திரு நெடும் தாண்டகம்–15-கல் உயர்த்த நெடு மதிள் சூழ் கச்சி மேய-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

கல் உயர்த்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு! என்றும் கடல் கிடந்த கனியே!என்றும்
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்!  என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி
தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே  –15

உடலும் மனசும் தேறி தானே அவனை பற்றி பேச ஆரம்பிக்கிறாள்-
நெடு வீணை தாங்கிய திருக் கோலம்–திரு ஆலி சாத்துவார்கள்–
திருக் குடந்தை திருக் கண்ண புரம் திரு அழுந்தூர் திரு நாகை -பெருமாள் திரு விக்ரகம்
ஸ்வாமி தான் உகந்த திரு மேனி திரு மங்கை ஆழ்வார் திரு மேனி
வடி வழகு இதயத்து உளதால் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே —
மிக மிழற்றும் -மெதுவாக கிளி போல பாடுகிறாள்–மிக–அடை மொழி இவளுக்கு —
ஆச்வாசம்  அடைந்தாள் கீழ் பாட்டில் திரு நாமங்கள் சொல்ல கேட்ட பின் —
தன் வாயாலே திரு நாமம் சொல்லி வீணையில் ஆலாபனம் மீட்டி -வீணை ஸ்பர்சம் —
முன் சம்ச்லேஷ திசையில் அவனும் இவளும் -இருந்த நிலை நினைவுக்கு வர —
இருவர் படிகளும் வீணையில் ஏற இட்டு தாரகமாக -தோள்களும்  திரு மேனியும் -முதுகை தடவுவது போல -கொண்டு-
வீணையில் பண்ண -இவள் உணர்ந்தால் என்னாகுமோ என்று தாயார் விசன பட -/

12/13  பாசுரங்களில் திரு நாமமே பல படிகள் பார்த்தோம் — 
உஜ்ஜீவனம் தாரகம் போன்ற பல –ஆபத் சகம் உஜ்ஜீவன ஹேது –கீழே சொல்லி இதில்  போக்கியம் 
கல்–உள் நிற்கும் யானை -திரு பாடகம்–அமர்ந்த திரு கோலம்–மதிள் உள் இருக்கும் யானை சிலாக்கியம் சொல்லும்–
ரஷிக்க-பிரிந்த தசையில்  இருந்தாலும் விஷயத்துக்கு பரிவதே -இதுவே நோக்கு —
கஷ்டம் கொடுத்தே வைராக்யம் பிறப்பிக்க வைக்கிறான் -தரு துயரம் தடாயேல்-அழும் குழவி அதுவே போல் இருந்தேனே —
மருத்துவன் பால் மாளாத நோயாளன் போல்–சேஷ வஸ்து ஸ்வாமிக்கு நன்மை சேர்க்கவே ஸ்வரூபம்–
பிரதி கூலர் வர முடியாமல் உயர்ந்த மதிள்கள்-திரு கண்ண புரம் 7 மதிள்கள் இருந்ததாம்
அரையர் தாளம் வீசி போட–சிலை அன்றோ கை தலத்து –தழும்பு இன்றும் சேவிக்கலாம் ஆஸ்ரித வத்சலன்–

நிவாகரகர் இல்லா ஸ்வாதந்த்ரயம்-ஸ்ப்ரூகநீயம்-உள்ள யானை–செருக்கும் அழகும் —
ஸ்ரீ பாடகன் நாயனாரும்  இது போல தானே —
சேனை முதலியார் திரு பிரம்பின் கீழே–சேஷ அசனர்-போக்யமாக கொள்வார் விஷ்வக் சேனர்-
திரு வடி முதுகுக்கு   கீழ்  இருப்பவன் தானே –காளி தாசர்- ராஜா கேள்வி-
அந்த புரத்தில் மார்பை உதைத்தவன்-என்ன தண்டனை -கேட்க சலங்கை பண்ணி போட சொன்னாரே- பிள்ளைக்கு அடிமை இல்லை- தான் அதிகாரம் கொடுத்ததின் பேரில் தானே இவர்கள் –இச்சையின் பேரில் பண்ணுவார்கள்–ஸ்வாமி ஸ்வாமி தானே   —
பெரிய பிராட்டி பார்வை கொண்டே ஸ்ருஷ்ட்டி போல –சர்வருக்கும்  ஸ்ப்ருகநீயனாய் இருப்பவன் என்னை –
சேவை சாதிக்க விலையே -ஸ்வாதந்த்ரன் கிடீர் என்னை இழக்க வைத்தானே —
பாண்டவ தூதன்–பொய் ஆசனம்–திருவடி பாதளம்-அடி முடி காணாத படி வளர்ந்தான்–
சத்திய பாமை ருக்மிணி உடன் சேவை–25 அடி உயரம் —
என்னும்-தாயார் வார்த்தை-அனுவாதம் பண்ணுகிறாள்–
கடல் கிடந்த கனி-திரு பாற்கடல்–விபவமும் அர்ச்சையும் இங்கு இருந்து தானே–இவ் ஆனை வந்த படி –
திருப் பாண் ஆழ்வார் -திரு வேம்கடம் பாடி திரு அரங்கம் பாடினது போல-வடக்கு வாசல் வழியாக வந்து கிடந்தான்—
கனி-பக்குவ பழம்-பிரதி கூலர் வர முடியாத -இங்கு கடல் என்பதால்–இங்கும் ரஷகத்வம் இருக்கு என்று மகிழ்கிறாள்

நிரதிச போகய பூதன்–கனி கண்ட போதே நுகரலாம் படியும் புஜிப்பாரை பெறாத பொழுது தான் அழியும் படி இருக்கையும் —
அவனும் தனக்கு கிட்ட வில்லையே –நித்ய நிர்விகார தத்வம்-வெளுத்து விஜுரக பிரமோதன்-
ராமன் ஜுரம் நீங்கினான் விபீஷணன் பட்டாபிஷேகம் ஒத்து கொண்டதும் –ஆள் கண்ட சமுத்ரம் இவன் —
பக்த பிருந்த கடாஷம்–மகாத்மாக்கள் விரகம் சகியாத மார்த்வம் வளத்தின் களத்தில் கூடு பூரிக்கும் —
திரு மூழிக் களம் பெருமாள் குணம்–உத்சவங்கள்  எல்லாம் அடியார்களுக்கு தான்
வையம் கண்ட வைகாசி கருட சேவை தொட்டாச்சர்யர்  ஸ்வாமி சேவை–மிக்கானை -அக்கார கனி- தக்கான் குளம் வந்து சேவை சாதித்தானே —

இடை ஆற்றம்குடி நம்பி நம் பெருமாள் உத்சவம் கண்டு -அங்கேயே தேகம் துரந்தாரே–பக்தர்களுக்கு என்றே இருக்கிறான்–
இருந்த கிடந்த அழகை சேவித்து நின்ற –அல்லி தாதுகள் -கூடிய மலர் -பழன நீர் நிலைகள்-குளமும் நீர் நிலையுமே வேலி–
ஜல துர்க்கம்-யானை ஒரு இடத்தில் இருக்காதே -சஞ்சரித்து நிற்கிற தேசம்–தர்சநீயமான தடாகம் -தேர் அழுந்தூர் —
அநு கூலருக்கு சரம ஹரமாய் –தயரதன் பெற்ற மணி தடம் வல் அரக்கர் புக்கு அழுந்த -பிரதி கூலரை ஒழித்து –
அணி-ஆபரணமாக -உபரி சரவசு-தேரை ஆகாசத்தில்- தேவர்களுக்கு பஷ பாதமாக தீர்ப்பு சொல்ல ரிஷி சாபம்-
நாச்சியார் இல்லை கருடன் பிரகலாதன்-இருவரும்-
கிரீடம் செல்ல பிள்ளைக்கு வைன முடி விமானம் இங்கு சமர்பிக்க அருகிலே நிற்க வைத்து சேவை–
தேவாதி ராஜன் திரு நாமம் – ஆ மருவு அப்பன்-பிரமன் மாடு கன்று -கொண்டு போக -கண்ணன் அனைவருமாக தானே மாறி-
பிரமன் பிரார்த்திக்க சேவை–திரு மங்கை ஆழ்வார்-திரு வுக்கும் திரு வாகிய அரசே-ராஜா பாடவில்லை போக —
புஷ்கரணி அருகில் போக முடியாமல் இழுக்க ஆ மருவி அப்பன் சேவை–நான் இழந்தேன் –நின்று உகந்த அம்மான்–
சம்சாரிகளுக்கு ஆஸ்ரித அனுகூலமாக என்றுமே நின்று –கருட வாகனும் நிற்க-போல –
நிலை அழகையும் குணங்களையும் அனுசந்தித்து கிட்டினால் அதனால் உகப்பவனும் அவனே —
நின்று உகந்து பிராப்தாவும் பிரா பாகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே –ஸ்வாமி சொத்தை பெற்று உகப்பது போல —

ஆத்ம லாபம் ஈஸ்வரனுக்கு தானே –நிற்கிற காரணம் பலித்த வாறே உகந்தான் —
இனியது தனி அருந்தேல்-ஒருவர் வராவிடிலும் வாடுவான்  -அம்மா சர்வ ஸ்வாமி–யத்தனம் பண்ணுகிறான் நின்று —
ஸ்ரீ வைகுண்டம் -திவ்ய தேசம் இங்கு உண்டு இந்த ஸ்வாமி சொத்து பாவம்–
சேஷத்வ சித்தி இங்கு தானே –கைங்கர்யம் பண்ணினால் தான் சித்தி —

நின்றது எந்த ஊரகத்து இருந்தது பாடகத்து –கிடந்தது திரு வெக்காவில்-உள்ளம் வந்து சேர -திரு மழிசை ஆழ்வார் போல–
நாதம் மிக்கு-நெடு வீணை-யாழ் குழல் விட அளவிலும் நாதத்திலும் நீண்டு இருக்கும் இசையும் நீண்டு–
அஷரம் நரம்பு இல்லாத படி கரைந்து இசையே ஆக இருக்கை–அதவா நெடு வீணை-கேட்டார்க்கு அது அது என்று விளக்கும் படி–
முலை மேல் தாங்கி-காந்தன் மணவாளனை தீண்டியது போல–
சம்ச்லேஷ தசையில் தன் உடைய போக்யதையும் இவள் போக்யதையும் வீணையில் ஏற இட்டு —
கை/தோள் உடல் நினைவு வர -தடவும் கையை சாஷாத் கரித்து –
வடிவையும் சாஷாத் கரித்து அவனை மார்பிலே ஏற இட்டு கொள்வது போல வீணையும் கொண்டாள்–
சீதை பிராட்டி அசோகா வனத்தில்- வலிய சிறை புகுந்த பொழுது  கணை ஆழி வாங்கினாள் முலை குவட்டில் வைத்தாள்-
வெறும் மோதிரம் என்று தெரிந்தால் வால்மீகி திரு வடிக்கு வருத்தம் இங்கு தாயாருக்கும் பெரிய வாச்சான் பிள்ளைக்கும் வருத்தம் –
தேசாந்தரம் போன பந்து கண்டால் போல மேல் விழுந்தாள்-
க்ருகீத்வா–பிரேஷமானா வைத்த கண்ணை  எடுக்காமல் பார்த்து கொண்டே இருந்தாள்-ச -அந்த சீதை–
இவன் வரவை ராவணன் வரவாக சந்கித்த சீதை பிராட்டி கிடீர்  மேல் விழுந்தாள் —
பர்த்ரு கர விபூஷணம்-கை பிடிக்கும் பொழுது கையை உறுத்திய மோதிரம்–
தானும் அவரும் சம்ச்லேஷித்த பொழுது போகத்தின் மிகுதியால் பிரணய ரோஷம் தலை எடுத்து -குங்குமம் தட்ட-பேசாமல் இருக்க –
பேச தூண்ட கணை ஆழி கீழே போட்டு -வேறு சேர்ப்பார் இல்லை என்று கணை ஆழி தரையில் விட -இது தான் கடகர்–
கண்டார் கொடுக்க சொல்ல -சேர்த்து வைத்த மோதிரம்–இதை எல்லாம் நினைந்து கொண்டு–

ஜீவாத்மா -சீதை அசோகா வனம் -சரீரம் சம்சார சாகரம் -உப்பு கடல் இந்த்ரியங்கள்-10 தலை மனசு-ராவணன் –
சங்கு சக்கர லாஞ்சனம் -கணை ஆழி /பார மாத்மாவுக்கு தெரியும் சீதை வசப் பட வில்லை இவை வாசி/
திரு ஆழி கண்டு விரல் கை தோள் திரு மேனி ஆலிங்கனம் கொண்டது போல —
பர்தாராம் இவ சம்ப்ராப்த –பிரமித்து போல இல்லை பர்த்தா என்றே இருந்தாள் – -வால்மீகி பயந்து போல என்கிறார்–
பீதர் ஆனார் ரிஷி -தாங்கி–வைத்து என்னாதே- காரணம்- அனுபவம் பொழுது தளர்ந்து இருக்க –
தாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும்—குணம் ரூபம் சேஷ்டிதம் இவற்றால் பிராட்டி புதுசாக இன்பம் கொடுப்பாள்–
அதனால் அவன் தளர்ந்து போவான்–கால் ஆழ்ந்து நெஞ்சு அழிந்து குமிழ் நீர் உற்று தளர்ந்து —

தூ முறுவல்–ஸ்பரசிக்கையால் வந்த ஹர்ஷத்தாலே –அழகை பார்த்து தளர்ந்தாரே என்றும் —
சேஷத்வம் காட்டியே அவனை வெல்ல முடியும் –வாரி கொண்டு –என்னை முன்னம் பாரித்து என்னை முற்றும் பருகினான்–
தொழுதால் எழலாம்–உதட்டிலே நகை இறையே-புன்சிரிப்பு மாறி-தந்த பந்தி பல் வரிசை கொஞ்சம் தெரியும் படி–
ஸ்மிதம் போர வில்லை இவள் ஆனந்தம் வெளி பட -இள நிலா பாய்ந்தால் போல –சிரிக்க —
ஏகாந்தம் நீச்சல் போட்டி -கோதாவரி-பத்தினிக்கு தோற்ப்பான் பரம ரசிகன்–கேலி தோற்ற சிரிக்க-
காந்தஸ் ஸ்மிதா  லஷ்மனஸ் ச ஜாத ஹாசா –என்ன கடவரே-மென் விரல்கள் தடவி  சிவப்பு எய்தி  –
காந்தன் -நினைத்து -அதி சுகுமாரமான -விரல்கள்–எய்த-தத் காளினமான-தடவினதால் வந்த சிவப்பு  –
கோவை வாயாள் பொருட்டு-நப் பின்னை சிரித்தது  வாய் கோவை போல ஆனதாம் -சிவப்பு ஊட்டினதாம் –
மணவாளன்  என்ற ஆனந்தம் சிவப்பு–ஆங்கே– மென் கிளி- பிள்ளை தனம்-மிக மிளற்றுதல்–
கிளி வாயாலும் கேட்டவள் என்பதால் மிகு இங்கு சொல்கிறாள் தாயார்–பருவ பிள்ளை தனம் பேசுவது பிரணயித்வம் அதிகம்–
மிக- பகு வாக்கியம்-நாங்கள் ஸ்திரீகள் அன்றோ அபலைகள் ஆண் பிள்ளைகள் வசிஷ்டர் சிஷ்யர் –
தேர் அழுந்தூரில் நின்றாராம் இருந்தாராம் கிடந்தாராம்-  வார்த்தைகள் பேசினாள்–

சுமந்த்ரன் தசரதன்-லஷ்மணன் தந்தை இல்லை ராமனே தந்தை  சேலேய் கண்ணி யரும் அவனே  
சீதை தான் தாய் -பெற்று மகிழ்ந்தேன் -சீதை வாய் திறந்து பேச வில்லை-உன் மாமனார் இடம் என்ன சொல்வது என்று –
காம்பீர்யம் குறைந்து இவள் பேசுகிறாளே -பரகால நாயகி ஏற்றம்-என் பேதையே- எங்கே கற்றாள்–
இப் பருவத்தில் இவ் வளவு வேட்கை அவா -படுத்துபவன் கற்று கொடுத்தான பருவம் கற்று கொடுத்ததா காலம் கற்று கொடுத்ததா-
வயசோ கொஞ்சம் காதலோ பெரிசு–சிறு மா மனிசரே என்னை ஆண்டார்-கீர்த்தியில் பெருமை மூர்த்தியில் சிறுமை –
எம்பாரை பிள்ளானை ஆண்டானை போல –பேர் அமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்கதோர் காதல் –
எங்கனயோ அன்னை மீர்காள் பதிகம் –சிறிய வயிற்றில்  பெரிய உலகம்-அகடிதகடா சாமர்த்தியம் –
அவன் இடம் தான் இவளும் கற்று இருக்க வேண்டும்–ஜீவாத்மா இடம் உள்ளும் வெளி  எங்கும்  வ்யாபிக்கிறான் போல—
பிள்ளை தனமும் அபார காதலும் -இதி சர்வ சமஞ்சதம்  -சேர்த்து ஒருங்கே விட்டாரே ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தில் – 
நரசிம்கர் திரு ஆராதன பெருமாளை கொண்டதால் –
நல் குரவும் செல்வமும் நஞ்சும் அமுதமும்  நரகமும் சொர்க்கமும் சேர்த்தானே ஒப்பிலி அப்பன் –
இவள் படியும் அது போல -இன்றும் திரு நகரி சேவை உண்டு

—————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: