திரு நெடும் தாண்டகம்–16-கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்
கடி பொழில் சூழ் கண புரத்து என் கனியே! என்றும்
மன்றம் அர கூத்தாடி மகிழ்ந்தாய்! என்றும்
வட திரு வேம்கடம் மேய மைந்தா! என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய்! என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்
துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே–16

ஏரார்  விசும்பில் இருப்பு அரிய -நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் இருக்க முடியாமல் –
அழைத்தார் ஆழ்வார் நீராய் நிலனே பதிகத்தில் –அது போல பார கால நாயகி இங்கு கூப்பிடுகிறாள் —
முன் பாசுரத்தில் பரிகாசம் கொண்டு வார்த்தை பேச அவன் வார்த்தை கேட்கவில்லை முகமும் காட்ட வில்லை
நின்ற நிலை குலைந்து அழுகிறாள்—ஹா ராமா ஹா லஷ்மணா  ஹா சுமத்ரா ஹா ராம மாதா -சீதை  பிராட்டி கதறினது போல–
பார கால நாயகிக்கு எல்லாம் அவன் தானே -திவ்ய தேச எம்பெருமான்களையும்  விபவ அவதாரம் நினைந்து –
போகய வஸ்து-ராம/ புஜிப்பாரை -லஷ்மணன் -நிமித்த பூதர் -சுமித்ரை -ராம மாதா –முகம் கொடுப்பாய்-ரஷிப்பாய்-தரை படா நிற்கிறாள்–
கன்று மேய்த்து – ரஷித்த படியை சொல்கிறாள்–சர்வ ரஷகன்–என்னை விட்டாயே-
இடக் கை வலக் கை தெரியாதவர்களையும் ஆநிரை -நித்ய சூரிகளை  ரஷித்தான் என்று ஆறி இருக்கிறேனோ
சன காதிகளை ரஷித்தான் என்று ஆறி இருக்கிறேனோ-
கோப குமாரர்களை ரஷித்தாய் என்று ஆறி இருக்கிறேனோ–
கன்றுகளை மேய்த்து உகந்தாயே–நித்யரை மேய்க்கும் பொழுது ஆனந்தம் இல்லையாம்–
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு  உகத்தி இளம் கன்றுகளை மேய்த்தால் -இனிது உகப்பு இங்கு தான்–நித்யர்- -உகப்பு இல்லையாம்–

ரஷகம் புஷ்கலம் ஆனது-இரவு விளக்கு இங்கு–இட்டமான பசுக்களை இனிது மருத்தி நீர் ஊட்டி–
பசுக்கள் ரஷகன் இருக்கிறான் நினைவு பரிசயம் உண்டே கன்று அது கூட இல்லை-அதனால் இனிது உகந்தான் —
உன் வாசி அறிந்து உன்னை ஒழிய செல்லாத என்னை ரஷியாது ஒழிந்தாய் – நானும் கன்றுகளாக பிறந்திலேனே என்கிறாள்–
உறி அடி பொழுது ஸ்ரீ பட்டர் கோபாலர் கோஷ்டியில் இருந்தாரே —
காமரு சீர் அவுணன்-அவனாக பிறந்து இருந்தால் தரிசனம் கிட்டி இருக்குமே –
காமனை பயந்த காளை கரியான் ஒரு காளை -தான் சோகமாக இருந்தாலும் காளை பருவம் மாறாமல் —
தருணவ் ரூபா சம்பனவ்  சுகுமாரவ் மகா பலவ புண்டரீ காட்ஷ விசாலாஷி -பிணம் திண்ணியம் இதில் அகப்பட்டு சொன்னாளே
உண்ண புக்கு வாயை மறப்பாரை போல —
இங்கும் பர கால நாயகி -காளாய் –கலந்து தானும் இளமை இன்பம்  இளகி பருக ஆசை படுகிறாள்–
பெருமாளை போ வா வந்து ஒரு கால் கண்டு போ -சொல்லி தசரதன் வயசு குறைந்து இருந்தானே
கன்று மேய்த்து இனிது உகந்ததாலே காளை ஆகி இருந்தானாம்-ரசாயன சேவை பண்ணி -வடிவு இளகி -ரஷ்ய  வஸ்து கிடைத்த ப்ரீதியால் –
அன்னம் பார்த்து நமக்கு ஆனந்தம் வருவது போல -அன்ன மயம் பிராண மயம் –அன்னமே விருத்தி ஹேது  போல-
தாரகம்–அது போல கன்று மேய்ப்பு அவனுக்கு –

கடி பொழில் -போக்ய பூதர்-பின்னானார் வணங்கும் சோதி-திரு கண்ண புரத்தில் நின்று அருளுகிறார்-பூர்வர் நிர்வாகம்–
பட்டர்- நிர்வாகமோ– பசுக்கள் கை கழிய போக தேடி கொண்டு போன கண்ணன் வந்த இடம்-
ஸ்ரம ஹரமான பொழில்- மயல் மிகு பொழில் ஆகையாலே –
கோகுலம் ஆய்ப் பாடி என்று நினைந்து புகுந்தான் மையல் ஏற்றி மயக்கும் -ஸ்வரூப  ஐக்கியம் விபவமும் அர்ச்சையும் –
கடி பொழில்- கடி ஆர் பொழில் -இல்லை– கடி மிக்கு இருக்கும் பொழில் -இல்லை
கடியாலே ஆகிய பொழில் உபாதான காரணமே பரி மளம் தான் -சர்வ கந்தகன் வஸ்துவையும் கால் வாங்க விடாமல் வைத்த பொழில்–

கனியே இந்த சோலை பழுத்த பழம்–பக்குவ  பலம் போல–பர பக்தி பர ஞானம் பரம பக்தி -பிர பத்தி -அதிகாரிக்கு –
என் கனி–சாதனாந்த நிஷ்டர்- சாதனம் முடிந்தால் பேறு-காய் ஆகி இருக்கும் —
பிர பன்னருக்கு பிரதி பத்தின  சமயம் தொடங்கி அனுபவம்-பொதி சோறு கட்டி நிற்கிறோம் -கட்டு சாதம்-
அந்த ஜன்மத்திலே மோட்ஷம் -அவன் சக்தி நம்பி இருக்கிறோம்–ஆனந்தம் பக்குவ பலம்–சமன் கொள் வீடு தரும் சமன் குன்றமே —
என் கனி-எங்கள் இல்லை–எங்கள் கதியே ராமானுஜ முனியே –
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ-என்று இருக்கும் அவர்–
தேவதாந்திர பஜனம்- சொல்ல  வில்லை -பரத்வம் வியூகம் விபவம் அந்தர்யாமி மற்ற அர்ச்சை  விட்டு–இங்கு வந்தவர்–
கனியே  என்று இரண்டு தலையும் அழிக்கப் பார்கிறார்- கனி போக்தா விட்டு செல்லாதே –
பிரிந்து நீயும்  வாழ முடியாது என்று சொல்ல வில்லை—பெருமான் இருந்தால் ஆழ்வார் இருக்க வேண்டும் இன்றியாமை உண்டு-
மாயா சிரஸ் -காட்டினாலும் சீதை பிராணன் போக வில்லை–அனுபவம் இன்றி கனி முதலில் அழியும் -அதனால் ஆழ்வார்-கனியே-என்கிறார்–

மன்றமர கூத்தாடி  -அம்பலத்தில் அவல் பொதி அவிழ்ப்பாரை போல –ஒரு கனி இல்லை–ஊருக்காக கொடுத்தாயே உன்னை-
குரவை கூத்தாடி -மன்று=அமருகை-கூத்தோடு பொருந்தும் படி–இயைந்து -ஆட்டம் முடிந்தாலும் -கந்தம் வாசனை-மாறாத-
பெருமாள் திரு வீதி புறப்பாடு போல – திரு ஆய்ப்பாடி அம்பலம் –மன்று -நாள் சாந்தி. அம்பலம்-இடையர் சேர்ந்து இருக்கும் இடம் –
சீரார் குடம் ஏந்தி செழும் தெருவே -வாராயோ என்றாற்கு ஒ நீ வரவில்லையா இன்றாவது பெற்று போ
அங்கே பார்த்து கொண்டே கண்ணை கூத்தில் வைத்து ஒ என்றார்களாம்-சென்றேன் என் வல் வினையால்–
நான் ஆழம்கால் பட்டு தனித்து இருந்தேன் அவனும் அனைவரும் போன பின்பும் –மன்று- அங்கு உள்ளார்கள்-அநந்ய பரர்  ஆனார்கள் —
மகிழ்ந்தாய்- கேட்டவர்  பார்த்தவர் ஆனந்தம் விட இவனே மகிழ்ந்தானாம்-பிராப்யமும் பிராபகனும் பிராப்தி உகப்பானும் தானே —
ஜன்ம கர்ம மே திவ்யம்–அவனுக்கே திவ்யமாக இருக்குமாம் ஆழ்வார் போல மூவாறு மாசம் இவனே மோகிப்பானாம்–
தும்புரு நாரதர் அனுபவித்து கூத்தாடி உகக்க கிடக்க -அத் தலை இத் தலையாய் –கூத்தாடு வானும் உகப்பானும் தானாய்–
குடக் கூத்தாடுவது ஈஸ்வர லஷணமோ–பிராமணர் ஐஸ்வர்யம் யாகம்– விஷய பிரவணர் கல்யாணமாம்–
இடையர் குட கூத்து செருக்கு போக்கு வீடாக சஜீதீய பாவம் -அதில் ஒருவன் -மெய்ப்பாடு தோன்ற ஆடினான் -புரை அற கலந்தான் –
அங்காடி பண்டம் ஊர் பொது  சரக்கு நான் இழந்தேன் –
வலது திரு கையால் மா ஏகம் சரண் முத்தரை காட்டி இடது திரு கையால் பற்றினவருக்கு பலன் முழம் கால் அளவும்  வற்றி விடுவேன்-
திரு வேம்கடத்தானும்  இவனும் கூத்தாடி உலகம் அனைவருக்கும் -கண்ணாவான் மண்ணோர் விண்ணோர்க்கும் –
மைந்தா- மிடுக்கான பருவம்-வானவர்  வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும்
காடும் வானரமும் வேடும் உடை வேம்கடம்-பெரியவர்க்கும்  நிகீனருக்கும் கொடுத்தானே நான் இழந்தேன் —
ஈஸ்வர அபிமானிகளும் வாசி அற கொள்ளை கொள்ளும் வடிவு–
அதவா–பக்தர்களுக்கு தான் வடிவு -என் ஒருத்திக்கு மட்டும் இல்லை–

திரு மேனி திரு ஆபரணம் திரு ஆயுதங்கள் எல்லாம் பக்தர் களுக்கு தானே என்னை ஒழியவா–
வென்று அசுரர் -கர தூஷணர் முதலாக குலப் பாவை தாடகை தொடக்கம்-ராவணாதி-கரமும் சிரமும் துணித்து –
தானாம் படி பரி கரங்களை  கொன்று –தசரதர் பெற்ற  மரகத மணி தடம்-கழுத்தில் கல்லை கட்டி கொண்டு இறந்தனர்  –
விரோதி நிரசனம் –அனுபவம் போக்கியம் முன்பு பார்த்தோம்–விரோதி தொலைக்கவும் நீயே தான்–
தமரர்  கூட்ட வல் வினையை நாசம் செய்யும் சதுர் மூர்த்தி –ராஷசர்-முடித்தான் அசுரர்- சுரர் தேவர் அல்லாதவர் என்பதால் —
குலம் களைந்தான் -வேந்தே- ராமன் தான் ராஜா -ராம ராஜ்ஜியம் கனவு–சின்னத்தை பெரியது நலியாமல் ஆண்டான்-
-ராமோ ராமோ -ராம இதி  பிரஜானாம் அபவம் கதா  ராம கதை பேசி கொண்டே இருப்பார்கள்–
ராம பூதம் ஜகத் அபூத் -அருளாள பெருமாள் எம்பெருமானார்- தம் மடத்தை இடித்தாரே-
நிழலும் அடி தாறுமாக இருப்பார்கள் அயோதியை மக்கள்–இரண்டற ஒன்றி போனார்கள்-
அநு கூலர் வாய் புலத்தி பிரதி கூலர் மண் உண்ணும் படி இருக்கிறவர் கிடீர் எனக்கு முகம் காட்ட வில்லையே –
தாயார் மகிழ ஒண்ணார் தளர திண் கொள் அசுரர் தேய வளர்கின்ற்றவன்-வஸ்து ஸ்வாபம்-விரி பொழில் சூழ்-திரு நறையூர் –
பிற் பட்டவர்  இழக்கக் கூடாது என்று சேவை–ஏக தார வ்ரதத்வம் சாம்யம்–நம்பி வந்து நிற்கிறான்-
வேத வல்லி செவி வழி செய்தி -விரிகின்ற பொழில்-வஞ்சுளாவல்லி நாச்சியார்  நம்பி கடாஷத்தால் வளர்ந்த பொழில் சூழ்  தேசம் –
நின்றாய்–பிராட்டி தேடி அலமந்து வந்து கிடைத்ததால் தரித்து நின்றான்-ஸ்தல புராணம் ஆழ்வார் கூற மாட்டார்கள்– 
இங்கு –ஷீராப்தி -மேதாவி-தாயார் குறித்து பிரார்த்திக்க வஞ்சுள மரத்தின் கீழ் வந்தாள் பிராட்டி
கிருஷ்ணா ஆரண்யம்-ஆரம்பம்-திரு கண்ணம் குடி வரை–நம்பிக்கை நாச்சியார்- –
ஐந்து பேராக வகுத்து கொண்டு சங்கு சக்கரம் சமாச்ரண்யம் பண்ணுவது போல சேவை–
மணி மாடம் சேர்மின்களே மாடம் போல கோவில் அமைப்பு –கோ செங்கணான்
63 நாயன்மார்கள் சோழ நாயனார் இவர்களில்  ஒருவன் –
தன்னை போல ராஜா கதை என்று இதை திரு மங்கை ஆழ்வார் குறிப்பிடு கிறார்

திரு வெள்ளறை- ஸ்ரீ தேவி வைபவம் நாச்சியார் திரு மாளிகை -பூ தேவி-ஸ்ரீ வில்லி புத்தூர்  இந்த திவ்ய தேசம் நீளா தேவி–
தேடி போய் கண்டு பிடித்தாயே -எனக்கு நீ கிடைக்க வேண்டாமோ–
எனக்கு முகம் கொடுக்காமல் அவள் முகம் உனக்கு கிடைக்குமோ-
ஏக தார விரதன் சொல்லி சம்ப்ரதாய கொள்கை புருஷ கார பூதை-
குத்து விளக்கு எரிய கோட்டுக்கால் கட்டில் மேல் -எனக்கு இடம் கொடுக்க வில்லையே தனி படுக்கை ரசிக்காது –
என் அடியார் அது செய்யார்– குற்றவாளி யார் அல்லர்-ஸ்ரீ தேவி-பாபானம் வா சுபானாம் வா – இவள் படி அவன் படி- –
போட்டி போட்டு ரஷிக்கும் பொழுது என்னை விட்டீர்களே –முகம்  காட்டுதல்–அனுக்ரகிக்க —
திரு குழலையும் வடி அழகையும் -துன்னு குழல் கரு நிறம் அடர்ந்து செறிந்து கறுத்து நெய்த்து —
வித்யாம் கட்ட -கர்ண குண்டலங்கள் ஒளி -தேவர் கோலத்தொடும்-துணை–ஒரு பகல் ஆயிரம் வூழி  யாலோ–காணாமல்-
தோளும் நான்குடை சுரி குழல் கமல  கண்  கனி வாய் காளமேகம் -துணை-வழி துணை பெருமாள்

கொள்கின்ற -கோள் இருளை -படி எடுத்து உரைக்கும் படி இல்லாத அழகு–
நீண்டு இருண்டு கறுத்து நெய்த்து -ஈண்டு சடை ஆயின -குழலும் வடிவிலும் அகப்பட்டேன் —
நாச்சியார்க்கு தான் பிரசாதமும் முதலில் திரு நறையூரில்–
உண்ணாது உறங்காது -ஒலி கடலை -ஊடருத்து -சீதை கையால் நெய் பூசி –
அது போல நாச்சியார் கிடைத்த பின் அவள் கையால் வகுந்து பேணின குழல்-துன்னு குழல்-
வேணி-திரு வேணி சங்கமம்–கங்கை யமுனை சரஸ்வதி-மூன்றும்–

என் துணையே என்னும்–நீலம்- நைல்யம் -கரு முகில் கன ச்யாம்–தாமர மூர்தஜா செம்பட்டை சூர்பணகை-
குடில குந்தளம்-குழல் அழகை காட்டி எனக்கு துணை ஆனவன் –நான் விமுகன் ஆன தசையில் -ஒட்டி வந்தாய்–
சத்தையை நோக்கி வடி அழகு காட்டி- ரூபமே ஆழ்வார் ஸ்வரூபம் ரிஷிகள்-
ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெருக வைத்ததும் அழகனூர் அரங்கமே —
இன்று நான் ஒட்டி வரும் பொழுது –உபேஷித்து போகிறாயே –அருகில் கூட்டி வந்து கை விடலாமா –
காந்தனும் ரஷகனும் துணை ஆவாரார் துணை வழி துணை–காப்பதற்கும் /பிரணயித்வம் காந்தம்-
பிராபகம் பிராப்யம் துணை தானே –துளி-அக்னி கனல் போல –இப்படி சொல்லும் பொழுதே தரை பட நிற்கிறாள் –
துணை முலை-போக உபகரணம் -அவன் பிரிந்த தசையிலும் முலை துணை யாக இருக்கிறது —
விழுவார் அம்மே என்று விழுவது போல -என் துணையே -பெண் நீர்மை யீடழிக்கும் இது தகாது –
என் துணையே என்று இவளும் கூப்பிடுகிறாள்–ஆற்றாமையாலே நோவு பட்டாலும் –
ஆடி ஆடி ..நாடி நாடி நரசிங்கா -மோகித்து துன்புற்றான்–அடியார் குழாங்கள் கூட சேர முடியாமல்-
காசு பொன் மண் இழந்தவன் போல –திரி விக்ரமன்- சேவை இழந்து முதலில் அம்சிறைய மட நாராய் முதலில் —
ஆதி அம் சோதியை நம்பியை என் சொல்லி நான் இழப்பனோ-அர்ச்சை இழந்து கட்டி அழுதார் காற்றையும் –
அடுத்து அடியார் குழாம் சேர ஆசை பட்டு இழந்தார்

பெரிய சோகம்-மணியை இழந்தால்  போல் –நரசிம்கர் இடம் போய் –
பாகவத அனுபவம் இழந்தால் அவன் இடம் அபசாரம் பட்டால் பாகவதர் இடம் தான் அம்பரிஷன் சரித்ரம்–
தேறியும் தேறா விடிலும் மாதவன் திறமே திரு -துணையான தாய் -தான் துணை யாக நிற்க -என் முகம் பார்க்க பிரார்த்திக்க –
அவள் தான் துணையான அவன் முகம் காட்டாமல் நிற்க -அவனையே எதிர் பார்த்து இருக்கிறாள் –
விஷயாந்தரங்கள் மேல் விழுந்து இருந்தாலும் -கண் வைக்காமல்- அவன் கை கொள்ளா விடிலும் -அவனையே நோக்கி இருக்க வேண்டும் –
புலன்கள் இழுக்கும் ஐஸ்வர்யமும் ஈர்க்கும் வலைகள் இவை -அகற்ற நீ வைத்த மாய வலைகள் நன்கு அறிவன் நான் -ஆழ்வார் —
பிரியமாக பேசுவார்கள் ஹிதம் பேசுவார் இல்லை–மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் இருக்க வேண்டும் –
தேவதாந்திர சம்பந்தம் கூடாது –பரிஷை பண்ணியே கொள்வார்கள்–
ஸ்வாமியே 18 தடவை சென்று பெற்றாரே திரு கோஷ்டியூர் நம்பி இடம் –
எத்தனை உதைத்தாலும் கூட இருந்ததால் தானே பாதுகைக்கு பட்டாபிஷேகம் கிடைத்தது –அது போலவே இருக்க வேண்டும்

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: