உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து என்
ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள்ளூரும் இளம் தெங்கின் தேறல் மாந்தி
சேலுகளும் திரு வரங்கம் நம் மூர் என்ன
கள்ளூறும் பைம் துழாய் மாலையானை
கன விடத்தில் யான் காண்பான் கண்ட போது
புள்ளூரும் கள்வா ! நீ போகேல் என்பன்
என்றாலும் இது நமக்கோர் புலவி தானே–23
தோழி மீண்டும் கேட்க சமாதானம் சொல்கிறாள் அடுத்து —
கருட வாகனம் போகும் வஞ்சகனே -சிலையே துணையா வந்தானாம் –
கருடனை தோட்டத்தில் மறைந்து -புறப் படும் பொழுது –
வான் இள வரசு வைகுண்ட குட்டன் கிளப்ப -கடுக புறப்பட்டு போனான்-
போகேல் என்றேன் –இது நமக்கு புலவி-துக்கம் தான்-மனசு வியாதி கொடுத்து போனான்-
எனக்கே தந்து –தோஷம் அவன் பேரில் இல்லை கருடன்- நிலம் அல்லா நிலத்தில் இருக்க கூடாது –
ஆண்டாள் போற்றி சொல்லி வேல் போற்றி கண் எச்சில் என்றால் போல –
பெரிய திருவடி கூட்டிப் போனார் -அவன் எது செய்தாலும் தப்பு இல்லை-சர்வ ரஷகன் எது செய்தாலும் ரஷகம் தான் —
ஆனந்தம் குறைத்து அருளினான் -சீறி அருளாதே –சுய ரஷணம் –
நம சப்த அர்த்தம் மனசில் பட்டு கூட துடிக்கிறாள்
நாராயண அர்த்தம்–அலம் புரிந்த தடக் கையன் தந்து போனது என் என்ன கேட்க –
வேட்கை நோய் -பசலை நோய் கொடுத்து போனான்-
இது காண் -காட்டு கிறாள்
ரிஷிகள் ராக்ஷஸர்கள் தின்ற உடம்பைக் காட்டிப் போனது போல —
உள்ளின் நோய் -விரக நோய் -உள்ளே ஊரும் நோய் -பாஹ்ய நோய் கண் கொண்டு தீர்க்கலாம்
சர்ப்பம் சஞ்சரிக்கும் போல்-உள் ஊரும் சிந்தை நோய்–இடம் இடம் பரவும் நோய்–
காதல் நோய் அழுது போக்க முடியாது –மனோ வியாதி சிந்தை நோய்–பரிகாரம் பண்ண முடியாத –
வைத்யனுக்கே வந்த நோய் போல–நெஞ்சு தெளிந்து இருந்தால் கர்மா கழிந்தது நோய் என்று சந்தோஷ படலாம் —
நெஞ்சில் வியாதிக்கு பரி காரம் இல்லையே –பிரேமத்தால் தான் நோய்—
புருஷார்தமாய் இருக்கும் பக்தி முதலில் ..
பக்தி அனுபவம் வளர்க்கும்
பிரிவின் பொழுது விரக நோய் கொடுக்கும் –
ஸ்வரூப ஞானம் ஏற்பட்டால் புருஷார்தமாய் இருக்கும் —
ஞானி தசையில் இல்லை-பிரேம தசை-போக உபகரணமாய் இருக்கும் –
நிலா -ஆனந்தம் கலவி பொழுது –அக்நி விரகத்தில் –கலவி இருவருக்கும் பொது-
பிரிந்த வருத்தம் எனக்கே தந்து –
அவன் ஸ்வதந்த்ரன் பிறர் முகம் பார்க்க வேண்டாதபடி–
தோழி- அவனுக்கும் வருத்தம் இல்லை என்று எப்படி தேறியும் என்று கேட்க –
ராமன் சீதை விட்டு பிரிந்து வருந்தினானே-தெரியாதோ தோழி கேட்க – —
ராமன் காதல் அதிகம் ஒரு மாதம் தான் அவள் சொல்ல இவனோ ஒரு வினாடி என்றானே —
கீழே மாறினது பார்த்தோம் -வளை அவன் இடம் போனதே -அவஸ்தை மாறி துடிப்பு –
ஆற்றாமை வர தான் அவன் கிருஷி பண்ணிக் கொண்டு இருந்தான்–
பெரியவன் அனைத்தையும் கொடுத்துப் போனான்-
தன் இடம் உள்ள எல்லாம்- ஆபரணம் -எனக்கே தன்னை தந்த கற்பகம்-
எல்லாம் நீயே வைத்து கொள் என்று -வஞ்ச புகழ்ச்சி–என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார்-
நோயைக் கொடுத்து –ஆசுவாச உபகரணம் கொண்டு போனார்–குணம் ஆக கூடாது என்று —
அனுபவிக்க வரும் பொழுது இதை கொண்டாடி போனான் –
அதை பார்த்தாவது விரக நோய் குறைத்து கொண்டு போய் இருப்பேன் —
என் உடையது என்று ஒன்றும் இல்லை–நிஜம் ஆக்கி –
ஸ்வரூப யாதாத்மிக ஞானம் வேண்டும் என் அபிமானம்–
என் பந்தும் கழலும் தந்து போகு நம்பி ஆழ்வார் அபிமானிக்கலாமா –அவன் பார்த்து அபிமானத்த படியால்—
இவள் சொல்கிறாள் — மம காரம் விட்டவன் உடைய மம காரம் போல ஞான ஆதிக்கத்தால் அகங்கரிக்கலாம்–
ஆழ்வார் பந்தை கீழே போட வைக்க என் என்றார் வெறுத்து போடுவான் என்று —
அவனோ ஆழ்வார் ஞானம் அறிந்தவன் என்பதால் இன்னும் மார்பில் அணைத்து கொண்டான் —
அவனுக்கு ஆசை என்பதால் இவளுக்கு ஆசை —
ஸ்லாக்கியமான நிறமும் கொண்டார் நான் வழி பறி கொண்ட இடம்–
நான் வழி பறிக்க வந்து வழி பறி கொடுத்து போனேன்–
திரு மணம் கொல்லை- இங்கே இருவராய் வந்தார் நிதி எடுத்த இடம் அங்கு —
என் செய்யும் ஊரவர் கவ்வை –முன் செய்த மாமை ஒளி இழந்து ஆழ்வார் —
ஊர் எது நான் கேட்க வில்லை பிரிவில் தரித்து இருக்க அவனே சொல்லிப் போனான் —
தெளிந்து பாயும் இளம் -தெங்கு- தேக விசேஷம் இளம் தெங்கு–நித்யர் அங்கு போல என்றும் இளமை–
தேன் கொட்டி வீதியில் ஓடி வர -சேல்கள் பருக –
தேட்டறல் திறல் தேன் தென் அரங்கன்–மீன்கள் ஆனந்தம் இங்கு நித்யர் போல–
செங்கயல் பாய் நீர் திரு அரங்கத்தை நாரம் பற்றியது வாழ்ந்து போக அயனம் பற்றிய ஆழ்வார்-பராங்குச நாயகி தாழ்ந்து போனாள்–
தேனை நுகர்ந்து களித்தது ஜன்ம பூமி விட்டு புக்ககம் விரும்பும் -முக்தர் போல —
முக்தன் சம்சாரம் நினைக்கும் பொழுது தான் மீன்கள் தண்ணீரை நினைக்குமாம் —
நித்யர் முக்தரை பார்த்து -நித்ய அனுபவம் கொடுப்பது போல தேனை கொடுக்கிறதாம் –
ஆற்றில் பிறந்து வளர்ந்த மீன்களுக்கு –கொடுத்தனவாம் —
திரு அரங்கம் என் ஊர் உன் ஊர் சொல்லாமல்-பாரதந்த்ர்யம் ஏற்றுவது போல ஆகும் –
உன்னை விட்டு தனி ஊர் இல்லை -அதனால் நம் ஊர் என்கிறாள் —
நந்த கோபாலன் கோவில் கீழ் -உன் கோவில் அப்புறம் பல பாசுரம் கழித்து ஆண்டாள் சொன்னாள்–
திரு மந்த்ரம் போல இருவருக்கும் பொதுவான கோவில் –
முன் என்று பார்த்தல் அவனுக்கு ஏற்றம் உபதேசம் நமக்கு தானே அதனால் உபய பிரதானம் தேர் தட்டு போல —
ஆண்மின்கள் வானகம் –என்று நித்யர் முக்தருக்கு சொல்வது போல–
தென்னை நித்யம்-ஸ்தாவர பிரதிஷ்ட்டை-ஸ்ரீ ரெங்கத்தில் -மீன்களுக்கு தேனை கொடுக்குமாம் —
மீண்டும் ஜன்ம இடம் என்று ஆற்றை நினைத்து போகாமல்- —
எனக்கு தேசம் என்னில்- எல்லாம் பக்தருக்கு என்று சொன்னதால் சொல்லக் கூடாது –
உன் தேசம் என்றால் பரதன் அழ ஆரம்பித்தான் –பொதுவாக நம் தேசம்–
அந்தர்யாமி ஸ்ரீ வைகுண்டம் திரு பாற்கடல் அவனுக்கு அர்ச்சை நமக்கு திரு அரங்கம் பொதுவாக இருப்பதால்–என்கிறாள்-
அவன் சொன்னத்தை தோழிக்கு சொல்கிறாள்-
-16 நந்த கோபாலன் கோவில் 23 மாரி மழை முழைஞ்சில் –
உன் கோவில் நின்ற -நந்த கோபாலன் கோவிலிலே உனக்கு அன்வயம் உன் கோவிலிலே அனைவருக்கும் அன்வயம்
இருவருக்கும் சேர திரு அரங்கம் பொது –
ராச மண்டலம் தேர் தட்டு திரு மந்த்ரம் போல –உபய பிரதானம் -திரு குருகூர் -ஆழ்வார் ஆதிநாதர் தேவஸ்தானம்–
விஷய அர்திகள் இருவரும் தனம் தேடி- ரஷகன் தேடி ஆழ்வாரும் ரஷக வர்க்கம் தேடி அவனும்–
கள் ஊரும் -தோளிலே இட்ட தனி மாலையும் தானுமாய் -வந்த வரவை நீ காணப் பெற வில்லையே —
சர்வ கந்தன்-தான் உகந்த படியே அலங்காரம் பண்ணி கொண்டு வந்தான் -பரகால நாயகிக்கு பிடித்த படி-
அவன் ஊர் பட்டது அத்தனையும் அது காண் அவன் திரு மேனி–ஸ்ரீ ரெங்கம் சர்வ சக —
தாமரை தேன்–துளசி தேன் -திரு மார்பில் வந்த பின் செவ்வி பெற்றது —
பிறந்தகம் திரு அரங்கம் புக்கககம் திரு மார்பு- பைம் துழாய் குளிர்ந்து அணைக்கையாலே
கண்டேன் பைம் துழாய் தண் தெரியல் பட்டர் பிரான்–தாரார் -கை அளவும் உள் நீட்டி-கோவில் சாந்து பானையில் ஈச கண்டாள் யசோதை பிராட்டி
கனவிடம்-அஸ்திரம் -சொப்பனம் -தாமும் அங்கு இருக்க அவனும் அங்கு இருக்க –
தேகம் தேசம் அஸ்திரம் தேசாந்திரம் ஸ்திரம் -கலந்தது கல்வியே கனவு என்கிறார்–
அனுபவம் முன்பு நடந்ததால் கனவு போல என்கிறார்–
யான் காண்பான்-அவனை விட்டுப் போக முடியாத ஆற்றாமை உள்ள நான் காண்பான் —
சம்ச்லேஷத்தில் குறை இல்லை –அத் தசையில்-சம்ச்லேஷத்தில் –
கை ஆளன் ஆக இருந்து இருப்பானே போகாதே கொல் என்று சொல்லி விலங்கு இட்டு இருக்கலாமே —
பெரிய திருவடியை -பதுக்கி வைத்து-பதி படையாக – -வந்து -தோர் பித்து -அசேதனம் தேர் ஓட்டுவது போல –
புள் ஊரும் கள்வா -வஞ்சனை- அக்ரூரர் கண்ணனை பிரித்து போனதால்–க்ரூரர் என்றால் போல —
சிலையே துணையா சொல்லி பெரிய திருவடி கூட்டி வந்தார் பொருந்துமா –
அபிமத விஷயம் பார்க்க ராஜா கருப்பு உடை கொண்டு போவது போல-
மந்த்ரிகள் வந்து கூட்டிப் போவது போல–வந்த கார்யம் தலை கட்டிய பின் –
ராமனை -ராவண வத அநந்தரம் ப்ரம்மா திரும்பி வர சொன்னது போல–
புள் ஊரும் -ஆரோகணிக்கும் என்று சொல்லாமல் பார்த்தன் தன் தேர் ஊரும் போல
சேதனமும் அசேதனமும் குழை சரக்கு தான் அவனுக்கு –வேகமாக போனான் —
பெரிய திருவடி சிறகிலும் திரு அனந்தாழ்வான் மடியிலும் சேனை முதலியார் பிரம்பிலும்
பிராட்டி கடாஷத்தாலும் வளர்கிற வஸ்து -தத்வம் -தானே பர தெய்வம் –தான் நினைத்த படி செல்லப் போகாதே —
அஹம் பக்த பராதீனன்–கரு மணியை கோமளத்தை –வான் இளவரசு வைகுண்ட குட்டன்–
நீ போகேல் என்பன்–உன்னை கண்ணாடி புறத்தில் கண்டு அறிய வில்லையா நீ போனால் தரிக்க மாட்டேன் என்று அறிய –
துஷ் க்ருதம் க்ருதவான் ராமன் -திருவடி நினைத்தாரே –
நீ போகல்–பிராணனே நீ தான்–போகாதே -மட்டும் தனித்து போக கூடாது –என்பன்-
நிஷ் பிரயோஜனமான வார்த்தை சொன்னேன் –
அவன் ஸ்வரூபம் சேரும் வார்த்தை சொல்ல வில்லை –
என் ஸ்வரூபம் சேரும் வார்த்தை சொல்ல வில்லை–
அவன் ஸ்வரூபம் பிரணயித்வம் – காதல் –
என் ஸ்வரூபம் பாரதந்த்ர்யம் இரண்டுக்கும் விரோதம்–இட்ட வழக்காய் இருந்து இருக்க வேண்டும் –
பலிப்பதை சொல்ல வில்லை–
பரதன் சரணாகதி பலிக்க வில்லை-
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்- 23 வந்த கார்யம் 29 பாசுரத்தில் வைத்தாள்-
பெண் வார்த்தை புருஷ வார்த்தை பரதன் போல அசட்டு வார்த்தை இல்லை சரண்ய ஹ்ருதய அனுசரனாக பேச வில்லை–
தடுப்பது பிரணயித்வத்துக்கு சேராது –
போகாதே என்று சொல்வது என் ஸ்வரூபத்துக்கும் சேராது —
ராமனையே எதிர் பார்த்து இருந்தாள் சீதை பிராட்டி –என்றாலும் –
இப்படி சொன்ன பின்பும் இது நமக்கு ஓர் புலவி தானே
அத்வீதியமான வியாதி –சம்ச்லேஷம் ஆற்றாமைக்கு உறுப்பு ஆனது —
அவனைப் பேணினேன் அல்லேன்
என்னை பேணினேன் அல்லேன்
சிறப்பை தேடி கொடுக்க வில்லை —
ஆசை உடன் வழி அனுப்பி வைப்பாள் என்று சொல்லிவிட்டு வந்தான் —
இன்று என்னை பொருள் ஆக்கி நேற்று புறம் போக்க வைத்தாய்- ஆழ்வார் சம்வாதம்
என்னைத் –தீ மனம் கெடுத்தாய் –மருவி தொழும் மனமே தந்தாய் — —
என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு -தானே யான் என்பான் ஆகி தன்னை தான் துதித்து –
நீயே அந்தர்யாமியாய் இருந்து அனைத்தும் பண்ணிக் கொண்டாய் —
தலை குனிய-புது மண பெண் காலால் தரையிலே கொடு கிழித்து கொண்டு நின்றான்–
தப்பைச் சொன்னோம் தப்பைச் செய்தோம் -ஆழ்வார் அருளியது போல –பராங்குச நாயகி பேணினாள் இங்கு –
இத்தால் துக்கமே மிச்சம் —
அவன் அபிமதம் கிடைத்தது என்று மகிழ்ந்து போனான்–
நான் துக்கமே பெற்று போனேன் —
நாட்டாருக்கு சுக ஹேது -அது துக்க ஹேது ஆனதே —
நிகர் அற்ற புலவி–பிரிந்த துக்கம் ஸ்வரூப ஹானி வேற —
துக்கம் இரட்டித்து இருக்கையாலே அத்வதீயம் —
இடுப்பில் வேஷ்ட்டி இல்லாதவன் இடம் வேஷ்ட்டி தானம் கேட்டு கொடுக்க முடியாத துக்கம் வேற அவனிடம் இல்லை என்ற துக்கம் போல —
தேவதாந்த்ரங்கள் இடம் பரம பதம் கேட்ப்பது போல —
—————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply