திரு நெடும் தாண்டகம்–18-கார் வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

கார் வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும்
கைத் தலமும் அடி இணையும் கமல வண்ணம்
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்
எம்பெருமான் திரு வரங்கம் எங்கே? என்னும்
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்
இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே–18

திரு அரங்கம் திரு குறையலூர் இருந்து போகும் பொழுது  திரு நீர் மலை வழி-ஆழ்வார்- நிறைவு அழிந்தவள் -இந்த நிலை-
தாயார் வினவ வந்தவர்களுக்கு சொல்கிறாள் –ஹிதம் சொல்லி மீட்க்க முடியாது -கூடி உடன் பட்டு இவள் கருத்தை கேட்ப்போம் –
இங்கு இருந்து பேசாமல் அவன் இருக்கும் இடம் போக சொல்ல —
நித்தியரும்  குமுழ் நீர் உண்ணும் விஷயத்தில் மேல் விழுந்து அனுபவிக்க இருக்கும் நிலை-
பெண்ணின் பெருமை- ஸ்த்ரீத்வம் பாராமல் ஆறி இருக்காமல் விஷய வைலஷண்யம் பார்த்து இருந்தாள்–
சீதை பிராட்டி ஆறி இருந்தாள் -நிறைவு அழிந்தார் -ஹார்தமாய் -உள் மகிழ்ந்து பேசுகிறாள் துடிப்பவர்களுக்கு தலைவி-
பிரணயத்வத்தில் தேசிகத்வம்-இங்கே பிரகாச படுத்து கிறாள் –விஷய வைலஷண்யம் சொல்லி -போக அனுரூபமான ஸ்வரூபம்-
துடித்து மேல் விழுவது —ஸ்வரூப அனுரூபமான போகம் -ஆறி இருப்பது –எம்பெருமான் பொன் மலை மேல்  ஏதேனும் ஆவேனே —
அனுபவம் கிடைத்தால் எப்படியும் இருக்கலாம்–சித்தாந்தம்- அவன் அழகை சொல்லி -முறை கெட இழிய பார்க்கிறாள்
பர கால நாயகி தாயார் பூர்வ பஷம் ஸ்வரூபம் பார்த்து ஆறி இருக்க சொல்கிறாள் —

பிரதமத்திலே ஸ்வரூபம் உணர்ந்து சேஷத்வம் பார தந்த்ர்யம்-
அதற்க்கு அநு ரூபமான கைங்கர்யம் -ஸ்வரூபம் மேல் விழுகை -புருஷார்த்தம் ஆலிங்கனம் –
ம காரம் தெரியாமல் நாராயண நேராகா பார்த்து வைலஷண்யம் உணர்ந்து இழிகிறாள் —
போக அனுரூபமான ஸ்வரூபம் -மகள் –அவள் அறிந்த பிரமாணம் அவன் ரூபம் மட்டுமே –ஸ்த்ரீத்வமே வேண்டாம் —
அவன் காட்டக் கண்டோம்–வினவ வந்தார்க்கு இவள் சித்தாந்தமே நானும் ஒத்து கொண்டேன் என்கிறார் –
திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தில் இழிந்து -ஸ்வரூபம் அறிந்து -அடைவே போகாமல் –வடிவிலே இழிந்து —
அநர்த்த ஹேது சரீரம்-தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல இருக்க வேண்டுமே —
ஆசார்யன் கண்டால் பசியன் சோற்றை கண்டால் போல இருக்க வேண்டும் —
அநர்த்த ஹேது  சரீரத்தில் இழிந்து இருந்தாள் முன்பு –வாடினேன் வாடி- இருந்தாள்

-தன் வடிவைக் காட்டி துவக்கு அறுத்தது —
ஸூரி போக்யமான வடிவில் இவள் இழிந்தாள்–நித்யர் பார்த்தே முடிக்காத வடிவு அழகு–
பார்த்து கண்ணை மீட்டி அனுபவிக்க முடியாத அழகு –ஸ்வரூபம் தானே முக்கியம் ரூபம் –
அடிமை கொண்டதே-குணம் விபவம் -சேஷடிதம்-சேஷித்வம் ஸ்வாமித்வம் ஸ்வரூபம் –
ஆழ்வார்கள் ரூபம் திவ்ய மங்கள விக்ரகமே -உபாயம்  உபேயம்–
த்ருஷ்டே சீதா-நிதானமாக பேச சொன்னான் பெருமாள் இற் பிறப்பு பொறுமை கற்பு நாட்டியம் ஆட கண்டேன்–
இரண்டு  உயிர் ரஷித்துக் கொடுத்தீர் -திரு மேனி ஆலிங்கனம் பரிசு-கொடுத்தானே-திரு மேனியே உபேயம் -புருஷார்த்தம் – —
மாம் ஏகம் சரணம் விரஜ -உபாயம்-கையும் சாராத்வ வேஷம் கையிலே பிடித்த கையும் உளவு கோலும் தேருக்கு கீழே நாட்டிய திரு வடிகளும் –
குழல்கள் சதங்கை கோபால வேஷம்-உபாயம் திரு மேனி -புழுதி அளைந்த பொன் மேனி–
கையிலே பிடித்த சிறு வாய் கயிறு கண்ணிக் கயிறு கடை ஆவும் கடி கோலும் -மறித்து திரிகிற பொழுது தூசி படிய –
பிராப்யத்தின் மேல் எல்லை —சாஸ்திரம் கொண்டு மாற்றி-ஸ்வரூபம் சம்பந்தம் அறிவித்து – 
பாகவத சமாகம் கைங்கர்யம் பண்ணி அனுபவிக்க கூடிய திரு மேனி-கீழ் நிலை-விஷயாந்தர பிராவண்யம் – 
போக்கினதே -நெருக்கமே பிரதானம்-நான் அறிந்தது வடிவே எருது கெட்டார்க்கு ஏழு கடுக்காய் போல–
மற்று அறிய முடியாமல்  -நெஞ்சும் கண்ணும் அவன் இடம் போய் சேர்ந்ததே –
கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபாலன் -எறும்பு போக்க-கூர் வேல் —
அர்ச்சிராதி மார்க்கத்தால் தேச விசேஷம் போவதும் பூர்வ விக்ரக அனுபதுக்கே தானே -அமிர்தம்  த்ருஷ்ட்வா —
விக்ரகம் பிராப்யதுக்கு  எல்லை நிலம் -சௌசீல்யம் அறிந்தது ராமன்-குகன் குசேலர்-கண்ணன்-மூலம் தானே –
ஸ்வரூபத்தால் இதை நிரூபிக்க முடியாதே -ரூப குணம் கொண்டே பிரகாசம் ஆகும் குணங்கள்—-

கார் வண்ணம் -தாப த்ரயத்தால் தபித்தவருக்கு -தாப ஹரமாய் -விரக தாபம் போக்கி –
நீல மேக சியாமளன் கார் வண்ணன்–அனுக்ரகம் -மேகம் -தாமரை பூ காடு–கார் வண்ண மேனியில் கண்ணும் வாயும் –
பரப்பு  மாற தாமரை –நீர் உண்ட கருப்பும் தாமரையின் சிகப்பும் –அபூத வுவமை -இவர் உடைய வாத்சல்யம் –
ஸ்வரூபம் ஆஸ்ர்யத்தால் வாத்சல்யாதி குணம் முன் இடுவார் –
விக்ரகம் ஆஸ்ரயிக்கிறவர் கண்ணும் வாயும் கை தளத்தில் இழிகிறார் —
இவர் உடைய மைத்ரேயர்-அதனில் பெரிய அவா பக்தி தான் அது உந்த  பாசுரம் அருளுவார்–
அது போல இவர் உடைய வாத்சல்யாதிகள் கண்ணும் வாயும் –ரூப குணங்களே உபாயம்–
சம்சார பய பீதி -சரீரம் அநித்தியம்–வெறுப்பு கொண்டு–ஆசை கழிந்து ஆத்மா குணம் உணர்ந்து —
பர ஸ்வரூப பெருமை உணர்ந்து -திவ்ய ஆத்ம குணங்களில் அடி இட்டு இழிந்தவள் இல்லை

இவள் அறிந்தது வடிவு அழகு ஒன்றே –கண்ணும் வாயும் கை தலமும் தூது செய் கண் இறே –
க்ரமத்தில் சொல்கிறாள் இங்கு –முடி சோதி கட்டுரைக்கில் கண் பாதம் கை ஒவ்வா –
சூடகமே தோள் வளையே  தோடே செவி பூவே  பாடகமே –விமுகராய் இருந்தோம் –
தூது செய்து காலைக் கட்டி -ஜிதந்தே புண்டரீகட்ஷன் ருசி பிறப்பிக்க -திரு கண்கள்–கமல கண்ணன் –
ஆதரவு ஏற்படுத்த -ருசி பிறந்த பிறகும் -பின்பு உபாயம் ஆக இருப்பதும் திருக் கண்களே
அனுபவிக்கவும் தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும்–கிருபையே உபாயம்-உபேயம் —

வாயும் -கண்ணிலே துவக்கு உண்டாரை நெடும் காலம் இழந்த இழவு தீரும் படி சாந்தனம்  பண்ணும் முறுவல்–
புன் சிரிப்பு-மயில் இறகு தடவுவது போல–கூச்சத்தோடு கிட்டினால் -நிர் அபராதர் நாம் என்று எண்ண வைக்கும் முறுவல்–
பொறுத்தோம் –ருசி ஜனகத்வம் திரு கண்கள்/ உபாயமாக பற்றவும் பிராப்யம் ஆகவும் திரு கண்கள் —
புன் சிரிப்பு நிரபாதர் நினைக்க வைக்கும் –முகமும் முறுவலும்-கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்கள்-ரஷகம்-
அஞ்சேல் என்ற அபய ஹஸ்தம் -குற்றம் கண்டு விலகாமைக்கு-வாத்சல்யம்–
கவித்த முடியும் ஸ்வாமித்வம் காரியம் செய்பவன் என்று துணிக்கை–
அகலப் பார்த்தால் புன் முறுவல் சௌசீல்யம் -கண்டு பிடித்து கொள்ள சௌலப்யம் திருவடிகள்–
சம்பாஷானம் பண்ணும் திரு அதரம்—கைத் தலம்-அடி இணையும்  கிட்டினாரை மா ஸூச என்னும் திருக் கை-
அணி மிகு தாமரை கை அடிசியோம் தலை மிசை அணியாய்–பிடித்து பற்ற திரு வடிகள்-அனுபவிக்க இழியும் துறை–புகல் இடமும் –
லோக விக்ராந்த சரணவ் உலகம் அளந்த பொன் அடி-சரண் எங்கு பேசினாலும் -திருவடி–
குழந்தைக்கு திரு முலை தடங்கள் போல திரு வடி-திரு விக்கிரம மதியம் மூர்தன அலங்க்ரிஷ்யதி —
திருப் பொலிந்த பொன் அடி என் சென்னியின் மேல்-கொக்கு வாயும் படு கண்ணியம் போல–
பிராப்யம் அறுதி இட்டு அனுபவிப்பது போக்கியம் —
நிகமனத்தில்  முதல் உறவு பண்ணும் கண்ணும் -திரு மேனி முழுவதும் கண்ணாக மாறினதே அர்ச்சைக்கு பலவும் –
படை எடுத்து ராஜ்ஜியம் பிடித்து பிரதமம் ஸ்ரவசி -காது-ஆதி சேஷன் வுச்வாசம் நிச்வாசம்-
கண்கள் பட படக்கும்-சண்டை போட்டு கொள்ளுமாம் இரண்டு கண்கள்–
உறவை ஸ்திரம் ஆக்கும் முறுவல்/ முறை உணர்ந்தாரை மேல் விழுந்து அணைக்கும் திரு கைகள் —
தோற்று திருவடிகளில் விழுந்தோம்-கமல வண்ணம்-போலியாக சொல்வதற்கு தான் தாமரை  -சருகாய் போகும் –
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலா செம் கண் –அச்சுதா -நழுவல் இல்லாதவன் -இந்த போலிகள் போல இல்லை–
சதைக ரூப ரூபாய விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே -சதா ஏக ரூபாயா -ஸ்வரூபத்தாலே நித்யம்
அடுத்த ரூபாயா ஸ்வாபமும் நித்யம்–கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா –

முடி அடி இடை பாடினார் முதல் பாசுரம்-முடி சோதி  பார்த்து திரு வடிகளில் விழுவோம் அடி சோதி –
கீழே போக விடாமல் வாரி அனைத்து கொள்வான் –
சூடகமே திரு கை தலம் பற்றுகிறான் தோள்களில் அணைய தோள் வளையே-
ரகசியம் காதில்  பேச வந்தான் தோடு- செவி பூவே –பாடகமே நாம் அணிவோம்–
இவன் யாருக்கு வசம் பட்டவன் என்று மேல் சொல்கிறாள்-அனுபவித்தவள் –
சமுத்ரத்தில் முழுகி மண் கொள்ளும் சாமர்த்தியம் கொண்டவர்கள் –
மறை பால் கடல் கடைந்து திரு வாய் மொழி-ஆழம் அறிய மணவாள மா முனிகள் –
லாவண்ய சௌந்தர்ய -அவயவ சோபை- சாகரம் அநு பவித்த -பார் வண்ணம் மட மங்கை–
இவர்கள்  அனுபவிக்க முடியாமல் குமிழ் நீர் உண்ணும் விஷயத்தில் என் பெண்-
மட மங்கை -பூமியை பிரகாரம் -மடப்பம் கொண்ட துல்ய சீல வயோ வருத்தம்-மங்கை- -ஸ்ரீ பூமி பிராட்டி-பார் வண்ணம்  விசேஷணம்–
அனைவர்களுக்கும் போர் ஆடுபவள்-இருக்க -தான் இழந்தேன் —
தான் அபிமதமாய் இருப்பது அன்றி அடியார் அடியார் சம்பந்தம் உத்தேசம் இருவருக்கும் –
பிள்ளை வேட்டகம் ஆசை பட்டு பெண் புக்ககம் இசைவது போல —
மங்கை யுவ குமார ஏற்க-சைசவம் பால்யம் கவ்மாரம் யவனம் -யுவதிச்த குமாரிணி–அபிமத அநுரூப தாம்மபத்யம்-பத்தர்-வசப் பட்டன் –
பஜ -சேவாயாம் -சேவை பண்ணுபவர் -அத் தலை இத் தலையாய் முறை கெட பரி மாறுகிறான்
போகத்தில் தட்டு மாறும் சீலம்-இவள் உடைய போக்யதை இருப்பது —
இவள் சொல்லிக் கொள்கிறாள் சிஷ்யை பக்தை தாசி-கிடந்தது  இருந்து நின்று அளந்து உண்டு உமிழ்ந்து -அவன் படுவது –
பித்தர் பனி மலர் பாவைக்கு -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால்- விராதன் ராமன் இடம் –
அரவாகி சுமத்தியால் எயற்றில் எந்தியால் வாயால் விழுங்குதியால் ஈர் அடியால் ஒளித்தியால்
இது அறிந்தால் சீறாளோ மார்பில் இருக்கும் ஸ்ரீ தேவி–
பித்தர் பனி மலர் -அது தான் முறை உடன் பரிமாறுகிறான் என்று சொல்லும் படி வியாமோகம்-
பாவை-பனி மலர்-பனி மலர்-சரம ஹரமான-தாமரை பூவின் பரி மளம் வடிவு கொண்டால் போல்
அல்லி மலர போக மயக்குகள் ஆகியும்  நிற்கும் அவன் குமிழ் நீர் உண்ணும் படி இவள் போக்யதை –
வாக்குக்கும் கண்ணுக்கும் எட்டாது அவனுக்கு கூட –பாவம் செய்தேன்-

ஏர் வண்ணம் -வினவ வந்தவர்களுக்கு அழுது -இவளும் முறை கெட பரி மாறுகிறாள் —
இங்கு முறை கெட-சேஷத்வம் பார தந்த்ர்யம் மறந்து – அவன் வைலஷ்ண்யம் குற்றம் இல்லை
இவள் ஆற்றாமை குற்றம்  இல்லை என் பாவமே இத்தனைக்கு அடி -பரதன் போல நானே தான் ஆயிடுக —
மந்தரை இல்லை கைகேயி இல்லை தசரதன் இல்லை பெருமாள் இல்லை நானே என்றான் –
இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே உண்டு என்று இசைகை தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவம் –
எனக்கும் தனக்கும் உதவாமல்-இருக்கிறாள் —
ஏர் வண்ணம்-என் பேதை -இவள் தன்னை உணர்ந்தால் ஆகில் இப் பாடு எதிர் தலை படும் பாடாய் இருக்கும் அழகு கொண்டவள்
ஏர் வண்ணம்  இவள் -கார் வண்ணம் நிகர் ஆகாது –அறிவை அவளும் நின் ஆகத்து இருப்பதும் –
திவளும் வெண் மதி முகம்- இவள் கண் அழகு -ஏக அவயவம் சாம்யம் -செழும் கடல் அமுதம்
இவள் கொல்லி அம் பாவை நிலத்தில் செதுக்கியது-  மேகம் கிடைத்தது போலி சொல்ல -இவளுக்கு அது சொல்ல முடியாது
அழகிய என்றே வடிவு இணை இல்லா மலர் மகள் மற்று நிலா மகள் பிடிக்கும் மெல் அடி –ஸ்ரீ தேவி நாதன் –
வைஷ்ணவி இவள் ஸ்ரீ வைஷ்ணவி பூமி பிராட்டி சேர்த்தியில் கைங்கர்யம் நீளா தேவி அடியார்க்கு அடியார் ஏற்றம் –

அடியார் அடியார் அடியார் பர கால நாயகி சமுதாயம் கைங்கர்யம்–ஏற்றம்-
பூமி பிராட்டி சமுத்ரம் இவளுக்கு நீளா இடை சாதி இவளோ என் பேதை-கும்பனை  விட ஏற்றம் மம சுதா —
பின்னை கொல்  மலர் மகள் கொல் நிலா மகள் கொல் உடன் அமர் காதல் மகளிர்  பிறந்திட்டாள்–
நியமிக்கும் அளவு போனது –ஹிதம் சொன்னால் கேட்கிறது இல்லை —
அவன் சொல்லு கேட்பவள் என் சொல்லை காற்கடை கொள்ளுதல் மாம் ஏகம் சரணம் விரஜ கேட்டவள் –
சக்ருதேவ பிரபன்னாயா -என்னை இப் பொழுதே பற்று -கிரம பிராப்தி வேண்டும் படி அன்றோ உபாய பிராப்தி –
கர்மம்-ஞான பக்தி போக வேண்டாமே -சித்தோ உபாயம் இதுவு -தனக்கு கர்த்தவ்யம் உண்டு என்றால் க்ரம பிராப்தி உண்டு —
பண்ண  வேண்டியது ஒன்றும் இல்லையே —

எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும் -அங்கு வேற போக -இங்கே பேச கூடாது சொன்னேன் –
வழி எது என்று என்னை கேட்கிறாள் அவன் பதறாமைக்கு தான் யார் சொல்லி போனான்–அநந்யார்ஹை ஆக்கி –
பேறு தப்பாது என்று சொன்னதே பதருகைக்கு ஹேது ஆனதே —
நீர் வண்ணன் -கோவிலுக்கு போவது -வழி திரு நீர் மலைக்கு -நிறைவு அழிந்தவள் நிலைமை இது —
திரு குறையலூரில் இருந்து புறப் பட்டு இந்த வழி-தங்கும் பயணம் -பாதேயம் திரு நாம சங்கீர்த்தனம் போல –
கை வழிக்கு சோறு இதுவே –திருப் பதிகளிலே தங்கி அல்லது போக மாட்டாளே இவள் —
நாணம் ஸ்ரீத்வம் அளித்து இருகிறவள் பிரகாரம் -விஷய வைலஷண்யம் பார்த்து -இது அன்றோ  நிற்குமாறு-
தாயார் உண்மை இது தான் என்கிறாள் நாம் அனைவரும் இருக்கும் நிலைமை போக அனுரூபமே ஸ்வரூபம் என்கிறாள் –
ஆற்றிலே கெடுத்து குளத்தில் தேடுகிறாள்-
ஆண்டாள்  ஸ்வரூபம் பார்க்காமல் இடை பெண் போல இடை முடியும் இடை பேச்சும் கொண்டது போல –
போக அநுரூப ஸ்வரூபம் -யக்ஜா பத்னிகள்  மடி தார் உடன் இருந்தார்கள் ஸ்வரூப அனுகுனம் –
தன் மகள் இருந்த போக அநுரூப ஸ்வரூபமே இதுவே போற்றத் தக்க நிலை என்கிறாள் தாயார்

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: