தேராளும் வாள் அரக்கன் செல்வம் மாள
தென் இலங்கை முன் மலங்க செந்தீ யொல்கி
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப்
பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க
பாராளன் பார் இடந்து பாரை உண்டு
பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்று அல்லால் பேசலாமே ?–20-
பதவுரை
முன்–முன்பொருகால்
தேர் ஆளும் வாள் அரக்கன்–தேர்வீரனும் வாட்படை வல்லவனுமான இராவணனுடைய
செல்வம் மாள-ஐச்வரியம் அழியவும்
தென் இலங்கை மலங்க-(அவனது) தென்னிலங்கா புரி கலங்கவும்
(அனுமானையிட்டு)
செம் தீ ஓங்கி–சிவந்த நெருப்பாலே கொளுத்தி,
(அதுவன்றியும்)
போர் ஆளன்-போர்புரியுந் தன்மையனாய்
ஆயிரம் தோள்-ஆயிரம்தோள்களை யுடையனான
வாணன் பாணாஸுரன்
மாள-பங்கமடையும்படி செய்தற்கு
பொருகடல் அரணை கடந்து-அலையெறிகின்ற கடலாகிற கோட்டையைக் கடந்து
புக்கு–பாணபுரத்திற்புகுந்து
மிக்க-வீரலக்ஷ்மி மிகப்பெற்றவனும்
பார் ஆளன்–பூமிக்குநிர்வாஹகனும்,
பார் இடந்து–(வராஹாவதாரத்தில்) பூமியைக் குத்தியெடுத்தும்
பாரை உண்டு–(பிரளயத்தில்) பூமியைத்திரு வயிற்றிலே வைத்தும்
பார் உமிழ்ந்து–அப்பூமியைப் பிறகு வெளிப்படுத்தியும்
பார் அளந்து–(த்ரிவிக்ரமாவதாரத்தில்) அப்பூமியை அளந்தும்
(ஆக இப்படியெல்லாம்)
பாரை ஆண்ட–இவ்வுலகத்தை ரக்ஷித்தருளின் வனான
பேர் ஆளன்–பெருமை பொருந்தின எம் பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதும்-இடைவிடாமற் சொல்லுகிற
பெண்ணை-இப் பெண் பிள்ளையை
மண் மேல்-இந்நிலவுலகத்தில்
பெருந்தவத்தன் என்று அல்லால் பேசலாமே–பெருமாபாக்கிய முடையவள் என்று சொல்லலாமத்தனை யொழிய வேறு சொல்லப்போமோ?
பொரு அ ற்றாள் என்று சொல்ல கேட்டு மேலும் பேசுகிறாள் மகள் —
பூ மண்டலத்திலே நித்யர் போல இருக்கிறாள் என் மகள்-இதை தவிர வேறு -பேச முடியாது என்று இத்துடன் தாய் பாடல் முடிகிறது –
கொண்டல் வண்ணன் -மற்று ஓன்று காணாவே என்று முடித்தால் போல —
விபவம் மட்டுமே சொல்லி -இந்த பாசுரம் தாய் பாசுரம்-
பெண்ணைப் பார்த்து அர்ச்சையே மறந்தாள் தாய் —
சந்திர ஹாசம் வாள் கொண்ட ராவணன் -தென் =அரண் இலங்கை மாள =-அழியும் படி
ஒல்கி-கொளுத்தி /போராளன்-போர் செய்வதே ஸ்வபாவமாகக் கொண்ட பாணன் -மாள -தோள்களை துனித்த —
வீர ஸ்ரீ அழித்து–பொரு கடல்- அலைகள் எதிர் அம்பு கொத்து எதிரிகள் தாண்ட முடியாத படி–
பாராளன் -பூமிக்கு நல்லது செய்து ஏனமாய் நிலம் கீண்டு -வராகன்-
பார் உண்டு-ரஷித்து
உமிழ்ந்து தன்னை அடைய சிருஷ்டித்து
பார் அளந்து எல்லை நடந்து காட்டி –
பேர் -ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ வராக வைபவங்களுக்கு-திரு குணங்களுக்கு பல திரு நாமங்கள் –
ஓதும் -பெண்ணை- மண் மேல் பெரும் தவத்தள்–
சாதநாந்தர சம்பந்தம் என்று நினைந்து இவள் இழக்க கூடாது -துரும்பு நறுக்க பிராப்தி இல்லை – ஹிதம் பேசினாள் தாயார் –
அவளே பொரு அற்றாள் என்று -ஊர் கதிர் காவல் விட்டால் -அறுப்பது கிடா விடுவது ஆளி மூளையே –
பயிர் தொழில்களை அபாரமாக செய்வது போல இவளும் வாய் விட்டு சர்வ ரஷகன் பெருமை பேச ஆரம்பித்தாள்–
உள்ளே வைத்து உமிழ்ந்து எல்லை காவல் கடந்து ஈஸ்வரை ஒழிந்தவர் ரஷகர் இல்லை-
சர்வ ரஷகத்வம் பேசி கால ஷேபம் பண்ணினாள்-
மகிஷிக்கு உதவின படி//பேரனுக்கு உதவின படி/ ரஷக அபெஷை உடைய பூமி பிராட்டி/
அதுவும் இல்லாமல் இருந்தவரை ரஷித்த படி/ தம் பக்கல் விமுகராய் இருந்தவர் மேல் திரு வடி வைத்து ரஷித்த படி –
வாய் விட்டு பேச -முதல் பத்தில் பத்து பாசுரங்களில் – -தாமான நிலையில் –
திரு கோவலூரை அனுபவிக்க பாரித்து தாம் இருந்த இடம் திரு கோவலூர் பெறாமல் வந்த ஆற்றாமையால் கூப்பிட்டாலும்
வந்து முகம் காட்டாமையால் மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் என்று தம் கால ஷேபமாக அனுபவிக்க —
முகம் காட்டாது ஒழிந்தது தம் தவறு-சாதநான்தரம்-சீதை பிராட்டி அம்மானை கேட்டு– லஷ்மணனை போக சொல்ல –
இரண்டு தவறு பண்ணினேன் என்று சொன்னாள் போல–உபாயான்தரம் பற்றினாள்-
விசனம் பட்டு சந்தேகம் விளக்க -யானை பாவம் அவன் என்று சொல்லி – துடிப்பால் கூப்பிட்டேன் –
என் ஸ்வரூபம் என்பதால் பேர் அலற்றி கூப்பிட்டேன் –
பிரிவாற்றாமை- காரணம் -என்று ஈஸ்வரனின் புத்தி சமாதானம் பண்ணினார் 10 பாசுரத்தில் —
4/அப்புறம் 10 அமைந்து இருக்க வேண்டும் -சாலம்பன உபாயம் ஆலம்பமாக பற்றி இல்லை சொல்லி இருக்க வேண்டும் –
நடுவில் சந்தேகம் படுகிறார் சொல்வதற்கு முன் -ப்ராசங்கிகமாக நடுவுள் உள்ள பாசுரங்கள் நெஞ்சு இழுக்க போனது —
ஈஸ்வர புத்தி சமாதான அர்த்தம் முதல் பத்து —
வினவ வந்தவர் புத்தி சமான அர்த்தம் அடுத்த பத்து –மற்ற சரணாகதர் சங்கிக்க -தாயார் தன்மையில் பேசி தலை கட்டுகிறார் –
இத்தால் சித்த சாதனம்- சித்தோ உபாயம்-பிர பன்ன-ஈஸ்வரன் திரு வடிகளே –
பகவத் குண சேஷ்டிதங்கள் கால ஷேபம் விஷயம்-ஆத்மா உள்ள வரை இங்கும் அங்கும் துடித்து கொண்டே கைங்கர்யம் –
எற்றைக்கும் –இவை சாதனம் ஆக இல்லை–
அடைகிற காலத்தில் பிராபகம் குண சேஷ்டிதம்
அனுபவிக்கும் பொழுது பிராப்ய குண சேஷ்டிதம் –
காரண காரிய பிரமம்–
தேராளும்-தேர் ஜாதி எல்லாம் கொண்டவன்-அதி ரதர் மகா ரதர் என்று இதை கொண்டு
மற்ற குதிரை ஆனை ஆள் படைகளையும் சொல்வதால் –சதுரங்க பலம் –
அழகுக்கு போல வாளே போதும் வாள் அரக்கன்–சங்கல்பத்தாலே இவன் கார்யம் கொண்டு திவ்ய ஆயுதங்கள் அழகுக்கு போல —
கையிலே வாள்-=மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப -வாள் சந்திர காசன் வாங்கிக் கொண்டு
நாள் வரம் வாங்கி கொண்டவன் தனி வீரன் —
செல்வம் மாள -திரு வடி மதித்த ஐஸ்வர்யம் –
அதர்மம் இன்றி இருந்தால் மூன்று உலகும் ஆளக் கூடியவன்- இங்கு பிணம் கூட இருக்காமல் மாள வைத்தான்–
சண்டைக்கு அப்புறம் குரங்குகளை உயர் வாங்கி கொடுக்க அரக்கர் சரீரம் கடலில் போட்டானே –
அரண் -அமைக்க பட்ட இலங்கை தென் இலங்கை -சுற்றும் கடலாய் அனந்தரம் நாடாய் அனந்தரம் மதிளாய்–
அவன் தான் குறி அழியாமல் இருக்க அவன் பார்க்கும் பொழுதே ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படியாக
கண்டு கலங்கும் படி லோகம் அடங்க அவன் கையில் பட்ட பாடு இவனே பட்டான் –
அவளுக்கு மூத்தோனை வென் நரகம் சேரா வகையே -வீர சொர்க்கம்-பட்ட பாடே நரகம் –
செந்தீ -இத்தனை நாளும் வெளுத்த அக்நி இன்று தான் செந்தீ ஆனதாம்
அனலம் அலம் புத்தி இல்லை -ஒல்கி-திரு வடி வாலை அண்டை கொண்டு தன் நிறம் பெற்று –
பாகவதன் நிழலில் ஒதுங்கின பலம் –சேஷத்வம் பார தந்த்ர்யம் -ததீய – இதனாலே பெரும் —
அங்கன் அன்றி கூர்மையான பானங்கள் சர அக்னியால் அழித்த சக்ரவர்த்தி திரு மகன் என்றும் கொள்ளலாம் –
ஒல்கி-தானே -கையில் திரு சக்கரம் செய்தது தான் பண்ணினது போல –
ராம தஷிண பாஹு கொல்லை மூக்கு அரிந்திட்ட குமரனார் சொல்லு -வலது கரம் செய்தது தானே செய்தது போல தானே
ராமன் பான அம்பு போல நானும் ராம பானம் பிரார்தித்தாரே திரு வடியும் —
போராளன்–ஜன்மம்- போரே புரிந்து தினவு தீரும் படி எதிரிகள் கிடைக்காமல் –
ருத்ரன் இடம் சென்று கேட்டானாம் எதிரிகளை பாணாசுரன் –1000 தோள்-கொண்டதால்–
அவனை பூஜிக்கும் கைகளே கைகள் -மயில் பீலிக்கு கண் உண்டு பிணத்துக்கும் கை /
கை தாய் அவனை அல்லது தான் தொழா– காணா கண் கண் அல்லவே வகுத்த விஷயம் அஞ்சலி பண்ணவே கை —
பெண்ணுக்கு இப் பொழுது ஒரு கால் சேவித்தாலே 500 அஞ்சலி சமம் வாய்ப்பை இழந்து பர ஹிம்சைக்கு உருப்பானதே –
வீரத்தை அழிப்பதை மாளா /பின் இருந்த இருப்பு நடை பிணம் மாளா –
பொரு கடலை- -எதிரிகளை தாண்ட ஒட்டாத கடல் அலைகள் பொருகிற கடல் -பொரு கடல் கீழும் அன்வயிக்கலாம் –
வீர ஸ்ரீ விஜய ஸ்ரீ– மிக்க –அனைவரையும் முடித்ததால் மிக்க —
கார்திகையானும்..முது இட்டு ஓட கரி முகத்தானும் கனலும் முக் கண் மூர்த்தியும் மோடியும் – –
வாணன் பிழை பொறுத்த –முக் கண் மூர்த்தி கண்டீர்-அடையாளம் சொல்கிறார்–
பூ பாரம் அழித்தான்-
இனி பார் இடர்ந்து – பிராட்டி தன் நிலை குலையாமல் வந்த ஆபத்தை போக்கி -அவளை மறைத்து —
வருந்தா வினைகள் தீர -திருந்தா அரக்கர் தென் இலங்கை செந்தீ உண்ண சிவந்து ஒரு நாள் –
பெரும் தோள் வாணர்க்கு அருள் புரிந்து பின்னை மணாளர் ஆகி-ஆழ்வார் —
பூமி பிராட்டி நிலை குலைய சங்கல்பத்தால் பண்ணாமல் சூரி போகய வடிவை அழிய மாறி
தத் அனுரூபமான மானமிலா பன்றியாய் கொண்டு -கீழ் பூமி பிராட்டியை ரஷித்த படி –
இதில் பூமி பிராட்டியை உத்தாரணம் பண்ணிய படியை சொல்லி –
பிரார்திக்காமலே உண்டும் உமிழ்ந்தும்–தன்னை வந்து அடைய —
பார் அளந்து -அபேஷை மட்டும் இல்லாது அன்றிக்கே விமுகராய் இருக்கும் பொழுது அனைவரையும் தீண்டி
ஸ்வாதந்த்ர்யம்-அந்ய சேஷத்வம் கொண்டு -திரியும் அனைவரையும் -ஸ்வாமி-பெத்த பாவிக்கு விட போமோ–
மதீய மூர்தனம் அலங்க்ருஷ்யதே- -படிக்களவாகிய பாத பங்கயம்-
பார் ஆண்ட-பூமி பாலன்-ரஷகன்–பார் மீண்டும் மீண்டும் சொன்னது -ஆதர அதிசயத்தாலே —
ஒவ் ஒரு சேஷ்டிதங்களிலும் –திரு நாமங்கள் ஓதும் பெண்–இதையே கால ஷேபம் ஆழ்ந்து அனுபவிக்கிறாள் –
நித்யர் போல -மண் மேல் பெரும் தவத்தள்-
பிரி கதிர் பட்டு மண்ணில் வந்தவள் –பூமியில் இருக்கும் பொழுது நித்யர் போல அனுபவம்–
நித்யர் பரி மாற்றத்தில் சாதனா புத்தி உண்டோ இல்லையே அது போல தான் இவள் ஆற்றாமையும் சாதனம் இல்லை —
நமோ இத்ய வாசகர் அவர்களும் இவளும் குணம் பேசி திரு நாமங்கள் –
துரும்பு நறுக்க பிராப்தி இல்லை–நித்யர் கோஷ்ட்டி -தவத்தர் இவள் பெரும் தவத்தர் உயர்ந்தவள் –
இங்கே பக்தி பண்ணி அத்வீதியம் விண்ணுளாரிலும் சீரியர்
உம் அடியாரோடும் ஒக்க எண்ணி இருந்தீரோ
—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply