திரு நெடும் தாண்டகம்-22- நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப் பால்
கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கன மகர குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வள வுண்டு எம்பெருமான் கோயில்? என்றேர்க்கு
இதுவன்றோ எழில் ஆலி என்றார் தாமே–22

இதுவும் தோழிக்கு சொல்லும் பதில்–
சேர்த்துக் கொண்டதை சொல்கிறாள் பல பல பண்ணி–
சங்கீதம் நட்டபாடை ராகம் -பாடி நெருங்கி வந்து –நான் மயங்கி இருக்க —
சிறிது வெட்கம் கொண்டு–மேகலை =ஆடை–நான்கு தோள்-அணைத்தேன் –
ஊர் கேட்டேன் –வேட்டகம் தெரிந்து கொள்ள -கேட்டது திரு மணம் கொல்லை கை காட்டி திரு ஆலி என்றார் தாமே –
மயக்கி சேர்த்துக் கொண்டதை சொல்கிறாள் —
அதச்மின் தத் புத்தி -அது இல்லா இடத்தில் அந்த புத்தி -தேவர் இல்லாதவன் இடம் தேவ புத்தி பண்ணினேன் முன்பு–
அழகை காட்டியே மயக்க முடிய வில்லை–விலக நினைக்க ஸ்ரீ பாதம் நகர வில்லை-
நித்ய சாபேஷம் -ஆத்மா  முன் நித்ய நிரபேஷம் -கால் நகத்தாமல் –இழவு தன்னது
சேஷ வஸ்துவை சேஷன் தானே பிரயத்தனம் பண்ணி கைக் கொள்ள வேண்டும் -லபித்தால் பெரும் பேறு தன்னது தானே —
பிரிய முடியாத காமுகத்வம் –அபிமானம் கொண்டு–

அழகு கொண்டு தான் ருசி பிறப்பிப்பான்
கைங்கர்யம் கொடுத்து பக்தி வளர்த்து –ருசி ஜனக விபவ லாவண்யம் –
நின் பால் ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெருக வைக்கும் அழகனூர் அரங்கம் அன்றே —
அழகு சீலம் சக்தி கொண்டு கார்யம் ஆகாமல்-முன்பு திரு ஆய்ப்பாடு- நாவலம் பெரிய தீவில் அற்புதம் -கேளீர் –
அங்கு குழல் ஓசை ஆச்சார்யர் -கோபிமார்களுக்கு –
இங்கு பர கால நாயகி -தான் நேரே மயக்க -பண்ணை நுனுங்கினான்–
இவர் உடைய ஏவம் பஹுவிதாம் சிந்தாம் இருக்கிற படி– 
ஆழ்வார் மைத்ரேயர் பகவான் இருந்த படி ஆழ்வார் -அவா –
பல படி சிந்தை உட் பட்டான் திரு வடி அசோகா வனத்தில் இருந்த நிலை போல —
மதுரம் வாக்கியம்  ஹ -இன் இசையில் ஸ்ரீ ராம கதை பாட –
மிருக வேட்டைக்கு வந்தோம் ஆகையால் பாடுவார் யார் கேட்ப்பார் இல்லை–
பண்ணை இசைக்க அதில் ஈடு பட்டு மேல் விழுந்து கலந்தேன் பதில் –
இது தான் செய்த படி –
மரத்தின் நிழலில் ஒதுங்குகை நீரை முகத்தில் அடிப்பது பண்ணை இசைப்பது எல்லாம் வேட்டை ஆட வருபவர் பண்ணுவது தானே
சிந்தயந்தி வேணு கானம் கேட்க ஆனந்தம் பட்டு புண்ணியம் கணக்கு போக /போக முடியவில்லை துன்பம் பட்டு பாபம் போக
பரமம் சாம்யம் ரேழி இருந்து சென்றாளே-
நட்ட பாடி- நாட்ட குறிஞ்சி நைந்து -மனத்தை மயக்க வல்ல -பாடுபவரும் கேட்ப்போரும் மயங்கும் படி
குணத்தால் நை வளம் பேர் -காதில் கடிப்பிட்டு மருளை  கொடு பாடி -இந்தளம் ராகம் அங்கு –
நந்தி புர விண்ணகரம் நைவளம் பேதை நெஞ்சு அற பாடும் பாட்டு -ஆழ்வார்–ஓன்று -அத்வீதியம் —
பக்தியில் அசக்தனுக்கு பிர பத்தி போல

அழகு -பக்தி யோகம் போல -நைவளம்-பிர பத்தி -அதுவும் பலியாவிடில் வேறு கதி இல்லை–
சரம உபாயம் பற்றினது போல காந்தன் பற்றிய சரம உபாயம் இது ..
பயத்துடன் பாடினான்-நுனுங்கினான் —
ஆராயா -ஆராய்ந்து –ஆலியா அழையா–வினை எச்சம் –
என் முகத்தை பார்த்தான் வயிரம் வெட்டுவதை அரக்கு  வெட்டும்  –
புருஷோத்தமன் நித்ய நிர்விகாரம் அவனையே உருக்க -மிருது ஸ்வாபம் –
உன் அடியாரோடு ஒக்க எண்ணி இருந்தீர் –
நம்மை நோக்கா — ஆத்மநீ  பகு வசனம் –
அலட்சிய போக்கு காட்ட -உள்ளம் கரைந்து -இருந்தது -பொறி புறம் தடவி சலனம் இன்றி இருக்க –
லஜ்ஜை பிறந்தது -சரம உபாயமும் வீண் என்று –போல் -நேராக லஜ்ஜை இல்லை-
நேராக பார்க்காமல் சோலை பார்ப்பது –
பிர பின்னர் தம்மை அடைய அழுவன் தொழுவன்  ஆடி காண்பான் பாடி அலற்றுவன் –
பட்ட பாட்டை எல்லாம்- அபிமத விஷயத்தில் -இவர் பட்டார் –
குழந்தை பண்ணுவது  வேதாந்தி பண்ணுவது ஆடியும் செய்து பார்த்து —
பக்கம் நோக்கி நாணி கவிழ்ந்து இருப்பன்—பின்னும் நயங்கள் செய்வளவில்–நீச பாஷாணம் செய்து –
பண்ணில் இட்டு நுனுங்கினான்-
நாம் பிர பத்தியில்  மகா விசுவாசம் இருந்த படி தானே அவன் மகா விசுவாசம் –பின்னும் பாட –
நயம் -ஒரு பாட்டு நயங்கள்  பல -தொகை இல்லை காண் —

ஆராயா நம்மை நோக்கா -பல சாரச்யங்களை நீயும் கூட காண பெறவில்லை —
மனமும் கண்ணும் ஓடி-என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்–
கடல் உடைந்தால் தடுக்கலாம் –கடல் போல் காமத்தவர் ஆழ்வார் –தனித் தனியே ஓடி போயின —
கண்ணால் பார்த்து  அதன் பின் நெஞ்சு போகாமல்–
ராமம் மே அனுகதா -சொத்து ஸ்வாமி பின் போனது சமுத்ரம் போல காம்பீரம் கடலில் தொலைத்த பொருள் கிட்டாதே 
தொடு உணர்வு இருக்கா பார்த்து சொல் என்கிறான்
தசரதன் ரிஷீகேசன் காணும் அளவில் தான் புலன்கள் நாம் உடன் -பின்பு இருக்காதே –
ஓடி திரும்பவும் பார்க்காமல் ஓன்று ஒன்றை பார்க்காமல் என்னையும் பார்க்காமல் போனதாம் –
பாட்டினால் உன்னை நெஞ்சத்தில் இருந்தமை காட்டினாய் ஆழ்வார்களுக்கு
பாட வைத்தான் முதலில் அப்புறம் /மொய்ய சொல்லால் இசை மாலைகள் பாடி உணர்ந்தேன்  –
அது போல மனம் முதலில் போக கண் பின் சென்றது  
இங்கும் நித்ய நிருபாதிக சம்பந்தம் புக்கது –எம்பெருமான் -தன் மிடற்று ஓசையாலே என்னை எழுதி கொடுத்தேன் —
அவன் நினைத்த அளவு அன்று காண் நான் அழிந்த படி–
திரும்பி பார்க்காமல் இருந்த நான்-மனமும் கண்ணும் ஓடி திரு வடி கீழ் அணைய –
என் முலையை தழுவிக் கொள்ள நட்பு எதிர் பார்த்து இருக்க தளிர் புரையும் திருவடி தலை மேலே –
கலங்கின திசையிலும் இதே நிலை–அடங்கி ஞான திசையிலும் அழியும் பொழுதும் –
தேறியும் தேறாமலும்  மாயோன்  திறமே இத் திரு —

இப் பால் -என்னைக் கிட்ட அவன் பண்ணின வ்யாபாரங்கள் முன்பும் இங்கும் சொன்னேன் —
மகா பாரதம் ஒக்கும் இவை- அடைவு பட பேச தெளிவு இல்லை எனக்கு —
ஸ்ரீ ராமாயணத்தில் பிராட்டி பட்ட பாடு தொடக்கம் சொன்னேன்-மனசும் கண்ணும் ஓட -அதற்க்கு பலன் — 
பல ஸ்ருதி கேட்கல் ஆகாதோ–
கை வளையும் மேகலையும் காணேன் –
அஹம் ஒடுக்கு உண்டு போனால் –திருடு போனால் -கண்டது எது காணாது எது என்று
கலவிக்கு பின் கண்டது காணாதது -த்ருஷ்டம் அத்ருஷ்டம் ஆனது –அத்ருஷ்டம் த்ருஷ்டம் ஆனது –
அகங்காரம் மமகாரம் தீர்ந்தது  வளை  கழல்வது விரகத்தில் அன்றோ –
சங்கு தங்கு முன்கை நங்கை– சீரார் வளை –கழலாது–
கதை -போய் விட்டு வருகிறான் சொன்னதும் வளை வெடிக்க – 
நயாமி -உன்னை கூட்டி போகிறேன் நான் போக  வில்லை மீதி வளை போனதாம் ஆனந்தம் பூரித்து —
சம்ச்லேஷ ரசத்தில் பூரித்து வெடித்து போனதாம்–
வேம் எனது உயிர் –வேல் வளை மேகலை -ஆழ்வார்..பரி யட்டம் அவிழ்ந்ததை சதஸ் பேசலாமா –
எம் வஸ்த்ரம் காண வில்லை உடம்பில் அவன் வஸ்த்ரம் உண்டு–உத்கடா அவஸ்தை —
போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில்  கரை அளிக்கும் -திரு மழிசை பிரான்-ஆரா அமுத ஆழ்வார் —
காணேன்-புக்க இடம் அறிந்திலேன் –எல்லா வற்றையும் என் இடத்தில் பார்கிறவன் -என்னது உன்னது ஆவி –
ஸ்வாபதேசம் -அகங்கார மம காரம்/ ஐஸ்வர்யம் கைவல்யம் மேவுகிற கலை த்யாஜ்யம் —
ஸ்வரூப ஞானம் ஏற் பட்டால் -அடிமை என்று தெரிந்த பின் -நான் போக்தா என்று நினைத்தால் அதமம் –
எனக்கு போக்கியம் -கூடாது –அவன் தான் என்னை அனுபவிக்கிறான் உத்தமம் —
நாம் அன்னம் -போக்கியம் ஆக இருப்பதே ஸ்வரூபம் —
காணேன் -கழன்றது இல்லை–
விரோதி போக்க பிரார்த்திக்க வில்லை –தானும் போக்கிக் கொள்ளவில்லை –
போகத்தில் அந்ய பரர் ஆக இருக்க தானே போனது — -இச்சாலே தன் அடைவே  போகும் கழன்று போகும் –
அவரே போக்க வில்லை — நீயும் வேண்டாம் அவனும் வேண்டாம் தன் அடைவே போகும் —
எதைப் பார்த்தாய்- கண்டேன் –
அத் தலையில் உள்ளதைப் பார்த்தேன்
விரோதி கண்டிலேன்
போக்யதை குறைவற்று இருக்கக் கண்டேன் –
தழுவும் பொழுது உறுத்தின திரு மகர குழைகளும் அணைத்த திரு தோள்களும் —துல்ய சீல வயோ விருத்தம்

கன -ஸ்திரம் -நம் இடம் அஸ்திரம் -கலந்தவன் சக்கிரவர்த்தி திரு மகனாய் இருக்க  –
நான்கு தோள்கள் -உண்டது உருக்காட்டாமல் அங்கு தான் இருப்பான்-
வயலாலி மணவாளன் அனுபவிக்க -ஈர் இரண்டு தோள்களாக பணைத்தனவாம்–
பட்டர்-திரு தோள்கள் பணைக்க கவசங்கள் சாத்துவேன்–
இத் தலை அகப் பட்ட பின்பு  தன்னை வெளி இட்டுக் கொண்டான் —
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்– காட்டக் கண்டவர்–சங்கு சக்கர லாஞ்சனம் தேசிகன் முனி வாகன போகம் —
தோள்களைக் கொண்டு காரியம் கொள்ளும் பொழுது மறைக்க முடியாதே ..

எவ்வளவு உண்டு -அவிச்சினமாக அனுபவிக்க -இடைவிடாமல்-
உம் அஹம் எத்தனை தூரம்- சற்றிடம் ஆகில் கூட போவோம் என்ற நினைவால் கேட்டேன் — 
அடியேன் பருகிக் களித்தேன் அடியார் குழாங்கள் கூடுவது என் கொலோ -ஆழ்வார் –
அவனை அனுபவிப்பது சத்தை பெறுவது அடியார்கள் உடன் கூடினால் தானே -சேர்ந்து அனுபவிக்க கேட்டேன்-
நானே கிடீர் பிரிவை பிரசங்கித்தேன் —
திரு மணம் கொல்லை திரு வாலி திரு நகர் அங்குலி நிர்த்தேசம் பண்ணி காட்டினான்-
கை காட்டி இது அன்றோ என்றான்–
அன்றிக்கே–
நீ இருந்த இடம் அன்றோ நமக்கு நிர்த்தேசம் என்கிறான் —
ஆஸ்ரிதன் இருக்கிற இடமே
கருடன் -காலவன்–விஸ்வாமித்ரர் இடம் கற்று 800 குதிரைகள் தேடி  சாண்டிலி பெண்ணைக் கண்டு-
காட்டில் இருகிறாலே திவ்ய தேசம் இல்லாமல்- சிறகுகள் எரிந்து விழ -பாகவதன் இருக்கும் இடமே பகவான் உகக்கும் இடம் —
சேஷி இருந்த இடமே சேஷ பூதனுக்கு உத்தேசம்  போல அவனுக்கும் –
பிள்ளை வேட்டகம் ஆசை படும் பெண் புக்ககம் ஆசை படும்–
அதவா–
போகம் மிகுந்து சாத்மிப்பித்து  அனுபவிக்க-பொருப்பிக்க – –
நாம் அஹம் புக்கு வாரா நின்றோம் என்றானாம்–
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோவில் கேட்டாள் –எழில் ஆலி இது அன்றோ என்றான் –
என் காலைக் காட்டிப் போனான் –
நெருங்கி வந்து குனிந்து கட்டை விரலை தொட்டு  காலில் பிரமாணம்  பண்ணிப் பிரிந்தான் —
உச்சி உள்ளே நிற்கும்  தேவ தேவர்க்கு -நெற்றிக்கு பின்பு- இனி போக முடியாமல்  நின்றான்
திரு முடி பிராப்தம் என்று நின்றான் –
அங்கு முடிக்கு ஆசை இங்கு அடிக்கு ஆசை — —
கந்தவ்யம் போக்கு இடம் இன்றி நின்றான்
இவள் காலும் ஸ்தாவரம் – நானும் ஸ்தாவரம்- போக்கிடம் இல்லை என்றானாம் —
அகிஞ்சனம் அகதி சொல்லி கொண்டு நின்றானாம் —
தாமே அவரே வந்தார்- பார்த்தார்- பேசினார் -கலந்தார்- பிரிந்ததும் அவனே —
பரகத ஸ்வீகாரம் நாம் பண்ண ஒன்றும் இல்லை

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: