திரு நெடும் தாண்டகம்-13-கல் எடுத்து கல் மாரி காத்தாய்! என்றும் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

கல் எடுத்து கல் மாரி காத்தாய்! என்றும் –
காமரு சீர் பூம் கச்சி ஊரகத்தாய் என்றும்
வில் இருத்து மெல் இயல் தோள் தோய்ந்தாய்! என்றும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே! என்றும்
மல் அடர்த்து மல்லரை அன்று  அட்டாய்! என்றும்
மா கீண்ட கை தலத்து என் மைந்தா! என்றும்
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோர சோர் கின்றாளே –13–

பதவுரை

(இப் பெண் பிள்ளை)
கல் மாரி–(இந்திரன் பெய்வித்த) கல் மழையை
கல் எடுத்து–ஒரு மலையை யெடுத்துப் பிடித்து
காத்தாய் என்றும்–தடுத்தவனே! என்றும்,
நாமரு பூகச்சி ஊரகத்தாய் என்றும்-விரும்பத் தக்கதாய் அழகிய தான காஞ்சீபுரத்தில் திருவூரகத்தில் நின்றருளினவனே! என்றும்,
அட்டாய் என்றும்–ஒழித்தவனே! என்றும்
மா கீண்ட–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியை கீண்டொழித்த
கைத் தலத்து–திருக் கைகளை யுடைய
என் மைந்தா என்றும்–எனது மைந்தனே! என்றும்
தன் கிளியை–தன்னுடைய கிளியை நோக்கி
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்-வில்லை முறித்துப் பிராட்டியைக் கைப் பிடித்தவனே! என்றும்,
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்றும்–திரு வெஃகாவில் பள்ளி கொண்டருளும் பிரபுவே! என்றும்,
அன்று–முன்பொரு காலத்தில்
மல்லரை–மல்லர்களை
மல் அடர்த்து–வலிமை யடக்கி
சொல் எடுத்து–திருநாமத்தின் முதற் சொல்லை யெடுத்துக் கொடுத்து
சொல் என்று–(மேலுள்ளதை நீயே) சொல் என்று சொல்லி,
(அது சொல்லத் தொடங்கினவாறே)
துணை முலை மேல்–உபயஸ்தரங்களிலும்
துளி சோர–கண்ணீர் பெருகப் பெற்று
சோர்கின்றாளே.–துவளா நின்றாள்.

பிடி தோறும் நெய் போல அடி தோறும் அர்ச்சை இவருக்கு —
கல் எடுத்து கல் மாரி காத்தாய் -என்றும்– காமரு ..ஊரகத்தாய் என்றும் –
சொல் எடுத்து கிளியை சொல்ல சொல்ல -கண்களில் நீர் பெருக —
இவள் திரு நாமம் சொல்ல நம்பி மைந்தா -தரிக்கிற நிலை–பார்த்து இவள் வார்த்தை கேளாதே –
கிளி வாடி இருப்பதைப் பார்த்து இவள் கண் முகப்பே வைத்து –
தாயார் சொன்னதை கேட்க மாட்டாள் என்று கிளியை சொல்லச் சொன்னாள் ஆசுவாசம் படுவாள் என்று நினைத்து —
இவள் தசை கண்டு வாடி இருப்பதாலும் -சேஷ பூதை ஆச்சார்யர் முன் சொல்ல கூடாது என்றும் –
இவள் கற்பித்தவை ஆனாலும் பேசாமல் இருந்தது —
சாஸ்திர அர்த்தம் இவ் இடத்தில் வெளி இடுகிறது –நான் உச்சரிக்க நீ சொல்லலாமே என்றும் –
அடியிலும் இப் படியே கற்பித்த பிரகாரம்–சொல்ல சொல்ல சொன்னது —
கேட்கும் திசை  கூட பர கால நாயகிக்கு பரி போனது –ஆபத் சகத்வம் – திரு நாமமே –
ஓர் அவஸ்தையில் பாவனமுமாய் -ஓர் அவஸ்தையில் போக்யமுமாய் / ஓர் அவஸ்தையில் சம்சார பய நிவர்தமாய்-
ஓர் அவஸ்தையில் சாதனமாய் – சாலம்பன உபாயம்  -ஓர் அவஸ்தையில் -தாரகமாய்   ஓர் அவஸ்தையில் நஞ்சுமாய் இருக்கும் —
தேக ஆத்மா அபிமானிகளுக்கு அன்னமே இப்படி இருக்குமே–
ஆகார சுத்தவ் சத்வ சுத்தி -சத்வ சுத்து ஸ்மிர்த்தி லம்பே கிரந்தி முடிச்சு சந்தேகம் விடு படும் –
அன்னம் -தானம்-சாதனம் -அதிசயித்து நஞ்சு தானே–
பவித்ரானாம் கோவிந்தா -பிரதமத்தில் பாவனத்வம்-பரம் உச்சதே–பாவன பொருள் அனைத்துக்கும் பாவனம்-மங்களானாம்  மங்களம்—
ரிஷிகள் வாக்கியம்-ஆழ்வார்கள் அச்சுதா ஆயர் ஏறே அமரர்கள் கொழுந்தே போக்கியம்–
நின் நாமம் கற்ற ஆவலிப்பு– நமன் தமர் தலைகள் மேல் நாவல் இட்டு உளி தருகின்றோம்-
கூட்டு  சேர்த்து அனைவரும் -முதல் பாசுரம்–ரஷகத்வம்-பாவனத்வம்  சொல்லி -போக்கியம்–
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேன் தாரகம்–கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேன் தாரகம்–
அழைப்பன் ஆங்கு  அவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயரே பேசி -பிழைப்பு  இல் கோவிந்தா போன்ற பெரும் பெயர்–
தாமோதரனை ஆமோ தரம் அறிய –பிழை இல்லாத பெரும் பெயர் இல்லை-பிரகரணத்துக்குச் சேராது -நஞ்சு அர்த்தம் இங்கு —

மூன்று விருத்தாந்தன்கள்-கிருஷ்ணன்-ஒரு ராமன் சரித்ரம்- -இந்த பாசுரம் -அர்ச்சை உடன் சேர்த்து அனுபவிகிறார் —
கோவர்த்தன -ஆபத்து விலக்கின -ஆழ்வார் ஆபத்து நீங்கும் என்பதால்–
ரஷகன்  ஆக வைத்த இந்தத்ரனே பாதகம் ஆக –கோப குலம் பாதிக்க பட -நிருபாதிக ரஷகன் கண்ணன்–
காரணம் நின்றதால் இந்த்ரன் ரஷகம் மாறினது -அது போல அன்றி நிருபாதிக ரஷகன் கண்ணன்–
காடும் மலையுமே ரஷகம் என்று சொல்லி மலைக்கே ஆராதிக்கப் பண்ண-மலை தெய்வமாக இருந்து –
காண்கின்ற மலை கடல் –எல்லாம் நானே என்னும்-அமுது செய்து முடித்தான்–
தனக்கு படைத்ததை பரமாத்மா  அமுது செய்ததற்கு அடிமை சாசனம் எழுதி கொடுக்காமல் –
கல் வர்ஷம் பொழிய வைக்க-ஆயர் அஞ்ச அஞ்சா முன்- மலை ஆதாரித்தோம் – 
ரஷிக்கும் என்று சொன்னதை மெய்ப்பிக்க –மலை தன்னையே எடுத்து ரஷித்து கொடுத்தான்–
சோலை சூழ் குன்றமாக இருக்க கல் எடுத்து -அனாயாசமாக -எடுத்ததை சொல்கிறாள்-
அப்பன் தீ மலை காத்து குன்றம் எடுத்தான்-கணவன் சாகாச செயல் செய்தாலும் அவ லீலை-
இந்த சக்தி தானே இவள் நெஞ்சத்தில்—கிட்டுவதும் அனுபவிப்பதும் கைங்கர்யமும் ஈஸ்வர சக்தி தானே–அசக்தா அதிகாரம் இது —
சக்தன் கர்ம ஞான பக்தி -இல்லை–புகாது சக்தி இருந்தாலும் -சக்தரோடு அசக்தரோடு வாசி இல்லை
ஈஸ்வர சக்தி எதிர் பார்த்து இருக்கும் சீதை உன் கை பார்த்து/என் கை பார்த்து  இருக்க மாட்டேன் ராமனின் வில் ஒன்றையே என்றாளே

தனக்கு பிரிவு ஆற்றாமை அதிகம் இருந்தும் -பிரதம ஆச்சர்யை பிராட்டி இருந்த இருப்பு–
நீர் மாரி ஆகில் கடலை கொண்டு ரஷித்து இருப்பான்-பட்டர் –
சர்வ சக்தன் இதை கொண்டு இதை செய்ய வேண்டும் என்கிற நியதி இல்லையே —
சங்கல்பத்தாலே தான் பார்கிறான் கேட்கிறான் செய்கிறான்–
திரௌபதிக்கு சக்தி இல்லை கை பார்த்து இருந்தாள்– சொல்லினால் சுடுவன் தூயவன் வில்லுக்கு மாசு என்று பிராட்டி சக்தி விட்டாள்–
இதனை சக்தி இருக்கும் பொழுது என்னை ஏன் கை விட்டாய் —
உன்னால் வந்த ஆபத்தை ரஷித்தால் ஆகாதோ-கல் வர்ஷம் காத்தாயே –
சம்சார வர்ஷம் ரஷிக்க -துக்க வர்ஷினி – மாட்டாயோ–
ஊரார் அகப்பட  ரஷித்தாயே அதை அனைத்தும் ஒருத்தி பட்டால் ரஷித்தால் ஆகாதோ-
மலை எடுக்க வேண்டாம் அந்த தோளை காட்டினால் போதும்  –தோடு இட்ட காது தோடு வாங்கினாலும் தெரியுமே —
மலை ஏந்தி கல் மாரி தன்னை காத்தாய்-ஆழ்வார்–காமரு -பின் பட்டாருக்கு -பாஹ்ய ஹீனர்- –
மூன்று ஸ்ரீயபதி சாதித்தாரே நம் பிள்ளை அது போல —
திரு ஊரகத்தில் –திரு விக்ரமன்- கிருஷ்ணன்-எல்லாரையும் தீண்டுவதும் -உலகம் இங்கு ஊர் அங்கு —
தன் பேறாகா கார்யம் செய்ததும் -இரண்டுமே இந்தரனுக்கு -வருக வருக வாமன நம்பி வருக — 
மாணிக் குறளனே தாலேலோ-சாம்யம்-

காமரு- போக்கியம் போக உபகரணம் நிறைந்து -தர்சநீயம் -காஞ்சி-திருப் பதிகளும் நிறைந்த –
படை வீடு ஆகையாலே ராஜ தானி-பரம பதம் போல –விமுகருக்கும் சுலபமான திருவடிகள் –
தனக்கு-ஆற்றாமை கொண்டும் – கிடைக்க வில்லையே –அன்று இல்லை என்று ஆறி இருக்க வில்லை–
பிற் பாடர் என்றும் ஆறி இல்லை ./
பிடி தோறும் நெய் வார்ப்பாரை போல அடி தோறும் அர்ச்சை –திருப் பதிகள் அடி பாடு வேண்டுகையாலே விபவம்–
திருப் பாண் ஆழ்வாரும் திரு வேம்கடம் -திரு அரங்கனின் அடி பாடு- என்று அருளியது போல–
அவதார கந்தம்–மற்ற ஆழ்வார் மேன்மையை பேச பர அவஸ்தை நீர்மை விபவமும் – 
கண் கூடாக பார்க்க அர்ச்சை இவரோ மேன்மை நீர்மை அனுபவிக்கவும் சாஷாத் கரிக்கவும் அர்ச்சை–
ஆண் பிள்ளை தனம் காட்டி-ஸ்த்ரீத்வம் அபிமானம் தொலைத்து-மெல் இயல்-ஸ்வாபகம்-தோய்த்தான்–
வில்லை எடுத்து  நாண் ஏற இட்டு – பொற்  கிண்டி கொண்டு வர -பெண் கொடுத்து பெண் வாங்க வர வில்லை  –
நம் ஐயரை கேட்க்க வேண்டும் வசிஷ்டர்  ஆதிகளையும் -வில் எடுத்ததையும் வார்த்தையையும் கேட்டு நீராக உருகினாள்–
அதில் தோய்ந்தான் பெருமாள் -தோள் தோய்ந்தான் நித்ய விபு கரந்து எங்கும் -பரந்துளன் –
ஏக அவயவத்துக்குள் அடங்கினான் -அல்லாத அவயவம் ஆத்ம குணம் பயன் அற்று போகுமே —
இத்தால் நித்ய அனபாயிநியாக -இவளைச் சேர்க்க ஆச்சர்யர் புருஷ கார பூதை வேண்டும் —
சேதனனுக்கும் இது போல–உன்னை பிரிந்து தனி இருப்பார் உடைய ஆபத்தை போக்கிய -திரு கல்யாணம் பண்ணி கொண்டாயே –
நீ என் ஆபத்தை போக்க வேண்டாமா –
திரு கல்யாணம் ஆன பின்பு வெக்காவில் வேந்தே -ராஜ குமரன்- -படுக்கை அப்புறம்–
கீழ் பாசுரம் படுக்கை சொல்லி வயலாலி மணாளன் சொன்னார் —
சேர்த்தியில் அனுபவிக்கப் பெறாத நோவு-அவள் இருந்தும் இழந்தேனே —
வூமதங்காய்  போல இருந்து இருவரும் என்னை மறந்தார்கள் –மல்லர்கள் மிடுக்கை முடித்தான் எதிர்த்து வர முடித்தான்-

சானூர் முஷ்டிகர் கர்வம் தொலைத்து –வில் யாகம்–மான் கூட்டத்தில் சிங்கம் புகுந்தது போல கண்ணனும் பல ராமனும் –
தரிசித்த பொழுதே மிடுக்கு போனதே -குவலையா பீடம் தந்தம் கையில் கொண்டு -பின்னை மல்லரை முடித்தான்–
வரும் மல்லரை நிரசித்தான் -திரு தோள்கள் மிடுக்கு தினவு தீர விஷயம்-
பரியனாகி -வரம் கொடுத்து பெருக்கிய –மல்லாண்ட திண் தோள்-அன்று அடர்த்தான்–வசு தேவனும் தேவகியும் –
பிறந்த அன்று இன்றும் ஆபத்து -ஆழ்வாரும் இன்று ஆபத்து- போல-திரு நெடும் தாண்டகம் முடியும் முன் பார்ப்போமா –
தேவகி இடம் முகம் காட்டி பின்பு விரோதி நிரசனம் செய்யாமல்- விரோதி கிடக்க காட்ஷி இனிக்காதே –
நம நாராயண -போல விட்டே பற்ற வேண்டும் என்பதால் —
விரோதி தொலைத்தே அனுபவம்-கஞ்சன் வயிற்றில் நெருப்பாக நின்று-நெடுமாலே அப்புறம் –ஆண்டாள்

மாதா பிதா ஆபத்து போக்கினாய் -என் ஆபத்து -ஆற்றாமை விட்டு பிரதி கூலராய் மல்லர் போல இருந்தால் அனுபவம் பெற்று இருப்பேனே —
கேசி-பகை அறுத்த கதை–பருவம்  சொவ்குமார்யம் கண்டு விழுங்க வர துவாரம் கண்டால் குழந்தை கை விட்டு –
ரஷகன் கை பட்டதும் பூரித்து வளர -வெள்ளறி பிஞ்சு போல கிழிய -கை தலம்–அதே போல பருவம் காட்டி என்னை அநந்யார்ஹை  ஆக்கி –

கோப குமார ஆபத்து நீக்கி-சொல் எடுத்து -கல் எடுத்து -அவன் தீரம் நினைந்து -சொல் எடுத்து ஆயாசம் -தன் அளவில் கஷ்டம் –
வருந்தி நான்  வாசக மாலை கொண்டு–தன் கிளி -அபிமானம்-பாவை பேணாள் போக்கியம் என்பதால் –
இதற்கு திரு நாமம் ஸ்பர்சம் என்பதால் –அனுகூலம் உண்டானால் எல்லாம் கொள்ளலாமே —
சொல்லே என்று -முதல் சொல்லை கொடுத்ததும் அது சொல்ல ஆரம்பித்ததும்  -கேட்டாள் என்றாமல் –துணை முலை-
பார  தந்திர லக்ஷணம் -மீசை  ஸ்வாதந்த்ர்யம் போனது –கண் ஞானம் இடை -வைராக்கியம் திரு முலை பக்தி –நினைக்கிறது —
அவனுக்கும் இவளுக்கும்  போக உபகரணம் இது தானே —
அவனை இதைக் கொண்ட வாங்க முடியும் கைப் பிடித்து கூட்டி செல்வன்–
துணை முலை–அவனுக்கும் துணை– ஒன்றுக்கு மற்று ஓன்று துணை-இணை அடி போல –சதர்சம்–
அல்லாத ஆழ்வாரை போல அன்றி மாதுர்யம் மிக்கு  -மாசம் உண்டும் மாசம் பிரிந்தும் இருப்பார்கள் மலையாள ஊட்டு போல –
சம்ச்லேஷிக்கும் விச்லேஷிக்கும் -தூது -நான்கு பதிகம் ஆழ்வார் இவரோ நான்கு பாசுரம் மேல் மண் அளந்த தாடாளா–
உம் அடியார் எல்லோர் ஓடும் ஒக்க எண்ணி இருந்தீரோ–அடியேற்கும்  இறையும்  இரங்காயோ–
கண்ணும் திரு மார்பும் சேர்ந்து அழுகின்றனவாம்-ஞானமும் பக்தியும் சேர்ந்து -கண்ணும் முலையும் கண்ணனை இழந்து கட்டி அழுகின்றன
கண்ட இடத்தில் விழாமல் முலையில் விழுந்தன கண்ண நீர் -தானும் சோரா நின்றாள் –

வேம் எமது உயிர் அழல் மெழுகில் ஒக்கு -ஆழ்வார்-மேகலை  கழன்று விழ தூ மலர் கண்ண நீர் முத்தம் சோர துணை முலை அழிய –
கோவில் கட்டணம் அழிகிறது மலராள் தனத்து உள்ளான்-அந்த புரம் அழிகிறது —
திரு நாமம் ஆற்ற வைக்கும்என்று ஆரம்பித்து இப் பொழுது  -அர்த்தம் அனுசந்தித்து மோகித்தாள் –
ஆபத் சகன் உதாவாமல் ஒழிந்தான்–கைமா துன்பம் களைந்தவன்–தன்னை விட்டானே

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: