திரு நெடும் தாண்டகம்–19-முற்றாரா வன முலையாள் பாவை மாயன்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

முற்றாரா வன முலையாள் பாவை மாயன்
மொய்ய கலத்துள் இருப்பாள் அஃதும் கண்டு
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிகின்றாள்
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழி என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேச கேளாள்
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி
பொற்றாமரை கயம் நீராட போனாள்
பொரு வற்றாள்   என் மகள் உம் பொண்ணும் அக்தே–19

வினவ வந்தவர்கள் நாச்சியார் கை காட்டி விலக்க சொல்ல –
அதையே பச்சையாக கொண்டு-மேல் விழுந்து ஆசை பட்டாள்-நீங்கள் பெற்ற பெண்களும் அப்படி தானா-
மற்றைய ஆழ்வார்களை திரு உள்ளத்தில் கொண்டே — 
நங்கைமீர் –நும்மை தொழுதோம் -நும் அடியோர் எல்லோர் ஓடும்  ஒக்க எண்ணீர் இருந்தீரோ –
நம் ஆழ்வார் போல இல்லை–ஒப்பு சொல்ல முடியாதவள் இவள்–பெருமானுக்கே அற்று தீர்ந்தவள் — 
ஸ்ரீ தேவி நாச்சியார் மாயன் மொய் அகலத்து இருப்பாள் கண்டும் ஆற்றாள்-
அனந்யார்ஹ சேஷை பூதை ஆனாள்– பெண்மை அழிந்து நெடு மூச்சு விட்டு —
தோழி இடம் பேச அணி அரங்கம் சென்று  ஆடுதிமோ அனுபவிக்க போகலாம் அழுந்து நீர் ஆடுபவர் போல —

திருப் பேர் நகர் -திரு குடந்தை -வழி தெரியாமல்   பொன் தாமரை கயம் -பெரிய பெருமாள்- சொல்கிறாள் —
திவ்ய தேசம் அவள் சொல்ல தாயார் பெருமாளை சொல்கிறாள் -சுனை ஆடுதல் – பகவத் அனுபவம் –
தன்னையும் பார்க்காமல் என்னையும் பார்க்காமல் அவனும் வராமல் தோழி இடம் பேசுகிறாள் -உம் பொண்ணும் இப்படித் தானா —
ஹிதம் கேட்க்காமல் –அவள் நிலை உயர்ந்த நிலை என்று அதை கொண்டாடி வார்த்தை முன் சொன்னாள்–
வினவ வந்தவர் அவன் ஸ்ரீ தேவி இடம் அந்ய பரர் சொல்ல சொல்ல அதுவும் சொன்னேன் -அதுவே விபரீத பலமாய் அதுவே ஹேதுவாக கொண்டு அவளைப் பற்றி பெறலாம் என்று நம்பி அவன் இருக்கும் தேசம் ஏற போனாள்–

முற்று ஆரா வன முலையாள் –
அழகைச் சொல்லி -அவனை அந்ய பரன் ஆக்கும் –துல்ய பருவம் சொல்கிறது –
யுவா குமாரன் -யுவா அகுமாரன் பிரித்து -கவ்மாரம் மாறி- யுவதிச்ய குமாரினி-பிரிக்க முடியாமல் நடுவில் சகாரம் இருப்பதால் –
கவ்மார அவஸ்தை-இளமை மாறாமல் -யவனம் எட்டி பார்க்கிறது இதுவே சதைக ரூபமாய் இருப்பது அவனுக்கு இல்லை மாறினதே —
11000 ராஜ்ஜியம் ஆண்டாலும் பெருமாளுக்கும் பிராட்டிக்கும் இதுவே பருவம் ஆகி இருந்தது–
1000 ஆண்டு காலம் சீதை பிராட்டி இருந்து –மேல் கொண்டு 10000 ஆண்டு இருக்க  போவதையும் லவ குசர் பாடினார்கள் —
பால அவஸ்தை உண்டா -யுவா குமாரர் ஆக பிறந்தார்களா –சிசு பால-மாறுதல் ஒத்து கொண்டால் மேல் விகாரம் வரும் –
விக்ரகத்தால் தாயார் தந்தைக்கு பவ்யமாக கொண்டார்கள் –பெற்றோர் ஆசை பட்டதால் —
மேல் கொண்ட பருவம் யாரும் ஆசை பட்டு கேட்க்க வில்லை-
அடியார்கள் உகந்த உருவமே தான் உகந்த உருவம் ஜரா அவஸ்தை – மூப்பு அநிஷ்டம் என்பதால் வர வில்லை –
ரஷிக்க வர்க்கம் கேட்ட படி கொள்கிறான்
ஏக காலத்தில் பால்யம் யவனம் மாறி வந்த இடம் –
மதுரை வந்ததும் -10 வருஷம் ஆன பின்பும் பால சேஷ்டிதங்கள் காட்டி பால் குடித்தும் காட்டினானே –
பால்யம் இருந்தும் சிசு ஏற் இட்டு கொண்டான்-உன்னையும் ஒக்கலையில் கொண்டு  தன கருத்தாயின செய்தான் –
பால்யமும் யவனமும் சேர தோற்றப் பண்ணினானே —

முலை-பக்தி–சர்வ அங்கமும் சுத்தி இருக்க- மலராள் தனத்து உள்ளான்– கமலாச்த்ன -ஸ்திரீ ஸ்தனாபரணம்-
இவன்–அவ் அருகே கால் வாங்க மாட்டாமல் -போக்கியம் உள்ளதால் —
உபய விபூதி நிர்வாகன்-சங்கல்ப சக்தியால்-கமல கண்ணன் என் கண்ணில் உள்ளான் -அவன் கண்களால் காண்பன் -ஆழ்வார் – 
தன் உடையதான விஷயத்தில்-ஸ்ரீ தேவி இடம் -ஏக தேசத்திலும் தாண்ட முடியாமல் இருக்கிறான்-
நிருபாதிக ச்வாதந்த்ர்யம் ஸூயம்  நிர பேஷனாய்  இருப்பவன் -நித்ய நிருபாதிக–கிடீர் ஒரு அவயவம் குறித்து
பர தந்த்ரனாய் எதிர் பார்த்து இருக்கிறான்-எத்தனை இனிமை– பிராட்டி குணம் ரூபம்  சேஷ்டிதம் பார்த்து மயங்கி போகிறான் –
இவை  எல்லாம் அடியாருக்கு ஓடம் ஏற்றி கூலி கொள்ளத் தானே–
இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே –உபதேசதாலே  மீளாதா போது–அவனை அழகாலே திருத்தும் இவனை அருளாலே திரு த்தும் –
உள்ளான்-விபு தத்வம்  அணு வஸ்துவில் ஏக அவயவத்தில் அடங்கினான்–
பிராட்டிக்கு விபுத்வம் உண்டு -வட கலை-தென் ஆச்சர்ய சப்ர்தாயம் -அணு பிராட்டியும் ஜீவ கோஷ்ட்டி–
பாவை–நிருபாதிக ஸ்த்ரீதவம் உடையவள்–புருஷோத்தமன் கூட  அழிக்க முடியாது —
சீதை பிராட்டி ஆறி இருந்தாளே  – 10மாதம் –பராங்குச பரகால நாயகிகள்   ஏற்றம் ஸ்த்ரீத்வம் இழப்பார்கள்
வட நெறி வேண்டுவோம் மடல் எடுத்தார்கள் —

மாயன்-ஆஸ்ரித பூதன் -நிருபாதிக ஸ்வதந்த்ரன் பரதந்த்ரன் ஆன ஆச்சர்யம்-
சதா பூரணன் ஒரு மார்பகம் எதிர் பார்த்து–சர்வஞ்ஞன் சர்வ சக்தன் கூட ஒரு அவயவம் பரி சேதிக்க ஒண்ணாத படி இருந்தானே —
மொய் -அழகு அகலத்து -மார்பன்- அகல கில்லேன் இறையும் என்கிற இவளின் திரு மார்பின் ஏற்றம் சொல்லி
இத்தால் அகல கில்லேன் இறையும் என்று சொல்ல வைத்த அவன் திரு மார்பம் ஏற்றம் சொல்கிறது —
இவளும் மார்புக்கு அவ் அருகு தாண்டாமல் இருக்கிறாள் அவன் முலை தாண்டி போகாதது போல —
அவனைப் போல ஞான சக்திகள் இருந்தும் –ஏக அவயவத்தில் அகப்பட்டு தண்ணீர் தண்ணீர் என்று துடிக்க —
பிராந்த மிதுனம் -பிர பஞ்சம் முழுவதும் -வடி தடம் கண் மலர் அவளோ -தாராய தண் துளப வண்டு உழுத  வரை மார்பன் –
வண்டுகள் உழுகிறதே தன் மகள் இழந்தாள் என்கிறாள் தாயார்   -மலர் மேல் உறைவாள் உறை மார்பினன்–

சேஷி-சேஷ வஸ்துவின் ஏக வஸ்துவின் சேஷப் பட்டு போனது போல –
சேஷி சேஷனின் ஏக அவயவத்தில் சேஷ பட்டு இருப்பாள்-இதுவே நிரூபக தர்மம் இருவருக்கும் —
இவள் இருந்தாள் தான் திரு மார்பு–திருவுக்கும் திருவாகிய செல்வா –சர்வேஸ்வர சின்னம் ஸ்ரீய பதித்வம் —
வேதாந்தங்கள் தேடி இதை கண்டு நித்ய –மதுப் பிரத்யயம் -கொண்டே ப்ரஹ்மம் நிர்த்தேசம்
ஸ்ரீ வத்ச வஷன்–மண்டோதரி -நித்ய ஸ்ரீ இரண்டு அடையாளம் -அவர தெய்வம் இது இல்லாமல்-மற்றவர்கள்-
பரம் திறன் அன்றி மற்று இல்லை
திரு அல்லா தேவரை தேவர் என்னோமே –பரம சுவாமி-திரு மால் இரும் சோலை–
அபரம  -அப ரமா -ரமா சம்பந்தம் இல்லாதவர் தான் அபரமர்–உள் இருப்பாள்– 
இதம் இத்தம் -இது இனையது இரண்டுக்கும் அவள் சம்பந்தம் வேண்டும்–
திவ்ய ரூபம் திவ்ய ஆத்ம ஸ்வரூபம் அவளே -உள் இருப்பாள் -இரண்டுக்கும் நிரூபக தர்மம்-
ஆஸ்ரயண வேளை போக வேளை கைங்கர்ய வேளை -எக் காலத்திலும் மிதுனமே பிரதி சம்பந்தம் –
அல்லாத நாச்சிமார்கள் நிழல் போல -விபூதி அந்தர்பாவம் பூமி நீளா தேவிமார்கள்  –
இவள் ஸ்வரூப ரூப குணம் மூன்றிலும் –மீனில் எங்கும் தண்ணீர்  பசை போல இவள் எங்கும் —
அஃதும் கண்டும் ஆற்றாள் அவனுக்கே அற்று தீர்ந்தாள் –மயல் மிகு -பைத்தியம் இருவருக்கும் ஊமதன்காய்  போல என்று நான் சொல்ல —
பாபானாம் வா -சீதை பிராட்டி வாக்கியம் குன்று அனைய குற்றம் செயிலும் குணம் ஆக கொள்வான்
அநந்யார்ஹை ஆனாள் –
அவள் படியை கண்டு ஆற்றாள்
அவன் படியை கண்டு ஆற்றாள்
மிதுனம் படியை கண்டும் ஆற்றாள்
செய்தாரே நன்று செய்தார் என்பர் போலும்

இருவரும் சேர்ந்து ஊமத்தன்காய் போல இருப்பதால் தெளிந்து இருப்பார் ஓன்று வேண்டும் என்று அநந்யார்ஹை ஆனாள் —
விடுகைக்கு சொன்னது -பற்றுகைக்கு ஆனது அக்க்தே –
மார்பை ஒருத்திக்கு படுக்கை பற்று ஆக்கினான்–அடியார்களுக்கு தானே அது —
என் திரு மகள் சேர் மார்பினே என்னும் என் உடை ஆவியே என்னும் -தாய் பாசுரம்-சேர்த்து நஞ்சீயர் -சொல்ல பட்டர் மோகித்தாரே–
சேர்ந்த படியாலே எனக்கு ஆவி ஜீவனுக்கும் மேல்–
படுக்கை ஆக்கி இல்லாமல் இருந்தால் என் உடை ஆவி இருந்து இருக்காது- போக பூர்த்தி உள்ளது சேர்த்தியிலே —
ஏதாவது ஓன்று இருந்தாலே போதும் இவள் பூர்த்தி அழிகைக்கு–

தன் நிறைவு–கடல் வற்றிற்று என்கிறாள்–
அவள் பூர்த்தி அழிந்தது என்று நீ அறிந்தது எங்கனம்- நெடு மூச்சு வாங்கி –ஆவிகின்றாள்–எதிர் தலை பார்த்து இழந்தாள் –
தோழி வந்து சந்நிஹிதை ஆனாள் -அவனை பிரிந்த பொழுதும் -ஆச்சார்யர் -தோழி-சேர்க்கவும் இவள் வேண்டியதே —

அணி அரங்கம் ஆடுதுமே- தன் ஆற்றாமையே காரணமாக பேறு தப்பாது என்று துணிந்து —
மாறி மாறி -துடிப்பும் இதுவும் வரும்–ஆடுவோம் -குளித்தல் ஸ்ரீ ரெங்கமே குளம்
தாப த்ரயமும் விரக  தாபமும் சர்வருக்கும் ஸ்ரம ஹரம் ஸ்ரீ ரெங்கம் பொய்கை ஆக்குகிறாள்
பெற்றேன்-நான் வார்த்தை சொல்லியும் கேட்கவில்லை
அனுகூலம் பேசினாலும் பெற்றதே குற்றமாக கேட்க்கவில்லை அவன் தோழி சொன்னதை கேட்கிறாள்
கோவில் இடை ஆட்டமாக செய்தி சொன்னாலும் கேட்க்கவில்லை ..-
சொன்னதை செய்யாவிடிலும் கேட்க கூட வில்லை என்கிறாள் —

பேர் பாடி- திரு பேர் நகர் -பாதேயம் போல கோவில் புக  கட்டு பிரசாதம்-
தாரகம் போஷகம் போக்கியம் திவ்ய தேசங்கள் தானே இவருக்கு ..
கோவிலுக்கு போகும் ஆசை தோன்ற திரு பேர் நகர் அருகில் சொல்லி அப்புறம் திரு குடந்தை சொல்கிறாள் –
பொன் தாமரை கயம்-அழகும் ஏற்றமும் உடைய அனுபவம்-

சம்ச்லேஷம் சுனை ஆடல் -போனாள் கீழ் பாசுரத்தில் வழி கேட்டாள் திரு அரங்கம் எங்கே இங்கு போனாள்
உடல் அன்றோ இங்கு இருக்கிறது நெஞ்சுகுடி போனது —
தயரதன் பெற்ற மரகத மணி தடம்-பொய்கை- தானே அவன்–
வாசத் தடம் போல் வருவானே –தடுக்க வில்லையோ
பொருவற்றாள்-
சேர்த்தி கிடையாது அவன் உடன் பொருந்திய பின்பு நங்கைமீர் உமக்கு ஆசை இல்லை உபமான ரஹிதை –
ஒப்பு ஆகாமல் பின்னை கொல் மலர் மகள் கொல் நிலா மகள் கொல் –
உங்கள் வயிற்றில் பிறந்தவர் இவள் படி உண்டோ -மற்றைய ஆழ்வார்கள் –
கடை வெண்ணெய் ஆப்புண்டு -விபவத்தில் மோகித்தார் ஆழ்வார்  உம் பெண் -இவளுக்கு நிகர் இல்லை- நங்கைமீர் என்கிறாள் தாயார்

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: