திரு நெடும் தாண்டகம்–12-நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும்
நெடிது உயிர்க்கும்  உண்டு அறியாள் உறக்கம் பேணாள்
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பி என்னும்
வம்பார் பூம் வயலாலி மைந்தா! என்னும்
அம்சிறைய புட் கொடியே ஆடும் பாடும்
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழி என்னும்
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணைப் பெற்றேன்
இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ! பாவமே–12-

பதவுரை
(இப் பெண்பிள்ளை)
நெஞ்சு-மனமானது
உருகி-நீர்ப்பண்டமா யுருகி
கண் பனிப்ப நிற்கும்-கண்ணீர் பெருக நிற்கின்றாள்;
சோரும்-மோஹிக்கின்றாள்;
நெடிது உயிர்க்கும்-பெரு மூச்சு விடுகின்றாள்;
உண்டு அறியாள்-போஜனம் செய்தறியாள்;
உறக்கம் பேணாள்-உறங்க விரும்புகின்றிலன்;
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்-விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வான் மீது யோக நித்திரை புரிகின்ற நம்பீ! என்கின்றாள்;
வம்பு ஆர் பூ வய்ல் ஆலி மைந்தா என்னும்-பரிமளம் மிக்க பூக்களை யுடைய கழனிகள் சூழ்ந்த திருவாலியிலுள்ள நித்ய யுவாவே! என்கிறாள்;
அம் சிறைய புள் கொடியே ஆடும்-அழகிய சிறகையுடைய கொடியாகிய பெரிய திருவடியை அநுகரித்து ஆடுகின்றாள்;
பாடும்-பாடுகின்றாள்;
தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்-‘தோழீ! (நாம்) திருவரங்கத் துறையிலே படிந்தாடப் பெறுவோமோ?‘ என்கின்றாள்;
என் சிறகின் கீழ் அடங்கா–என் கைக்கடங்காத
பெண்ணை பெற்றேன்-பெண் மகளைப் பெற்ற நான்
இரு நிலத்து-விசாலமான இப் பூமண்டலத்திலே
ஓர் பழி படைத்தேன்-ஒப்பற்ற பழியை ஸாம்பாதித்துக் கொண்டேன்;
ஏபாவம்–அந்தோ!.

என்னை துறந்து -அவனைப் பற்றினால்- நானே குற்றம் புரிந்தவள் -கடல்  வண்ணன் -அயர்த்து விழுந்தாளே முன்பு –
சிறிது உணர்ச்சி பெற்றாள்–மெய்யே கட்டு விச்சி என்றதும் கடல் வண்ணர் வார்த்தை கேட்டு உணர்ந்தாள்–
மீண்டும் தாய் இதைச் சொல்ல -அவளும் எம்பெருமான் திரு அரங்கம் எங்கே -சொன்னதாலும் –
மூன்றும் கொடுத்த பலம்–தீர்ப்பாரை-உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் –
சகி வெறி விலக்கு பதிகம் – தோழி சொல்லும் பொழுது வண் துவாராபதி மன்னன் கேட்டு பராங்குச நாயகி தொழுதது போல —

எழுந்தும் சேவை சாதிக்க வில்லை-அதுவே ஆற்றாமைக்கு உடலாய் –
கிலேசம் -இருக்கும் படியும் -ஸ்வரூப ஹானி நின்ற நிலையும் தாயார் சொல்கிறாள்–
மைந்தா நம்பி கைப் பிடித்தவன் பெயரை சொன்னதால் அடங்காப் பெண்ணாக போனாள் என்கிறாள் —
சகலமும் தன் குற்றம்–உண்மையாக இப்படி பட்ட பெண்ணை பெற்ற பெருமை-லோக அபவாதம் தடுக்க பேசுகிறாள் —

நெஞ்சு உருகுதல் இரக்கத்தின் முதல் வகை –மனசு அவயவம் இல்லையே–
அக்னி மெழுகு விரக அக்னி–த்ரவ்யம்-நீர் பண்டம் ஆகி –கண் பனிப்ப -உருகினது வெளிவர- வெள்ளம் போல –
அந்த கரணம் உருகி பாக்ய கரணம் வழிய வர –
நிற்கும் சோரும்-அடுத்த நிலைகள்–காரியம் இருக்கிற படி–
விவேக ஞானம் போய் -மரம் போல நின்றாள்-நெஞ்சு உருகினதால்-க்ருத்ய அக்ருத்ய விவேகம் இல்லை-
குகன் பரதன் -அனந்த ஸ்த்ரக சத்ருக்னன்-கெட்டியாக அனைத்து கொண்டு அழுதானாம்-
ஸ்வாமி பெருமாள் தரைப் பட்டு கிடக்க -தைர்யமாக நிற்க வில்லை-
அலமந்து போய் நின்றான் சேஷ பூதன் தரித்து நிற்க வில்லை –அது போல நிற்கிறாள் –
சோரும்- ஆலம்பனம் பெற்றால்  நிற்கலாம்- மோகித்து விழுந்தாள்–
கண்ணாறு உண்டாகில் -ஞானம் இருந்து பார்க்க முடியாமல் மூச்சு இழந்து விழுந்தாள் பெரு மூச்சு விட்டாளாம் –
கட்டை பற்றிய அக்னி-விறகு அக்னி நெஞ்சை உருகி முடிந்த பின்பு மீதி புகை வெளி வருகிறதாம் –

சீதை பிராட்டி உச்வாசம் நிச்வாசம் எல்லா மரங்களும் எரிந்தது போல-திருவடி உலக அக்னியால் எரிய வைக்க —
தன் கார்யம் தலைக் கட்டின படி-இது -என் கார்யத்தில் இவள் நின்ற நிலை -உண்ணாது உறங்காது–
இவள் ஊனும்  உறக்கமே தாயின் உத்தேசம்–தன் ஜீவனம் தேடி போனாள் என் ஜீவனம் பறித்து போனாள்
திண்ணம் இவள் புகும் ஊர் -பராங்குச -உண்ணும் சோறு–எல்லாம் கண்ணன்  என்கையால் –
உண்டு அறியாள்- மறந்தாள்–சேர்ந்து இருந்தால் அவன் திரு நாமமே –

உறக்கம் பேணாள் –விட்டுப் பிரிந்து –முன் பட்டு உடுக்கும் -அவனுக்கு பிடிக்கும் என்று –
அதற்கு வருவான் என்று அதுபோல இதுவும் உன் உடம்பும் அவன் ஆதரிக்குமே —
நாளைக்கு வந்தால் உடம்பு கெடுத்து கொள்ள உன்னை யார் அனுமதித்தால் கேட்ப்பானே தன் போக்கியம் அழிந்ததே என்பானே —
அவற்றையும் கேட்காமல் –பகவத் விஷயம் கிட்டுவதற்கு முன்பு உணர்த்தி அறியோம்
இப் பொழுது உறக்கம் அறிவோம்..–ஸ்வரூபம் அழித்துக் கொண்டாள்-தன் பிரயோஜனமும் கெட என் பிரயோஜனமும் கெட—
அபிமத விரகத்தால்-நெஞ்சு உருக பிறர் அழியாத படி -பொறி புறம் தடவி–
உருகாதவாறு காட்டிக் கொண்டாள் அவனே வருவானே- நம்பி கூப்பிடுகிறாளே–
எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும் வாய் வெருவுகிறாள் என்று நினைந்து இருந்தோம்-
ஊரைச் சொன்னாள்– கடல் வண்ணன் பெரிய பெருமாள் -இப் பொழுது படுக்கை நஞ்சு அரவு துயில் சொல்கிறாள்–
முதல் படுக்கை- காட்டில் வேம்கடம்  மால் இரும் சோலை மணாளனார் -பள்ளி கொள்ளும் இடம் திரு அரங்கம் தானே —
முதல் படுக்கை கோவில் தானே -நம்பி குண பூர்ணர்– தான் அழியா நின்றாலும் அழித்தவனுக்கு பெருமை சேர்க்க பார்ப்பார்கள்-
நம்பி -நஞ்சு அரவு-ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல உமிழும் –அவனை உறகல்  உறகல் பொங்கும் பரிவு —
தன்னை அழிக்க ஒண்ணாத படி நஞ்சு அரவு என்கிறாள்—மென்மை குளிர்த்தி நாற்றம் வெண்மை பரந்து -பஞ்ச சயனம்-

சேதனரை படுக்கை ஆகப்  பெற்றோமே–சென்றால் குடையாம்-
குழைய வேண்டும் இடத்தில் உயர வேண்டிய இடத்தில் உயர்ந்து –உறைய வேண்டிய இடத்தில் உறைந்து —
துயில் அமர்ந்த -படுக்கை வாய்ப்ப்பாலே வீசி வில் இட்டு எழுப்பினாலும் எழுந்து இருக்காமல்–
நிர் பயம் -நஞ்சு-போக ரூபம் -இனிமை-துயில் அனுபவம் உண்டே – துயில் அமர்ந்த நம்பி–
பொருந்தி கண் வளர பெற்றோம்–நம்பி-குண பூரணன் -விட முடியாமல் அழுது கொண்டு இருக்க வைத்து இருக்கும் அழகு–
ஸ்ரீமான் சுக துக்கபரந்தப  -தூங்கும் பொழுதே ஸ்ரீ மான்-ஆலத்தி வழிக்க வேண்டும் படி-
பிரணய ரோஷம் தோற்ற -பிரதி கூலருக்கு நஞ்சு–வியாஜ்யம் – 
என்னை ஒட்டுகிறீரே-அவ வஸ்துவை ஒழிய அநந்ய பிரயோஜனர் ஆகிய என்னை-படுக்கை ஸ்வாபம் –
இதன் மேல் கோபம்-சம்பந்தமும் போக்யமும் -விட்டு ஒழிக்க ஒழியாத -சம்பந்தம் உண்டே-போக்யதையும் உண்டே–
அடியார்களுக்கு அதிகம் இவை–அதனால் தான் ஆதி சேஷன் மேலும் கோபம்–ததீய சேஷத்வம் அந்தர் பூதம்–
அவனுக்கே அடிமை -திருவடியும் உண்டே அடியார் திருவடி -உனக்கே நாம் ஆட் செய்யும் கண்ண புரம் ஓன்று -உன் அடியார்க்கு அடிமை–

இருவருக்கு படுத்த படுக்கை -ஒருவர்-எனக்கு தாய் மடி பொருந்தாது இருக்க உனக்கு –
பிரணயித்வம் நன்றாக காட்டினாயே -நம்பி இத் தலை ஒன்றும் இன்றி வெறும் தரையாய் இருக்க அத் தலை பூரணமாய் இருக்க உறக்கம்  பேணாள் –
துயில் அமர்ந்த –திரு கல்யாணம் ஆன படியை அடுத்து –
வம்பு ஆர் மணம்  பிரசுரமான பூ வயல்- அவன் யுவத்வம் நித்யம் நித்ய யுவா போல -நித்ய வசந்தம்–
தம் உடைய அரும்பினை அலரை போல அடுத்து கோபத்துடன்-
நான் இருக்கும் தேசம்   நீரும் பூவும் மணமும் இன்றிக்கே இருக்க தான் இருக்கும் தேசம் வசந்தமாய் ஆவதே —
அவன் போல குளிர்ந்து –நான் கொதித்தது போல என் தேசம்–

மைந்தா–தன்மை வைத்து தான் என்னை வசப் படுத்தினாய்–போக்யதை காட்டி -வாடினேன் வாடினேன் பாட வைத்தாய்-
மைந்தன் தன்மை கொண்டு தான் மாற்றினாய்–
ஐயப் பாடு அறுத்து -அழகனூர் அரங்கம்–பாணிகிரகனம்-விஸ்வாமித்ரர் போல பெரிய திருவடி- விசவாமித்ரரை சொல்கிறது —
சிறகு அசைத்து வருவதை தெரிவிக்கும் ஒவ்தார்யம் –அநுகாரம் பண்ணி பாவிகிறாள்-
புட் கொடியே-கோபிமார் கண்ணன் போல அநுகாரம்-இவள் புட் கொடியே ஆடும் பாடும்-கடகரை அனுகரித்து -ஆடும் பாடும் —
நெஞ்சு உருகி சோர்ந்தவள் ஆட பாட -அனுகாரத்தால் உணர்த்தி பட்டு ஆடி பாடினாள்-ஆசுவாசத்தால்–
மரங்களும்  இரங்கும் வகை கண்ணும் கண் நீருமாகி-சோக ரசமோ போக ரசமோ கால் தாழ்வார்கள்–
தோழி-ஒரே சுக துக்கம்-ராமன் சுக்ரீவன்- –ஆர்த்தி வடிவில் தோன்றும் படி தோழி முன் நிற்க-அணி அரங்கம் ஆடுதும்-நீர் ஆடுதுமோ—
பெருமானே தடாகம்–விரக தாபம் போக்குபவனே அவன் தானே —
தொல்லை வேம்கடம் ஆட்டமும் சூழ் -வேம்கடமே குளம் என்றாரே -முகம் வெளுத்து இருக்க பண்டு போல மிளிர்ந்து இருக்கலாம் என்கிறாள்

அணி அரங்கம் ஆடுதுமோ–பொய்கை போல -திரு வேம்கடம் கல்லையே பொய்கை என்றாரே–
மடுவிலே புகுந்தால் போல் அனந்யார்ஹராய் அநந்ய போக்யராய் -இருப்பவர்களுக்கு மடு போல் இருக்கும் அரங்கம்–
உன் பெண் தானே ஸ்வரூப நாசம் -அணி அரங்கம் ஆடுதும் நாமே போவோம் நம்பி மைந்தா மேல் விழுதல் சொரூப ஹானி தானே –
சிறகின் கீழ் அடங்கா பெண் பெற்றேன் -ஏ பாவமே –ஆஸ்ரயண திசையில்-ஐயப் பாடு அறுத்து தம் பால் ஆதாரம் வைத்தவன் அவன்–
பக்குவம் அடைய காத்து இருக்கிறான்– துடிப்பு ஏற்படுத்த அனுபவம் கொடுக்க –
போக தசையிலும் காத்து இருக்க வேண்டியது தானே ஸ்வரூபம் —
சிறகு-பஷம்-பக்கல்-என் அபிமானம் -அவன் அபிமானத்தில் அடங்கினவள் தானே —

என் அபி மதம் செய்ய வில்லை- உண்ணவில்லை உறங்க வில்லை–
அவனையும் அவளையும் குற்றம் சொல்லாமல் -தன் குற்றம் ஆக்குகிறாள்- பழி —
பெண் பிறந்து மூத்த பெண்ணும் நடுவில் பிள்ளையும் கடை குட்டியுமாக பிறந்து குல பெருமை-
ஆழ்வார் ஸ்ரீ வைஷ்ணவ பிர பன்ன குல பெருமை-சீதை  பரதன் கண்ணன் போல –இது நிலம்- பெரிய பூமி தோறும் பழி —
தன் கார்யத்துக்கு பிரவர்த்திப்பதே குல பழி என்கிறாள்–
குடியின் ஏற்றம் அவனையே பார்த்து களைவாய்  களை கண் மற்று இலேன்  –அபஹத பாப்மன் அவன் –
மத் பாபமே-பரதன்-வன பிரவேசம் ரகு நந்தனன் மந்தரை –  அவள் வார்த்தை கேட்ட -கலக்கிய மனத்தளாய் கைகேயி வரம் வேண்ட -கைகேயி –
இவள் வார்த்தை கேட்ட சகர வர்த்தி -தசரதன்- -சத்ய சீலன்-
இவன் சொல்லை கேட்டு மூத்தவரே கிரீடம் குல தர்மம் -ராமன் இல்லை –அனைவரையும் கழித்து தானே- –
பட்டாபிஷேகம் பண்ணி இருந்தால் அனுகூலமாக கைங்கர்யம் கிடைக்காமல் தான் போனதே காரணம் –
இக் குடி  வாழ பிறந்த செல்வ பிள்ளை–வன வாசம் போக தானே –
நானே தான் ஆயிடுக–இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டுச் சொன்னாலும்
இல்லை என்னாமல் தானே என்று கொள்வதே -தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வம் –

கூனி சொன்னதை கைகேயி கேட்க வேண்டாம்-அடி யாட்டி ஆகையாலே -தாசி–சக்ரவர்த்தி –
ஸ்திரீ புத்திர வாத்சல்யத்தாலே சொன்னதை  பத்ரு கேட்க்க வேண்டாம் –சக்ரவர்த்தி சொன்னதை பெருமாள்-
தர்ம ஆபாசத்தை -பிரமித்து -சாமான்ய தர்மம் -மூத்தவன் இருக்க இளையவன் பட்டம்-ஸ்திரீ பாரதந்தர்யத்தாலே –
கேட்டு இருக்க வேண்டாம்–இவனை விட்டு பிரிந்தால் பரதன்  வாழ மாட்டான் என்று தெரிந்தும்
தாம் ராஜ்ய பிரதர்  என்று தெரிந்தும் தசரதரை கட்டி விட்டு தானே பட்டம் கொண்டு இருக்கலாம்
அதை தடுத்தது என் பாவமே -பரதன்–அது போல தாயாரும் இங்கே தன் பாவமே என்கிறாள்

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: