ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–திரு மங்கை ஆழ்வார்- பெரிய திரு மொழி-1-9-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

அடங்கா நெடும் பிறவி என்கிற நஞ்சுக்கு நல்ல அமுதம் -அஞ்சுக்கு இலக்கியம்- ஐந்து லஷனம் பொருந்தி ஆரண சாரம்
வேத சாரம் பர சமயம் -துவேஷிக்கும் பஞ்சுக்கு அனலின் பொறி போல் இவை -பர காலன் பனுவல்களே —
விஷ செடி அடி அறுத்து கொடுக்கும் அமுதம் நெஞ்சில் உள் இருக்கும் அறிவின்மை போக்கும் தீபம் /
எங்கள் கதியே ராமா னுச முனியே –சங்கை கெடுத்து ஆண்ட தவராசா -அவன் தவப் பயனாக  வந்து அவதரித்து  
ஸ்வாமி பொங்கி புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும் தங்கும் மனம் நீ எனக்கு தா –
ஏய்ந்த பெரும் கீர்த்தி –செம் தமிழ் வேதம் தரிக்க –வளர்த்த தாய்  ஸ்வாமி தானே –
பிள்ளான் தொடக்கமாகி வியாக்யானம் அருள வைத்து வளர்த்தாரே 

திரு வேம்கட யாத்ரை அர்சிராத்ரி மார்க்கம் அக்ரூரர் யாத்ரை பாரிப்பு வேண்டும் –
புண்டரீகர் கடல் நீரை இறைத்து தல சயன பெருமாள்-
பக்தன் முயற்சி பலன் கொடுக்க -அருமா கடல் அமுதன் ஜல சயனம் தர்ப சயனம் திரு புல்லாணி–
திரு வேம்கடம் பாரிப்புடன்  ஆழ்வார் நெஞ்சம் கூட்டி வர -சேவை கிட்டாமல்-நெஞ்சம் -நொந்து கை வாங்க –வருத்தம் -உடன் அடுத்த பதிகம்–
அழுது அலற்றுகிறார் – திரு இந்தளூரில் சேவை கிடைக்காமல்-அங்கே இவர் -வாழ்ந்தே போம்- உம் அடியாரோடும் ஒக்க நினைந்தீர் நும்மை தொழுதோம்  இம்மைக்கு இன்பம் பெற்றோம் – இதை விட சூதாடி இருக்கலாம்-
வியாக்யானம்–அடியேற்கு இறையும் இரங்காயே –ஆண் பாவனை உடன் ஊடினார் அங்கு —
நெஞ்சம் ஆழ்வாருக்கு உபதேசம் பண்ணுகிறது இங்கு –கருணை அவனுக்கு உண்டு –
-நாம் பண்ணின  தோஷம் சொல்லி கொண்டு -தாய் தந்தை –நோய் பட்டு ஒழிந்தேன் சொல்ல சொல்ல அழுகிறார் —
சீதை பிராட்டி –மம அபி ச  துஷ்கிருதம் கிஞ்சித்த -மகத்து அசதி– இரண்டு ஓன்று அம்மான் இருக்க  அம்மானை கேட்டது-சின்ன குற்றம் –
சிறை தண்டனை- /அடுத்து லஷ்மணன் -பாகவத அபசாரம் -பெரிய அபசாரம்-//

—————————–

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் நுன்னை காண்பதோர் ஆசையினால்
வேப் பூம் பொழில் சூழ் விரையார் திரு வேம்கடவா
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டு அருளே 1-9-1-

ஏவ காரம் தாயே –தாய் அல்லாதவளை தாய் என்று –கொண்ட பெண்டிர் -அண்டினவர் என்றே அவரை விட்டு–
அண்டி இருக்கிறவரை விட வேண்டும் –அவன் அடியார் என்று பண்ண வேண்டும் நமக்கு பந்தம் என்று இல்லை–
பணம் காசு குறையும் பொழுது -இவர்கள் -ஈஸ்வரனை ஒழிந்தவர் ரஷகர் இல்லையே —
கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை அவன் தானே அவன் பிரதி நிதி என்று கொள்ளலாம் —
பணம் கொடுத்து கொண்ட பெண்டிர் /
எல்லா உறவுமாக கொண்ட பெண்டிர் /இவளையே அனைத்து உறவாக கொள்கிறான்–
நண்ணாதார்  முறுவலிப்ப-நல் உற்றார் கரைந்து ஏங்க–இரண்டும் வேண்டாம்–
இது என்ன உலகு இயற்க்கை காரணம் பற்றி வரும் சம்பந்தம் வேண்டாம் —

லஷ்மணன் சுமந்த்ரன் இடம் -ராமனே எல்லாம் என்று இருந்தானே -கேட்டு தசரதன் மகிழ்ந்தான் —
சுமத்ரையும் அவன் இடம் சீதையே தாயார் என்று நினை ராமனே தந்தை –
சேலேய் கண்ணீரும் நல் மக்கள் -எல்லாம் அவனே-ஆழ்வார்  மாதா பிதா -ஆழ்வாரே ஆளவந்தார் —
நோயே பட்டு ஒழிந்தேன்–சம்சாரத்தில் இழிந்து –சம்சாரம் தீயது  அறிய -பிரத்யட்ஷம் ஈஸ்வரனை அறிய வேதம் வேண்டும் —
நோய் தெரிந்தால் அவன் இடம் ஆசை பிறக்கும் –வேய் ஏய்ந்த பூம் பொழில்கள் –நறு மணம்-இவை
சர்வ கந்தன் இருப்பதைக் காட்டிக் கொடுக்க அதனால் உள்ளே வந்தேன் -இவை இழுக்க  ஆசை உடன் வந்தேன் —
திரு வேம்கடவா -இதுவே ஸ்வரூப நிரூபக  தர்மமாக கொண்ட திரு நாமம் –
ஆழ்வாருக்கு பக்தி வளர்க்க இவர் இடம் அடிமை தனம் வளர்த்தான் —
நாயேன் வந்து –வெளியில் போக கல்லை விட்டு உள்ளே வந்தால் சொந்த காரனே தொட்டால் குளிக்கிறான்
ராஜ குமாரன் வேட்டை நாய் இடம் ஆசை கொள்வது போல –
ஆள் கொள்ள வேண்டும் -சகல கைங்கர்யம் கொள்ள வேண்டும் அஹம் சர்வம் கரிஷ்யாமி –

———————————————

மானே கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானா வித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனே  பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆட கொண்டு அருளே 1-9-2-

போகம் வைக்க கூடாத பொருளில் போகம் வைத்தேன் –என் யானை என்கிறார்- தர்சநீயம்–
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை–
உள்ளே நஞ்சு மனம்– வெளியில் மான் போன்ற கண்கள் வஞ்சனை பேச்சில் மயங்கி —
செம் தாமரை கண்ணன் மயங்காமல் –நானே நானாவித நகரம் புகும் பாவம் செய்தேன் 32 வித நரகம் விஷ்ணு புராணம் உண்டு ..
பெரிய குற்றங்களை காணாக் கண் கொண்டு இருக்குமாம் யானை-

——————————————–

கொன்றேன் பல் உயிரை குறி கொள் ஓன்று இலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்து அறியேன்
குன்றே மேக மதிர் குளிர் மா மலை வேம்கடவா
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே 1-9-3

உன் திரு உள்ளம் பிடிக்காத எல்லாம் பண்ணி இருக்கிறேன் —தப்பு பண்ணி அன்றே வந்து அடைந்தேன் —
மடி தடவாத சோறு- சுருள் நாறாத பூ -தூ மலர் தூவி தொழுது –நானோ கொன்று சொத்து பறித்தேன் —
பல் உயிரை-அனுதாபம் பிராய சித்தம் இன்றி கொன்றேன் -குறி கொள் ஒன்றும் இல்லை  —
தேக ஆத்மா விவேகம் இன்றி நீ ஸ்வாமி என்று அறியாமல் —
அவள் உடன் கூடி களித்த பின்பும் இரந்தார்க்கு இனிதாக உரைக்க கூட இல்லை–
கொடுக்காமலும் –இனிதாக பேசாமலும் -சுடு சொல் உடன் குடித்தனம் -உரைகிலேன் இல்லை உரைத்து அறியேன்- 
இனிதாக பேசுவதே தெரியாமல் இருந்தேன் –நேர் எதிர் தட்டாக குன்றின் மேல் மேகம் இருந்து பொழிந்து
இன்னும் கொடுக்க ஒன்றும் இல்லையே என்று அதிர்கிறதாம் இங்கு –மேகமே இப்படி- அன்றே வந்து அடைந்தேன் –
கொன்ற ரத்த கரை உடன் வந்திருக்கிறேன் –சரண் அடைந்தேன் -குற்றம் பார்க்காமல் கொண்டு அருள வேண்டும்-

——————————–

குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்தும் இலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திரு வேம்கடவா
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே 1-9-4

குலம் தாம் எத்தனை -உன்னை  விட அதிகம் ஜன்மம் – நீ அவதாரம் என் பிறவி வெட்ட — நான் மேல் மேல் பிறவி சேர்க்க –
பிறவி தான் எத்தனை இல்லை குலம் தான் எத்தனை எல்லா தாழ்ந்த குலங்களிலும் பிறந்தே இறந்தே –இறந்தே பிறந்தேன் —
எய்த்து ஒழிந்தேன் -தளர்ந்து –இன்னும் பிறவி எடுக்க சக்தி இல்லை –நலம் ஒன்றும் இல்லை கர்மம் நிறைய உள்ளன
நலம் தான் ஒன்றும் இல்லை .நல்ல தோர் அறம் செய்தும் இலன் —
நிலம் தாய் -மேகம் நிறைய கணம் தாங்காமல் கீழே தோய்ந்தனவாம்–
இனி ஜன்மம் தோறும் திரிந்து அலந்து போனேன் ரஷித்து அருள்வாய்-

———————————————

எப் பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிளேன்
செப்பார் திண் வரை சூழ் திரு வேம்கட மா மலை என்
அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே 1-9-5

அக்ருத்ய கரணம் கிர்த்ய அகர்ணம் –பகவத அபசாரம் –பாகவத அபசாரம் –தேக ஆத்மா விவாகம் இன்றி –
முக் குறும்பு அறுத்தவர் கூரத் ஆழ்வான் -ஸ்ரீ வைஷ்ணவன் ஒருவன் நெற்றி திரு மண் காப்பு கோணல் என்று நினைத்து இருப்பேன்
கண் போனது என்றாராம் -அசக்ய அபசாரம் என்னது தெரியாமலே பண்ணுவது –நானாவித அபசாரங்கள்-
அதி பாதகம்-கொடுமையான –மகா பாதகம் -அநு பாதகம்  உப பாதகம்  — பஞ்ச மகா பாதகம் —

மானச பாதகம் நிஷ்ட சிந்தனம் -பலவும் இவையே செய்து -பலன் அறிந்து பயந்தேன் –சக்தி படைத்தவனே –துப்பா –
அலை கடல் கடைந்த துப்பனே –உன் அடிகளை தொடர்ந்து ஏத்தவும் இல்லை அப்பா -சகல வித பந்து —
என் ரஷகதுக்கு ரட்ஷகம் உள்ளது -மதிள்கள் உண்டு –நின் அடி அடைந்தேன்

————————————————-

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுலாவும் ஆகாசமும்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திரு வேம்கடவா
அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே 1-9-6

சரீரம் இருப்பதால் தானே பாபம் பண்ணினீர் –ஆத்மா சரீரம் என்று நினைத்து –மண் நீர் -பஞ்ச பூதம் -ஆக்கை -புண்ணார் ஆக்கை–
அன்னம் கொடுப்பது புண்ணுக்கு சந்தனம் பூசுவது போல ஸ்நானம் சேவை பண்ணி வஸ்த்ரம் சாத்துவது புண்ணுக்கு பட்டம் சூட்டுவது போல –
ஊனேறு செல்வத்து உடன் பிறவி –புறம் சுவர் ஓட்டை மாடம் –புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன் –இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை —
யாதாத்மா ஞானம் -யஷ பிரச்னம்-தர்ம புத்திரன் -ஆஸ்ர்யம் ஒன்பது துவாரம் இருந்தாலும் ஆத்மா உள்ளே இருப்பது தான்–
இப்படி போனவர்களை தூக்கி  கொண்டு போய் என்றும்  வாழலாம் -மின் நின் நிலையில மன் உயிர் ஆக்கைகள் —
வானம் வரை உயர்ந்த மலைகள்- நித்யரை கூப்பிடும் -அந்த கைங்கர்யம் கொடுக்க வேண்டும் –அண்ணா வந்து அடைந்தேன்-

————————————————

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்தும் விட்டேன் 
பெரியேன் ஆயின பின் பிறக்கே உழைத்து ஏழை யானேன் 
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேம்கடவா 
அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே  1-9-7–

தேகம் கொடுத்ததே தர்ம சாதனம் பண்ண தான் அவனை நினைந்து கைங்கர்யம் பண்ண தானே –நான் இவை ஒன்றும் பண்ணவில்லை–
போது எலாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன் –பாலகனாய் தெரியாமல் –கொஞ்சம் ஞானம் வந்ததும் பல பாவம் /
பெரியேன் ஆனா பின் மற்றவர்க்கு உழைத்து -மானே நோக்கு பிறர் பெண்கள் இடம் -பிரகலாதன் துருவன் லஷ்மணன் நம் ஆழ்வார் போல
முளைக்கும் பொழுதே திரு துழாய் அங்குளிக்கும்–பால பக்த துருவ லஷ்மண சம்பத் –தொட்டிலிலே அழுது காண்பித்தானே–
கரி- யானை சேரும் -அரியே -பாபம் போக்குபவன் -ஆள் கொண்டு அருளே பிறர்க்கு உழைக்காமல் உனக்கே ஆக்கி கொள்ள வேண்டும்–
வந்து உனது அடி அடைந்தேன் -என்றீரே –ஆக்குவதற்கு உன் பிரயத்தனம் தான் –புத்திரன் பாக்கள் பித்ரு ஹ்ருதயம் கிடைக்குமா போலே –
உள்ளே கிடந்தது சத்தையே நோக்கி –தான் ஏற நாள் பார்த்து இருந்து-

——————————————————

நோற்றேன் பல பிறவி  நுன்னை  காண்பதோர் ஆசை யினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல்  தேன்  பாந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேம்கடவா
ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே 1-9-8-

பல பிறவி நோற்றேன் -பல பிறவி உண்டாகும் படி தான் நோற்றேன் –உன்னை காண்பதோர்  ஆசையால் —
நீ நல்லது தலையில் -நன்மை என்னும் பெயர் இடலாம் படியான தீமை தேடி –அடியார் ஒதுங்க நிழல் கொடுத்தாய்
பேரை சொன்னாய் ஊரை சொன்னாய் –மடி மாங்காய் இட்டு –பிராசங்கிதம்–உன் கடாஷம் பெற்று பிறப்பே இடர் உற்றேன் –
இந்த பிறப்பிலே ஜன்மம் த்யாஜ்யம் புரிந்து கொண்டேன் –எம்பெருமான்–தேன் பாய்ந்து ஒழுகும் -அதனால் வளரும் சோலை–
ஆற்றாமை தாங்க முடியாமல் வந்து அடைந்தேன்  உன் எதிர் பார்ப்பு ஆற்றாமை என் எதிர் பார்ப்பு கைங்கர்யம்-

——————————————————

பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமல  சுனை வேம்கடவா
அற்றேன்  வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே 1-9-9-

நீ பண்ணிய நல்லதால் வந்ததை கொண்டு உன் திருவடி வந்து அடைந்தேன் -பிராட்டி முன்பாக சரணா கதி அடைகிறார்
மாதவன் திரு நாமம் சொல்லி –கல் தேன் குகையில் சேர்த்து வைத்த தேன் –உன் திரு வடிகளுக்கே ஆற்றேன்–
பற்றேன் ஒன்றும் இலேன் -பவம் செய்து பாவி ஆனேன் –ஜீவாத்மாவுக்கு அடையாளம் இவருக்கு பாபம்–
பாவமே செய்து புண்யம் ஆனவன் -சிசு பாலன் கண்ணன் பொய்யன் கண்ணன் திருடன் சொல்லியே மோஷம் பெற்றான் –
அது நடக்கும் என்று தெரிந்ததால் அதை கூட பண்ண வில்லை- அபராத ஆலயம்–எங்கள் மாதவனே பெரிய பிராட்டியார் ஸ்வாமி–

————————————————-

கண்ணாய்  ஏழு உலகுக்கு உயிராய  எம்  கார்  வண்ணனை 
விண்ணோர்  தாம்  பரவும்  பொழில் வேம்கட  வேதியனை
திண்ணார்  மாடங்கள்  சூழ் திரு  மங்கையர்  கோன்  கலியன்
பண்ணார்  பாடல்  பத்தும்  பயில்வார்க்கு  இல்லை  பாவங்களே 1-9-10–

பத்து பாசுரம் பாடுவாருக்கு பாபம் இல்லை கண்ணாவான் மண்ணோர்க்கும் வின்னோர்க்கும்  நம் கண்ணன் அல்லது மற்ற கண் இல்லை
ரக்ஷகன் காள மேகம் போல் -வேம்கடாத்ரி சிகராலய காள மேகம் திரு வேம்கட வேதியன் ரிக் வேதம் சொலும் -மிடுக்கன் கலியன் –
விபீஷண ஆழ்வான் பெற்றது நால்வருக்கும் பெற்றது போல ஆழ்வார் பெற்றது நாம் அனைவருக்கும் கிட்டும்
பரதனுக்கு வருவான் ராமன் என்று அயோதியை மக்கள் இருந்தது போல ..
பார்வை யாக உயிர் ஆக இருக்கிறான்– காள மேகம் போல் இருக்கிறான்– வேதம் சொல்ல பட்ட பெருமை கொண்டவன்

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: