திரு நெடும் தாண்டகம்–14-முளை கதிரை குறும் குடியுள் முகிலை -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

முளை கதிரை குறும் குடியுள் முகிலை மூவா
மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை
விளக்கு ஒளியை மரகதத்தை திரு தண்  காவில்
வெக்காவில்  திரு மாலை பாட கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று
மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே–14–

பதவுரை

முளை கதிரை-இளங்கதிரவனைப் போன்றவனும்
குறுங்குடியுள் முகிலை–திருக்குறுங்குடியில் காளமேகம் போல் விளங்குபவனும்
மூவா மூ உலகும் கடந்து–நித்யமாய் மூவகைப் பட்டதான ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகாய்
அப்பால்–பரம பத்திலே
முதல் ஆய் நின்ற–(உபயவிபூதிக்கும்) முதல்வனாய்க் கொண்டு எழுந்தருளி யிருப்பவனும்
அளப்பு அரிய–(ஸ்வரூப ரூப குணங்களில்) அளவிடக் கூடாதவனும்
ஆர் அமுதை-அருமையான அம்ருதம் போன்றவனும்
அரங்கம் மேய அந்தணனை–திருவரங்க மா நகரில் பொருந்திய பரம பரிசுத்தனும்
அந்தணர் தம் சிந்தையானை–வைதிகர்களின் உள்ளத்தை இருப்பிடமாக வுடையவனும்
திருத் தண் காவில் விளக்கு ஒளியை–திருத் தண் காவில் விளக்கொளி யெம்பெருமானாய் ஸேவை ஸாதிப்பலனும்
மரகத்தை–மரகதப் பச்சைப் போல் விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
வெஃகாவில் திருமாலை–திரு வெஃகாவில் கண் வளர்ந்தருளுகிற திருமகள் கொழுநனுமான
பாட கேட்டு–ஸர்வேஸ்வரனைக் (கிளி) பாட (அப் பாசுரங்களை)க் கேட்டு
மடக் கிளியை–அழகிய அக் கிளியை நோக்கி
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று–உன்னை வளர்த்ததனால் பிரயோஜனம் பெற்றேன்; இங்கே வா‘ என்றழைத்து
கை கூப்பி வணங்கினாள்–அதற்கு ஒரு அஞ்சலியும் செய்து நமஸ்கரித்தாள்.

பவ்யமான கிளி -பால சூர்யன்- மேகம் போன்ற  திரு குறும் குடியில் தங்கி —
மூவா மூ உலகு -பக்த முக்த நித்ய சுத்த சத்வம் மிஸ்ர -கால -அப்பால் –
அளப்பதற்கு அரிய மைந்தனே மதுர ஆறே –அமுதம் விழுந்த இடமே ஸ்ரீ ரெங்கம்–
பெரியோர் ஹ்ருதயத்தில் செல்வதற்க்கே இருக்கிறான்–விளக்கு ஒளி எம்பெருமான்-
பச்சை வண்ண பெருமாள் சிலர் சொல்ல -பெரிய வாச்சான் பிள்ளை விளக்கு ஒளி பெருமாளையே சொல்கிறார் என்கிறார்-
திரு மால்- சேர்த்து -கீழே வேந்தே -தனித்து சொல்லி -இங்கு திரு கல்யாணம் ஆனதால் மிதுனம் –
திரு மாலைப் பாட -மட கிளியை- சிஷ்யன் சொல்ல ஆசார்யன் பெருமை பட –
வருக என்று நினைந்து கை கூப்பி -இரண்டு அடி நடந்து வந்து சேர -கை கூப்புவதை   கண்டு  மடப்பம் –

திரு நாமம் சாத்மிக்கும் திசை –கேட்டு கை கூப்பினாளே -தரித்தாள்- முன்பு சங்கை இருந்தது –சொல்ல சொல்ல மோகித்தாள் முன்பு-
கிளி விவேகத்தாலே முன்பு தெளிந்த காலத்தில் -தான் உஜ்ஜீவித்த -தரித்து -இருந்த காலத்தில் கற்பித்த திரு நாமங்களை
அடைவே  சொல்லக் கேட்டு -அதே வரிசையில் –
முளைக் கதிரை-சொல்லி அவள் முகம் பார்த்து –
குறுங்குடியுள் முகிலை-இன்னும் தெளிய-பரத்வம் சொல்லி அடுத்து -அரங்க பட்டர்  சாய்ந்து இருப்பாராம் —
முளைக் கதிரை –புரியும் படி சொல்லி கொடுத்தார்–என்னீர்-என்னீர் -அடைவே–திரும்ப சொல்ல –
உதிக்கிற சூர்யன் போல- செம் கண் சிறி சிறிதே பால சூர்யன்-கண்ணால் முகந்து அனுபவிக்கும் படி–
கையில் பிடித்த சக்கர ஆயுதம் கோடி சூர்யன் போல -அவன் திரு முக மண்டலம் -தேஜஸ் —
திவ்ய மங்கள விக்ரகம்–பிரசன்ன ஆதித்ய -கடல் மன்னர் சூழ கதிர் போல வீற்று இருந்தான்-
பிரகாசம் உண்டு சுட்டு எரிக்கும் தன்மை இல்லை–மூரி நிமிர்ந்து முழங்கி புறப் பட்டு-
பூவை பூ வண்ணா தேஜஸ் உண்டு மார்தவமும் உண்டு–
அது போல முளைக் கதிர்–அடியிலே விஷயாந்தரம் இருந்து மீட்டதும் –திரு மங்கை ஆழ்வாராக ஆக்கினாரே —
ருசியை பிறப்பித்தும் திரு மேனி அழகை காட்டி தானே–அதை முதலில் பாடுகிறார்–மணி உருவில் பூதம் ஐந்தாய் என்று அன்றோ —
நீல எம்பெருமான் முளைக் கதிர் -சிவப்பு-வஸ்து பேதம் அப்ரயோஜகம்- பிரகாசமே முக்கியம்–தேஜோ மயம் விக்ரகம்- 
பரம் ஜோதி-சாஸ்திரம் அடியாக இல்லை– ஆச்சார்யர் மூலம் இல்லை–திரு குறும் குடி முகிலை–திவ்ய மங்கள விக்ரக தர்சனம்-
முகில் உருவம் இரண்டாம் பாட்டில் ஸ்ரம ஹரம் ஒவ்தார்யம்–காட்டியது போல இன்ன பர்வதத்தில் வர்ஷம்  –
திரு வேம்கடம் திரு மால் இரும் சோலை திரு குறும் குடி- வர்ஷம் தப்பாது -லோகம் எல்லாம் வாழும் படி இருக்கிறான்–
உலகம் வாழ்ச்சிக்கு-நம் ஆழ்வாராக அவதரித்து -உள் முகில் வந்து கொட்டி போகாமல்- ஸ்தாயியாய் கொட்டி கொண்டே இருக்கும் –
ஆழ்ந்து போனது–சீலம் -இரண்டற கலக்க நிற்கிறான்-

அடி பாடி -மூலம் சொல்கிறது -மூவா மூ வுலகு- -அனைத்து உலகும் தாண்டி உள்ள பரம பதம்-
அதனால் திரி வித ஆத்ம வர்க்கம்- புருஷோத்தமன்-பக்த நித்யர் முக்தர் -காட்டிலும் வேறு பட்டவன் கீதை 15 அத்யாயம்-
கடந்து சேதன அசேதனர் தாண்டி- ஸ்வேதர சமஸ்து வஸ்து விலஷணன்-சுவ இதர வஸ்துகள் – –
முதலா-காரணம் சொல்ல வில்லை- நித்யர் என்றுமே உண்டு என்பதால் போக்யதையால் சத்தை பெரும் படி–
கைங்கர்யம் பண்ணியே ஒளி விட்டுக் கொண்டு–உயர்வற உயர் நலம் உடையவன்-
யானைக்கு குதிரை வைப்பாரைப் போல தன்னை அனுபவிக்க பண்ணுபவன்–
போக்யதையால் நித்யருக்கு சத்தா ஹேதுவாய்–இந்தர்யங்கள் கொடுத்து நமக்கு சத்தா ஹேதுவாய்–
அளப்பரிய ஆரமுதை– ஸ்வரூப ரூப குணங்களால் அபரிசின்னனாய் –
வஸ்து தேச கால அபரிச்சின்னனாய் அமிர்த சாகரமாய் -நிரதிசய போகய பூதனாய் இதுக்கும் அவனை–
அரங்கம் மேய அந்தணனை- குமிழி வந்து கீழே தடாகம் -கோவிலிலே கண் வளரும்

சீரார் திரு வேம்கடமே -பல கோவில்களாக பெருகி–
பெரிய பெருமாளுக்கு அடி ஸ்ரீயபதி  அன்று-திரு பாற்கடல்-காணும் ஸ்ரீ பரம பதம்-ஆயிற்று-
அண்டர் கோன்  அணி அரங்கன் என் அமுது-அரங்கம் மேய–பரம பதத்தில் இருப்பு பேருகைக்கு யோக்யதை உண்டு–
அவதாரங்கள் தீர்த்தம் பிரசாதிக்க யோக்யதை உண்டு–
சம்சாரங்கள் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்போம் -பேரென் என்று கிடக்கிறான் இங்கு–
கல்ப அவசானம்-கல்ப  முடியும் பொழுதும்-விஷயம் இல்லாமையாலே கிளம்பி போகிறான்–
விஷயாந்தர பிராவண்யம் அகங்காரம் போக்கி -சுத்தி உடையவன்–அந்தணர்-சுத்தர்- சுத்தர் ஹ்ருதயம்-
உட் கிடந்த வாறே பொசிந்து காட்டினானே -கோவில் வாசமும் ராகாதி -காமம் குரோதம் இல்லா மனசை தேடி தபஸ்- சாதனம்–
சத்திய ஹ்ருத்ச்யதன் -திருக் கடித் தானமும் என் உடைய சிந்தையும் -தாய பதியிலே –
ஏறி வந்த ஏணி உதைக்க மாட்டான்–அரங்கம் மேய–அன்று வெக்கனை கிடந்த -என்ன கடவரே —
அன்று நான் பிறந்திலேன் –நின்றதும் இருந்ததும் கிடந்ததும் –என் நெஞ்சுளே —

விளக்கு ஒளி-விஷயாந்தர பிரவண்யம் போக்கி  அகங்காரம் போக்கி கிளம்பாமல்-
நெஞ்சில் புகுந்து முறை உணர்த்தினான் –பிரகாசிப்பித்தான் —
அர்த்த பஞ்சகமும் காட்டி புருஷார்த்தம் சித்திக்கும் படி —
மிக்க இறை நிலையும்–திரு தண்காவில் மரகதத்தை- தீபம் சேர்ந்தவன்-ஸ்வேத தீபம் –போல –
இங்கு உள்ள மரகதம்-விலஷணம்–சயனித்து உறங்கும்-பச்சை மா மலை போல் மேனி வடிவை உடையவன்–
வட தேசம் இருந்து வரும்  பெரிய பெருமாளை அனுபவிக்க வருபவர் -இளைத்து  வரும் இடத்தில் –தேற்ற –
ஆயாசம் போக்க எதிர் கொண்டு அனுபவிக்க -திரு வெக்காவில் சயனம் ஆன பின்பு —
ஸ்ரீய பதித்வம் நிறம் பெற்ற படி–இருவரும் கிடந்த கிடக்கை கீழ் அருளி செய்தார்-
ஆஸ்ரியன வேளையிலும் போக வேளையிலும் மிதுனமே ஆபாஸ்ரயம்—

பாட -ப்ரீதி பிர கர்ஷத்தாலே -சொல்லி தலைவி எழுப்பியதை கண்டு–
கிஞ்சித் கார கைங்கர்யம் செய்யப் பெற்றோம் என்று ஆனந்தம்-பாட -சொல்ல இல்லை–சொல்ல ஆரம்பித்து பாட ஆரம்பிக்க –
இவள் கேட்டு–சொல்லே என்று சோர்ந்தாள் -சாத்மிக்கையாலே கேட்ப்பாரை பெற்றாள்–
இதில் தான் பாடக் கேட்டு–திரு மால் வந்த பின்பு-கடகர் உண்டே என்று சாத்மிகிற திசை–
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கு கண்ண நீர்–வளர்த்த பிரயோஜனம் அடைந்தேன்–
ஆபத் சகன் ஆபத்து விளைவித்து போனான்- நீ ஆபத் சகன் ஆனாயே-
முன் கை முப்பது காதம் இருக்கிற படி வருக என்று- மட -மடப்பம் பவ்யம் லஜ்ஜை-
தன் ஓட்டை சம்பந்தம்  ஒவ்பாதிகம் ஆக்கினாளே -சொல்லி கொடுத்தது காரணம் பற்றி இல்லையே-
பயன் பெற்றேன் சொன்னாளே-கை கூப்பி ஒதுக்கி  விடுகிறாளே -வருக பயன் பெற்றேன் சொல்கிறாளே–
ஸ்வரூப பிர யுக்தம் தானே -அதனால் வெட்க்கம் பட்டதாம் –
அஹம் ச ரகு வம்ச லஷ்மணன் வைதேகி -ஹனுமான்- உனக்கு கடன் பட்டோம் கண்டேன் சீதை சொன்னதும் -வெட்கினார் திருவடி-அது போல–
பவ்யம் -விஜய ராகவன் செய்தி சொல்ல போகும் திருவடி முன் -பிராட்டி கை கூப்பி தலை அல்லால் கைம்மாறு இல்லை சொல்ல ஆரம்பிக்க –
குருகி நமஸ்கரித்து ஒதுங்கி நின்றாரே திருவடி–கை கூப்பி வணங்கினாளே–
மனசில் நிற்காமல் , அஞ்சலி பண்ண  -வெட்க்கம் கை விட்டதாம் -தெரியாதது போல –
வாத்சல்க்யத்தால் செய்த தாய்-குழந்தை காலை கன்னத்தில் கொண்டது போல –
வணங்கினாள்-கை கூப்புதல் மட்டும் இன்றி தண்டம் இட –
உடையவர் முதலிகள் செல்ல சமுகம் கண்ட ப்ரீதியாலே ஆள வந்தார் போல நினைத்து பெரிய நம்பி தண்டன் இட —
ராமானுஜர் கண்டு கொள்ளாமல் போக –உதாசீனம் -வாத்சல்யம்- திரும்பி செய்தால் அங்கீ கரித்தது போல ஆகும்

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: