திரு நெடும் தாண்டகம்–17-பொங்கார் மெல் இளம் கொங்கை பொன்னே பூப்ப-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

பொங்கார் மெல் இளம் கொங்கை பொன்னே பூப்ப
பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று
செங்கால மடப் புறவம் பெடைக்கு பேசும்
சிறு குரலுக்கு உடல் உருகி சிந்தித்து ஆங்கே
தண் காலும் தண் குடந்தை நகரும் பாடி
தண் கோவலூர் பாடி ஆட கேட்டு
நங்காய்! நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே  –17

போகத்துக்கு என்றே இருக்கும் தம் திரு முலை தடங்கள்- நிறம் மாறி-பசலை–போந்து –
பகவத் விரோதிகள் -விலக்குபவர் இடம் கலவாமல் போந்து –பொங்கார் -கூப்பீட்டு தரை பட்டு கிடந்தாள் முன் —
கிளி வீணை ஆசுவாச படுத்த வைக்க– இல்லை என்பதால் உபதேசம்-ஹிதம் சொன்னால் ஜீவிப்பாள்–
வாய் விட்டு கூப்புடுகை ஸ்ரீத்வம் சேராது–குடிக்கு அவத்யம் என்ன —
அவன் அழகு ஒன்றே நான் குறி- மனசும் கண்ணும் அவன் இடம் கிடக்க –அது தான் கிடக்க –
அவனுக்கு கெட்ட பெயர் வரும் என்று சொல்ல —
ஆசா லேசம் உடையார்க்கு முகம் காட்ட கடவ வஸ்து -தன்னை ஒழிய செல்லாமையால் நோவு பட்டு கூப்பிடும்
பிரணயம் உள்ள ஒருத்திக்கு வர வில்லை என்பார்களே —
என் நெஞ்சினால் நோக்கி காணீர் என்னை  முனியாதே -என் நோவு அறியாத இவள் முகம் பார்க்காமல்-தன் தசை அறிந்த – 
அவனை கூப்பிடுகிறாள் -தான் படுகிற இத்தனையும் இவளை விட்டு பிரிந்து அவன் பட வைக்கும் அழகு கொண்டவள் –
அத் தலை இத் தலையாய்- பொங்கு ஆர் இளம் கொங்கை-வளர்த்து மிக்கு மிருதுவாக இளைய சுற்று உடைத்து-ஆர்ந்து –
வருவான் என்று எதிர் பார்த்து -மென் -முலை விரகத்தால் -இளமை மாறாதது -வற்றாத முற்றாத –
போக உபகரணம் நிறம் மாறி பசலை நோய் பொன்னே பூப்ப -வெளுத்த -பூப்ப- கற்பக கன்று  பூத்தால் போல —
பிரிந்து துடிக்க பட்டம் கட்டி -பண்டு அவன்  உடன் கலவியால் ஆபரணம் இன்று பிரிவில் ஆபரணம் —
வினவ வந்தார்க்கு தன் நினைவை அளவை சாதித்து மறைத்து சொல்கிறாள் -தனக்கு -தாயாருக்கு -தர்சநீயமாக இருக்கிறதாம்

கண்ணும் அழிந்தது என்கிறாள் அடுத்து —
சதா தரிசனம்- பொற் கயல் கண்-அவனை பொருகிற– ஈடு படுத்துகிற கண் —
தன் இடைய பொருகிற கண்–கயல் மீன் போல-மிளிர்ந்து -எதிர் பார்த்து -கண்ணீர் நிரம்பி —
சம்ச்லேஷ தசையில் ஹர்ஷத்தாலே அலமந்து விஸ்லேஷ தசையில் சோகத்தால் அலமந்து இருக்கும்
மலையில் நீர் அருவி போல துணை முலை மேல் சோர்ந்தது கண்ண நீ முன்பு இதில் —
விரக அக்னி -நீர் அரும்ப-எட்டி பார்க்கிறது -துக்கம் குறைந்து  இல்லை —
அக்னியால் நீர் பசை அரும் படு உள் உலர்ந்து –அரும்புதல் எப்படி—
பதக்கு பானையில் உழக்கு பால் காச்சினால் வாயில் வருவது போல தோற்றும் கீழ் நீர் அற்று இருக்கும்–போந்து நின்று

அவன்மேல் விழும்படி அழகு கொண்ட நீ கதற வேண்டாம் –சேஷத்வ பார தந்த்ர்யம் இருக்கிறதே —
குளித்து மூன்று அனலை ஓம்பும் –அந்தண்மை ஒழித்திட்டேன் கர்ம யோகமில்லை ..
நின் கண் பக்தன் இல்லை.. களிப்பது என் கொண்டு நம்பி குண பூரணன் –
அறிவு ஒன்றும் இல்லா  ஆய் குலம்–குறை ஒன்றும் இல்லா கோவிந்தா – கடல் வண்ணா கதறுகின்றேன் —
நீ மேல் விழுகை ஸ்ரீத்வம் -சொன்ன ஹிதம் -பிடிக்காமல் -சரவண கடிகமாய் இருப்பதால்–
நெருப்பு பட்ட வீட்டில் இருந்து அகலுவது போல் போந்து-புறப்பட-ஸ்ரீ விபீஷணன் சடக்கென புறப்பட்டால் போல -போவதே-
போந்து – -நின்று-அவள் சந்நிதி விட்டு போந்த பின்பு தரித்தாள்–
சர்வ லோக சரண்யா ராகவாயா -ஷிப்ரம் –ராவண பவனம் போந்து ஆகாசத்தில்  தரித்து நின்றானே-
அநிஷ்டம் விட்டு இஷ்டம் எதிர் பார்த்து –தம்பி வார்த்தை கேட்க்காத கோஷ்ட்டி விட்டு தம்பி வார்த்தை கேட்க்கும் கோஷ்ட்டி வந்தான் —
விசுவாசம்–பரதன் ஆனந்தமாக பாதுகை கொண்டு ரதம் ஏறி வருந்தி நந்தி கிராமத்தில் இருந்தான்
ராஜா பட்டம் -ஸ்வாதந்தர்யம் தொலைய மகிழ்ந்தான் -இஷ்டம் கிடைக்க வில்லை எதிர் பார்த்து வருந்தி இருந்தான் —
செங்கால மட சேர்தியை நினைவு மூட்டி நலிகிறது –த்ருஷ்டி விஷமாய் இருந்தது போந்தவளுக்கு —
எல்லாம் அவனை நினைவு -சம்சாரம் உள்ளோடு புறம்போடு வாசி அற -கஷ்டம் -தேச விசேஷம் பரம பதமே –
செங்கால மட புறவம்- -தன் தலையில் அவன் திரு வடி சிவந்து –
செங்கால் -நலிய/செங்கால மட நாராய் –அறுகால சிறு வண்டே தொழுதேன் /
மடப்பம்-அறிவின்மை–பெருமாளின் அறிவின்மை நினைவு படுத்த சர்வக்ஜன்-
உணர்த்தி அழிந்து சம்ச்லேஷ தசையில் அறியாமல் பேசினானே —

பேடைக்கு பேசும் சிறு குரல்–அவன் தன்னை குறித்து பேசிய -போகத்து அனுகூலமாக -நீச பாவம்–
உன் அழகு எனக்கு இல்லை போல–சிறு குரல்-பல ஹானியால் சொன்ன சொல் போகத்தால்–
காதல் பேச்சு பிறர் கேட்க்க கூடாது என்று சொன்ன சொல்–சதஸ்யம் அல்லாததால் –இவள் செவியில் சொன்னது–
உடல் உருகி–சினம் செய் -அனந்தல் அன்றில் அரு குரல் பாவியேன் ஆவியை ஆடுகிறதே -ஆழ்வார்/
நெஞ்சும் வடிவை கண்டு உருக உடல் பேச்சை கேட்டு உருகிற்றாம்–
மேல் கொண்டு உடல் உருக –பரி யட்டம் மாறாடுவது –போகத்தில் தட்டு மாறும்–அஞ்சலியை பண்ணுவது–
முறை கெட–திருவடி வருடி–சிந்தித்து ஆங்கே -அத் திசையில் –இவை பாதகம் ஆனால் —
மீண்டும் தாய் மடியில் போகாமல்–தண் கால் –சங்கேத ஸ்தலங்களை நினைவு கூர்ந்து

திரு தண் கால் -ஸ்ரம ஹரமான காற்று -குளிர்ந்த -ஸ்வாபம் -தென்றல் போல சுக ஸ்பர்சம் —
அவனை தர்சித்தாலே ஸ்ரமம் போகும் -வாயு ரூப ரகித ஸ்பர்ச வான் வாயு- தர்க்கம் -வர்த்திக்கும் தேசம்–
அணைக்கும் பொழுது சுகம் -நினைவு கொண்டு–
தண் குடந்தை ஆஸ்ரிதர் இடம் முறை அழிய பரி மாறினானே -திரு மழிசை ஆழ்வார்-
தமக்கு ஆக்கின போனகத்தை  முற்பட ஆழ்வாருக்கு அமுது செய்வித்து தான்  கொண்டானே –வாத்சல்யத்து அடியாலே –
அவன் ஆனந்தமே முக்கியம்–எதிர் விழி கொடுக்கும் பார தந்த்ர்யம்–அருளி செயல் ரகசியம் -நாயனார் அருளியது —
தோழி பெற்ற பேறும் தன் பேறாக  –
ஆழ்வார் கோஷ்டி–திரு மழிசை பிரான்- ஆரா அமுத ஆழ்வார்- கிடந்த வாறு -எழுந்து இருந்து பேசு வாழி கேசனே —
பெரிய நம்பி விழுந்து சேவிக்க ஸ்வாமி ராமானுஜர் உதா சீனமாக போனாரே –
வாத்சல்யம் அடியாக -காளி தாசர் -அந்த புரத்தில்  அரசனை உதைத்த வனுக்கு பொன் சதங்கை போட சொன்னாரே
குழந்தை தான் அந்த புரம் வந்து உதைத்து இருக்கும் —
போகத்தில் தட்டு மாறி –ஆஸ்ரிதர் கூட முறை கெட பரி மாறி-
தண் திரு கோவலூரில் தானே  மேல் விழுந்து சம்ச்லேஷித்தானே –தீர்தகராய் திரிந்து –
மிருகண்ட மக ரிஷி இடை கழியில் அவர்கள் இருந்த இடத்தில் தானே சென்று –நெருக்க-
பிராட்டி உடன் சென்று -நெருப்பு உகந்த பெருமாள்

கரும்பு சாறு -மூன்று அந்தாதிகள் –மூன்று சக்கரம்-முதல் ஆழ்வார்கள்–
அவர்கள் போன பின்பும் இவன் அங்கேயே நித்ய வாசம்- இடம் முகர்ந்து கொண்டு நிற்கிறான் இறே–
தான் கிட்டி நாளும் அனுபவம் கொடுக்காமல் என்னை முகர்ந்து பார்க்க வைத்து போனானே–
சம்ச்லேஷம் நினைந்து முன் பட்ட கிலேசம் மறந்து ப்ரீதி கொண்டு பாடி ஆடி-காகிக வாசிக–ஆடுவதை கண்டு பாடுவதை கேட்டு–
தாயார்–நங்காய்-நம் குடிக்கு–முகரி-பிரதான்யம் பெற்றவளே–மேல் விழலாமா ஆறி இரு —
அதவா பூர்ணை -குணத்தால் -பட்டர்–சீதை பிராட்டி போல ஆறி இருக்க சொன்னாள்–
நல்ல நங்கை-தோணி- உன் பூர்த்தி கொண்டு இக் குடி வாழும்  நினைத்தாயா-விபரீத லக்ஷணை-பிர பன்ன குடி நம்குடி–
ஈஸ்வர பிரவ்ருத்தி விரோதி – ஸூ பிரவர்த்தி நிவ்ருத்தி- –
பெருமானுக்கு சதா தரிசனம் பண்ண வேண்டும் படி வடி அழகு கொண்டவள் ஆறி இருக்க வேண்டும்–
தானே வந்து மேல் விழும் படி போக உபகரணங்கள் உண்டு -கால தாமதம் இன்றி பலம் கொடுக்கும் ஆற்றாமை உண்டு –
ஸ்வரூப ஞானம் உண்டே -அபூர்ணரை போல கூப்பிட கூடாது–இதுவோ நன்மை–
தன் பூர்த்தி கொண்டு வாழ வேண்டிய -நீ செய்யும் நன்மை– குடியும் அவனையும் கெடுகிறாய்–
மூத்த பெண்ணும் நடுவில் பிள்ளையும் கடைக் குட்டியும்  –குலத்துக்கு பேர் வாங்கி கொடுத்தார்கள் -என்ன-
மீளுகை தவிர்ந்து –திரு -நறையூர் புக -மீட்க ஒண்ணாத இடம் புக்காள்–
இன்னும் குடி கொண்டு உண்ண இருக்கிறீர்களோ–ஆசிலே கை வைத்தாள் -பாட்டிலே ஆயுதத்தில் கை வைத்தாள் —
நிறைந்த வண்  பழி நம் குடிக்கு -ஆழ்வார் அவஸ்தை அறியாதே ஹிதம் சொல்லுகிற இவள் முகத்தில் விழியாமல் –
வகுத்த தாய்- எவ் உயிர் க்கும் தாய்-மேலா தாய் தந்தையரும் அவரே -வஞ்சுள  வல்லி தாயார் அகல  கில்லேன் இறையும் –
பிரிவாற்றாமை துன்பம் அறிந்தவள் -திரு மஞ்சனம் பொழுது நாச்சியார் திரு மொழி சேவித்து ஆற்றாமை தீர ஸ்வாமி —
நம்பியை பற்றிக் கூப்பிடுகிறாள் -பிராட்டி தேடி வந்தவன் என்பதால்–
பாடுவாள் நவில்கின்றாளே -பாடினால் மடல் எடுப்பது போல –மெதுவாக சுரம் எடுக்கிறாள் –நுணுகினாள்-ஆலத்திலே கருத்து அறியும் தாயார் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: