகுதா விஜாய–  
நம்   போல் பிறக்க வில்லை கர்மத்தால் பிறக்க  வில்லை –தாய் தந்தை தேர்ந்து எடுத்து கொள்கிறான் –

——————————————-

அம்பரம் அனல் கால் நிலம் சலமாகி நின்ற அமரர் கோன்
வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன்
கொம்பின அன்ன  இடை மட குற மாதர் நீளி தணம் தொறும்
செம்புனம் அவை காவல் கொள் திரு வேம்கடம் அடை நெஞ்சமே ! 1-8-8-

——————————-

பேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக்கு எலாம்
தேசமாய் திகழும் மலை திரு வேம்கடம் அடை நெஞ்சமே ! 1-8-9-

இன் திரு நாமம் எட்டு எழுத்தும் பேசுமின் -பேசுமின்-தாய் அழைக்க யாருக்கும் யோகத்தை உண்டே –பொதுவாக சொன்னார்–
தாயே போல் திரு வேம்கடவா என்று அழைக்கிறார் — சொல்லி நின்று பின்னரும்  பேசுவார் தம்மை–
இனிமையால் திரும்ப சொல்ல வைக்கும் திரு நாமம் –உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் வசிக்கும் இடம் —
திரு வேம்கடம் தேசமாய்- திகழும் -திலகமாய் இருக்கும் –அடை நெஞ்சமே-மட நஞ்சமே — –
ஆக்கை புகாமை உய்ய கொள்வான் –ஜனனம் இன்றி -புனர் அபி ஜனனம் புனர் அபி மரணம்  பஜ கோவிந்தம்

——————————————–

செம் கயல் திளைக்கும் சுனை திரு வேம்கடத்து உறை செல்வனை
மங்கையர் தலைவன் கலி கன்றி வண் தமிழ் செம்  சொல் மாலைகள்
சங்கை இன்றி தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சம் அதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வான் உலகு ஆள்வரே 1-8-10

பல சுருதி -ஐயம் இன்றி தரித்து உரைத்து -தாரணம்- நெஞ்சில் இருத்தி -வையம் காவலர் ஆகி வான் உலகம் ஆள்வரே ..
செம் கயல் -திளைகின்றவாம்- குதித்து ஆட —இளமை யான மீன்–நித்யர் போல –அமிர்தம் உண்டு களித்து ஆனந்தம் அடைந்து –
இந்த அமிர்தம்  கைங்கர்யம் குறை அற கிடக்க பெரும் -தேவர் அமிர்தம் போல இல்லை–ரோகம் இன்றி இளமையாக இருப்பார்கள்–
தசரதன் ராமனை வா போ வந்து  ஒரு கால் கண்டு போ சொல்லி இளமை திரும்பி இருந்தது  அஹம் -புனர் தேவ குமாரர் ரூபம் என்றானே —
கரியான் ஒரு காளை புகுந்து –அது போல இங்கும் மீன்களும் திரு வேம்கடம் அனுபவித்து இளமையாக இருக்கின்றனவாம் —
செல்வன்-ஸ்ரியபதி ..மங்கை நாட்டுக்கு தலைவன் –மங்கை மார்களுக்கு தலைவன் அர்ச்சை திரு மேனி அழகன் –
கலி கன்றி -கலி முடிக்கும் –சங்கை இன்றி பாடினால் நிச்சயமாக பலன் கிட்டும் –இங்கும் அங்கும் செல்வம் பெறுவோம் —
திரு வேம்கடம் அடை நெஞ்சே -கிளப்பினார் நெஞ்சை–

—————————————

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
புள்ளினை  வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர் செம் கயல் திளைக்கும் சுனை திரு வேம்கடம் அடை நெஞ்சமே–1-8-1
பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம் வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன்
என்று எண்ணி நாள் தொறும் தெள்ளியார் வணங்கும் மலை திரு வேம்கடம் அடை நெஞ்சமே –1-8-2-
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் என்றும் வானவர் கை தொழும் இணை தாமரை அடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே-1-8-3-

இவனே ஸ்ரீ உலகளந்த உத்தமன்
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம்பிரான் திண் கைம்மா துயர் தீர்த்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே – 1-8-5-

இவனே ஸ்ரீ நரஸிம்ஹன்
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம்பிரான் திண் கைம்மா துயர் தீர்த்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே – 1-8-5

இவனே ஸ்ரீ ஆலிலை பாலகன்
எண் திசைகளும் எழ உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து பண்டு ஓர் ஆல் இல்லை பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள எயற்றோடு திண் திறல் அரியாயவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே -1-8-6

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: